Friday, February 04, 2011

எழவு........எத்தனை பெரியார் வந்தாலும் உங்களைத் திருத்த முடியாதுடா...போன வாரத்தில ஒருநா, எங்கூரு பெரிய மனுசர் ஒருத்தரு வூட்டுக்கு, போயிருந்தனுங்க. முன் அறையில, நம்மூரு கெவருமெண்டு பஸ்ஸில இருக்கறமாதர ஒரு தாடி வச்ச சாமியாரு, கைல ஏடெல்லாம் வச்சிகிட்டு நிப்பாருங்கல்ல, அதுல கூட “பொறப்பொக்கும் எல்லாவுசுருக்கும்னுஎழுதியிருக்குமுங்கல்ல, அந்த போட்டா மாட்டியிருந்துச்சுங்க.  நான் பார்க்கப் போன பெரிய மனுசரும், அந்த கரைவேட்டி கச்சைக்காரர் தானுங்க.

அவரும், நம்மளை மதிப்பா கூட்டிகிட்டுப் போயி சோத்து மேசையில உக்காரவச்சு, பொங்கலு, பனியாரம், வடை எல்லாம் போட்டு, சாப்பிடச் சொன்னாரு. ஆனா பாருங்க, அவரு ஒரு கிண்ணத்தில கொஞ்சூண்டு கஞ்சியூத்தி, அதை கரண்டியில மொண்டு குடிச்சிகிட்டே சொன்னாரு.. சக்கரை எச்சாப் போச்சுங்க..அதுனால காலைல கோதுமைக் கஞ்சிதானுங்க. எனக்கு ஆகாரம்னார்..

அடக் கொடுமையே...எல்லாப் பலகாரத்தையும் செஞ்சி அடுத்தவனுக்குப் போட்டுப் போட்டு, இவர மோட்டுவளையப் பார்க்க வச்சிட்டானேன்னு வெசனப் பட்டாலும்,  சரி, நமக்கு கெடச்சதுல கவனமா இருப்பமுன்னு இருந்தனுங்க..

பொறவு, பேசிகிட்டே முன்னுக்க வந்து உக்காந்தோம்.  அப்ப, அவரோட மேனசரு வந்து, வேலை வேணும்னு யாரோ வந்திருக்கறதா சொன்னாரு.  நாங்க உக்காந்திருந்த அந்த அறையில, நேர்முகத் தேர்வு நடந்தது. வேலை கேட்டு வந்தவரப் பார்த்தா, ராசா கணக்கா இருந்தாருங்க. (நம்ம லச்சத்து எழுபத்தஞ்சாயிரம் கோடி ராசா இல்லீங்க, நெசமாலுமே ராசாவாட்டம் இருந்தாரு).

நம்ம தொழிலதிபரும், அவரு அறிவுக்கெட்டுன அளவு கேள்வி கேட்டாரு. இதுல இன்னொரு விசியத்தையும் சொல்லோனும்.  நம்மாளு ரொம்ப நாளா இ.கை.பெ.(அதானுங்க கை நாட்டு).  இப்ப கொஞ்ச வருசமாத்தான் எழுதிப் பழகி, காசோலைல கையெழுத்துப் போடற அளவு வளந்திருக்காரு..  அதுலையும், அவரோட பேரில் இருக்கிற  கடேசி எழுத்துல வார கொம்பு, காசோலைக்கு வெளில, மேசைல தான் இருக்கும். 

இவுரே, இத்தனை கேள்வி கேட்டதும் எனக்கு வந்தவரை நெனச்சு ரொம்ப வெசனமாப் போச்சு. வந்தவரும் எல்லாத்துக்கும் பவுசா பதில் சொல்லிகிட்டே இருந்தாரு. 

கடேசியா ஒரு கேள்வி கேட்டாரு பாருங்க...நீங்க என்ன சாதின்னு?

வேலை கேட்டு வந்தவரு தட்டுத் தடுமாறி, பதில் சொல்லத் தயங்கிக் கிட்டே ஏதோ ஒரு சாதிப் பெயரைச் சொன்னாரு.  
 சரி...நான் வேலை காலி இருந்தால் உன்னைய கூப்பிடறேன். இப்போ ஏதும் காலி இல்லை,. 
என்று சொல்லி வந்தவரை அனுப்பிப் போட்டு எங்கிட்ட சொன்னாரு
..
.இந்தப்...........பயலுகளெல்லாம் நமக்கு ஒத்து வரமாட்டானுங்க.........பொழங்கற சாதியா இருந்தாத்தான் பரவாயில்லீங்க”.  ன்னாரு...


அடங்கொன்னியா, பொழங்கக்கூடாத எனம்னு எவண்டா சொன்னான்? அவனும் மனுசந்தானேடா. மாட்டைப் புடிச்சாந்து நடுவூட்ல வச்சி  கெரகப் பிரவேசம் செய்யறீங்க.  நாயைக் குளிப்பாட்டி நடுவூட்ல வச்சி கொஞ்சறீங்க. இப்பத்தாண்டா புரியுது நீயேன் மோட்டுவளையப் பார்த்துகிட்டு சோறு குடிக்கறேன்னு நினைச்சுகிட்டனுங்க..

..இந்தக் கெரகம் புடிச்சவனூட்லயா சோறு தின்னோம்னு ஆயிப்போச்சுங்க...எழவு எத்தனை பெரியார் வந்தாலும் உங்களைத் திருத்த முடியாதுடான்னு நினைச்சுகிட்டு ஓடிவந்து போட்டனுங்க.


29 comments :

Kathir said...

அடிங் ங்கொய்யாலே,

வூட்டுகாரர் பத்தி எழுத துப்பில்ல,

பழைய நம்பிக்கை நட்சத்திரத்த போட்டுத் தள்ளுறீங்களோ! ஆமா பார்ட்டி திருவள்ளுவர் படமெல்லா வெச்சிருக்கா!!!?

இராமசாமி said...

வாழும் பெரியார் வாழுற காலத்தலயும் இந்த மாதிரி ஆளுங்களா இன்னும்.. மனசு வெசனப்பட்டு போச்சுங்கோ ....

சி. கருணாகரசு said...

மாட்டைப் புடிச்சாந்து நடுவூட்ல வச்சி கெரகப் பிரவேசம் செய்யறீங்க. நாயைக் குளிப்பாட்டி நடுவூட்ல வச்சி கொஞ்சறீங்க//

இதுல என்னங்க தப்பிருக்கு.... ?
அவுங்க அவுங்க சாதி காரங்களத்தான்...குளுப்பாட்டி நடுவூட்ல வச்சி கொஞ்சுவாங்க!!!

வானம்பாடிகள் said...

ஓவரா லொல்லுடும்போதே நெனச்சனுங். இன்னைக்கு பார்ட்டிக்கு பட்டாபிசேகமுன்னு. சரியாத்தான் போச்சு:))

tamilan said...

சுட்டியை சொடுக்கி படிக்கவும்

===> 1. இந்துமதம் இந்திய மதமா?
இந்துமதம் இந்தியர்கள் இல்லாத பிராமணர்களின் மதம். இந்து மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில், புராணத்தில் சட்டத்தில் இருக்கின்றது? அறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்


===> 2. ஒ பிராம்மணரல்லாத இந்துகளே, இனியாவது தூக்கத்திலிருந்து, விழித்துக் கொள்ளுங்கள். தமிழர்கள் கடவுளுக்கு தீட்டானவர்களா? காந்திக்கே தீட்டு க‌ழித்த‌வ‌ர்.

.

சங்கவி said...

இவனுக எப்பபும் திருந்த மாட்டானுக..

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

நாலு கேள்வி நறுக்குனு கேட்டுப்போட்டு வாராம..........இது என்னத்துக்கு இந்த வியாக்கியானம்...........

ஷர்புதீன் said...

இவனுக எப்பபும் திருந்த மாட்டானுக.

yes me too agreed this word

எல் கே said...

kodumai

Raveendran Chinnasamy said...

//எழவு எத்தனை பெரியார் வந்தாலும் உங்களைத் திருத்த முடியாதுடான்னு நினைச்சுகிட்டு ஓடிவந்து போட்டனுங்க.// So you came without any protest .. hahah .. you are just like same person . there is no difference .

பழமைபேசி said...

அஃகஃகா... மொதலாளியவே பதம் பாத்துப்புட்டாய்ங்களே? அதுவும், ஈரோட்டுல வெச்சி?! :-(

க.பாலாசி said...

கேட்கவே அருவருப்பாத்தான் இருக்குங்க... அந்த பையனோட நிலைமைதான் பாவம்... பெரியாரென்ன பெரியார்... யாரு வந்தாலும் திருத்தமுடியாத ஜென்மங்கள்...

VELU.G said...

ரொம்ப சங்கடமாயிருக்குங்க இவுங்க திருந்த ரொம்ப நாளாகும்ங்க

sakthi said...

பேசறதுக்கும் வாழ்கைக்கும் நிறைய வித்தியாசமிருக்குதுங்கோ.....

r.v.saravanan said...

எப்பபும்
திருத்தமுடியாத ஜென்மங்கள்...

குடுகுடுப்பை said...

திருவள்ளுவர் போட்டோவை எடுத்துட்டு வந்திருக்கலாம் நீங்க.

பழமைபேசி said...

//திருவள்ளுவர் போட்டோவை எடுத்துட்டு வந்திருக்கலாம் நீங்க.
//

திருட்டுப்பய பட்டம் வாங்கவா??

ILA(@)இளா said...

பொழங்குற சாதின்னா என்ன? அவுங்க சாதியும், அதுக்கு மேலையும்(குறியீட்டை கவனிங்க) இருக்கிறதாம். BCக்கு புழங்குற சாதி BCதான், FC கூட பொழங்காத சாதி :)

கார்த்திக் said...

// பெரியார் வந்தாலும் உங்களைத் திருத்த முடியாதுடான்னு //

வாழும் பெரியார் வால்பையன் ஈரோட்ல இல்லைனா எத்தன பிரச்சன பாருங்க ;-((

காமராஜ் said...

கதிரோட வலையில் நிழற்படம் பார்த்தேன் தோழா.
பர்ரிட்சை முடிவு பார்த்த பரவசம் ஆனது.
நல்லா இருக்கிங்களா ?

எண்ணத்துப்பூச்சி said...

ஆச்சரியமில்லை அரூரன்,

நிறைய முதலாளிகள் இன்னும் தன் சாதிக்குத் தான்
முன்னுரிமை கொடுக்கிறார்கள்.

tamilan said...

சுட்டியை சொடுக்கி....

===> சாதியில் ஊறியவன் பட்ட பாடும் பெற்ற பாடமும். சிறப்பு குறும்படம் "வர்ணம்" பகுதி-1, 2. காணுங்கள்

.

அகல்விளக்கு said...

இவங்க எப்பயுமே இப்படித்தான் அண்ணா...

திருத்த முடியாத மக்கள்...

Sethu said...

Highly regrettable.

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

வாழ்த்துக்கள்..!

Part Time Jobs said...

Nice Info Keep it up!

Home Based new online jobs 2011

Latest Google Adsense Approval Tricks 2011

Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

New google adsense , google adsense tricks , approval adsense accounts,

latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,

Quick adsense accounts ...

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

Part Time Jobs said...

No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

Free Traffic said...

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

தாராபுரத்தான் said...

திருத்தவே முடியாது போல இருக்குதே..