Showing posts with label பிடித்த வரிகள். Show all posts
Showing posts with label பிடித்த வரிகள். Show all posts

Wednesday, August 05, 2009

செம்புலப்பெயல்நீர் போல


உனக்கும் எனக்கும்
 ஒரே ஊர்………….
                           வாசுதேவ நல்லூர்
நீயும் நானும்
ஒரே மதம்.
                           திருநெல்வேலிச்
                          சைவப்பிள்ளைமார்……
                           வகுப்பும் கூட..
உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக்காரர்கள்
                         மைத்துனன்மார்கள்.
எனவே……..
செம்புலப்பெயல்நீர் போல  
அன்புடைநெஞ்சம் தான்  கலந்தனவே……மீரா.

Monday, August 03, 2009

அரசியல்


ஒன்றின் மேல் ஒன்றை குறி பார்த்து
எறிந்து குண்டு விளையாடினோம்
எவெரெவரொ வந்து எறிந்து
விளையாட 
நாமே குண்டானோம்.
                                                  மு.மேத்தா

Friday, July 31, 2009

வலி


வலியின் உக்கிரத்திற்கேற்ப
குழந்தை முடிந்தமட்டும் உரக்க அழுகிறது
நம் வயசிற்கு
நாம் அப்படி அழமுடியாது

தீராத வலியை
குழந்தை அழுதே தீர்க்கப்பார்க்கிறது

நாம் தான்
அழும்பாக்கியத்தை இழந்து விட்டோம்

வலி கண்ணீராய் கரைய கரைய
குழந்தை அழுதழுது ஓய்கிறது

இன்னும் சிறிது நேரத்தில்
சிரித்து விளையாடத் துவங்கிவிடும்

நம்மால் தான் எதுவும் முடியவில்லை

வலித்தபடியே வலியிருக்க.........

-ஜி.எஸ் தயாளன்