Sunday, August 02, 2009

எப்படிச் சொல்வேனடி.......


மாலைப் பொழுதின் பின்னேரம்
 உழைப்பின் சலிப்பில் என் தேகம்
 திடீர் மாற்றம் என்னருகில்
 திரும்பிப்பார்த்தேன் வியப்புடனே.


 பவளமல்லியின் வாசனையை
 தாங்கிச்செல்லும் பூங்காற்று
 பார்க்கும் இடங்கள் எங்கெங்கும்
 பன்னீர் துளியாய் சாரல் மழை.
ஈரம் கண்ட வறண்ட நிலம்
 ஈந்து தந்த மண் வாசம்

 தூர விளக்கின் வெளிச்சத்தில்
 தனியாய் கண்டேன் – தேவதையை
 மெல்லிய புன்னகை உதட்டோரம்
 மேவிய எழிழாய் அவளுருவம்
 உள்ளம் குளிர உடல் குளிர
 உடனே போனேன் அவளருகில்


 உலகில் அழகுகள் பல இருந்தும்
 என்னை ஏனோ பிடிக்குமென்றால்
 எதை நீ விரும்பிக் கேட்டாலும்
 எதிர்ப்பில்லாமல் உடன் தருவேன்


என்னிடம் உள்ள அத்தனையும்
எடுத்துக் கொடுப்பேன் உனக்காக
 ஆசைப்பட்டு நீ கேட்டால்
 அதை அள்ளித்தருவேன் உடனடியாய்


 பெரும்பொருள்,செல்வம்,புகழ்,
என்னும் போதை மட்டுமல்லாமல்
 இந்திரன் முதலோர் ஏங்கி நிற்கும்
 எழில் நிறை எந்தன் அழகுமொத்தம்
 காத்துக் கிடக்குது உனக்காக


தேவை எதுவாயிருந்தாலும்
 வரமாய் தருவேன் –கேள் என்றால்
 விரைவாய் கேட்டுப் பெற்றுக்கொள்
விடைபெறும் நேர மிதுவென்றால்



 மலர்முகச் சிரிப்பும், மடைதிறப் பேச்சும்
 குயிலினை குரலும் குங்குமச்சாயலும்
 எனக்கு மட்டும் என்றிருந்தால்,
 வானம் என்வசம் என்பதனை
………. எப்படிச் சொல்வேன் அவளிடத்தில்...
 உலகே எதிர்த்து நின்றாலும்
 ஒன்று திரண்டு வந்தாலும்
உன் ஒற்றைச் சிரிப்பு போதுமடி
வெட்டிச் சாய்ப்பேன் வேறோடு-
இதை எப்படிச் சொல்வேன் அவளிடத்தில்...

அன்பாய் என் கரம் பற்றித்தான்
ஆசையில் என் தேள் சாய்ந்துத்தான்
 உடன் வர நீ மட்டும் சம்மதித்தால்
உலகை வெல்வேன் என்பதனை
எப்படிச் சொல்வேன் அவளிடத்தில்...

 உன் வசம் வீசும் காற்றும்
 உன் சுவாசம் வீசும் சூடும்
என்னுடன் என்றும் இருப்பதென்றால்
எதுவும் வேண்டாம் இவ்வுலகில-
இதை எப்படிச் சொல்வேன் அவளிடத்தில்...


சோதனை அயிரம் வந்தாலும்
வேதனையில் உயிர் அழுதாலும்
சாதனை என்றும் நிரந்தரமே
நான் தோற்பதும், தோற்றதும் உன்னிடமே-
இதை எப்படிச்சொல்வேன் அவளிடத்தில்...

 போரைக் கண்டு பயமில்லை
 தோல்விகள் . என்பது எனக்கில்லை
 வெற்றிக் களைப்பில் இளைப்பாற –உன்
மடியில் கொஞ்சம் இடம் வேண்டும்-இதை
 எப்படிச்சொல்வேன் அவளிடத்தில்...

1 comment :

அம்பாளடியாள் said...

அருமையான கவிதை வரிகள் !...
என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உரவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி
பகிர்வுக்கு ....