Showing posts with label sathippu. Show all posts
Showing posts with label sathippu. Show all posts

Saturday, December 05, 2009

ஈரோட்டுக்கு வாங்கண்ணே.......



வலைப்பதிவர் சந்திப்பு


ஊரு கூடி தேர் இழுக்க ஆசைதான்
உருப்படியா ஏதும் செய்ய ஆசைதான்.



அக்கத்தூரு பக்கத்தூரு அத்தனைக்கும் சொல்லிவிட்டு
ஆசப்பட்டு அனைவரையும், அன்பொழுக அழைச்சிகிட்டு
சீக்கிரமே ஊரு வந்துடு –செல்லக்கண்ணு
சீமைக்கார மாமன் வரார் செல்லக்கண்ணு.



பட்டணத்து பதிவரெல்லாம் பவிசாக வருவாங்க
பக்கத்தூரு பதிவர்களும் பள பளன்னு வருவாங்க
ஏழெட்டு ஊர் பதிவரெல்லாம்-செல்லக்கண்ணு
எறங்கி இங்கே வாராங்கடி செல்லக்கண்ணு



கதிரு கூட சேர்ந்துகிட்டு, அகல்விளக்கும்
பாலாசியும், வாலுகூட நானுந்தான்
பதிவர்கள அழைக்கப்போறோம்-செல்லக்கண்ணு
பகிர்ந்துகொள்ள விசயமிருக்கு செல்லக்கண்ணு


மாசம், இந்த திசம்பர்தான், தேதி வரும் இருபது
இனிமையான மாலையில், இனிப்புடனே தொடங்கித்தான்
இரவு வரைக்கும் தொடருமடி- செல்லக்கண்ணு
ஈரோட்டில் நடக்க போகுது செல்லக்கண்ணு



 ஊரு கூடி தேர் இழுக்கும் முயற்சிதான்
உருப்படியா ஏதும் செய்ய விருப்பந்தான்
வலைப்பதிவர் எல்லாருமே- செல்லக்கண்ணு
பதிவு செஞ்சு கலந்துக்குங்க செல்லக்கண்ணு