Showing posts with label காமத்துப்பால். Show all posts
Showing posts with label காமத்துப்பால். Show all posts

Tuesday, September 29, 2009

காமத்துப் பால்......



சூரிய வெளிச்சம் அறை முழுதும் பரவத்தொடங்கியது.  படுக்கையறையை விட்டு மெல்ல வெளியே வந்து,  நீண்ட அணைப்பின் சுகத்திலிருந்து மீள மறுக்கின்ற இமைகளை கைகளால் அழுத்தித் தேய்த்து, பிரிக்கின்ற முயற்சியில், பால்கனியின் நடுவில் நான்.........

காலைக் கருக்கெழுந்து
கருஞ்சாந்து பொட்டுமிட்டு
கருநாகப் பாம்பெனவே
கார் கூந்தல் பின்னலிட்டு
காத்திருந்தேன் உம் வரவை….காத்திருந்தேன் உம் வரவைஎன்பதைப்போல்,

கைகள் வாசலில் கோலமிட, விழிகள் என் மீது கோலமிட, மெலிதாய் எனைப்பார்த்துச் சிரித்தாள், எதிர்வீட்டுச் சித்ரா

இயல்பாய் சிரித்துத் திரும்ப…………..

தொன்னூரைத் தொடவிருக்கும் எடையையும்(கி.கி), ஐம்பதைத் தொடவிருக்கும் இடையையும்(இன்ச்), நாற்பதைத்தொடவிருக்கும் (வயதையும்) குறைக்க, கஜினி முகமதாய், முயற்சி செய்யும் பக்கத்து வீட்டுமாமி.வனிதா 

வாக்கிங் முடித்துத் திரும்பும் வழியில், வாய் முழுதும் பற்களாய்,  , “குட்மார்னிங்” சொல்ல, பதிலுக்கு நானும் சொல்லி முடிக்கையில்…………….


கல்லூரிப் படிப்பை முடித்து, 
வாழ்க்கையை படிக்கபோகும் ஆர்வத்தோடு, 
புத்தம்புது மலராய் பூத்துக் குலுங்கும் அழகோடு, 
கண்களைச் சுறுக்கிக் கெஞ்சும் விழிகளோடு, 
இதழ்கள் விரிய , தெற்றுப்பல் சிரிப்போடும் 
நான் வாங்கும் காலைப்பத்திரிக்கையோடும்,..........

கீழ் வீட்டுப்பெண்……வித்யா……..ஹாய்.ஜஸ்ட் அ மினிட்.(ஹும்.........குடுத்து வச்ச பேப்பர்) 



 இட்ஸ் ஒகேகோஅஹெட்என்று சிரித்துக் கொண்டே, இயல்பாய் திரும்புகையில்……


இறுக்கத்தோடு……இனியா……….என் இல்லாள், இனியாள்,..
(சரீடி..நிறுத்து..இனி நீ தனியாள் தாண்டிஉண்டு இன்னைக்கு உனக்கு..உள்ளே ஏதோ ஒரு பட்சி சொன்னது)


காலங்காத்தால………………… என்ன?...... ம்ம்ம்......எல்லாத்துக்கும் தர்ம தரிசனம் குடுத்தாச்சா?...........ஊர்ல இருக்கிறவளுகலெல்லாம் பார்க்கறதுக்கா நா.கட்டிகிட்டு வந்தேன்.. .எவளப்பார்த்தாலும் இதே தொல்ல…….

பொறுக்கி……பொறுக்கி.ராத்திரிக்கு கொணச்சுகிட்டு வந்தே……? பார்த்துக்கோ……

இனி நீ வேற பெட்…… நான் வேற பெட்………எவளெவளயெல்லாம் பார்த்து கிட்டிருந்தயோ..அவளயெல்லாம் கூப்டுக்கோ……….


அடக் கடவுளே………ஒரு..இல்ல.இல்ல………மூணு சின்ன சிரிப்புக்கு,  இத்தா பெரிய  தண்டனையா?..... ஒருத்தர் சிரிக்க..பதிலுக்கு நாம் சிரிக்க……..இத யாருகிட்டப் போய் சொல்லுவேன்..? என்னன்னு சொல்லுவேன்.........?



ஹலோ ஒரு நிமிஷம்..வெயிட்....வெயிட்.......இது என்னோட அனுபவமோ?  புலம்பலோ  இல்லைங்க……


திருவள்ளுவரோடதுஅதாங்க.தாடி வச்சு கையில ஏடெல்லாம் வச்சிருப்பாரே…….அதாங்க…….. இன்னும் புரியலையா?   திருக்குறள் எழுதினாரே அவருது தாங்க……..


 பெண் இயலார் எல்லோரும் கண்ணின் பொது உண்பர்
 நண்ணேன் பரத்த நின் மார்பு-திருக்குறள். அ:132:1311


டிஸ்கி

இதில் தவறேதுமிருந்தால் அது திருவள்ளுவருடையது....அல்லது. உரை எழுதிய  மு.வ. வுடையது.
திரைக்கதை...மட்டும் என்னுது.......


ஒழுங்கா ஓட்டுப் போட்டுட்டு......பின்னூட்டமும் எழுதீருங்க....


 இல்ல ........தினம் ஒரு குறள் ரேஞ்சுக்கு ஒரு ட்ரை......... பண்ணி கொன்னுடுவேன்.........