Showing posts with label அக்கப்போர். Show all posts
Showing posts with label அக்கப்போர். Show all posts

Wednesday, February 01, 2012

அறனெப்படுவது யாதெனில்


இந்த மாத பண்புடன் மின் இதழில் வந்திருக்கும் கட்டுரை:-

 

சில வாரங்களுக்கு முன்பு ஒரு நாள்,, நண்பர் விஜயராகவன்  புத்தகம் ஒன்றை என்னிடம் கொடுத்தார். வாங்கி வீடு திரும்பியவுடன், குழந்தைகளோடு பேசும்போதும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போதும், இரவு உணவு அருந்தும் போதும்,, திரும்பத் திரும்ப மேசையிலிருந்த அந்த புத்தகத்தை மிட்டாய்க்கடை வாயிலிலிருக்கும் சிறுவனைப் போலவே ஆசையோடு பார்த்துக் கொண்டே இருந்தேன்.  அது என்னை பெரும் தொல்லைக்குள்ளாக்கியது. நாளை மெதுவாகப் படிக்கலாம் என்ற என் வைராக்கியத்தை உடைத்து சுக்குநூறாக்குவதில் அது வெற்றி கண்டது. காரணம் அந்த அட்டையில் இருந்த அந்தத் தலைப்பு  "அறம்".

பொதுவாக எல்லாச் சிறுகதைகளையும் மேலோட்டமாக படிப்பதும், சிறப்பாக இருப்பதாகத் தோன்றினால், அதில் ஒரு அடயாளமிட்டு வைத்துவிட்டு இறுதியில் மீண்டும் ஒருமுறை நிதானமாக வாசிப்பதும், அதில் முக்கியமானவைகளைக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்வதும் வழக்கமாக கொண்டிருக்கின்றேன். இந்த முறை முதல் கதையைப் படித்தவுடன் மேலும் அடுத்த கதைக்கு நகரமுடியாத நிலை. எண்ண ஒட்டங்கள் பல்கிப் பெருகத் தொடங்கி விட்டன. மீண்டும் ஒருமுறை வாசித்தேன். அதற்குமேல் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு, படுக்கையில் படுத்தபின்னும் அதிகாலை வரை தூக்கம் வராமல் புரண்டு புரண்டு, ஏதேதோ அறற்றத் தொடங்கியிருக்கின்றேன். தொடர்ந்து இரண்டு நாட்கள் இதே மனோநிலையில் இருந்தேன்.


செட்டி குலமறுத்துச்
செம்மண்ணின் மேடாக்கி
எட்டி எழுகவென்றறம்."

இந்த வரிகள் ஏனோ என்னுள் திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருந்தது.  அதன் பின் சில நாட்களில் ஈரோடு வந்திருந்த ஜெ.மோ அவர்களைச் சந்தித்தேன். பேசிக் கொண்டிருக்கும் போது அவர், அந்த பதிப்பாளர் மட்டுமல்ல அவருடைய குடும்பமே நிலை குலைந்து போய் விட்டன. வாரிசுகள் கூட இன்று முகவரியற்றுப் போய்விட்டனர் என்றதும் எனக்கு ஏதோ போல் ஆகிவிட்டது.  யாரோ ஒருவர் செய்த தவறுக்கு ஒட்டுமொத்த சந்ததியினரும் பாதிக்கப் பட வேண்டுமா? இது எந்த வகையில் ஞாயம்? அறத்திற்கே கூட அறம் கிடையாதா? தவறிழைத்தவனுக்குத் தானே தண்டனை? மற்றவர்களுக்கு அது எப்படி?  இப்படி கேள்விகள் எனக்குள்ளே வந்து போனது.

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம், இன்று மிக உயர்ந்த நிலையில் வாழ்ந்து வருபவர்கள். அதில் ஒருவர் முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி, அவர் சகோதரர் மாநில அரசின் மிக உயர்ந்த பதவியில் இருந்தவர்., சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்றதாகக் கூறக் கேட்ட கதை இதுதான்.
நான்கு சகோதரர்கள், அதில் ஒருவர் பட்டாளத்திற்கு (இராணுவப் பணி) சென்று தன் சகோதரர்களுக்கு பணம் அனுப்பி, இங்கு பெரும் சொத்துக்கள் வாங்கி மகிழ்ச்சியோடு இருந்து வந்தனர். இராணுவத்திலிருந்தவர், போரில் மரணமடைந்துவிட, மற்ற சகோதரர்கள், மூத்த சகோதரரின் மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளையும், வீட்டைவிட்டுத் துரத்திவிட்டனர். அப்பெண்மணி நீதிமன்றத்திற்கு சென்றார். இறந்தவரின் சகோதரர்கள் நீதிமன்றத்தில், சொத்துக்கள் அனைத்தும் தங்கள் உழைப்பால் ஈட்டியது என்றும் அப்பெண்மணிக்கு ஏதும் தர இயலாது என்று  உப்புப் பெட்டிமீது நின்று சத்தியம் செய்ததாக கூறப்படுகிறது. (நீதி மன்றங்களில் உப்பு நிறைந்த பெட்டியின் மீது நின்று சத்தியம் செய்யும் வழக்கம் இருந்திருக்கும்போலிருக்கிறது. இன்றும் இருக்கிறதா என்று தெரியவில்லை) பின்னர் அந்தப் பெண்மணியும் ” அறம் உண்மையாயின் அது கேட்கட்டும்” என்று கூறி வெளியேறி, தன் சகோதரர்கள் உதவியுடன், சிறு சிறு வீட்டு வேலைகள் செய்து தன் குழந்தைகளைப் படிக்கவைத்து உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கின்றார்.  தன் அண்ணிக்கும் அவரின் குழந்தைகளுக்கும் தீங்கிழைத்த மற்ற சகோதரர் குடும்பங்கள் இன்று சின்னாபின்னமாகி, இளவயதிலேயே அவர்களின் குழந்தைகள் இறப்பதும், பித்துப் பிடித்து சுயநினைவிழந்து வாழ்வதையும் நானே பார்த்திருக்கின்றேன். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன், அந்தப் பெண்மணியின் குழந்தைகளையும், பேரக் குழந்தைகளையும், மற்ற சகோதரர்களின் வாரிசுகள் அழைத்து வந்து குல தெய்வக் கோவிலில் விளக்கு வைத்து, அவர்கள் ஒவ்வொருவரின் கால்களிலும் (சிறு குழந்தைகளின் கால்களில் கூட வயதான ஆண்களும் பெண்களும்) விழுந்து மன்னிப்பு கேட்டு கதறி அழுத  நிகழ்ச்சி நடந்தது. அதை நேரில் பார்த்தேன் யாரோ செய்த தவறுக்கு அவர்கள் சந்ததியினர் பாதிப்பது எதனால் என்ற கேள்வி எழுகிறது.

"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் " என்றார்களே, அதுபோல அறம் கூற்றுவனைப் போன்றதா? அறம் தவறிழைத்தவனுக்கு தண்டனை தரக்கூடிய நீதிபதியா?  "அறம்" பற்றி யோசிக்கத் தொடங்கினேன்.

"அறஞ்செய விரும்பு" என்ற அவ்வையிலிருந்து தொடங்கியது என் தேடல். அறம் என்றால் நல்லவை என்ற பொருளில் தான் அவ்வை சொல்லியிருக்க வேண்டும்  அறம் என்றால் தானம் என்று பொருள் சொன்ன ஒன்றாம் வகுப்பு ஆசிரியரை நினைத்துக் கொண்டேன். நல்லவற்றைச் செய்யவேண்டும் அவ்வாறு செய்வதனால் அறமே தலையாயிருந்து நண்மை பெயக்கும் என்ற பொருளில் சொல்லியிருப்பார்களோ?

நன்னெறி பாடிய கருணை சிவப்பிரகாசர்.




கொள்ளுங் கொடுங்கூற்றங் கொல்வான் குருகுதன்முன்
உள்ளங் கனிந்தறஞ்செய்து உய்கவே-



என்றார். இங்கேயும் நல்லது செய்யவேண்டும் என்று சொன்னதாகவே தோன்றியது.  நல்லது என்பது எதையாவது யாருக்காகவாவது தருவது என்ற பொருள் எல்லா இடத்திலும் மறைந்து தோன்றத் தான் செய்கிறது. இதை தான, தர்மம், என்ற பொருள் மதிப்பீடு சார்ந்ததாகவே பார்த்துப் பழகிவிட்டோமோ என்றும் தோன்றுகிறது..

அப்படி என்றால் அறம் என்றால், நண்மை செய்வது, பிறருக்கு ஏதாவது பிரதிபலன் பாராமல் தருவது, என்ற பொருளில் கொள்வது சரியானதுதானே. மூன்றாம் நூற்றாண்டில் கொங்கு மண்ணிற்கு வந்த சமணர்கள் கொடைதான் இந்தப் பெயர் " அறமோ"? என்ற என்னமும் பின் தொடர்கிறது. சமணப் பள்ளி இருந்த  "அறச்சாலையூர்" என்ற ஊர் ஈரோடுக்கு அருகில் இருப்பதும், அறச்சாலையம்மன் என்ற பெண்தெய்வத்தின் கோவிலும் இங்கிருக்கின்றதே, நண்மை செய்வோர்க்கு நல்லது அல்லது செய்வோர்க்கும் தண்டனையும் தருவதே அறம் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. ஒரு சமூகத்தை நல்வழிப்படுத்தவும், ஏற்ற தாழ்வுகளுக்கு சமாதானம் சொல்வதற்குமான காரணிகளாய் உருவாக்கப்பட்டிருக்க வேன்டும் இவையெல்லாம்.அறம் மறுப்பவன் தண்டிக்கப் படுவான், என்ற கருத்தினாலே உருவாக்கப் பட்டவைதானே இந்த தெய்வ உருவங்களெல்லாம்.


அப்பத்தா இப்படிச் சொன்னாங்கன்னா, அப்புச்சி வேற மாதர சொல்லறாரே.....



அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பது இல்லாயின் நன்று.

அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.


இப்படி சொல்லிகிட்டே வந்தவரு, திடீர்னு மெரட்ட ஆரம்பிக்கிறார்......

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.


தலைப்பாகை, நீள கோட்டு, மேலே அங்கவஸ்திரம் அணிந்து, கையில் அழகான ஒரு வாக்கிங் ஸ்டிக்கோடு கம்பீரமாக நடந்து வந்து, கப்பலோட்டிய தமிழனய் வசனம் பேசியபோதும், சிறையிலே கட்டம் போட்ட கைதி உடையணிந்து செக்கிழுத்த செம்மலாய் வ.உ..சியாக வே வாழ்ந்து காட்டினார் சிவாஜி கணேசன்.

வெள்ளிப் பனிமலை மீதுலாவுவோம் அடி
மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்..

என்ற பாடலில் மெய் சிலிர்த்துப் போனோம்.  வ.உ.சி யே நேரில் வந்திருந்தால் இந்த அளவிற்கு அவரைக் கொண்டாடி இருப்போமா? என்பது சந்தேகமே.

கதர் துணியால் தைக்கப் பட்ட கை வைத்த பனியன், இடுப்பிலே ஒரு பழைய வேட்டி, செருப்பில்லாத கால்கள், ஒரு சிறிய வீட்டில், கைகளில் மண்ணெண்ணை கேன்கள், பொது மக்களுக்கு மண்ணெண்ணை விற்பனை செய்து, அதன் மூலம் ஈட்டிய பணத்தில் தன் குடும்பத்தை காப்பாற்றி வந்தார் வ.உ.சி என்ற செய்தி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. சுதேசி கப்பல் கம்பெனியில்  தொடங்கி, அருந் தமிழுக்கு அவர் ஆற்றிய பணிகள் எத்தனை எத்தனை?  ஒரு கப்பல் நிறுவனம் நடத்தியவர் , சாதாரண மண்ணெண்ணை வியாபாரம் செய்து பிழைக்கும் நிலைக்கு ஆளானது எப்படி?  சரி எப்படியோ? அவர் அதை எப்படி எடுத்துக் கொண்டார் என்பதை விட நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதே இங்கு முக்கியம்.  ஒரு வேளை அவரும் ஏதாவது பெருந்தவறு செய்தவராக இருப்பாரோ? யாரையாவது ஏய்த்துப் பிழைத்திருப்பாரோ?  ஆனால் அப்படியெல்லாம் அவர்மீது குற்றச் சாட்டுகள் வரவில்லையே....பின் எப்படி இப்படி

இதுக்கும் அப்புச்சி ஒரு பதிலு வச்சிருக்காரு.........

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்



நல்லவர்கள் மோசமான நிலைக்கு போவதும், கெட்டவர்கள் நல்ல நிலையில் வாழ்வதைப் பார்க்கும் போது "கலி முத்திப் போச்சு" என்று நம் ஊரில் பேசுவார்கள். ஆனால் அப்புச்சிக்கே இதுக்கு காரணந் தெரியலை,  அதனாலதானோ என்னவோ செவ்வியான் கேடும் நினைக்கப் படும்(ஆராயப்படவேண்டியது) என்கிறார். அப்புச்சிக்கே தெரியலைன்னா அப்புறம் நமக்கெங்கே........
.
அறஞ்சூழும், அறம் கூற்றாகும், அப்புடி இப்புடின்னு ஊருக்கெல்லாம் கதை சொன்னவரு, அவரு குடும்பத்திற்கு அதை சொல்லிருந்தாருன்னா திகார் பக்கம் போற வேலை இருந்திருக்காது பாருங்க.

சரி நமக்கெதுக்கு அரசியலெல்லாம்................

மொத்தத்திலே, அறமோ?, மறமோ? எதையாவது சொல்லி, எழுதி பயமுறுத்தி எங்களை மாதிரி அப்பாவி பொது மக்களை அயோக்கியப் பயங்ககிட்ட இருந்து காப்பாதுங்கடா சாமீ...................எங்களால இவனுங்க செய்யறத சகிச்சிக்கவும் முடியல, எதிர்க்கவும் முடியல.





Friday, January 06, 2012

கம்பனும் நானும்.................


கா.சு பிள்ளை உரை எழுதி வெளியிட்ட தனிப்பாடல் திரட்டு 2ம் பாகம் புரட்டிக் கொண்டிருந்தேன்.  கம்பன் எழுதியதாகக் குறிப்பிடப்பட்டிருந்த பாடல்களைப் படித்தேன். இவைகளையுமா? கம்பன் எழுதியிருப்பார்,  என்ற ஆச்சரியமும் வியப்பும் மேலிட்டது.  இராமாயணம் எழுதிய கம்பன் வேறு இவர் வேறா? இருவரும் ஒருவரா? யாராவது சொல்லுங்களேன்???

கோயில் வாசலில் இருக்குமாறு சொல்லிவிட்டுச் சென்ற தாசி குறித்துப் பாடியது

இல்லென்பார் தாமவரை யாமவர்தம் பேரறியோம்
பல்லென்று செவ்வாம்பன் முல்லையும் பாரித்து
கொல்லென்று காமனையுங் கண்காட்டிக் கோபுரக்கீழ்
நில்லென்று போனாரென் நெஞ்சைவிட்டுப் போகாரே


பொருத்தமில்லாத் தாசி குறித்துப் பாடியது

சொல்லியைச் சொல்லினமுதான செல்வியைச் சொற்கரும்பின்
வில்லியை மோக விடாய்தவிர்விப்பாளை விழியம்பினாற்
கொல்லியைக் கொல்லியம் பாவையொப்பாளைக் குளிரொற்றியூர்
வல்லியைப் புல்லிய கைக்கோவிவர் வந்து வாய்ப்பதுவே


தான் இறக்கும்போது

ஆன்பாலுந் தேனு மரம்பைமுதன் முக்கனியும்
தேம்பாயு வுண்டு தெவிட்டு மனந்-தீம்பாய்
மறக்குமா வெண்ணைய் வருசடையா கம்பன்
இறக்கும்போதாயினி

இராமயணம் எழுதக் காளியை பந்தம் பிடிக்கச் சொல்லியது

ஒற்றியூர் காக்க வுறைகின்ற காளியே
வொற்றியூர்க் காகுத்தன் மெய்ச்சரிதை-பற்றியே
நந்தா தெழுதுதற்கு நல்லிரவின் மாணாக்கர்
பிந்தாமற் பந்தம் பிடி


காவிரி எச்சிநீர் எனப்பாடியது.

மெய்கழுவி வந்து விருந்துண்டு மீளுமவர்
கைகழுவு நீர் போலுங் காவிரியே-பொய்கழுவும்
போர்வேள் சடையன் புதுவையான் றன் புகழ்
யார் போற்ற வல்லா ரறிந்து.


குலோத்துங்கன் அவையில் இருந்த அவர், அவனோடு கோபங் கொண்டு கொங்கு மண்டலத்திற்கு வந்திருந்து, ”மங்கல வாழ்த்து” என்னும் வேளாளர் திருமணச் சடங்குகள் குறித்தும் பாடியதாக திருச்செங்கோடு முத்துசாமி கோனார் குறிப்பிடுகின்றார். இவரே இதை 1913ல் பதிப்பித்தவர். இராமாயணக் கம்பன் எழுத்து நடைக்கும் இதற்கும் மிகுந்த வேறுபாடு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.

மங்கல வாழ்த்து:


  அலைகடல் அமிழ்தம் ஆரணம் பெரியவர்
திங்கள் மும்மாரி செல்வம் சிறந்திடக்
கந்தன் இந்திரன் கரிமா முகத்தோன்
சந்திர சூரியர் தானவர் வானவர்
முந்திய தேவர் மூவருங் காத்திட
நற்கலி யாணம் நடந்திடும் சீர்தனில்
தப்பிதம் இல்லாமல் சரசுவதி காப்பாய்!
சீரிய தினைமா தேனுடன் கனிமா
பாரிய கதலிப் பழமுடன் இளநீர்
சக்கரை வெல்லம் தனிப்பலாச் சுளையும்           10

சீருடன் நெய்யும் தேங்காய் பழமும்
வாரியே வைத்து வரிசை குறையாமல்
முறைமை யதாக முக்காலி மேல்வைத்து
மணம் பொருந்திய மாப்பிள்ளை தனக்குக்
குணம் பொருந்திய குடிமகனை அழைத்துத்
தெள்ளிய பாலால் திருமுகம் துடைத்தபின்
அரும்பிய மீசையை அழகுற ஒதுக்கி
எழிலுடை கூந்தலுக்கு எண்ணெய் தனையிட்டுக்
குணமது சிகைக்காய் கூந்தலில் தேய்த்து
ஏழு தீர்த்தம் இசைந்திடும் நீரை

எளிய நாட்டு வழக்கச் சொற்களால் பாடியிருக்கிறார் போலும் என்று கொங்கு அறிஞர்கள் விளக்கம் தருகிறார்கள்...இதில் எந்த அளவு உண்மையிருக்கிறது என்று தெரியவில்லை.

திருக்கை வழக்கம்

பிள்ளையார் வழிபாடு

கங்கைபெறும் காராளர் கருவியெழு பதுமுரைக்க
அங்கைபெறும் வளைத்தழும்பு முலைத்தழும்பு மணியமலை
மங்கைபெறும் திருவுருவாய் வந்துறைந்தார் தமைவலஞ்செய்
கங்கைபெறுந் தடவிகடக் களிற்றானைக் கழல்பணிவாம்

நீலி தனக்(கு) அஞ்சி நின்ற வணிகேசனுக்காக்
கோலி அபயம் கொடுக்கும் கை. 15


ஆதுலர்க்குச் செம்பொன் அளிக்கும் கை, ஆகமங்கள்
வேத புராணங்கள் விரிக்கும் கை. 27

நாவில் புகழ்க் கம்பநாடற்(கு) அடிமை என்றே
மாவைக் கரைத்து முன்னே வைக்கும் கை 34

ஏர் எழுபது ஓதி அரங்கேற்றுங் களரியிலே
காரி விடநாகம் கடிக்கும் கை. 35
இதற்கு பொருள் யாராவது முதலில் சொல்லுங்கய்யா........

கனக்கவே
அன்(று) ஈன்ற நா(கு) எழுபதான எருமைத் திறத்தைக்
கன்றோடு நல்கும் கடகக் கை. 49
எருமை என்ற சொல்லின் வேர்ச்சொல் எதுவாக இருக்கும்?????????????????



ஏர் எழுபது:

நீற்றோனும் மலரோனும் நெடியோனும் என்கின்ற
தோற்றாள ரிவராலே தொல்லுகம் நிலைபெறுமோ
மாற்றாக காவேரி வளநாடர் உழுங்கலப்பை
ஊற்றாணி யுளதாயின் உலகுநிலை குலையாதே

19 உழுவோனின் சிறப்பு

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாருந்
தொழுதுண்டு பின்செல்வா ரென்றேயித் தொல்லுகில்
எழுதுண்ட மறையன்றோ இவருடனே இயலுமிது
பழுதுண்டோ கடல்சூழ்ந்த பாரிடத்திற் பிறந்தோர்க்கே

இதுபோல் திருக்குறளிலிருந்து ஒரு முழுக் குறளையும் கம்பன் ஏதாவது ஓரிடத்தில் கையாண்டிருக்கிறாரா?  தெரிந்தவர் சொல்லுங்களேன்....

சடகோபர் அந்தாதி, சரசுவதி அந்தாதி ஆகியவையும் கம்பரால் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது......


இப்படியும் ஒரு பாடலை கம்பன் பாடியதாக கூறுகின்றனர்.....

செட்டிமக்கள் வாசல் வழி செல்லோமே செக்காரர்
 பொட்டி மக்கள் வாசல் வழி போகோமே,
 முட்டிபுகும் பார்ப்பார் அகத்தை எட்டிப்பாரோமே
 எந்நாளும் காப்பாரே வேளாளர் காண்!"


மங்கல வாழ்த்து, திருக்கை வழக்கம், ஏர் எழுபது போன்றவை படித்து ரசிக்கத்தக்கனவாக அமைந்திருந்தாலும், கம்பனின் பெயரை ஏதோ பெருமைக்கு இழுத்துவிட்டுக் கொண்டது போல தோன்றுகிறது. இது என் தனிப்பட்ட கருத்து.  குறித்த சரியான விளக்கம் கிடைத்தால் என் எண்ணத்தை மாற்றிக் கொள்ள நான் தயாராக இருக்கின்றேன்.


இராமாயணத்தின் கம்பனைப் படித்தபின், இதை ஏனோ என் மனம் ஏற்க மறுக்கிறது.............

Friday, February 04, 2011

எழவு........எத்தனை பெரியார் வந்தாலும் உங்களைத் திருத்த முடியாதுடா...



போன வாரத்தில ஒருநா, எங்கூரு பெரிய மனுசர் ஒருத்தரு வூட்டுக்கு, போயிருந்தனுங்க. முன் அறையில, நம்மூரு கெவருமெண்டு பஸ்ஸில இருக்கறமாதர ஒரு தாடி வச்ச சாமியாரு, கைல ஏடெல்லாம் வச்சிகிட்டு நிப்பாருங்கல்ல, அதுல கூட “பொறப்பொக்கும் எல்லாவுசுருக்கும்னு” எழுதியிருக்குமுங்கல்ல, அந்த போட்டா மாட்டியிருந்துச்சுங்க.  நான் பார்க்கப் போன பெரிய மனுசரும், அந்த கரைவேட்டி கச்சைக்காரர் தானுங்க.

அவரும், நம்மளை மதிப்பா கூட்டிகிட்டுப் போயி சோத்து மேசையில உக்காரவச்சு, பொங்கலு, பனியாரம், வடை எல்லாம் போட்டு, சாப்பிடச் சொன்னாரு. ஆனா பாருங்க, அவரு ஒரு கிண்ணத்தில கொஞ்சூண்டு கஞ்சியூத்தி, அதை கரண்டியில மொண்டு குடிச்சிகிட்டே சொன்னாரு.. சக்கரை எச்சாப் போச்சுங்க..அதுனால காலைல கோதுமைக் கஞ்சிதானுங்க. எனக்கு ஆகாரம்னார்..

அடக் கொடுமையே...எல்லாப் பலகாரத்தையும் செஞ்சி அடுத்தவனுக்குப் போட்டுப் போட்டு, இவர மோட்டுவளையப் பார்க்க வச்சிட்டானேன்னு வெசனப் பட்டாலும்,  சரி, நமக்கு கெடச்சதுல கவனமா இருப்பமுன்னு இருந்தனுங்க..

பொறவு, பேசிகிட்டே முன்னுக்க வந்து உக்காந்தோம்.  அப்ப, அவரோட மேனசரு வந்து, வேலை வேணும்னு யாரோ வந்திருக்கறதா சொன்னாரு.  நாங்க உக்காந்திருந்த அந்த அறையில, நேர்முகத் தேர்வு நடந்தது. வேலை கேட்டு வந்தவரப் பார்த்தா, ராசா கணக்கா இருந்தாருங்க. (நம்ம லச்சத்து எழுபத்தஞ்சாயிரம் கோடி ராசா இல்லீங்க, நெசமாலுமே ராசாவாட்டம் இருந்தாரு). . 

நம்ம தொழிலதிபரும், அவரு அறிவுக்கெட்டுன அளவு கேள்வி கேட்டாரு. இதுல இன்னொரு விசியத்தையும் சொல்லோனும்.  நம்மாளு ரொம்ப நாளா இ.கை.பெ.(அதானுங்க கை நாட்டு).  இப்ப கொஞ்ச வருசமாத்தான் எழுதிப் பழகி, காசோலைல கையெழுத்துப் போடற அளவு வளந்திருக்காரு..  அதுலையும், அவரோட பேரில் இருக்கிற  கடேசி எழுத்துல வார கொம்பு, காசோலைக்கு வெளில, மேசைல தான் இருக்கும். 

இவுரே, இத்தனை கேள்வி கேட்டதும் எனக்கு வந்தவரை நெனச்சு ரொம்ப வெசனமாப் போச்சு. வந்தவரும் எல்லாத்துக்கும் பவுசா பதில் சொல்லிகிட்டே இருந்தாரு. 

கடேசியா ஒரு கேள்வி கேட்டாரு பாருங்க...நீங்க என்ன சாதின்னு?

வேலை கேட்டு வந்தவரு தட்டுத் தடுமாறி, பதில் சொல்லத் தயங்கிக் கிட்டே ஏதோ ஒரு சாதிப் பெயரைச் சொன்னாரு.  
 சரி...நான் வேலை காலி இருந்தால் உன்னைய கூப்பிடறேன். இப்போ ஏதும் காலி இல்லை,. 
என்று சொல்லி வந்தவரை அனுப்பிப் போட்டு எங்கிட்ட சொன்னாரு
..
.” இந்தப்...........பயலுகளெல்லாம் நமக்கு ஒத்து வரமாட்டானுங்க.........பொழங்கற சாதியா இருந்தாத்தான் பரவாயில்லீங்க”.  ன்னாரு...


அடங்கொன்னியா, பொழங்கக்கூடாத எனம்னு எவண்டா சொன்னான்? அவனும் மனுசந்தானேடா. மாட்டைப் புடிச்சாந்து நடுவூட்ல வச்சி  கெரகப் பிரவேசம் செய்யறீங்க.  நாயைக் குளிப்பாட்டி நடுவூட்ல வச்சி கொஞ்சறீங்க. இப்பத்தாண்டா புரியுது நீயேன் மோட்டுவளையப் பார்த்துகிட்டு சோறு குடிக்கறேன்னு நினைச்சுகிட்டனுங்க..

..இந்தக் கெரகம் புடிச்சவனூட்லயா சோறு தின்னோம்னு ஆயிப்போச்சுங்க...எழவு எத்தனை பெரியார் வந்தாலும் உங்களைத் திருத்த முடியாதுடான்னு நினைச்சுகிட்டு ஓடிவந்து போட்டனுங்க.






Wednesday, January 26, 2011

குற்றமென்ன செய்தேன் கொற்றவளே…..குற்றமென்ன செய்தேன்?..








நான் யாருக்கு என்ன தீங்கிழைத்தேன். என்னால் பாதிக்கப்பட்டவர்கள் யார்?  மத்தியின் முன் மாநிலமாக அல்ல, வெளியே திராவிடம் பேசி, உள்ளே தேசியம் காக்கும் லட்சக் கணக்கான திருடர்கள் முன்னனி கட்சியின் பிரஜைகளில் ஒருவனாக கேட்கின்றேன்.  எதிர்த்து வாக்களித்தேனா? நீங்கள் வரும்போது வரவேற்பு ந்டாத்தி பாதபூசை செய்யாமல் இருந்தேனா? கொள்ளையடித்ததில் பங்கு கொடுக்காமலிருந்தேனா? என்ன குற்றம் செய்தேன் கொற்றவனே..என்ன குற்றம் செய்தேன்? ...................

 கூற மாட்டீர்களா? நீங்கள் கூற வேண்டாம்......................

இதோ அறங்கூறும் அமைச்சர் செகத் ரட்சகன் இருக்கின்றார், மறவர் குடிப்பிறந்த மாணிக்கம் கோழைமணி இருக்கின்றார், டை” மண்டும் கூட இருக்கின்றார்.  கொள்ளையடித்துக் கொள்ளையடித்து, கோமான்களாகிய மக்கள் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள்.  கோமணம் உருவப்பட்டதுகூடத் தெரியாமல், வேடிக்கை பார்க்கும் தன்மானத் தமிழர் கூட்டம் இருக்கின்றது..அவர்கள் கூறட்டும்.....என்ன குற்றம் செய்தேன்??

 நான் எழுதாத இலக்கியமா? இத்தனை ஆண்டுகாலமாக,தமிழ் திரைப்படத்துறைக்கு நான் செய்தது கொஞ்சமா? நஞ்சமா?  ” சுத்தியின் சத்தம்” என்ற அந்த ஒரு காவியத்திற்கே குறைந்தது 10 ஆஸ்கார் விருதுகள் வழங்கப் பட்டிருக்க வேண்டும்....பார்ப்பண சூழ்ச்சியின் விளைவாக எனக்கு அது கிடைக்காமல் போனதை உலகம் அறியும்.

 வாழும் வள்ளுவர் என்று என் மக்களால் கொண்டாடப்படுவதை அறிந்தும், மாநிலத்தின் நலனை கருத்தில் கொள்ளாமல், ஏதேச்சதிகாரத்தோடு நடந்து கொள்ளுவதாகவே நான் கருதுகின்றேன்.  இந்த மாற்றாந்தாய்ப் போக்கை மத்திய அரசாங்கம் கைவிட வேண்டும்... அறிஞர்அண்ணா அன்றே சொன்னார்....
 தம்பி...கக்கக்க....காகக்க்க......காக்கா கக்கா கா.
 
ஆடையிழந்து, அம்மணமாய்த் திரிந்த தமிழன்னைக்கு, லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் செலவு செய்து, செம்மொழியாடை கட்டியவன் நான் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது....
ஈழத்தில் போர்நிறுத்தம் இல்லையென்றால், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் என்று சொல்லி காலையுணவுக்குப் பின் தொடங்கி மதிய உணவுக்குள் போராட்டத்தை கை விட்ட கதை உலகறியும். பாலுக்கும் காவலாய், பூனைக்கும் தோழனாய் நடித்து என் ராஜ விசுவாசத்தை அவ்வப்போது வெளிக்காட்டிக் கொண்டுதான் இருக்கின்றேன். 

சமீபத்தில் கூட உங்கள் ஆட்சிக்கு ஆபத்து வந்தபோது உடுக்கை இழந்தவன் கை போலே....அங்கே வந்து தம்பி ராசாவைப் பலி கொடுத்து உங்க அரசினை காப்பாற்றினோம் என்பதை நினைவூட்டக் கடமைப் பட்டிருக்கின்றேன்.
 
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்...ஆனால், தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் சொல்லித்தந்த பாடம் நினைவில் இருப்பதால் இத்தோடு விட்டு விடுவோம்...

 அடுத்த குடி அரசு தினத்திற்கு நான் இருப்பேனோ இல்லையோ தெரியாது...உங்களின் அடிவருடியாக, அடிமையாக இத்தனை நாள் காலத்தை ஓட்டிவிட்ட எனக்கு..பதவிகளின் மீது பெரிய ஆசை கிடையாது.  காலம் முழுவதும் மக்களின் கண்ணீரைத் துடிக்கும் கைக் குட்டையாகவே வாழ விரும்புகின்றேன்.  ஆனாலும், கட்சி கண்மணிகள் நேற்றிரவு இருந்தே, கொதித்துப் போயிருப்பதாலும், ஆரியர்களின் சூழ்ச்சி என்று தமிழினம் பொங்கியெழாமல் இருக்கவேண்டுமே என்ற கவலையினாலும்  இதை எழுதுகிறேன்.....

கமல பூட்டன், கமல விபூட்டன் இல்லையென்றாலும் பரவாயில்லை.....குறைந்த பட்சம் கமலத்திரு (பத்ம பூஷன், பத்ம விபூஷன், பத்மஸ்ரீ......நாங்க கிரந்தம் பயன்படுத்தம் மாட்டமில்ல..அதான் ”தமிழ” ’படுத்தி’ எடுத்து விட்டோம்) பட்டமாவது அளித்திருப்பீர்கள் என்று எதிர்பார்த்திருந்தோம்... ஆனால் மீண்டும் பெரிய அண்ணன் தோரணையில் நடந்து கொண்டீர்கள்.  சரி அண்ணா சொன்னது போல.......தம்பி...மறப்போம்....மன்னிப்போம்....

இனியாவது உடனடியாக, அடுத்த மாத இறுதியில் ஒரு நல்ல நாளில் மீண்டும் குடி அரசு தின விழா நடத்தி, எனக்கு ஏதாவது ஒரு பட்டம் கொடுத்து, பெருமையடைந்து கொள்வதோடு மட்டுமன்றி,  இந்நிகழ்வு வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் எதிர்கால சந்ததிகளுக்கு நேரு குடும்பத்தின் பெருமைகளை பறைசாற்ற ஒரு வாய்ப்பாக அமைவது நிச்சயம்..


Wednesday, December 30, 2009

வெண்ணைய் வெட்டி வினவுக்கு……......

அதிமேதாவி, ஆல் இன் ஆல் அழகு ராசா வணக்கம்

// உலகில் நேர்மறையாக எழுதவேண்டிய விசயங்கள் மலையளவு இருக்கும் போது தொடர்ந்து பிரச்சினைகளையும், தகராறுகளையும் அலசி ஆய்வதிலிருந்து என்று விடுதலை கிடைக்குமோ தெரியவில்லை. ஆனால் ஊர் உலகமென்றால் பிரச்சினைகளும் இருக்கும்தானே?//

ஊர் உலகமென்றால் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும் என்ற முடிவுக்கு வந்த  பின் என்னாத்துக்கு முன்னாடி பெரிய பில்டப்பு?…  நாங்களும் ரவுடி தாண்டி(அதான் அரசியல்வாதி தான்னு) சொல்லிக்கவா? மலையளவு விசயங்கள் எழுத இருக்கும் போது நாம ஏன் இந்த மயிரு புடுங்கற  விசயத்துக்கு வந்தோம்………


//இரவு நடந்த மதுவறைக் கொண்டாட்டங்களில் பேசப்பட்ட வரலாற்றுப் புகழ் விவகாரங்கள் காதுகளுக்கு வரவில்லை என்பதைத் தாண்டி எதையும் நொள்ளை சொல்வதே வினவின் குணம் என்பதால் விட்டுவிட்டு மேலே செல்வோம்.//

பக்கத்தூட்ல என்ன நடக்குதுன்னு, ஒட்டுக் கேக்கிறத நிறுத்தினாவே, போதும் எல்லாப் பிரச்சனையும் தன்னாலே ஓய்ந்துவிடும்.  அதுசரி…அத நிறுத்திப்போட்டா பொழப்புக்கு எங்க போறது….?????????? அவன் கழுவியிருக்கானா? இவன் கழுவியிருக்கானான்னு பாக்கறது தான் பொழப்பே, அப்புறம் அதுல குணத்த பத்தி என்ன சுய விமர்சனம்.


//யாரையோ திருப்திப்படுத்தவோ, முன்னெச்சரிக்கைக்காகவோ, ஜாக்ரதையாக எழுதி பதிந்து கொண்டார். இதன் பின்னணி என்ன?//

ஒரு தேசிய இனம் அடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்து, சுய நிர்ணய உரிமைக்காக, ஏகாதிபத்தியங்களுக்கெதிராக போர் தொடுத்த வேளையில் சர்வ தேசியம், வர்க்கப் போராட்டம் என்று மட்டுமே   பேசச் சொல்லிக் கொடுக்கப் பட்டிருந்தாலும்,  யாரையோ ஏமாற்ற, அல்லது திருப்தி படுத்த , முன்னெச்சரிக்கையாக  தமிழ்தேசியம் ஏகாதிபத்தியங்களுக்கு துணைபோகும் என்று நீங்களே பேசும் போது, அவர் எம்மாத்திரம்.

//அதிலும் “நற்குடி” பெண்களென்றால் பர்தா இல்லாமல் வாழமாட்டார்கள் என்ற ரேஞ்சில் தனது அடிமைத்தனத்தை சிலாகித்திருந்தார். இப்பத்தான் பதிவுலகம் வந்திருக்கும் அந்த பேதைப்பெண்ணுக்கு உலகம், அடிமைப்பெண்கள், சுதந்திரப் பெண்கள், மத பிற்போக்குத்தனங்கள் எல்லாம் புரிவதற்கு பதிவுலகமென்ன முற்போக்கு சிங்கமாகவா உள்ளது?//

ஏகாதிபத்தியத்தியத்தின்,  கொடுமையான விளைவுகளே, சமூக  சீர்கேடுகள்.   சாதி, மதம், இனம், போன்ற அடையாளங்களை முன்னிறுத்தி, வர்க்க அடையாளங்களை அழிக்கப் பார்க்கின்றன என்று பேசிய நாம், இன்று, சமூக சீர்கேடுகளை நீக்கப் பாடுபடுவதன் ரகசியமென்ன?  மாடு போடும் சாணிகளை பொறுக்கி விட்டால், இனி குப்பையாகாது என்ற நம்பும் முற்போக்கு சர்வதேசிய சிங்கமளவிற்கு, பதிவுலகத்திற்கு பத்தாதுதான்.


//இவ்வளவிற்கும் இவர் பர்தாவை எதிர்க்கவில்லையாம். அவரவர் மதம் சார்ந்த நம்பிக்கைகளை அவரவர் பின்பற்றுவது சரியாம். ஆனால் அதற்காக மற்ற மதத்தவர்களை நொட்டம் சொல்வது சரியல்ல என்பதே பிரியாவின் வாதம்.//

 பஸ் ஸ்டேண்டு கக்கூஸ்ல பக்கத்து அறையில இருந்தவன் உளரலை அரைகுறையா கேட்டுகிட்டு,  ஏதோ தானே பக்கத்துல இருந்து பார்த்து, படிச்சு,  மாதிரி எழுதுவதுதான் சகிக்கவில்லை.   சம்மந்தப்பட்ட பதிவின் பின்னூட்டங்கள், நீங்கள் வைரஸ்ல இருந்து திரும்பி வருவதற்குள் எடுக்கப்பட்டு விட்டன.   அப்புறம் எங்கிருந்து இதெல்லாம் படிச்சீங்க….இழவு திருந்த மாட்டீங்களே……..

வடிவேலு சொல்லுற மாதிரி, எத்தனை அடிச்சாலும் வலிக்காத மாதிரி நடிக்கிறீங்களே ……அது எப்புடிங்க……?


//பெண்ணை மதங்கள் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அநீதி குறித்து கிஞ்சித்தும் கவலை கிடையாது. அது இருந்தால் இந்து மதம் பெண்ணை வதைத்திருக்கும், வதைத்துவரும் கொடூரங்கள் குற்ற உணர்வை கொள்ள வைத்திருக்கும். இந்த விசயங்களை அந்தப் பதிவர்களின் பின்னூட்டங்களில் தனியாக நின்று வாதிட்ட  சுகுணாதிவாகரின் பின்னூட்டத்தை பலரும் சீண்டவில்லை என்பது மட்டுமல்லாமல் அநாமதேயங்களாகவும் வந்து கிண்டலடித்தார்கள்.//

அடக்கருமமே…………சம்மந்த பட்ட பதிவர், சுகுணாதிவாகர் வேற, சுகுணா …..திவாகர் வேறன்னு எழுதறாங்க……நீங்க ஏன் புதுசா வந்து எங்கப்பன் குதுருக்குள்ளேன்னு……..

//நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னர் கூட பார்ப்பனப் பெண்கள் விதவையானால் அவளது முடியை ஒண்ணொண்ணாக பிடுங்கி மொட்டையடித்த நாடும் இதுதானே? இந்தக் கதையெல்லாம் தனக்கு தெரிந்த நல்ல பார்ப்பனர்களை வைத்து ஜெயேந்திரப் பார்ப்பனர்களை மறைக்கும் பழமைபேசி பஞ்சாங்கங்களுக்கு தெரியுமா?//

நாலு நல்ல கம்யூனிஸ்டுகள வச்சிகிட்டு(அவுங்களும் நல்ல கம்யூனிஸ்டான்னு மற்ற மார்க்ஸிய தோழர்களைத்தான் கேக்கனும்) நீங்களே 30 வருசமா பொழப்ப ஓட்டும் போது, மத்தவங்கள பேசற யோக்கிதை  எங்கிருந்து வந்தது.

 ஜெயேந்திர பார்ப்பானை நாங்க மறைக்கிறோம், நீங்க என்ன பண்ணிங்க,,,,,?  10க்கு 10 மேடையில் மைக் புடிச்சு நாலு கூட்டம் போட்டிருப்பீங்களா?   அதுக்கப்பறம்???????  

 எங்கடா எழவு வுழும்,  திங்கறதுக்கு பொணம் கிடைக்குன்னு அலையற உங்களுக்கு, பொண்ணு செத்தா என்ன? மாப்பிள்ளை செத்தா என்ன? பொணம் கிடைச்சா சரி………

அப்பவே பல நண்பர்கள் போன் பண்ணி சொன்னாங்க……” அது ஒரு காமெடி பீஸுங்க”   அதுக்கு ஏன் இவ்வளவு விளக்கம்னு.

தமிளு, திராவிடன்னு பேசியே ஒருத்தன் நாற்பது ஐம்பது வருசமா தாலியறுத்தான், அவனையே பொறுத்துகிட்டோம்…….  பெண்ணீயம், பார்ப்பணீயம், சாமீயம், சர்வ ரோக நிவாரணம்…அதான், சர்வதேசியன்னு, நீங்க பேசறதையும் பொறுத்துகிட்டு இருக்கோம்…..ஏன்யா இப்படி பேசிறீங்கன்னு என்னைக்காவது கேட்டிருப்பமா? 

கடைசியா ஒன்னு சொல்லறன் இப்பவாவது திருந்துங்க……..அரிப்பெடுத்தா சொறிய, நாங்களா கிடைச்சோம்.     எத்தனை பேர் மப்புக்குத்தான்  நாங்க ஊறுகாயா இருக்கிறது?



 அதொட மட்டுமில்லாமல், எந்த சாமியாவது காப்பாத்தாதான்னு, ஏங்கிப்போய், வாங்கும் சம்பளத்தில் உங்களுக்கும் மாமூல் கட்டிவிட்டு (சந்தா-ங்கற பேர்ல வாங்கரீங்களே) உங்க அதிமேதாவிதனங்கள கேக்க ஊருக்கு பத்து அப்பாவிகள் இருக்கிறார்களில்லையா?அவர்களையெல்லாம் போய் முதல்ல காப்பாத்துங்கய்யா…….  …


எங்க பிரச்சனையை நாங்க பார்த்துக்கிறோம்….நீங்க போய் உங்க ஒலக பிரச்சனைகளைப் பாருங்க … சர்வதேசிய பிரச்சனைகள் நிறைய காத்துகிட்டிருக்கு உங்களுக்காக..

அதெல்லாம் விட்டுபோட்டு, எதுக்கு இந்த வெண்ணை வெட்டி வேலை., பொரட்சி, கிரட்சி  பண்ணி எல்லாதையும் காப்பாத்தர வேலைய பாருங்க…….


எங்களைய வுட்டுருங்கய்யா………..