Friday, August 27, 2010

மறைந்த போன தமிழ் நூல்கள்.......





இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தமென்றாலும் வேண்டேன்
உதிப்பித்த பன்னூல் உளிர அடியேன்
பதிப்பிக்கவே கடைக்கண் பார் 

                தமிழ் தாத்தா உ.வே. சா அவர்களின் நினைவு நாள் நாளை ஆகஸ்ட் 28.. அவர்தம் பெரும்பணியை நினைவுகூறாமல் இருக்கமுடியாது.  அனலாலும் புனலாலும் அயலார் படையெடுப்பாலும், சமயச் சண்டைகளாலும், கரையான் அரிப்பாலும் அழிந்து போக இருந்த பல புத்தகங்களை தொகுத்து வழங்கியவர்.  தன் வாழ்நாளின் பெரும்பணியாக இதைச் செய்து முடித்தார்.

மயிலை சீனி வெங்கடசாமி அவர்கள் தொகுத்து எழுதிய மறைந்து போன தமிழ் நூல்கள் என்ற புத்தகத்தை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  ஒரு புத்தகம் இருந்தது என்பதை நமக்குச் சொல்வது உரையாசிரியர்கள் கொடுக்கும் மேற்கோள்களே.  அதன் படி கீழ் குறிப்பிட்ட நூல்கள் மறைந்து போய்விட்டன என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

தனக்கு குழந்தை இல்லாத மயிலை. சீனி வெங்கடசாமி அவர்கள் இரண்டு குழுந்தைகளை தத்தெடுத்து தன் வீட்டில் வளர்த்து வந்தார். எதிர்பாராதவிதமாக அக்குழந்தைகளும் இறந்து போயினர்.  நம் வீட்டு குழந்தைகள் போல் தமிழ் அன்னையின் எத்தனையோ குழந்தைகள் மறைந்து போயிருப்பார்கள்.  தொலைந்து போன தமிழன்னையின் குழுந்தைகளை மீட்டெடுப்பது ஒருபுறமாயினும், தொலைந்து போன குழுந்தைகளின் கணக்கையாவது எடுப்போமே என்ற முயற்சியில் இதை எழுதி வெளியிட்டுருக்கின்றார்.

பதிப்பாசிரியர் ச. மெய்யப்பன் அவர்களின் “மெய்யப்பன் தமிழாய்வகத்தின் “ மூலம் வெளியிடப்பட்ட இந்த நூல் அறிஞர் மயிலை. சீனி. வெங்கடசாமி அவர்களால் தொகுக்கப் பட்டிருக்கிறது.  தமிழார்வளர்கள் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டியது. 

எந்தெந்த உரையாசிர்களினால் எந்தெந்த இடங்களில் இந்த மறைந்து போன புத்தகங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன என்பதை மிக அழகாக பாடல்களோடு கொடுத்துள்ளார்.

மனிதன் காணாமல் போனால் காவல் நிலையத்தில் கண்டுபிடித்துக் கொடுப்பது போல காணாமல் போன இலக்கியங்களை கண்டுபிடித்துக் கொடுக்க ஒவ்வொரு நாட்டிலும் ஏதாவது ஒரு அமைப்பு இருக்கிறதா? என்ற கேள்வில் தொடங்குகிறது ஊ. ஜெயராமன் (கொற்றன்கனை) அவர்களின் தொடக்கவுரை. 

மறைந்த போன நூல்களின் பட்டியல்.
    இலக்கிய நூல்கள்                                                       நூல் ஆசிரியர்
   1. அகத்திணை                                                              ஆசிரியர் பெயர் இல்லை
  2. அசதி கோவை                                                          இடைக்கால ஒவையார்
  3 அண்ணாமலைக் கோவை                                              கமலை ஞானப் பிரகாசர்
  4 அரையர் கோவை                                                        நூலாசிரியர் பெயர் இல்லை
  5 அறம் வளர்த்த முதலியார் கலம்பகம்                     பிற்காலப் பாண்டியர் ஒருவர்
  6 இராமீசுரக் கோவை                                                       கயாதரர்
  7 இன்னிசை மாலை                                                        நூலாசிரியர் பெயர் இல்லை
  8 கச்சிக் கலம்பகம்                                                      தத்துவப் பிரகாச ஞானப்பிரகாசர்
  9 கண்டனலங்காரம்                                                        நூலாசிரியர் பெயர் இல்லை
 10 காரி கோவை                                                           காரி நாயனார் 
 11  காரைக் குறவஞ்சி                                                       காரைத்தீவு சுப்பையர்
 12 கிளவித் தெளிவு                                                         நூலாசிரியர் பெயர் இல்லை
 13 கிளவி மாலை                                                           நூலாசிரியர் பெயர் இல்லை
 14 கிளவி விளக்கம்                                                         நூலாசிரியர் பெயர் இல்லை
 15 குண நாற்பது                                                           நூலாசிரியர் பெயர் இல்லை
 16 குமாரசேனாசிரியர் கோவை                                               குமாரசேனாசிரியர்
 17 கோயிலந்தாதி                                                          நூலாசிரியர் பெயர் இல்லை
 18 சிற்றெட்டகம்                                                           நூலாசிரியர் பெயர் இல்லை
 19 தமிழ் முத்தரையர் கோவை                                        நூலாசிரியர் பெயர் இல்லை
20 திருவதிகைக் கலம்பகம்                                                   உத்தண்ட வேலாயுத பாரதி
21 திருமறைக்காட்டந்தாதி                                                   சேரமான் பெருமான்
22 தில்லையந்தாதி                                                         நூலாசிரியர் பெயர் இல்லை
23 நந்திக் கோவை                                                         நூலாசிரியர் பெயர் இல்லை
24 நறையூரந்தாதி                                                          நூலாசிரியர் பெயர் இல்லை
25 நாலாயிரக் கோவை                                                      ஒட்டக் கூத்தன்
26 பல்வசந்த மாலை                                                       நூலாசிரியர் பெயர் இல்லை
27 பொருளியல்                                                           நூலாசிரியர் பெயர் இல்லை
28 மழவை எழுபது                                                        நூலாசிரியர் பெயர் இல்லை
29 வங்கர் கோவை                                                        நூலாசிரியர் பெயர் இல்லை 
30 வச்சத் தொள்ளாயிரம்                                                   நூலாசிரியர் பெயர் இல்லை
31 வல்லையந்தாதி                                                       குறட்டி வரதையன்

இந்த நூல்களிலிருந்து நமக்குக் கிடைத்த ஓரிரு பாடல்களையும் ஆசிரியர் வெளியிட்டுள்ளார். பல நூல்களில் ஆசிரியர் வரலாறோ யார் மீது பாடப்பட்டதென்றோ தெரியாமலும் இருக்கின்றது.

     புறப்பொருள்
1.  ஆசிரிய மாலை                                                          நூலாசிரியர் பெயர் இல்லை
2  தகடூர் யாத்திரை                                                       அரிசில்கிழார், பொன்முடியார் முதலியொர்    
3  பெரும்பொருள் வுளக்கம்                                        நூலாசிரியர் பெயர் இல்லை
4  கூடல சங்கமத்துப் பரணி                                       நூலாசிரியர் பெயர் இல்லை
5  கொப்பத்துப் பரணி                                                    நூலாசிரியர் பெயர் இல்லை
6  தென்றமிழ் தெய்வப் பரணி                                      ஒட்டக்கூத்தர்
7  வேறு பரணி நூல்கள்                                               நூலாசிரியர் பெயர் இல்லை
8  வீரமாலை                                                                   புலவர் பாண்டி கவிராசர்
9  பேர்வஞ்சி                                                                     மறச் சக்கரவர்த்திப் பிள்ளை


       காவியங்கள்

1  பழைய இராமாயணம்                                           நூலாசிரியர் பெயர் இல்லை
2 ஜைன இராமாயணம்                                             நூலாசிரியர் பெயர் இல்லை
3 சங்க காலத்துப் பாரதம்                                        நூலாசிரியர் பெயர் இல்லை
4 பெருந்தேவனார் பாரதம்                                     பாரதம் பாடிய பெருந்தேவனார்
5 வத்சராசன் பாரதம்                                               வத்சராசன்
6 குண்டலகேசி                                                          நாதகுத்தனார்
7 வளையாபதி                                                           நூலாசிரியர் பெயர் இல்லை
8 புராண சாகரம்                                                        நூலாசிரியர் பெயர் இல்லை
9 விம்பசாரக் கதை                                                   நூலாசிரியர் பெயர் இல்லை


   இலக்கிய நூல்கள்

1.  அந்தாதி மாலை                                                   சேந்தன்
2  அமிர்த பதி                                                               நூலாசிரியர் பெயர் இல்லை
3  அந்தாதிக் கலம்பகம்                                           அகோர முனிவர்
4  அளவை நூல்                                                        நூலாசிரியர் பெயர் இல்லை
5  அவினந்த மாலை, அரசசட்டம், வருத்தமானம்    நூலாசிரியர் பெயர் இல்லை
6  அறிவுடை நம்பியார் சிந்தம்                             நூலாசிரியர் பெயர் இல்லை
7  ஆயிரப்பாடல்                                                       கமலை ஞானப் பிரகாசர்
8  ஆரியப் படலம்                                                     நூலாசிரியர் பெயர் இல்லை
9  இசையாயிரம்                                                        நூலாசிரியர் பெயர் இல்லை
10 இராசராச வுஜயம்                                              நாராயண பட்டாதித்யன்
11 இராமயண வெண்பா                                        நூலாசிரியர் பெயர் இல்லை
12 இரும்பல் காஞ்சி                                                நூலாசிரியர் பெயர் இல்லை
13 இளந்திரையம்                                                    நூலாசிரியர்   தகவல் இல்லை
14 இறைவானறையூர்ப் புராணம்                    திருமலை நாயினார் சந்திரசேகரர்
15 ஓவிய நூல்                                                         நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
16 கன்னிவன புராணம்                                       பரசமயக் கோளரி மாமுனி
17 அஷ்டதச புராணம்                                          பரசமயக் கோளரி மாமுனி
18 கலைக் கோட்டுத் தண்டு                             கலைக்கோட்டு தண்டம்
19 காங்கேயன் பிள்ளைக் கவி                          பெரியான் ஆதிச்ச தேவன்
20 காசியத்திரை விளக்கம்                              யாழ்ப்பாணம் மயில்வாகனப் புலவர்
21 கிளி விருத்தம், எலி விருத்தம்                  நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
22 கோட்டீச்சுர உலா                                         கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்
23 குலோத்துங்கச் சோழ சரிதை                  நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
24 கோலநற்குழல் பதிகம்                                 நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
25 சதகண்ட சரிதம்                                            நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
26 சாதவாகனம்                                                  நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
27 சாந்தி புராணம்                                             நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
28 சித்தாந்தத் தொகை                                     நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
29 சூத்ரக சரிதம்                                                  சிற்பக் கலைஞர் லலிதாலயர்
30 செஞ்சிக் கலம்பகம்                                    நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
31 சேயூர் முருகன் உலா                               கவிராசர்
32 தசவிடு தூது                                                திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
33 தண்டகாரணிய மகிமை                          நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
34 தன்னை யமகவந்தாதி                           யாழ்ப்பாணம் காரைத்தீவு முருகேசையர்
35 திருக்காப்பலூர் குமரன் உலா                       திருக்காமி அவதானியார்
36 திருப்பட்டீசுவரப் புராணம்                       இரேவண சித்தர்
37 திருப்பதிகம்                                              நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
38 திருப்பாலைப் பந்தல்                           காளிங்கராயர் உண்ணாமலை நாயினார்
39 திருமேற்றளி புராணம்                           இரேவணசித்தர்
40 திருவலஞ்சுழி புராணம்                           இரேவணசித்தர்
41 திரையக் காணம்                                      நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
42 துரியோதன கலம்பகம்                          நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
43 தேசிக மாலை                                          நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
44 நல்லைநாயக நான்மணிமாலை     காரைத்தீவு சுப்பையர்
45 நாடத சரிதை                                               நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
46 பரமத திமிரபானு                                   மறைஞான சம்பந்தர்
47 பரிப்பெருமாள் காமநூல்                       நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
48 பரிபாடை                                                     நூ லாசிரியர் பற்றிய தகவல் இல்லை   
49 பிங்கல சரிதை                                         நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
50 வாமன சரிதை                                         நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
51 பிங்கலகேசி                                             நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை   
52 அஞ்சனகேசி                                            நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
53 காலகேசி                                                   நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
54 தத்துவதரிசனம்                                     நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
55 புட்கரனார் மந்திரநூல்                       நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
56 மஞ்சரிப்பா                                             ஞானப் பிரகாசர்
57 மல்லிநாதர் புராணம்                         நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
58 மாடலம்                                                  மாடலனார்
59 மார்க்கண்டேயனார் காஞ்சி          நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
60 மாறவர்மன் பிள்ளைத்தமிழ்          நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
61 முப்பேட்டுச் செய்யுள்                       நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
62 மூவடி முப்பது                                    நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
63 வாசுதேவனார் சிந்தம்                     நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
64 வீரணுக்க  விசயம்                           பூங்கோயில் நம்பி


இசைத் தமிழ் நூல்கள்

1  இசைத்தமிழ்ச் செய்யுட்டுறைக் கோவை  நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
2  இசை நுணுக்கம்                                   சிகண்டி முனிவர்
3  இந்திரகாளியம்                                    பாரசவ முனிவர் மாமளேந்திரர்
4  குலோத்துங்கன் இசை நூல்           குலோத்துங்கச் சோழன்
5  சிற்றிசை                                                நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
6  பேரிசை                                                   நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
7  பஞ்ச பாரதீயம்                                    நாரதர்
8  பஞ்ச மரபு                                            அறிவனார்
9  பதினாறு படலம்                              நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
10 பெருநாரை/பெருங்குருகு           நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
11 வாய்ப்பியம்                                      வாய்ப்பியனார்


நாடகத்தமிழ் நூல்கள்

1  அகத்தியம்                                                   அகத்தியமுனிவர்
2  இரச ராசேசுவர நாடகம்                        திருவாலன் திருமுதுகுன்றன்
3  காரைக் குறவஞ்சி                                 காரைத்தீவு சுப்பையர்
4  குணநூல்                                                    நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
5  குருஷேத்திர நாடகம்                            காரைத்தீவு முருகேசையர்
6  கூத்தநூல்                                              நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
7  சந்தம்                                                     நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
8  சயந்தம்                                                 நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
9  செயன்முறை                                    நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
10 செயிற்றியம்                                    செயிற்றினார்
11 சோமகேசரி நாடகம்                      மாப்பாண முதலியார்
12 ஞானாலங்கார நாடகம்             யாழ்பணத்து மாதகல் மயில்வாகனப் புலவர்
13 திருநாடகம்                                     நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
14 நூல்                                                      நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
15 பாரதசேனாபதீயம்                        ஆதிவாயிலார்
16 பரிமளகா நாடகம்                        மாப்பாண முதலியார்
17 மதிவாணர் நாடக்த்தமிழ் நூல்     பாண்டியன் மதிவாணன்
18 முறுவல்                                         நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
19 பூம்புலியூர் நாடகம்                        பரசமயக் கோளரி மாமுனி
20 கடகண்டு                                       நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
21 வஞ்சிப்பாட்டு                               நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
22 மோதிரப் பாட்டு                          நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
23 விளக்கத்தார் கூத்து                        விளக்கத்தார்


இலக்கண நூல்

1  அகத்தியம்                                             அகத்தியர்
2  அகத்தியர் பாட்டியல்                        அகத்தியம்
3  அணியியல்                                          நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
4  அவிநயம்                                            அவிநயனார்
5  அவிநய உரை                                     இராச பவித்திர பல்லவ தரையன்
6  இன்மணியாரம்                              நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
7  நாலடி நாற்பது என்னும் அவிநயப்புறனடை                நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
8  கடிய நன்னியார் கைக்கிளைச் சூத்திரம்                கடிய நன்னியார்
9  கவிமயக்கறை                                   நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
10 காக்கைப் பாடினியம்                        காக்கைப் பாடினியார்
11 குறுவேட்டுவச் செய்யுள்            நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
12 லோகவிலாசினி                            நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
13 பெருவளநல்லூப் பாசாண்டம்      நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
14 கையனார் யாப்பியல்                        கையனார்
15 சங்கயாப்பு                                      சங்கயாப்புடையார்
16 சிறு காக்கைப் பாடினியம்        சிறு காக்கைப் பாடினியார்
17 செய்யுளியல்                                நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
18 செய்யுள் வதுமை                        நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
19 தக்காணீயம்                                 நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
20 தத்தாதிரேயப் பாட்டியல்              நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
21 நக்கீரன் அடிநூல்                        நக்கீரர்
22 நக்கீரர் நாலடிநானூறு             நக்கீரர்
23 நத்தத்தனார் இயற்றிய நத்தத்தம்                    நத்தத்தனார்
24 நல்லாறன் மொழிவரி                        நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
25 பரிப்பெருமாள் இலக்கணநூல்                    பரிப்பெருமாள்
26 பர்மாணனார் யாப்பிலக்கணம்                    பரிமாணனார்
27 பல்காப்பியம்                                      பல்காப்பியனார்
28 பல்காப்பிய புறனடை                        நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
29 பல்காயம்                                        பல்காயனார்
30 பனம்பாரம்                                      பனம்பாரனார்
31 பன்னிருபடலம்                            தொல்காப்பியர் முதலிய பன்னிருவர்
32 பாடலம்                                           பாடலனார்
33 பாட்டியல் மரபு                            நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
34 புணர்ப்பாவை                             நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
35 போக்கியம்                                   நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
36 கிரணியம்                                    நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
37 வது விச்சை                                  நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை   
38 பெரிய பம்மம்                            நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
39 பெரிய முப்பழம்                        நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
40 பேராசிரியர் மயேச்சுவரர் இலக்கண நூல்                மயேச்சுவரர்
41 மாபுராணம்                                நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
42 பூதபுராணம்                              நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
43 முள்ளியார் கவித்தொகை                        முள்ளியார்
44 யாப்பியல்                            நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
45 வாருணப் பாட்டியல்                        நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை

மயிலை சீனி வெங்கடசாமி அவர்கள் இதைத் தொகுக்கும் போது, மேற்ச்சொன்ன புத்தகங்கள் இருந்திருக்கவேண்டும் என்பதை ஆதாரங்களோடு வெளியிட்டிருக்கிறார். எந்தப் புத்தகத்தைப் பற்றி எந்த பாடலில்,அல்லது எந்த புத்தகத்தில் இருக்கின்றது என்ற எடுத்துக்காட்டுகளோடு எழுதியிருக்கின்றார்.

மேற்சொன்ன புத்தகங்களில் சில முழுமையாக கிடைக்காமல் சில பாடல்கள் மட்டும் கிடைத்திருந்தாலும் அவற்றையும் மறைந்து போன தமிழ்நூல்கள் வரிசையில் சேர்த்துள்ளார்.

அவரின் அரும்பணியை நினைவு கூர்வோம்..........மேற்சொன்ன நூல்கள், இதில் இடம்பெறாத நூல்கள் அல்லது நூல்கள் பற்றிய தகவல்கள்  நம்மிடம் யாரிடமாவது இருக்குமாயின் அதை புதுப்பிக்கவும் முயற்சி செய்யலாம்.  அதற்கான பணியைச் செய்ய ஆர்வமாக இருக்கின்றேன்.

அன்புடன்
ஆரூரன்.

Wednesday, August 25, 2010

இலக்கிதம்.......


இலக்கியம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாதவர்கள் இத் தமிழ்கூறும் நல்லுலகில் இல்லையென்றே சொல்லாம்.  ஆனால் இலக்கியம் என்ற வார்த்தை தொல்காப்பியர் பயன்படுத்தவில்லை.  வள்ளுவன் அறிந்திருக்க வில்லை.  இளங்கோவும் கம்பனும் பயன்படுத்தியிருக்கவில்லை. 


மணிவாசகர் தன் திருவாசகத்தில் முதல்முறையாக இலக்கிதம் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.. 


இலக்கு-இலக்கியம், இலக்கு-இலக்கணம், இலக்கு-குறி: குறிக்கோள்.  சிறந்த வாழ்க்கைக் குறிக்கோளான அறத்தை எடுத்துக் காட்டுவது இலக்கியம். சிறந்த மொழிக்கூறிகளான அமைப்பை எடுத்துக் கூறுவது  " இலக்கணம்"


செய்யுள் என்ற பெயராலே தொல்காப்பியனார் இலக்கியத்தைக் குறிப்பிடுகின்றார்.  நூல் என்ற பெயராலே இலக்கியம் குறிப்பிடப்பட்டிருந்தது வள்ளுவன் காலத்தில். 

ஆங்கிலத்தில் இலக்கியம் என்னும் பொருள் பயக்கும் literature  எனும் சொல் கி.பி.1812ல் தான் பயன்பாட்டிற்கு வந்ததாக ஆக்ஸ்போர்டு அகராதி தெரிவிக்கிறது. 

கவின்மிகு சொற்களைக் கொண்டு கற்பனை நயத்தோடு கலையழகும் புலப்படுமாறு படைக்கப் படுபவை எல்லாம் "இலக்கியம்" எனப் போற்றத்தக்கன  என்றும் இலக்கியத்தை விளக்கலாம். என்பது தமிழறிஞர்கள்  கூற்று.


வில்லியம் வோர்ட்ஸ்வர்த் கற்பனையை இருகூறாக்கி இரண்டு பெயர்களை தந்துள்ளார்.


ஆக்கக் கற்பனை

பொருளைக் கண்டதும் அதன் புறத்தோற்றம் முதலியவற்றில் ஈடுபடாமல் அதன் அகத்தை ஊடுருவி நோக்கியும் உட்கருத்தை அறிந்தும் அவற்றின் பயனாகத் தோன்றுவது அந்தக் கற்பனை.

நினைவுக் கற்பனை:

இதில் ஆக்க வேலை ஒன்றும் இல்லை.  அதற்கு மாறாக நமது நினைவைத் தட்டி எழுப்புகிறது.  நாம் என்றும் கான்கிற பொருளையே நினைவு படுத்துகிறது.  ஆனால் படித்தவுடன் அப்பொருள்களின் நினைவு அதுவரை நாம் அனுபவியாத ஒரு புதிய ஆற்றலோடு மனதில் தோன்றுகிறது.


இதுதான் இலக்கியம் என்பதை விட என்னால் ரசிக்கும் படியாக எழுதப்படுவதெல்லாம்  என்னைப் பொருத்தவரையில் இலக்கியம் என்ற அளவிலேயே என் புரிதல்......

எனைக் கவர்ந்த சில இலக்கிய வரிகளை பகிர்ந்துள்ள ஆசைப்படுகின்றேன். 


நீரிடை உறங்கும் சங்கம், நிழலிடை உறங்கும் மேதி
தாரிடை உறங்கும் தண்டு தாமரை உறங்கும் செய்யாள்

                                                                                    -கம்ப இராமாயணம்.

பஞ்சி ஒளிர் விஞ்சுகுளிர்
பல்லவம் அணுங்கச்
செஞ்செவிய கஞ்சம்நிமிர்
சீறடியாள் ஆகி
அஞ்சொலிள மஞ்ஞையென
அன்ன மென மின்னும்
வஞ்சியென நஞ்செமென
வஞ்ச மகள் வந்தாள்

                                                                    சூர்ப்பணகை குறித்து கம்பன்........

"கொய்த மலரை கொடுங்கையிலணைத்து
மொய்குழலில் சூட்டுவான் முன் வந்து தையலாள்
பாதாரவிந்தத்தே சூட்டினான்: பாவை இடைக்கு
ஆதாரமிண்மையறிந்து"
       
                                                                                         -புகழேந்தி புலவர்.

தண்டு லாவிய தாமரைப் பொய்கையில்
மொண்டு நீரை முததருகேந்தினாள்
கெண்டை கெண்டையெனக் கரையேறினாள்
கெண்டை காண்கிலள் நின்று தயங்கினாள்.


தன்னிளவு அவள் முகமோ
தாரகைகள் நகையோ
விண்ணீளம் கார்குலழோ
மேவும் எழிலெல்லாம் மெல்லியின் வாய்க் கள்வெறியோ

                                                                                                  -பாரதிதாசன.


பெருந்திணை பற்றி பாரதிதாசன்

இளமை ததும்ப
எழிலும் ததும்ப
காதல் ததும்ப
கண்ணீர் ததும்பி...........
                                             என் மகள் கிழவனுடன் போனாள்.....

தொல்காப்பியர் சொல்வதுபோன்றும் இன்னும் பலர் சொல்வது போன்றும் அமைவது தான் இலக்கியம் என்றால்  இன்றைய உலகில் பல நவீன இலக்கிய வியாதிகள் ஒழிந்து போயிருக்கும் என்பதே உண்மை....


முதல் போடுபவன் முதலாளி அல்ல முதலை ஆள்பவன் முதலாளி
எழுதுபவன் எழுத்தன்  எழுத்தை ஆள்பவன் எழுத்தாளன். 

என்று எங்கோ படித்தது நினைவிற்கு வருகிறது....





Monday, August 16, 2010

கடலை, பொரி....


காவடிச்சிந்து என்ற பெயரால் புகழ் பெற்ற சிந்து பாடல்களைப் பாடியவர் சென்னிகுளம்  அண்ணாமலைக் கவிராயர்.  இது குறித்த என் முந்தைய பதிவு.
http://arurs.blogspot.com/2010/01/blog-post_12.html

பல கும்மிப் பாடல்களும் காவடிச் சிந்து நடையில் எழுதப் பட்டதையும் இங்கே காணலாம்
http://arurs.blogspot.com/2010/01/blog-post_07.html

மகாகவி பாரதியும் பல பாடல்களை காவடிச் சிந்துவில் எழுதியிருப்பினும்  முதல் பாடலாக  நினைப்பதும், அவர் மிக இளவயதில் பாடியதாக் கூறப்படுவதுமான பாடல்.

“பச்சைத் திருமயில் வீரன்
அலங் காரன் கொளமாரன் -ஒளிர்
பன்னிரு திண்புயப் பாரன் - அடி
பணி சுப்பிரமணியற் கருள்
அணிமிக்குயர் தமிழைத் தரு
பக்தர்க் கெளிய சிங்காரன் - எழில்
பண்ணு மருணாச்சலத் தூரன்”

அண்ணாமலை ரெட்டியார் தனது 26ஆவது அகவையில் 1891 ஆம் ஆண்டு காசநோயினால் மறைந்தார். அப்போது மகாகவிக்கு வயது சுமார் 9 இருந்திருக்க வேண்டும். அண்ணாமலை கவிராயரின் பாதிப்பு பாரதியிடமும் இருந்தது குறிப்பிடத் தகுந்தது.


அதேபோல் துணைவியார் செல்லம்மாவைப் பார்த்து பாடியதான இந்தப் பாட்டும்

”தேடக் கிடைக்காத சொன்னமே-உயிர்
 சித்திரமே! மட அன்னமே! - அரோ
 சிக்குது பால் தயிர் அன்னமே!-மாரன்
   சிலைமேல் கணை கொலை வேலென
   விரிமார்பினில் நடுவே துளை
   செய்வது கண்டிலை இன்னமே-என்ன
   செய்தேனோ நான் பழி முன்னமே

 கன்னத்தினில் குயில் சத்தமே- கேட்கக்
 கன்றுது பார் என் சித்தமே- மயக்
 கஞ் செய்யுது காமப்பித்தமே-உடல்
   கனலேறிய மெழுகாயினது
   இனியாகிலும் அடிபாதகி
   கட்டியணைத்தொரு முத்தமே-தந்தால்
   கைதொழுவேன் உனை நித்தமே”
    = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = ==  = = = ==  = = = = = = = = = = = =

திருமணம் ஆகாத நண்பர்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் என்ற குறுஞ்செய்தி எனக்கு திருமணமான நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார்.

கல்யாணம் ஆகாதவனுக்கு ஒரு கவலைன்னா, ஆனவனுக்கு ஆயிரம் கவலை”.  பல நேரங்களில் திருமணமான நண்பர்கள், திருமணமாகாத நண்பர்களைப் பார்த்து டேய்...நானே மாட்டிகிட்டு முழிக்கிறேன்......என்று சிலாகிப்பதைப் பார்க்கமுடிகிறது........

மகாகவி என்ன சொல்கிறார்...............

   “வசிட்டனுக்கு இராமற்கும் பின்னொரு
    வள்ளுவர்க்கு முன் வாய்த்திட்ட மாதர்போல்
    பசித்தோராயிர மாண்டுதவஞ் செய்து
    பார்க்கினும் பெறல் சால வரிது காண்,
    புசிப்ப தும்பரினல் அமுதென்றெணிப்
    புலையர் விற்றிடுங் கள்ளுணலாகுமோ
    அசுத்தர் சொல்வது கேட்கலிர், காளையீர்!
    ஆண்மை வேண்டின் மணஞ்செய்த லோம்புமின்.
 
அதுசரிதான்......நாம என்ன வசிட்டனா? இராமனா? வள்ளுவனா?


ஆனாலும் ஒன்னைச் சொல்லித்தான் ஆகோனுங்க.........

நம்ம தங்கமணிக்கு ஈடாவாங்களா இவங்கெல்லாம்........நம்மையே வச்சி குடும்பம் நடத்தறாங்கல்லோ......... என் தங்கமணி வாழ்க.......

என்னவேணா பேசலாங்கண்ணு.....ரவைக்கு வூட்டுக்குப் போகணுமில்ல.....அதான்!!!!!!






Friday, August 13, 2010

விடிந்தால்?..........விடுதலை!


எங்கணும் இலஞ்சப் பேயாம்
இருளினுள் இருள் சேர்ந்து
தங்கிடும் இந்த நாட்டில்
சராசரி மனிதன் கூட
எங்கனம் சுரண்டி வாழ்ந்தால்
எப்படிப் பணம் கிடைக்கும்
மங்களம் சுவைப்போம் என்றே
மருகியே வாழ்கின்றானே.

அறம்பாடும் கவிஞ ரெல்லாம்
அநீதியர் கால் தலையைத்
திறமாக வைத்துக் கொண்டார்
தேவைக்குப் பதவி பெற்றே
சிறப்பினை விற்றுவிட்டார்
திருடர்கள், மடையர் ஈனர்
பிறர் பொருள் மோசம் செய்வார்
பெரியதோர் பெயரெடுத்தாரே.

பொருட்செல்வம் சமமாய் வேண்டும்
பொழுதெல்லாம் உழைக்கும் மக்கள்
வருநலம் அடைய வேண்டும்
வல்லடி வழக்கு மற்றை
தருதுயர் எல்லாம் இங்கே
தான் மறைந்திடுதல் வேண்டும்
செருவிலா தண்மை வேண்டும்
தீமைகள் அழிய வேண்டும்.

எங்கனும் ஓலம் அந்தொ
எங்கணும் ஏமாற்றுக்கள்
எங்கனும் சூழுந் துன்பம்
எங்கனும் இடர் வெள்ளங்கள்
எங்கனும் சூது சூழ்ச்சி
எங்கனும் வேதனைகள்
எங்கனும் இதுவே நாட்டின்
இயல்பென்றால் நாடா ஈது!

விடுதலை நல்லோருக்கா?
வீணர்க்கா என்ற கேள்வி
நடுநிலை நின்று பார்ப்பார்
நன்கெண்ணிச் சொல்லவேண்டும்
கெடுதலை புரிகின்றார்கள்
கேடெல்லாம் புரிகின்றார்கள்
இருநிலம் ஏய்க்கின்றார்கள்
இதுதானா? விடுதலை

வீதியின் ஓரம் சென்றால்
மேடையில் வாழும் மக்கள்
வாதையின் தன்மை கண்டே
மனந்துடிக்கின்றோம் இந்தத்
தீதினை மாற்றுதற்கோர்
செயல் திட்டம் கண்டோமில்லை
யாதினும் சுயநலங்கள்
நாளெல்லாம் தலை விரிக்கும்

சனநாயகம் இங்கேதான்
தனியாட்சி செய்வதாக
இனிமேலும் சொல்லல் அந்தோ
இயற்கையாய் நகைப்புக் காகும்

சந்தையில் ஆடு கூட்டும்
தண்மைபோல் இந்த நாட்டில்
சொந்த நற்பொருள் படைத்தோர்
தொடர்ந்துழை வர்க்கம் தன்னை
எந்தநாளும்தான் ஏய்ப்பர்
எங்கே சீர் சமத்துவந் தான்?

சுதந்திரம் சிந்தியுங்கள்
சோரத்தின் மறுபெயர்தான்
சுதந்திரம் என்றால், இந்தச்
சுதந்திரம் சுட்டெரித்த
சுதந்திரம் என்ற மற்றோர்
தூய்மையைப் படைக்க வேண்டும்
சுதந்திர நாடா ஈது
தூ! தூ!தூ! வெட்கக் கேடு!

துறைதோறும் துறைதோறும் தன்
சுதந்திரப் பெயரினாலே
பறைசாற்றும் கையூட்டுக்கள்
பணம் தந்தாலன்றி ஏதும்
குறைநீக்க ஏலா நல்ல
கோப்புகள் தூங்கும் கோட்டை
சிறையான தாமோ உண்மை?
செயலூக்கம் எல்லாம் பொய்யோ?



பொருட்செல்வம் சமமாய் வேண்டும்
பொழுதெல்லாம் உழைக்கும் மக்கள்
வருநலம் அடைய வேண்டும்
வல்லடி வழக்கு மற்றை
தருதுயர் எல்லாம் இங்கே
தான் மறைந்திடுதல் வேண்டும்
செருவிலா தண்மை வேண்டும்
தீமைகள் அழிய வேண்டும்.


ஈடிலா என்றன் நாடே
இன்றமிழ் அன்னை நாடே
பேடியர் வீரம் இல்லாப்
பேதையர் வாழும் நாடாய்
வாடி நீ போவதும் ஏன்
வரலாற்றை மறப்பதும் ஏன்
நீடிய துயிலை என்று
நீகளை வாயோ நாடே!


இதெல்லாம் இப்பொழுதில்லை, 1983ல் இப்படித்தான் நாடு இருந்ததாம்....மலையாளத்தான் ஆட்சியிலே மாண்புகழ் கொண்ட தமிழ்நாடு இப்படித்தான் இருந்ததாம்.


செந்தமிழர் நாட்டை-மலையாளி
சிம்மாசனமிருந்து ஆளுகின்றார்.
சந்தனக் கன்னடமாது-இவரின்
சபையின் தர்ம பத்தினியாம்!


இதெற்கெல்லாம் தீர்வுதான் என்ன?   அவரே சொல்கிறார்.....


அச்சமெனும் பேடிமையும் நீங்க வேண்டும்
அறிவார்ந்த மூதறிஞர் தமிழகத்தின்
மெச்சுபுகழ் முதலமைச்சர் ஆகவேண்டும்


ஆகா......செம்மொழி மாநாட்டுக்கு  துண்டு  போட்டாச்சுல்ல.....


அங்கிருந்த மாந்தர்-எவரும்
அநீதி கேட்க வில்லை-கடல்
பொங்கிவரும் போதில்-வானம்
பொறுமி இடிக்கும் போதில்-கானச்
சிங்கம் சினக்கும் போதில்-எரி
மலைகள் வெடிக்கு போதில்-அடே
இங்கே என்னமிஞ்சும்-அருள்
எண்ணம் ஈனம் பொசுக்கும்

துகிலை உரிய துரோபதை-பட்டத்
துன்பவாதை உழன்று-புன்மை
எகிரி எகிர்ப் பாயும்-உண்மை
எழுச்சி காண ஆயும்-இன்றுன்
தகிக்கும் பாரதப் போரா-மக்கள்
ஆட்சி நடக்கும் ஈதே-நாட்டில்
வகிக்கும் நிலைகள் எங்கும்-ஈதை
மக்கள் ஆட்சி உணர்க!

பேரளவில் மக்கள்-படித்த
பேடியர்கள் கூட்டம்-அழகு
மாரளவில் பெண்கள்-காமம்
மாந்துகின்ற புண்கள்-அந்த
நாரளவில் உறவாம்-கொள்ளும்
நந்தவன மலர்கள்-மாந்தர்
ஈரமில்லா நெஞ்சர்-பேடி
எண்ணத்தின் கீழ் இருந்தார்.

வாய்திறக்கவில்லை-ஒருவர்
வம்பு கேட்கவில்லை-அந்தோ
தாய் தன்னை பெண்டாள-மாற்றான்
தாவி வந்தபோதும்- இந்தப்
பேய்மனத்தர் நல்லார்-ஏற்ற
போர்வை தன்னிலேதான் -வெட்கம்
வாய்மூடித்தான் இருப்பர்-இந்த
வம்பு நமக்கேன் என்றே!

என்ன நடந்தாலும்-நாட்டை
எவரே ஆண்டாலும்- தம்மின்
நண்மை பெரிதாக-வயிறு
நாளும் நிரம்பிவிட்டால்-மேண்மைத்
தன்னளவில் கண்டு ஓங்கும்
தர்மம் மறந்து வாழ்வார்-தன்னால்
இன்னிலைமை இந்த- நாடு
இன்னல் பெற்றதுண்மை!

அடி கொடுத்த உடனே-உண்மை
அடங்கிப் போனதாலே-தமிழ்க்
குடிகள் தன்னை மாற்றார்-என்றும்
கோலோச்சியே வாழ்ந்தார்-இன்னும்
விடியவில்லை தமிழர்-உண்மை
வெல்ல வைக்கவில்லை-எவனும்
மடியைப் பிடித்து அறைந்தால்-தமிழன்
மரியாதையாக ஒப்புவானே!

பேடியின் கீழ் மோசம்-இந்தப்
பேதமையைத் தடுக்கும்-தீய
கூடிவாழ்ந்து சோரம்-போகும்
கொள்கை தமிழர் கண்டே-வாழும்
மோடிவேசம் கலைக்கும்-எண்ணம்
முனைந்து மாற்றும் அருளும்-உண்மை
பாடி வீடு கண்டால்-மட்டும்
போதா தென்றே-எண்ணித்

தீமைமோதும் போது-உண்மை
திறமடங்க வேண்டாம்-மோசத்
தீமை வெல்ல வைத்து-உண்மை
ஊமை ஆகவேண்டாம்-தொடும்
தீமை அரசும் ஆள-உண்மை
தினம் தினம் கை கட்டி-அந்தோ
ஆமை போன்று அடங்கல்-இன்றோ
அதுவே நாக ரீகம்.

வந்த இனங்களெல்லாம்-இங்கே
வாழ்ந்து செழிக்கையிலே-உழை
செந்தமிழர் இனமே-மட்டும்
சீரழிந்து செல்வதேன்?-மனம்
நொந்து தவித்தாலும்-பிறர்
நோவடி தந்தாலும்-அதை
எந்தவிதம் வெல்லலாம்-என்ற
எண்ணமிலாத தன்றோ?

தன்னினம் தமிழினத்தை-என்னும்
தமிழனே தான் காட்டிக் கொடுக்கின்றான்
அன்னிய இனத்தானின் தயவுக்கோ
அவமானம் இன்றியே தவமிருப்பான்
என்னென்ன இழிவுண்டோ அத்தனை
இழிவையும் ஏற்றே இத்தமிழன் வாழ்ந்தால்
முன்னேற்றம் என்றுவரும்-தமிழா
மூளை மழுங்காமல் சால நீ சிந்திப்பாய்

இதெல்லாம் , எம் இனம் வீடிழந்து, நாடிழந்து, உற்றார், உறவிழந்து, அநாதைகளாய், அகதிகளாய் வாழும் சூழல் ஏற்பட்ட போது எழுதியது என்று நீங்கள் நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல

பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்களின் விடிந்தால்?....விடுதலை! என்னும் நூலிலிருந்து சில பகுதிகள்


Friday, August 06, 2010

சீட்டுக் கவி

சீட்டுக்கவி என்பது தமிழ் மொழியில் உள்ள தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களில் ஒன்றாகும். இன்ன இன்ன தகுதிகளையும், திறமைகளையும், பட்டங்களையும் கொண்டிருக்கும் நான்,  இன்ன இன்ன தகுதிகளையும் இன்ன இன்ன திறமைகளையும் கொண்டு சிறப்புற்றிருக்கும் இன்னாருக்கு எழுதும் சீட்டாவது,  இதில் கண்டுள்ளவற்றை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கோரி ஒரு சீட்டு எழுதுவதாகும்.

பெரும்பாலும் கவிஞர்கள், புலவர்கள் மன்னர்களுக்கு பொருள் பெற வேண்டி, எழுதுவதாகவே அமையும்.

சீட்டுக்கவியின் மூல முதலாய் கருதப்படுவது திருமுகப் பாசுரம்.  பாணபத்திரருக்கு தேவையான பொருளுதவி செய்யுமாறு (அதாங்க திருவிளையாடல் படத்தில வருவாரே...அவருதான்) சேரமான் பெருமானுக்கு, ஆலவாய்ச்சிவன் எழுதியதாகப் குறிப்பிடப்பட்டு, பன்னிரு திருமுறைகளில், பதினோராம் திருமுறையின் முதல் பாடலாக சேர்க்கப்பட்டுள்ளது.

அந்தப் பாடல்:

மதிமலிபுரிசை மாடக் கூடல்
பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிறகு
அன்னம் பயில்பொழில் ஆல வாயில்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்:

பருவக் கொண்மூப் படிஎனப் பாவலர்க்கு
உரிமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க!

பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பான் அன்பன்; தன்பால்
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே

                               -ஆலவாய்ச்சிவன்

இன்ன பிற சீட்டுக்கவிகள்:


ஸ்ரீ எட்டயபுரம் ராஜராஜ ராஜேந்த்ர மகாராஜ வெங்கடேசு ரெட்டப்ப பூபதி அவர்கள் சமூகத்திற்கு கவிராஜ ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி எழுதும் சீட்டுக்கவிகள்

    பாரிவாழ்ந்திருந்த சீர்த்திப் பழந்தமிழ் நாட்டின்கண்ணே
    ஆரிய! நீயிந் நாளில் அரசு வீற்றிருக்கின்றாயால்
    காரியங்கருதி நின்னைக் கவிஞர்தாங் காணவேண்டின்
    நேரிலப் போதே யெய்தி வழிபட நினைகி லாயோ?

    விண்ணள வுயர்ந்த வெங்கடேசு ரெட்ட மன்னா!
    பண்ணள வுயர்ந்த தென்பண், பாவளவுயர்ந்த தென்பா;
    எண்ணள வுயர்ந்த வெண்ணில் இரும்புகழ் கவிஞர் வந்தால்
    அண்ணலே பரிசு கோடி அளித்திட விரைகிலாயோ?

                                                                               -சுப்பிரமணிய பாரதி
                                                                                        1919-மே-02

நன்றி:http://www.visvacomplex.com/cittu_kavi1.html

காரையூர், நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார் துனைவியார், வள்ளிநாயகி அம்மையாருக்கு எழுதிய சீட்டுக்கவி:
  சிவராத்திரித் தேவையிதெனச் சீட்டுக்கவி:
  திருமருவு பழநிமலை முருகேசர் அரவிந்த
        செங்கமல பாத தியானம்
    திரிகின்ற தண்டுமிண் டுகள்கொண்ட கவிமலை
        செகுத்திடச் செய்வச் சிரம்
    செய்யகார் காலமழை என்னவே மதுரித
        செழுந்தமிழ் கொழிக்கும் மேகம்
    தென்பரவு மங்கைபுர இலட்சுமண பாரதி
        தெளிந்தெழுதி விட்ட நிருபம்,

  தருவுலவு காரையூர் நல்லசே னாபதிச்
         சர்க்கரைமன் றாடி ராசன்
     தனதுமனை யாள்இனிய கற்பினில் அருந்ததி
         சமானசற் குணபூ டணி
     சந்ததி நிரம்பிவளர் சிவமலைப் பல்லவன்
         தந்தசீ மந்த புத்ரி
     தருமமிகு பயிறகுல வள்ளிநா யகியெனும்
         தாய்மனம் மகிழ்ந்து காண்க,

  அருள்பரவு சிவன்உமைக் குத்திருக் கல்யாணம்
         ஆனசுப தினம்நா ளையே
     ஆகையால் மாங்கலிய விரதபூ சனைசெய்ய
         ஆரும்ஆ தரவ றிகிலேன்
     ஐந்துவள் ளப்பச்சை அரிசிபா சிப்பயறு
         அதற்குள்ள மேல்முஸ் திதி
     ஆவின்நெய் வெல்லம் உழுந்துபால் தயிர்வெண்ணெய்
         அரியதயிர் எண்ணு கறிகாய்

 மருவுலவு சந்தனம் குங்குமம் புனுகுசவ்
         வாதுபரி மளமும் உனது
      மருமகட் கோர்புடவை பாக்குவெற் றிலைநல்ல
         வாழையிலை இவையா வுமே
      வாணருக் கார்அனுப் பினதெனக் கேட்பவர்
         மனதுமென் மேலும் மெச்ச
      மன்னர்புகழ் சர்க்கரைத் துரைராசி தந்ததென
         வரவனுப் பிடவேண் டுமே!

                                                                        ~ மடவளாகம்
                                                                            இலக்குமண பாரதி (1767 -1859)

நன்றி:http://nganesan.blogspot.com/2009/07/chittukkavi.html

ஓலைத்தூக்கு:
மன்னர்களைப் பாடிப் பரிசில் வேண்டுமுகமாக ஓலைத்தூக்குகள் அமையும்:

பாரதியின் ஓலைத் தூக்கு(இதுதான் பின்னாடி கூஜா தூக்குறதுன்னு ஆகியிருக்குமோ?)
ராஜமகா ராஜேந்த்ர ராஜகுல
      சேகரன் ஸ்ரீராஜ ராஜன்
தேசமெலாம் புகழ்விளங்கும் இளசைவெங்க
      டேசுரெட்ட சிங்கன் காண்க!
வாசமிகு துழாய்த்  தாரன் கண்ணனடி
      மறவாத மனத்தான் சக்தி
தாசனெனப் புகழ்விளங்கும் சுப்ரமண்ய
      பாரதிதான் சமைத்த தூக்கு!

வியப்புமிகும் புத்திசையில் வியத்தகுமென்
       கவிதையினை வேந்த னே!நின்
நயப்படுசந் நிதிதனிலே நான்பாட
       நீகேட்டு நன்கு போற்றி
ஜயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள்
       பொற்பைகள் ஜதிபல் லக்கு
வயப்பரிவா ரங்கள்முதற் பரிசளித்துப்
       பல்லூழி வாழ்க நீயே!



சீட்டுக்கவி எழுதுவது தனக்காகப் பொருள் வேண்டித்தான் எழுத வேண்டும் என்பதில்லை.  பிறருக்காகவோ, பொது காரியங்களுக்கு பணம் பொருள் போன்ற ஏது வேண்டியாகினும் எழுதப்படலாம்.

பாரதிக்குப் பின் வந்த புதுமைப்பித்தனும் சீட்டுக்கவிகள் எழுதியுள்ளார். ஆனால் அவர் எழுதியது எந்த மன்னருக்கும் இல்லை. அவரது நண்பர் ரகுநாதனுக்குத்தான். மன்னருக்குத்தான் எழுத வேண்டுமா என்ன? தனக்கு வேண்டிய பொருளை வாங்கி வரும்படி ரகுநாதனுக்கு கவிதை வடிவில் எழுதினார்.

''அல்வா எனச் சொல்லி
அங்கோடி விட்டாலும்
செல்வா நீ தப்ப
முடியாதே! - அல்வா
விருது நகர்க் கெடியில்
உன்னுடனே கட்டாயம்
வருது எனக் காத்திருப்பேன்
நான்.

சென்னைக்குப் பதினேழில்
சீட்டுக் கொடுத்துவிட்டு
உன்னைப் பிறகங்கே
சந்தித்து - பின்னை
ஊருக்குப் போவேன்
உறுதியாய் வா அங்கே
நேருக்கு மற்றவையப்
போ."


நன்றி:http://ninaivu.blogspot.com/2004/06/2.html


கல்லூரி நாட்களில் என் தந்தைக்கு நானும் ஒரு சீட்டு எழுதியிருக்கின்றேன். அது .

அப்பா,

நலம்,...... நலத்துக்குப் பணம். உடன் அனுப்பவும்.......ஆரூரன்.


நல்ல தமிழ் மொழியில், அழகான சீட்டுக் கவி ஒன்றை தருமாறு அன்புடன் வானம்பாடி யூத் பாலா அவர்களை அழைக்கின்றேன். அவர் விரும்புகின்றவர் இதைத் தொடரலாம்.......

அன்புடன்
ஆரூரன்.


வேண்டுகோள்கள்:


முதலில் தன்னைப் பற்றி (தற்புகழ்ச்சியாக தொடங்க வேண்டும்) பின் வேண்டுபவர் சிறப்பைச் சொல்ல வேண்டும், பின்னர் வேண்டும் பொருள் குறித்தும் விளக்கவேண்டும்.

ஆண்டவனை நோக்கியோ, ஆள்பவனை நோக்கியோ. பதிவுலக நண்பர்களை நோக்கியோ, மறைந்த மூதாதையர்களை நோக்கியோ.........எப்படி வேண்டுமாயினும் இருக்கலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~

Thursday, August 05, 2010

செவலைத்தாய்..........



ஒரு பனி படர்ந்த காலைப் பொழுது!

‘குள்ளி கன்னுப் போட்டிருச்சு’
அம்மாவின் குரல் கேட்டு
போர்வைக்குள்ளிருந்து
சிட்டாய்ப் பறந்தேன் கட்டுத்தறிக்கு!

அங்கே...வாஞ்சையோடு கன்றை
        நீவியபடி....... குள்ளி.!

கொம்பு முதற்கொண்டு, குள்ள உருவமென்பதால்
“குள்ளி” அதற்கு காரணப் பெயராயிற்று.!

அன்றிலிருந்து குள்ளிக்கு
என்னையும் சேர்த்து இரண்டு கன்றுகள்!

பசியெடுத்தால் அதன் மடியில் அமுதுண்பேன்!
குஷி வந்தால் அதன்மேல்தான் சவாரியும்.!

யார் குள்ளியின் செல்லம்?
எனக்கும், அண்ணனுக்கும் போட்டி
ஒரு நாள் தீர்மானமாயிற்று.....நான் தானென்று!

நண்பர்கள் அண்ணனை அடிப்பது போல்
பாவனை செய்வர்-அப்போது
மவுனம் காக்கும் -குள்ளி!

என்னைத் தொடும்போது-துடித்துப் போகும்!
அலறிக் கத்தும்.....கொம்பில் குத்த வரும்.!

குள்ளிக்குக் குத்தத் தெரியுமா?
அதற்கு கோபம் கூட வருமா?
அந்தக் கணம் அதிசயத்துப் போனேன்.!

அம்மா சுட்டுத்தரும் ராகி ரொட்டி
எங்களைவிட குள்ளிக்குத்தான்....
அதிகம் போய்ச்சேரும்!

இருள் பிரியாத காலையிலேயே....
பனைமரத்தடிக்கு ஓடுவோம்!

மரமேறிகள் செதுக்கிப் போடும்
நொங்கு சள்ளியை சேகரிக்க-அது
எங்கள் குள்ளிக்கு ரொம்பப் பிடிக்கும்.!

விடுமுறை நாட்களில்
எங்களுக்கு காலைப் பொழுது விடிவதும்
மாலை மயங்குவதும் குள்ளியோடுதான்.

வாயற்ற அந்த செவலைத்தாயின்
பாசப்பிணைப்பில் பின்னிக்கிடந்த
அந்த அமுத பொழுதுகளில்....
ஒருநாள் விஷக் காற்று வீசிவிட்டது.....

ஆம்...தேவைகளின் தேடலுக்காய்-நாங்கள்
புலம் பெயர்ந்த போது-குள்ளியை
விற்றுவிடத் தீர்மாணித்தார் அப்பா!

உணர்வு லயிப்பில், ஒரே சுருதியில்
குள்ளியும் நானும் இருந்த காலம்.....

அப்போது அடம்பிடித்து அழுத எனக்கு
அப்பா சமதானம் சொன்னார்...

“குள்ளி வீசகன்னு போட்டிருச்சு...
 வீட்டுக் ஆகாதென்று”   

குள்ளியும் சேர்ந்தது தானே நம் குடும்பம்?
என்ற கேள்வி மனதுக்குள்ளேயே அமுங்கிப் போனது

இப்போது...எங்கிருக்கிறாய் குள்ளி

வயதாகிப் போனதால்
“மேற்கே” லாரியில் ஏற்றப் பட்டிருப்பாயோ?
இதை நினைக்கும்போதெல்லாம்
உள்ளுக்குள் சிதறிப்போகின்றேன்.

குள்ளி..உள்ளம் குளிர உறவாடிய-செவிலியே
உனக்குத் தெரியுமா?

ஒவ்வொரு மாட்டுப் பொங்கலின் போதும்
நான்....பொங்கலிடுவது பானையில் அல்ல
கண்களில் என்று!

உன்னை இப்போதும் தேடிக் கொண்டிருக்கின்றேன்
என் வீட்டுப் பசுக்கள் ஈனும் போதெல்லாம்....

நன்றி:-
 முனைவர். சா. சிவமணி
 தமிழ் விரிவுரையாளர்
 சி.நா. கல்லூரி, ஈரோடு.

Tuesday, August 03, 2010

தீரன் சின்னமலை நினைவு நாள்.........


சென்னிமலைக்கும் சிவன் மலைக்கும் நடுவே வாழ்ந்து, தனக்கென ஒரு பாதை அமைத்து, ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பணமாய் விளங்கிய தீரன் சின்னமலை என்று புகழ்ப்பட்ட தீர்த்தகிரியின் நினைவு நாள் இன்று.

தீரன் சின்னமலை குறித்த என் முந்தைய இடுகைகள்:

தீரன் சின்னமலை 1

தீரன் சின்னமலை 2