Friday, August 28, 2009

இட மாறு தோற்றப் பிழை…….

நேற்றுமாலை வழக்கம் போல் நண்பர் கதிருடன் மாலை நடை பயிற்சி முடித்து, அலுவலகம் திரும்பி, கடைசி நேர மின் அஞ்சல்களை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, தங்கமணியிடமிருந்து போன்.


“குப்பு”ன்னு வேத்துப் போச்சு……
வாகிங் போனாக்கூட இவ்வளவு வேக்கறதில்லை……


இருக்காதா பின்ன…. ? சும்மா எதோ மெயில் படிச்சிகிட்டிருந்த என்னை, பக்கத்து அலுவலக மார்க்ஸிய நண்பர் கூப்பிட்டு,


“தோழர், வேலையை முடிச்சிட்டு வாங்க, ஒரு லார்ஜ் வச்சிட்டு போலாம், ரொம்ப நாளாச்சு பேசி” னு கூப்பிட்ட


அடுத்த நிமிஷம், போன்கால், தங்கமணிகிட்ட இருந்து வந்தா, …….. தென்ன…. பன்றது………. ?


“தாடிக்காரர்” பத்தின பதிவுகளை படிச்சிட்டு, அதே வேகத்தில, ரெண்டு கருப்பு சட்டை வேற வாங்கி போட்டுகிட்டு, திரியதனால, “ விதியே” ன்னு கூட சொல்ல முடியல……….எல்லாம் தலை விதி……. என்ன பன்றது ……?


ஹி…..ஹி……ஹி…….. நாங்க விதியையெல்லாம்…………… நம்பறதில்லைல…………


சரி சட்டுபுட்டுன்னு விசயதிற்கு வருவோம்………அடடா…… இதுக்கென்ன அர்த்தம்…?


சரி விடுங்க பிரதர்….. நண்பர் “ பழமைபேசி” கிட்ட கேட்டுக்குவோம்…


வீட்டில ஒரு சின்ன ரிப்பேருங்க……. நம்ம நண்பர், கட்டிட பொறியாளர், அதாங்க…


.இன் ஜினியரு….. அவருகிட்ட தங்கமணியே போன் பண்டி சொல்லி



“இதுக்குகூட துப்பில்ல….”(மீண்டும் நண்பர் “பழமை பேசி” யை தொணைக்கு கூப்பிட்டுக்குங்க,,, நெசமாலுமே, இதுக்கு அர்த்தம் தெரியாதுங்க) னு, தங்க மணியிடம் காலையில் திட்டு வாங்கியது நெனப்புக்கு வருதுங்க…

தென்ன பன்றதுங்க… நாம வாங்கிட்டு வந்த ………...அப்படி

 ஹி….ஹி……இப்பெல்லாம்………நாங்க

……….யெல்லாம் நம்பறதில்லை……ல…..




வெசயம் இதுதாங்க…….




கட்டிட ரிப்பேர் செய்யற மேஸ்திரி ஒருத்தர் கொஞ்ச நேரத்தில வருவாரு…. அவரு போன் நெம்பர் ………………இதுதான், என்ன வேலைன்னு, வந்தா காட்டிருங்கன்னு……


நண்பர் சொல்ல….,.


அம்முணி (னி) நம்மைய கூப்பிட, ,


நாம நண்பரை கழட்டிவுட்டுட்டு,……



வூட்டுக்கு ஓட ,,,,




எல்லாம் தல…தி.


எப்பயும் போல, ஒரு டவுசரை போட்டுகிட்டு( பட்டா பட்டி இல்லைங்க..)


நாங்கல்லாம் மாறிட்டம்ல…………



“வாரிசோட” சைகிளை எடுத்துகிட்டு ஒரு ரவுண்டடிச்சிகிட்டு இருந்த போது……… தங்கமணியிடமிருந்து மறுபடியும் போன்,,,



”தெங்க போனீங்க…….. மேஸ்திரி நின்னுகிட்டு இருக்கிறாரு,…..சீக்கிரம் வாங்க……….ஒன்னுக்கும் ….து…….லை…..” ன்னு.



அவசரசமா வூட்டுக்கு வந்தா,,,, மேஸ்திரியையும் காணம், ஒருத்தரையும் காணம்….


ரோட்டில ஒரு பயலைக் காணம்.



அப்பத்தான் ஒரு பைக், நம்ம பக்கத்துல வந்து, மெதுவா…. நின்னுச்சு.


நம்மள மாதிர, ஒரு இளவட்ட பார்ட்டி,



ஹோண்டா பைக், கருப்பு ஷூ, கோடுபோட்ட சட்டையை பேண்டுக்குள்ள உட்டு “ இன் பன்னிகிட்டு, கருப்பு கண்ணாடியை சொக்காயில தொங்க வுட்டுகிட்டு,


தாருகிட்டயோ போனில பேசிட்டு,  வெயிட் பண்ணிகிட்டுருந்தார்.


கையிலவேற ஒரு பை…பொட்டிதட்டறவறாட்டம்……..


அவர் என்னை பார்க்க, நான் அவரை பார்க்க…….. இப்படியே கொஞ்ச நேரமாச்சு.   ......... மேஸ்திரி வந்த பாட்டைக் காணம்.



சரின்னு அம்மணிகிட்ட மேஸ்திரி நம்பரை வாங்கி, ஒரு ஒரமா நின்னு, மேஸ்திரியை கூப்பிட்ட, அவரு……

“சார் உங்க வீட்டு வாசல்ல தான் நிக்கறன் சீக்கிரம் வாங்கன்னார்…..”



அப்படியே திரும்பிப் பார்த்தா……. பைக் பார்ட்டிதான்……….. மேஸ்திரியாம்……..



நம்ம வாய் எப்பவும் சும்மா இருக்கிறதில்லைல …….என்ன பன்றது…… எல்லாம் தல ...தி.

அவருகிட்ட போயி,     ம்.......நீங்க தான் ……….அனுப்புன மேஸ்திரியா? ன்னு கேட்க..


அவரும் கேவலமா ஒரு பார்வை பார்த்து “ நீங்க தான் பில்டிங் வோனரா?”ன்னார்.


நானும் வுடாம,,

 ஆமா….“வரும்போதே பார்த்தேன்…… ஆனா நீங்க மேஸ்திரியா இருப்பீங்கன்னு தோணலை” ன்னு சொல்லோ........

 அவரும்….

”வூட்டு வோணர் நீங்களா இருப்பீங்கன்னு தோணலை”ன்னு  சொல்லோ…..


ம்ம்ம்……என்னத்தச் சொல்ல………..





 அப்பத்தான் எங்கியோயிருந்த வந்த ஒருத்தன், நம்மள ஒரு பூச்சி மாதர பார்த்திட்டு, நம்ம பைக் பார்டிகிட்ட போய், 

"சார்,   வீட்டு முன்னாள இருக்கிற கிரில்க்கு கிரீஸ் போடனுமா?  50ரூ குடுங்க சார், நல்லா போட்டுடறன்" னு சொல்லோ



பைக் பார்ட்டி நம்மள பார்க்க,   இந்த கன்றாவியெல்லாம் பார்க்காத மாதர அந்தபக்கம் திரும்பிகிட்டனுங்க.....



ம்ம்.....என்னத்தச் சொல்ல


இதுதான்…..” அதாங்க “தலைப்போ”



குறிப்பு:
என்னை எழுதி வைத்தே தீருவேன் என்று அடம் பிடித்து, எழுத வைத்த நண்பர் கதிருக்கு நன்றிகள்.

அன்புடன்
ஆரூரன்






















Thursday, August 06, 2009

எத்தனை பெரியார் வந்தாலும் இவனுங்களைத் திருத்த முடியாது

பார்ப்பணீயம், ஆதிக்க சமுதாயம், மனு தர்மம், வர்ணாசிரமம், சூத்திரன், சண்டாளன்,ஆரிய மயமாக்கல் என்றெல்லாம் பலரும் பல்வேறு காரணங்களுக்காக பேசி வருகின்றனர். இலக்கிய உலகிலும் இது பல்கி பெருகி வருவதை காணமுடிகிறது. நவீன இலக்கியத்தின் வரைகளாக தலித்தியம், பெண்ணியம், இன்னும் இது போல பல இசங்கள்,இயங்கள் கூட பெரியார் தயவில் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
சமீப காலங்களில், பெரியாரை வம்பிற்க்கும் வழித்துணைக்கும் இழுக்காத ஆட்களே இல்லை. கட்சிகளே இல்லை, கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இந்த “பெரியார் மயமாக்கல்” எதற்காக? என்பது தான் புரியாத புதிர். பலரும் பெரியாரைப்பற்றியும், அவரின் சமூக விழிப்புணர்வு கருத்துக்களைப் பற்றியும் பரவலாக மேடைகளில் பேசுவதை காணமுடிகிறது. திராவிடர்கழக நண்பர்கள் மத்தியில் மட்டுமே பேசப்பட்டு வந்த பெரியாரி(சம்?) இன்று பேசப்படாத மேடைகளே இல்லை, எழுதப்படாத வலைத்தளங்களும் இல்லை,பேசாத இலக்கிய வாதிகளும் இல்லை. மேல் தட்டு சீமாண்கள்(திறனாளர். சீமான் அல்ல) கூட தங்களை சமூக நீதி காப்பாளர்களாக காட்டிக் கொள்ள பெரியாரை துணை கொள்கின்றனர்.
பல தலித் இலக்கிய வாதிகளின் பேச்சு மற்றும் எழுத்துக்களை கவனிக்கும் போது, அவர்கள் இன்னும் பார்ப்பண ஆதிக்க சமுதாயம், சூத்திரன் என்ற வார்தைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இவர்கள் எந்த பார்ப்பணனிடம் அடிமையாக இருந்தனர் என்று தெரியவில்லை. உயர்ஜாதி இந்துக்களாக தங்களை சித்தரித்து கொள்கிற அல்லது சொல்லித் திரிந்துகொண்டிருக்கிற மதவாதிகளுக்கு எதிரான போராட்டங்களை இவர்கள் முன்னெடுத்துச் செல்வதில்லை.   பிறப்பால் உயர்ந்தவன் என்பதை பார்ப்பணன் சத்திரியனிடமும்,   பார்ப்பணன், சத்திரியன், இருவரும் சேர்ந்து வைசியனிடமும்.   இம்மூவரும் சேர்ந்து சூத்திரனிடமும்  நிலைநிறுத்த முற்படுகின்றனர் என்ற உண்மையை இவர்களால் ஏன் சொல்லமுடியவில்லை? எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் பார்ப்பண வட்டம், தனக்குச் சமமாக இல்லையென்றாலும், சாதகமாக இருக்கின்ற படியால் மற்ற இருவரையும் கூட்டு சேர்ந்து, தன் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வது இங்கே இயல்பாகிவிட்டது. 


பிற்படுத்த பட்டோரின் பாதுகாவலர்களும், தாழ்த்தப்பட்டோரின் நல்வாழ்விற்காக போராடுவதாக கூறிக்கொள்ளும் சமூக நீதி காவலர்கள், யாரை? எதற்காக? எதிர்த்து போராடுகிறோம் என்பது தெரியாமலே போராடுகிறார்களா? அல்லது (மிக) தெரிந்து, நம்மை முட்டாளாக்கி, அவர்களும் பின்னாளில் முட்டாளாகப் போகிறார்களா? என்று தெரியவில்லை.  
ஒரேடியா போரடிக்க கூடாதில்ல…… அதான் ஒரு சின்ன பிளாஷ்பேக் 

மாமல்லன் மகேந்திர பல்லவன் தளபதி பரஞ்சோதி என்பவர் 7ஆம் நூற்றாண்டில், வாதாபியை வென்று, அங்கிருந்த கோட்டை வாயிலில் இருந்த தும்பிக்கையுடன் இருந்த சாமி சிலையை வெற்றிச் சின்னமாக தன் அரசனுக்கு கொடுக்க எடுத்துவந்தது தான், முதன்முதலில் விநாயகர் தமிழ்நாட்டுக்கு வந்த கதை. இதற்கு முன் விநாயகர் வழிபாடு தமிழகத்தில் இல்லை.
ஆற்றங்கரை, ஊரின் நடுவில் இருக்கும் நிழல் தரு ஆல, அரச,வேம்பு மரத்தடிகளில், வீரர்களின், குடும்பத்தலைவர்களின் நடுகல் மட்டுமே இருந்திருக்க வேண்டும். பின்னாளில் மன்னர்களின் நாடுபிடி சண்டையில், பிடிக்கப்பட்ட நாட்டில் தன் மதம், கலாச்சாரத்தை திணிக்கத் தொடங்கினர். சமணத்தை பின்பற்றிய மன்னர்கள் சமண துறவிகள் சிலைகளை நிறுத்தி இருந்தனர். இதற்கு பிறகு வந்த இந்து சமயவாதிகள் சமண சமயத்தை ஒழிக்க முற்பாட்டு, பல இடங்களில் இருந்த சமண மத சின்னங்கள் இந்தப் புள்ளையாரை பதிலியாக்கினர். இதன் பின் தான் ஆத்தங்கரை, அரசமரத்தடிகளில் பிள்ளையார் வழிபாடு துவங்கியது. 


மறுபடியும் விசயத்திற்கு வருவோம்:
ஆதிமனிதன் தான், தன் சுற்றம் என்ற அளவில் வாழும்போது, அவர்களில் வயதில் மூத்தவன் குடும்பத்தலைவனானான். கூட்டம் பெருகிய போது வலிமையானவனும், திறமையானவனும், ஏமாற்றத் தெரிந்தவனும், இனத் தலைவன் ஆனான். பல இனங்களை ஒன்று திரட்டி தனக்கு அடிமையாக்கியவன் சிற்றரசனாகமும், பல சிற்றரசர்களை, ராஜ தந்திரத்தாலும் (வஞ்சகத்தாலும் )அடிமைப்படுத்தியவன் மன்னனானான். பல மன்னர்களை வென்றவன் பேரரசானான். இப்படி போர்களின் மூலம் சண்டையிட்டு, மக்களை அடிமைகளாக்கி, பின் அவர்கள் வாழ்வாதரம் தேடும் போது, அவர்களை காப்பவனாக தன்னைக் காட்டிக் கொண்டு அவர்கள் மீது அதிகாரம் செலுத்துவது காலம் காலமாக நடந்து வரும் நிகழ்வுகள்.
தன் அதிகாரத்தை மேம்படுத்தி, சக மனிதனிடமிருந்து தான் கல்வியில், பட்டறிவில், பணத்தில், பகட்டில், பிறப்பில், வலிமையில், வாதத்தில், கலையில், உயர்வானவன் என்பதை காட்டிக் கொள்வதில் பேராணந்தம் அடைகின்ற ஒரு பழக்கம் நம் அனைவரில் காணமுடிகிறது.
பள்ளிக்குழந்தைகளின் மதிப்பெண் பட்டியல்களும், அதற்காக பெற்றோர்கள் எழுதும் தேர்வுகளும்(?), அதற்கு சாட்சி. தனி மனித வளர்ச்சியையோ, மற்றவர்களிடமிருந்து தான் உயர்வாக இருக்கவேண்டும் என்பதில் அவர்கள் காட்டும் ஆர்வத்தையோ, அதற்காக எடுக்கும் முயற்சிகளையோ நான் குறை வில்லை. மாறாக தனி இவை மற்றவரின் அடிப்படை சுதந்திரத்தையும், காலாச்சாரத்தையும், இயல்புகளையும் பாதிக்கின்றன் என்பதில் தான்
பிரச்சனை.

மேற்கண்ட கட்டுரைக்கும், பின் வரும் என் சுய சரிதையின் ஏதோ ஒரு பக்கத்திற்கும் தொடர்பு இருப்பதாக யாரும் எண்ணக் கூடாது
சிறு குழந்தைகளாக இருந்த போது நம்மால் தொட்டு தடவி, சிறு குடத்தில் நீரிரைத்து குளிப்பாட்டி, தெருவோர காட்டு மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டவனும், நண்பர்களோடு நண்பனாய் பள்ளிவிடுமுறை நாட்களில் நம்மோடு இருந்தவனும் , பிறந்தநாளின் முதல் வாழ்த்துச் சொன்னவனும், தேர்வுக்காலங்களில் நம்பிக்கை விதை ஊன்றியவனும், பட்டணத்து பணக்கார வீட்டுக் குழந்தைகளின் கரடி பொம்மையை போல, நமக்கு உற்றதுணையாய் இருந்தவனும், வேளை வெட்டி இல்லாதோருக்கு போக்கிடமாய் இருந்தவனும், வேலை செய்து கலைத்து வரும் தொழிலாளத் தோழர்களின் மதிய உணவு மேசை வழங்கியவனும், வயது முதிர்ந்த நம் பெரிசுகள் அமர்ந்து ஆட்டோகிராப் எழுத இடம் கொடுத்தவனும், காக்கை, குருவி, போன்ற பறவைகள் எச்சமிட்டாலும், எட்டி நில் என்று சொல்லாமல், எல்லொருக்கும் எல்லாமாய், இருந்த நமது தெரு பிள்ளையாரை காணவில்லை. 

சக மனிதனை விட தான் உயர்ந்தவன், சிறந்தவன், பக்திமான், தருமவான், கோடி புண்ணியம் எனக்கும் என் குடும்பத்திற்கும் வேண்டும். நான் மட்டும் நல்லா இருக்கனும், என்ற நல்ல எண்ணத்தில் ஓரிரு நடிப்பு சுதேசிகள் ஒன்று சேர்ந்து, எங்கள் தெருப் பிள்ளையாருக்கு கோவில் கட்டி, (சொந்த காசிலல்ல, ஊரூ பூரா உண்டி தூக்கிதான்)தங்கத்திலே கவசம் செய்து, இரும்புக் கதவு கொண்டு பூட்டி, அதன் சாவியை, நமக்கு புரியாத மொழியில் நம்மையும் நம் புள்ளையாரையும் திட்டும், அயோக்கியன் கையில் கொடுத்து விட்டு

இவனும் வெளியே நிற்கிறான்….. நானும் வெளியே 
நிற்கிறேன்…….புள்ளையாரு மட்டும் உள்ளையா இருக்கப் போறாரு….

பின்குறிப்பு: அன்புச் சகோதரர் மாதவராஜ் அவர்களின் தீராத பக்கங்களில் வந்த பெரியார் இன்று இருந்திருந்தால்…… கட்டுரையை நான் படிக்கவில்லை என்று உறுதிகூறுகிறேன்.(mathavaraj.blogspot.com)

Wednesday, August 05, 2009

செம்புலப்பெயல்நீர் போல


உனக்கும் எனக்கும்
 ஒரே ஊர்………….
                           வாசுதேவ நல்லூர்
நீயும் நானும்
ஒரே மதம்.
                           திருநெல்வேலிச்
                          சைவப்பிள்ளைமார்……
                           வகுப்பும் கூட..
உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக்காரர்கள்
                         மைத்துனன்மார்கள்.
எனவே……..
செம்புலப்பெயல்நீர் போல  
அன்புடைநெஞ்சம் தான்  கலந்தனவே……மீரா.

Monday, August 03, 2009

அரசியல்


ஒன்றின் மேல் ஒன்றை குறி பார்த்து
எறிந்து குண்டு விளையாடினோம்
எவெரெவரொ வந்து எறிந்து
விளையாட 
நாமே குண்டானோம்.
                                                  மு.மேத்தா

Sunday, August 02, 2009

எப்படிச் சொல்வேனடி.......


மாலைப் பொழுதின் பின்னேரம்
 உழைப்பின் சலிப்பில் என் தேகம்
 திடீர் மாற்றம் என்னருகில்
 திரும்பிப்பார்த்தேன் வியப்புடனே.


 பவளமல்லியின் வாசனையை
 தாங்கிச்செல்லும் பூங்காற்று
 பார்க்கும் இடங்கள் எங்கெங்கும்
 பன்னீர் துளியாய் சாரல் மழை.
ஈரம் கண்ட வறண்ட நிலம்
 ஈந்து தந்த மண் வாசம்

 தூர விளக்கின் வெளிச்சத்தில்
 தனியாய் கண்டேன் – தேவதையை
 மெல்லிய புன்னகை உதட்டோரம்
 மேவிய எழிழாய் அவளுருவம்
 உள்ளம் குளிர உடல் குளிர
 உடனே போனேன் அவளருகில்


 உலகில் அழகுகள் பல இருந்தும்
 என்னை ஏனோ பிடிக்குமென்றால்
 எதை நீ விரும்பிக் கேட்டாலும்
 எதிர்ப்பில்லாமல் உடன் தருவேன்


என்னிடம் உள்ள அத்தனையும்
எடுத்துக் கொடுப்பேன் உனக்காக
 ஆசைப்பட்டு நீ கேட்டால்
 அதை அள்ளித்தருவேன் உடனடியாய்


 பெரும்பொருள்,செல்வம்,புகழ்,
என்னும் போதை மட்டுமல்லாமல்
 இந்திரன் முதலோர் ஏங்கி நிற்கும்
 எழில் நிறை எந்தன் அழகுமொத்தம்
 காத்துக் கிடக்குது உனக்காக


தேவை எதுவாயிருந்தாலும்
 வரமாய் தருவேன் –கேள் என்றால்
 விரைவாய் கேட்டுப் பெற்றுக்கொள்
விடைபெறும் நேர மிதுவென்றால்



 மலர்முகச் சிரிப்பும், மடைதிறப் பேச்சும்
 குயிலினை குரலும் குங்குமச்சாயலும்
 எனக்கு மட்டும் என்றிருந்தால்,
 வானம் என்வசம் என்பதனை
………. எப்படிச் சொல்வேன் அவளிடத்தில்...
 உலகே எதிர்த்து நின்றாலும்
 ஒன்று திரண்டு வந்தாலும்
உன் ஒற்றைச் சிரிப்பு போதுமடி
வெட்டிச் சாய்ப்பேன் வேறோடு-
இதை எப்படிச் சொல்வேன் அவளிடத்தில்...

அன்பாய் என் கரம் பற்றித்தான்
ஆசையில் என் தேள் சாய்ந்துத்தான்
 உடன் வர நீ மட்டும் சம்மதித்தால்
உலகை வெல்வேன் என்பதனை
எப்படிச் சொல்வேன் அவளிடத்தில்...

 உன் வசம் வீசும் காற்றும்
 உன் சுவாசம் வீசும் சூடும்
என்னுடன் என்றும் இருப்பதென்றால்
எதுவும் வேண்டாம் இவ்வுலகில-
இதை எப்படிச் சொல்வேன் அவளிடத்தில்...


சோதனை அயிரம் வந்தாலும்
வேதனையில் உயிர் அழுதாலும்
சாதனை என்றும் நிரந்தரமே
நான் தோற்பதும், தோற்றதும் உன்னிடமே-
இதை எப்படிச்சொல்வேன் அவளிடத்தில்...

 போரைக் கண்டு பயமில்லை
 தோல்விகள் . என்பது எனக்கில்லை
 வெற்றிக் களைப்பில் இளைப்பாற –உன்
மடியில் கொஞ்சம் இடம் வேண்டும்-இதை
 எப்படிச்சொல்வேன் அவளிடத்தில்...