Friday, October 09, 2009

சிலை அரசியல்.....

இந்த ஒரு வாரம என்ன பதிவு போடலாம்னு
யோசிச்சு ஊரெல்லாம் சுத்தி சுத்தி வந்து,
கண்ணுக்கு பட்டதெல்லாம் போட்ட புடிச்சி
வச்சனுங்ணா.   நம்ம மக்கள் தான் போட்டா
தெங்கன்னு........  வேற கேட்டு
அன்புத் தொல்லை குடுக்கறாங்களே.........

சரி விசயத்துகு வருவோம்..... நம்ம கதிருக்கு
வாழ்த்து பதிவெல்லாம் போட்டோம்,
(டெம்போலாம் வச்சுகடத்துனோங்கற மாதர)
 மனுசன் கண்டுக்காம "குட்நைட்ன்னு"
சொல்லிபோட்டு   போயிட்டாருங்ணா.

நானும் கொஞ்சம் சாட மாடயா   கேட்டுப்பார்த்தா.
...ம்ஹும் ஒன்னும் தேறலைங்ணா.......
அப்பறம் தனியா கட பூட்ற நேரத்துல கட்டிங்
தேடி அலைஞ்சு ....ஒன்னும் நடக்கலிங்ணா....


நொம்ப கலச்சு வூட்டுக் போய் நல்லா
அசந்து போய் தூங்கி போட்டனுங்.


திடீர்னு பக்கத்துல  இருந்த கேமராவுக்குள்ளார
இருந்து டொக்..டொக்...னு சத்தம்.....
பயந்து போய் திறந்தா.......காலம்பற எடுத்த
போட்ட வுல இருந்த பெருந் தலையெல்லாம்
வெளிய வந்து பேச ஆரம்பிச்சிட்டாங்ணா....

இருக்கறவுங்க பேசறதையே கேக்கமுடியல
இன்னும் செத்துப் போனவுங்க பேசறத.....
தாரு கேக்கறதுங்கறீங்களா.....சரி..... சரி....
அவிங்க போட்டாவையும், பேசினதையும்
பதிவாபோட்டுட்டனுங்ணா.... அதுல பாருங்க
தாரு தென்னா பேசுனாங்கன்னு
மறந்து போச்சுங்ணா....
போட்டாவையும்  பேசுனதையும் பதிவா
போடறனுங்ணா.....தாரு பேசிருப்பாங்கன்னு
நீங்களே முடிவு பண்டிக்கோங்ணா....

                                                                    
 


நாலு பக்கம் தட்டி வச்சு
நடுவுலதான் என்ன வச்சு
காக்கா,குருவிக் காக்கிப்புட்டான் கக்கூஸா
கருமம், .   வருசத்துக்கு 
ஒரு முறைதான் சர்வீஸாம்.

சும்மா இருந்த என்னவச்சு அரசியல்-நான்
ஆரியனா? திராவிடனா? ஆய்வு செய்யுது அறிவியல்
சாதி ஒழிப்பும், சமத்துவமும் மேடையில்
சதை வணிகம்,சாராயம், -வாழ்வியல்.


 
தல, தல ன்னு திரிஞ்சதெல்லாம் காணலை
தறுதலைகள் மட்டும் இப்போ கட்சியில
கட்டுனவ என்ன ஆனா தெரியல
எட்டாவதா வச்சிருந்தவ…….. ஆட்சியில


வாய் கிழிய வசனம் பேசி
வழி நெடுக வசூல் பண்ணி
சேத்துக் கிட்டான் சொத்து,நாடு முழுசும்
சனம் சோத்துக்கிங்கே சாகுதடா தெனமும்.
கருப்புச் சட்ட போட்டுக் கரான்
மஞ்ச துண்டும் போத்திக் கரான்
நாத்திக கர்ஜனை.-நடுநடுவே
நவக்கிரகத்துக்கும் அர்ச்சனை.வருசத்துக்கு ஒருதரம்
காருவண்டி பறக்குது
திருவிழாவில் தொலைஞ்ச கணக்கா
ஊரு சனம் முழிக்குது.
 இருக்கும் வரைக்கும்  உசுர எடுத்த
செத்த பின்னும் சிலைய வச்சான்
எடுத்துபுட்டான் கைய ஒருத்தன் ராவுல-இனி
எத்தன தல உருளப்போகுமோ  நாட்டுல....


 
ஒருத்தன் கைய ஒடைக்கிறான்
ஒருத்தன் தலைய உடைக்கறான்
காக்கிச் சட்டத் திருடனும்
காவலுக்கும் நிக்கிறான்.Thursday, October 08, 2009

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அன்பு நண்பர்  "சிகரம் கதிருக்கு" பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


 வாழ்த்துக்களை ........................
லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட்டா சொல்லுங்க மக்களே

Tuesday, October 06, 2009

வனம்…..,கடந்த செவ்வாய்க் கிழமை மாலை ஈரோட்டிலிருந்து கிளம்பி கோபி,சத்தியமங்கலம்,பண்ணாரி வழியாக ஆசனூர் சென்று ஞாயிறு மாலை திரும்புவது என்று  முடிவுசெய்து, நானும் என் நண்பர்களும்  குடும்பத்தோடு புறப்பட்டோம்.

மாதமொருமுறை அங்கே நண்பர்களோடோ, தனியாகவோ, வருடத்திற்கு இரண்டு, மூன்று முறை குடும்பத்தோடும் சென்று வருவேன்.

 ஈரோட்டிலிருந்து சுமார் 100கி.மீ தூரத்தில், ஈரோடு- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குக்கிராமம் ஆசனூர்.   குளிர்ந்த, சுத்தமான, காற்று, அமைதியான சூழ்நிலை, நகர பரபரப்பற்ற மனிதர்கள், வனமும் வனம் சார்ந்த பகுதிகள்.   யானை, மான், காட்டெருமை, போன்ற வன நண்பர்கள்(விலங்குகள் என்று சொல்லின் அர்த்தம் இப்போது மாறிவிட்டது மட்டுமல்லாமல் கொஞ்சம் மட்டமாகவும் தெரிகிறது.) வாழும் பூமி.. சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை 
 
 
 
 
 
வனம்

தன்னுள்ளே வரித்து,   தனக்கே உரித்தான செடிகொடிகளின் 
சுவாசத்தோடும், ஈர மண்ணின் வாசத்தோடும்
என்னை ஆலிங்கணம் செய்கிறது..

அந்த  அணைப்பில், என் கர்வமெல்லாம், உடைத்து நொறுக்கப் பட்டு
தூள்தூளாகும்.....

நள்ளிரவு நேரங்களில், கடுங் குளிரில், அட்டைப் பூச்சிகளும், 
பேர் தெரியாத பூச்சிகளும் கடிப்பதை அறியாது 
தங்கும் விடுதிகள் முன்  வெட்ட வெளியில் மணிக்கணக்கில்
அமர்ந்திருக்கிறேன்.   பார்க்க, பார்க்க பரவசமூட்டும் எழில்,
விவரிக்க இயலா போதை 

சிறு வண்டுகளின் ரீங்காரம், எங்கோ தொலைவில் கத்தும் தவளை, 
அருகே ஓடும் நீரின் சலசலப்பு சத்தம்,  தடைகளைத் தாண்டி, 
வேகங்காட்டி, மூங்கில் செடிகளை ஊடுருவி ஆர்ப்பரித்து 
ஒலியெலுப்பும், காற்று 

………இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

மழைக்  காலங்களில் 
செழுமை அழகு, வழிய வழிய  சேற்றிழாடும், சிறு குழவியாய் 

சுட்டெறிக்கும் கோடையிலோ, 
பார்க்கப் பார்க்க சலிக்காத கருவுருவச் சிலையாய்

வீசும் காற்றில், பேயாய்ச் சுழன்றும், 
வாரியிரைத்தும், வன்மம் காட்டியும் அழகாய் சிரிக்குது வனம்.
செழுமையும், அழகும், ஆழ்ந்த  பின்னனியும், 
பல்வேறு காலகட்டங்களில்,பல்வேறு மனிதர்களின் 
ஏற்ற இறக்கங்களைப் பார்த்தும், ஏதுமறியாதது போல் அமைதி. 

உடல் விறைக்கும் குளிரும், ஊடாக வெயிலும்,
சாரல் மழையும், அதனோடு கூடி,சில நேரங்களில் 
சூரியக் கதிர்களும்,  ஒரு சில நிமிடங்களில்,அனைத்தும் மறைந்து,

குளிர் காற்றும், வெயிலும், மழையும், சாரலுமாக, 
மாறி மாறி  இயற்கை இங்கே 
ஆடும் களியாட்டம் மிக அற்புதம்.

எத்தனையோ வளங்களை, எத்தனையோ மர்மங்களை, 
எத்தனையோ உயிரினங்களை எத்தனையோ ஆச்சரியங்களை, 
அற்புதங்களை தன்னுள்ளே வைத்து இயல்பாக சிரிக்கிறாள்.  

ஆளரவமற்ற நீண்ட வெறித்த தார்ச் சாலைகளில்
தொடர்ந்து நடக்கிறேன்.  
மலை, வெயில், குளிர், காற்று,  எதைப் பற்றியும்
கவலையில்லாமல், 
காட்டு மலர்களின் மனம் வழிகாட்ட தொடர்ந்து செல்கிறேன்.

மானினம் ஓர் புறம், மயிலினம் மறுபுறம், 
மத்தகம் நிமிர்த்திப் பிளிரும் 
யானைகள் ஒருபுறம்.  
இன்னும் பேர்தெரியாத வனவுயிர் ஆயிரமாயிரம்.....

 

கலைந்த தலை, மழையில் நனைந்த உடை, 
அறுந்துபோன செருப்போடு,
சேற்றை வாரி இறைத்து என்னை அழுக்கில் குளிப்பாட்டி
சென்ற இயற்கையின் எந்த படைப்பின் மீதும் கோபமில்லாமல்,

இப்படி இயற்கையோடு இயற்கையாய், இயல்பாய்,………..


 என்னைத் தொலைத்து, என்னுள் தொலைந்த,.. என்னைத் தேடி நான்.


Monday, October 05, 2009

பகல் கனவு......

கஞ்சி போட்ட கதர் சட்டை
கார வுட்டு இறங்கல
அடுத்த வருச கடைசியில்
காமராசு ஆட்சியாம்  
………………………….கனவு காணுது பகலிலே 

எம்சி யாரு வாரிசாம்
ஏழை சனம் ஆட்சியாம்
காந்தி நோட்டத் தாண்டிதான்
கருப்புத் தங்கம் ஜெயிக்குமாம்

…………………….கனவு காணுது பகலிலே

கொடநாட்டு ராணிக்கு
கோட்டை மீது ஆசையாம்
கேணப்பய ஓட்டுப்போட்டு
கிறுக்குப் பயன் செயிப்பானாம்
………………………..கனவு காணுது பகலிலே 

பெரிய மவன் தில்லியில
சின்னமவன் சென்னையில
மவுளுக்கொரு நாடு தான்
வாங்கிபுட்டா தேவல….  
……………………கனவு காணுது பகலிலே

காரல் மார்க்ஸ் கொள்கைதான்
கருப்புச்சட்டை கோசம்தான்
செவப்புத் துண்டைக் காட்டி காட்டி
செயிச்சிடப் போட ஆச தான்  
…………………கனவு காணுது பகலிலே

தமிழு பேர சொல்லியாச்சு,
தமிழன் பேர சொல்லியாச்சு
காந்திக் கிருக்கும்(ரூவா நோட்டுல)மவுசுல
கரைஞ்சு  போச்சு  கட்சிதான்.கொள்கைவேற மறந்து போச்சு,
கோஷமெல்லாம் தீர்ந்து போச்சு,
கொடிபுடிச்ச வந்ததெல்லாம்,
கூட்டத்தோட ஓடிப்போச்சு

செய்கூலி இல்லாத, சேதாரம் இல்லாம,
செயிக்க வழி இருக்குதான்னு
........ ………………..கனவு காணுது பகலிலேவவுத்துப் பசி தீருமாம்,
வரும நீங்கி ஓடுமாம்
கட்டித் தங்கங் கூட சும்மா
,  கடத்தெருவுல  கெடக்குமாம்

தேடித் தேடி ஓடி வந்து,
தேனும், பாலும், நிறையுமாம்
தேர்தலுன்னு வந்துபுட்டா,
கேட்டதெல்லாம் கிடைக்குமாம்-சனம்  
…………...கனவு காணுது பகலிலே