Monday, October 05, 2009

பகல் கனவு......

கஞ்சி போட்ட கதர் சட்டை
கார வுட்டு இறங்கல
அடுத்த வருச கடைசியில்
காமராசு ஆட்சியாம்  
………………………….கனவு காணுது பகலிலே 

எம்சி யாரு வாரிசாம்
ஏழை சனம் ஆட்சியாம்
காந்தி நோட்டத் தாண்டிதான்
கருப்புத் தங்கம் ஜெயிக்குமாம்

…………………….கனவு காணுது பகலிலே

கொடநாட்டு ராணிக்கு
கோட்டை மீது ஆசையாம்
கேணப்பய ஓட்டுப்போட்டு
கிறுக்குப் பயன் செயிப்பானாம்
………………………..கனவு காணுது பகலிலே 

பெரிய மவன் தில்லியில
சின்னமவன் சென்னையில
மவுளுக்கொரு நாடு தான்
வாங்கிபுட்டா தேவல….  
……………………கனவு காணுது பகலிலே

காரல் மார்க்ஸ் கொள்கைதான்
கருப்புச்சட்டை கோசம்தான்
செவப்புத் துண்டைக் காட்டி காட்டி
செயிச்சிடப் போட ஆச தான்  
…………………கனவு காணுது பகலிலே

தமிழு பேர சொல்லியாச்சு,
தமிழன் பேர சொல்லியாச்சு
காந்திக் கிருக்கும்(ரூவா நோட்டுல)மவுசுல
கரைஞ்சு  போச்சு  கட்சிதான்.கொள்கைவேற மறந்து போச்சு,
கோஷமெல்லாம் தீர்ந்து போச்சு,
கொடிபுடிச்ச வந்ததெல்லாம்,
கூட்டத்தோட ஓடிப்போச்சு

செய்கூலி இல்லாத, சேதாரம் இல்லாம,
செயிக்க வழி இருக்குதான்னு
........ ………………..கனவு காணுது பகலிலேவவுத்துப் பசி தீருமாம்,
வரும நீங்கி ஓடுமாம்
கட்டித் தங்கங் கூட சும்மா
,  கடத்தெருவுல  கெடக்குமாம்

தேடித் தேடி ஓடி வந்து,
தேனும், பாலும், நிறையுமாம்
தேர்தலுன்னு வந்துபுட்டா,
கேட்டதெல்லாம் கிடைக்குமாம்-சனம்  
…………...கனவு காணுது பகலிலே 

31 comments :

S.A. நவாஸுதீன் said...

நையாண்டி அரசியல் நல்லா சொல்லி இருக்கீங்க விசு

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி...நவாஸ்.....

வானம்பாடிகள் said...

ஆத்தாடி. ஊருல உக்காந்து யோசிச்சதாக்கு. இல்லாட்டி மதியம் சாப்புட்டு கண்ண கட்டுனப்ப கண்ட கனவா? இப்புடி எல்லா பக்கமும் குத்துனா சனங்க எங்கதான் குத்துறது. அசத்தலோ அசத்தல்.

ஆரூரன் விசுவநாதன் said...

வந்துட்டம்ல.....வந்துட்டம்ல....

இன்னும் சரக்கிருக்குல்ல...
நன்றிங்ணா.......

மாதவராஜ் said...

ரசிக்கிறேன்.....

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி, தோழர்.

கபிலன் said...

அடடா....அருமை....!

kamaraj said...

நல்லாவே இருக்கு நையாண்டி.

Barari said...

itharkku peyar thaan naiyaandi darbaaro? asaththiputteeraiya//vaazthukal.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி தோழர். காமராஜ்...

நன்றி கபிலன்

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி நண்பர் பராரி....சரிதானே உங்கள் பெயர்

ஹேமா said...

அரசியல் நையாண்டியா !

கதிர் - ஈரோடு said...

ஆசானூர்ல உட்கார்ந்து
அலும்பு பண்ணுது பத்தாம
ஈரோட்டுக்கு திரும்பி வந்து
என்னனென்மோ சாமி எழுதுதுங்க...

இஃகிஃகி
கலக்கியிருக்கீங்க... போங்க

க.பாலாஜி said...

//பெரிய மவன் தில்லியில
சின்னமவன் சென்னையில
மவுளுக்கொரு நாடு தான்
வாங்கிபுட்டா தேவல…. //

இப்பதான் விலை பேசிகிட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன். ஆமா நீங்க அந்த மகளதான சொல்றீங்க...

எல்லாமே சுருக்கென்று சுடும் வார்த்தைகள்...அருமை....

கலகலப்ரியா said...

fantastic.. superb.. romba romba romba nallaarukkungo..

பழமைபேசி said...

100

பழமைபேசி said...

-10

//வரும நீங்கி ஓடுமாம்//

வறும!

கொக்கா?

ராகவன் said...

அன்பு ஆரூரன்,

ரொம்ப அழகாக இருந்தது. எல்லோருக்குமே நையாண்டி பிடிக்கும் அதிலும் அரசியல் நையாண்டிக்கு இருக்கும் ஈர்ப்பு அதிகம். என்னைப்போன்ற சீரியஸாய் காட்டிக்கொள்ளும் ஆசாமிகளையும், அல்லையில் குத்தி கிச்சுகிச்சு மூட்டுகிறது. இதில் பரிதாபமான நிலைமை என்னவென்றால், நாம் இவர்களிடம் தான் மாட்டிக்கொண்டிருக்கிறோம், நமது துன்ப நிலைகளை நாமே கிண்டலடித்துக் கொண்டு சிரிக்கிறோம், இடுக்கன் வருங்கால்....

அன்புடன்

ராகவன்

ஆரூரன் விசுவநாதன் said...

வாங்க ப்ரியா....

நன்றி....

ஆரூரன் விசுவநாதன் said...

அத யேங் கதிர் கேக்கறீங்க.......

ஆசனூர் போய் ஆனைய பார்த்ததும் அடிச்சது, படிச்சது அத்தனையும் மறந்து போச்சு.....

இதெல்லாம் பழைய சரக்கு..... மறந்துடக்கூடாதுல்ல......அதான் வந்த உடனே இதப் போட்டுட்டேன்.

ஆசனூர் கத நாளைக்கு.....

ஆரூரன் விசுவநாதன் said...

வாங்க பாலாஜி.....


அந்த மக இல்லாம வேற ஒன்னு இருக்கா....அடக் கருமமே..... அப்புறம் அதுக்கெங்க போறது....

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி ஹேமா....

ஆரூரன் விசுவநாதன் said...

//பழமை பேசி//

-10

//வரும நீங்கி ஓடுமாம்//

வறும!


எப்புடியாவது தப்பில்லாம எழுதலாம்னு நினைச்சா முடியமாட்டீங்குதே.....

அடுத்த முறை சரியா எழுதிப் போடறங்ணா.....

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி ராகவன்...

எந்த தளத்திலிருந்து சொன்னாலும் சில மரமண்டைகளுக்கு புரிய மாட்டீங்குதுங்களே.....

"திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்"

என்ற பழைய திரைப்படப் பாடல் நினைவுக்கு வருகிறது.

velji said...

2011 தேர்தல்ல, சன் டி.வி. பிரைம் டைம்ல , நம்ம குப்புசமி இத பாட்டா பாடினார்னா எப்படி இருக்கும்!?

தேவன் மாயம் said...

நல்ல கனவுதான் ! விருது ஒன்று பெற என் தளம் வருக!

ஆரூரன் விசுவநாதன் said...

வாங்க வேல்ஜி....

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

ஆரூரன் விசுவநாதன் said...

//தேவன் மாயம்//

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நண்பரே...


விருது கொடுத்து வரவேற்கும் அன்பிற்க்கும் நன்றி

Anonymous said...

-:) rasiththeen nanbaree

mankuthiray.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி நண்பர் மண் குதிரை

என். உலகநாதன் said...

நல்லா எழுதியிருக்கீங்க.