Showing posts with label நையாண்டி. Show all posts
Showing posts with label நையாண்டி. Show all posts

Saturday, January 02, 2010

நம்ம ஈரோடு.......கூடல் 2010



வரவேற்பு அலங்காரங்கள்

நல்லாத்தான் இருக்கு....................


 
விளம்பர  போஸ்டர்ஸ்

மாடு விரட்டும் மனிதனுக்கு பின் உள்ள கொடி சமீபத்தில் அரசியல் கட்சியாக மாறிய ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பின் கொடி போல் தெரிகிறதே. அவர்களுக்கும் இதற்கும் தொடர்பு  உண்டோ?


பனைந்தோப்புகளோ, பனங்காடுகளோ இல்லாத வாய்க்கால் பாசனப் பகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு மாவட்டத்துக்கும் பனைமரத்துக்கும் என்னங்க சம்பந்தம்??? இது யாரை திருப்தி படுத்த??????????


 
வரவேற்க முன் வரிசையில் காத்திருக்கும் பாண்டு வாத்தியக் குழு
பின்னனியில் தாரை, தப்பட்டை
என்று மடியு  மிந்த அடிமையின் மோகம்...........
 

இதுதான் கிராமிய உணவாங்ணா?
 
அரங்கை நிறைக்க பள்ளி விடுதி மாணவர்களா?
லீவ் விட்டாலும் இவங்க விடமாட்டாங்க போல


இது கொஞ்சம் ரசிக்கும் படி இருந்தது 



பாதி' ரியார் ஜெகத் கஸ்பரும். கனிமொழியும் சேர்ந்து "சென்னை சங்கமம்" அளவிற்கு நடத்துவாங்க, என்று சென்ற நமக்கு ஏமாற்றமே 
 ஆரம்ப நிகழ்வுகள்  படு சொதப்பல், 
பார்ப்போம் நாளை எப்படியென்று 



Saturday, November 14, 2009

கதம்பம்.................

இன்று காலைப் பத்திரிக்கைகளில் வந்த செய்திகளும், அதைத் தொடர்ந்து என் நினைவிற்கு வந்தவைகளையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.......


செய்தி:
முல்லைப் பெரியார் வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு திகைப்பும், வியப்பும் ஏற்படுத்துகிறது. 

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த இயலாத வகையில் புதிதாக ஒரு சட்டத் திருத்தத்தை நிறைவேற்றிட கேரள முதல்வர் போன்று எனக்கு துணிவில்லை.


1998ல் இருந்து நடைபெரும் வழக்கில் 11 ஆண்டுகளுக்குப் பிறகும் தீர்ப்பை எதிர் நோக்கும் நேரத்தில் மீண்டும் ஒரு விசாரணை, ஐந்து நீதிபதிகள் தலைமையில் குழு, என்ற முடிவு-இன்னும் எத்தனை ஆண்டுகளோ என்று வருத்தப் படாமல் இருக்க முடியவில்லை. தாமதிக்கப் பட்ட நீதி- மறுக்கப்பட்ட நீதி என்ற ஆங்கில பழமொழி பலித்துவிடாமல் இருக்க- யாரிடம் போய் முறையிடுவதென்றே தெரியவில்லை.


நினைவிற்கு வந்தது:
விடங்கொண்ட மீனைப் போலும்
வெந்தழல் மெழுகைப் போலும்
படங்கொண்ட பந்தழல்வாய் பற்றிய தேரை போலும்
இடங்கொண்ட ராமபாணம் செருக்களத்து உற்ற போலும்
கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் ஈழ வேந்தன்.

                                                        -கம்பன்
                                                                        
சராசரி இழிச்ச வாயன்(இந்தியன்):
உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவிற்கு,தமிழக அரசின் வழக்கறிஞர் முதலில் ஆட்சேபம் தெரிவித்தவர், பின் எழுத்துப் பூர்வமாக ஏற்பதாக எழுதிக் கொடுதிருப்பதாக முல்லைப் பெரியார்  அணை உரிமை மீட்புக் குழுவின் தலைவர், பழ.நெடுமாறன் குற்றஞ்சாட்டியுள்ளாரே …………….

                   *********************************

 
செய்தி:
இடைத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில்லை என முடிவெடுத்தால்  தேர்தலில் போட்டியிடுவோம்-மருத்துவர் ராமதாஸ்.

 படித்ததும் நினைவிற்கு வந்தது

ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்றார்கள்
எதிர்க்கட்சி என்று ஏதுமில்லை
ஆளுங்கட்சி, ஆளவிரும்புகிற கட்சி
என இரண்டு கட்சிகள் தான்

                                                       -தமிழன்பன்

சராசரி இழிச்சவாயன்:
இன்னா.....டாக்டரு…….இன்னாதிது? கெலிச்சுப் போய் நீங்க வாங்குவீங்க..எங்களுக்காண்டி வேற கேமா? (game)

லாபத்திலயா பங்கு கேக்கறோம்…….எதோ புரோக்கரேஜ் மாதிரி ஒரு சின்ன டிப்ஸ் வாங்கிக்கறம்..அது பொறுக்கலையா? உங்களுக்கு.

                   **************************************


செய்தி:

தேசிய ஒருமைப் பாட்டு வாரவிழா- ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரம் நடைபெறும். மாவட்ட ஆட்சியர் சுடலைக் கண்ணன் தகவல்

19/11/2009- தேசிய உறுதிமொழி தின விழா
20/11/2009-பிற்பட்டோர் &சிறுபாண்மையினர் நல தினம்
21/11/2009 மொழி ஒற்றுமை தினம்
22/11/2009-நலிவுற்ற பிரிவினர் தினம்
23/11/2009-கலாச்சார ஒற்றுமைதினம்
24/11/2009-மகளீர் தினம்
25/11/2009-பாதுகாப்பு தினம்

நினைவிற்கு வந்தது:
வெளுத்ததெல்லாம் பாலுமல்ல இந்தியாவே- வெளி
வேசமெல்லாம் உண்மையல்ல இந்தியாவே.

பழுத்த சூதர் தலைவரைப்போல் இந்தியாவே-இங்கு
பழகக் கண்டோம் விழித்துக் கொள்வாய் இந்தியாவே

உதட்டிலே தேன் உள்ளத்திலே நஞ்சு இந்தியாவே-கொண்ட
உத்தமர்கள் மெத்த உண்டு இந்தியாவே

சிலந்திவலை ஈயைக் கொல்லும் இந்தியாவே- தனிச்
செல்வர் கட்சி பொதுமை கொல்லும் இந்தியாவே

மலம் விரும்பும் ஜந்து போல்வார் இந்தியாவே- பண
மகிமை பேசிக் கொள்கை விற்பார் இந்தியாவே.

பணத்தின் ஜாலம் பசப்பு வார்த்தை இந்தியாவே- கொள்கை
பறித்திட நீ பார்த்திடாதே இந்தியாவே

அனைத்தும் தியாகம் செய்தும் இந்நாள் இந்தியாவே- வெற்றி
அடைய லெனின் கொடியின் கீழ் நில் இந்தியாவே

                                                -ஜீவா கவிதைகள்

சராசரி இழிச்ச வாயன்:
தேசியன்ன இன்னாதுபா..ஒரே மெரசளாக் கீது…?

பின்னாடிக்கறவனையும், நலிஞ்சவனையும், நம்ம மினியம்மாளையும் முன்னாடி இட்டாறதுதான் தேசியம் மாமு……..


                                    ******************************************

செய்தி:
இந்தியாவில் குடும்ப அமைப்புகள் சீரழிவதற்குக் காரணம் ஒழுக்கக் கேடான ஆண் பெண் உறவுகளே……….தன்னார்வ தொண்டு நிறுவனம் அறிக்கை

படித்ததும் நினைவிற்கு வந்தது
அப்பனுக்கு அறுபதினாயிரம் மனைவிகள்
ஒரு சந்தேகமும் இல்லை
மகனுக்கு ஒரு மனைவி
ஆயிரம் சந்தேகங்கள்
                                                        -கபிலன்

சராசரி இழிச்சவாயன்:

நோ……..கமெண்ட்ஸ்………..

                                          ************************************************** 

செய்தி:
செல்போனில் வேகமாக பரவும் ஆபாச காட்சிகள்
மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக ஆசிரியருக்கு தர்ம அடி
பெருந்துறை பெண் மர்ம சாவுகள்ளக்காதலனிடம் விசாரணை


படித்ததும் நினைவிற்கு வந்தது:
நமது காலத்தில் காதல் பண்டைக் காலத்து மக்களின் காதலைப் போல் முற்றும் பாலுறவு வேட்கையிலிருந்து பிறந்ததல்ல. முதலாவதாக, இது பரஸ்பார காதலாக இருக்கிறது. இந்த அம்சத்தில் ஆணுக்குச் சமமாக பெண் இருக்கிறாள்.  இரண்டாவதாக இருதரப்பினரும் அன்புடையவர் அருகில் இல்லாத, அதாவது பிரிவைப் பெரிய துன்பமாக கருதுகின்றனர். அதனால் அவர்கள் காதல் தீவிரமும்,நிரந்தரமும் பெற்று விளங்குகிறது.

அவர்கள் ஒருவரையொருவர் அடைய உயிரைப் பணயம் வைப்பதற்கு கூட முன்வருகின்றனர்.

பிரடரிக் எங்கல்ஸ்
குடும்பம், தனிச் சொத்து,அரசு ஆகியவற்றின் தோற்றம்



சராசரி இழிச்சவாயன்:

தோழர்சொன்னா கரீட்டாத்தான் இருக்கும்பா…….. அவுரு அவுங்க நாட்டப் பத்தித்தான் சொல்லிருப்பாரு………நாங்க சோசலிஸத்தை வுட்டு நாளாச்சுல்ல……..இப்பல்லாம் நாங்க முதலாளில்ல……





Friday, October 09, 2009

சிலை அரசியல்.....

இந்த ஒரு வாரம என்ன பதிவு போடலாம்னு
யோசிச்சு ஊரெல்லாம் சுத்தி சுத்தி வந்து,
கண்ணுக்கு பட்டதெல்லாம் போட்ட புடிச்சி
வச்சனுங்ணா.   நம்ம மக்கள் தான் போட்டா
தெங்கன்னு........  வேற கேட்டு
அன்புத் தொல்லை குடுக்கறாங்களே.........

சரி விசயத்துகு வருவோம்..... நம்ம கதிருக்கு
வாழ்த்து பதிவெல்லாம் போட்டோம்,
(டெம்போலாம் வச்சுகடத்துனோங்கற மாதர)
 மனுசன் கண்டுக்காம "குட்நைட்ன்னு"
சொல்லிபோட்டு   போயிட்டாருங்ணா.

நானும் கொஞ்சம் சாட மாடயா   கேட்டுப்பார்த்தா.
...ம்ஹும் ஒன்னும் தேறலைங்ணா.......
அப்பறம் தனியா கட பூட்ற நேரத்துல கட்டிங்
தேடி அலைஞ்சு ....ஒன்னும் நடக்கலிங்ணா....


நொம்ப கலச்சு வூட்டுக் போய் நல்லா
அசந்து போய் தூங்கி போட்டனுங்.


திடீர்னு பக்கத்துல  இருந்த கேமராவுக்குள்ளார
இருந்து டொக்..டொக்...னு சத்தம்.....
பயந்து போய் திறந்தா.......காலம்பற எடுத்த
போட்ட வுல இருந்த பெருந் தலையெல்லாம்
வெளிய வந்து பேச ஆரம்பிச்சிட்டாங்ணா....

இருக்கறவுங்க பேசறதையே கேக்கமுடியல
இன்னும் செத்துப் போனவுங்க பேசறத.....
தாரு கேக்கறதுங்கறீங்களா.....சரி..... சரி....




அவிங்க போட்டாவையும், பேசினதையும்
பதிவாபோட்டுட்டனுங்ணா.... அதுல பாருங்க
தாரு தென்னா பேசுனாங்கன்னு
மறந்து போச்சுங்ணா....




போட்டாவையும்  பேசுனதையும் பதிவா
போடறனுங்ணா.....தாரு பேசிருப்பாங்கன்னு
நீங்களே முடிவு பண்டிக்கோங்ணா....









                                                                    
 


நாலு பக்கம் தட்டி வச்சு
நடுவுலதான் என்ன வச்சு
காக்கா,குருவிக் காக்கிப்புட்டான் கக்கூஸா
கருமம், .   வருசத்துக்கு 
ஒரு முறைதான் சர்வீஸாம்.





சும்மா இருந்த என்னவச்சு அரசியல்-நான்
ஆரியனா? திராவிடனா? ஆய்வு செய்யுது அறிவியல்
சாதி ஒழிப்பும், சமத்துவமும் மேடையில்
சதை வணிகம்,சாராயம், -வாழ்வியல்.


 
தல, தல ன்னு திரிஞ்சதெல்லாம் காணலை
தறுதலைகள் மட்டும் இப்போ கட்சியில
கட்டுனவ என்ன ஆனா தெரியல
எட்டாவதா வச்சிருந்தவ…….. ஆட்சியில






வாய் கிழிய வசனம் பேசி
வழி நெடுக வசூல் பண்ணி
சேத்துக் கிட்டான் சொத்து,நாடு முழுசும்
சனம் சோத்துக்கிங்கே சாகுதடா தெனமும்.




கருப்புச் சட்ட போட்டுக் கரான்
மஞ்ச துண்டும் போத்திக் கரான்
நாத்திக கர்ஜனை.-நடுநடுவே
நவக்கிரகத்துக்கும் அர்ச்சனை.



வருசத்துக்கு ஒருதரம்
காருவண்டி பறக்குது
திருவிழாவில் தொலைஞ்ச கணக்கா
ஊரு சனம் முழிக்குது.




 இருக்கும் வரைக்கும்  உசுர எடுத்த
செத்த பின்னும் சிலைய வச்சான்
எடுத்துபுட்டான் கைய ஒருத்தன் ராவுல-இனி
எத்தன தல உருளப்போகுமோ  நாட்டுல....


 
ஒருத்தன் கைய ஒடைக்கிறான்
ஒருத்தன் தலைய உடைக்கறான்
காக்கிச் சட்டத் திருடனும்
காவலுக்கும் நிக்கிறான்.







Monday, October 05, 2009

பகல் கனவு......

கஞ்சி போட்ட கதர் சட்டை
கார வுட்டு இறங்கல
அடுத்த வருச கடைசியில்
காமராசு ஆட்சியாம்  
………………………….கனவு காணுது பகலிலே 

எம்சி யாரு வாரிசாம்
ஏழை சனம் ஆட்சியாம்
காந்தி நோட்டத் தாண்டிதான்
கருப்புத் தங்கம் ஜெயிக்குமாம்

…………………….கனவு காணுது பகலிலே

கொடநாட்டு ராணிக்கு
கோட்டை மீது ஆசையாம்
கேணப்பய ஓட்டுப்போட்டு
கிறுக்குப் பயன் செயிப்பானாம்
………………………..கனவு காணுது பகலிலே 

பெரிய மவன் தில்லியில
சின்னமவன் சென்னையில
மவுளுக்கொரு நாடு தான்
வாங்கிபுட்டா தேவல….  
……………………கனவு காணுது பகலிலே

காரல் மார்க்ஸ் கொள்கைதான்
கருப்புச்சட்டை கோசம்தான்
செவப்புத் துண்டைக் காட்டி காட்டி
செயிச்சிடப் போட ஆச தான்  
…………………கனவு காணுது பகலிலே

தமிழு பேர சொல்லியாச்சு,
தமிழன் பேர சொல்லியாச்சு
காந்திக் கிருக்கும்(ரூவா நோட்டுல)மவுசுல
கரைஞ்சு  போச்சு  கட்சிதான்.



கொள்கைவேற மறந்து போச்சு,
கோஷமெல்லாம் தீர்ந்து போச்சு,
கொடிபுடிச்ச வந்ததெல்லாம்,
கூட்டத்தோட ஓடிப்போச்சு

செய்கூலி இல்லாத, சேதாரம் இல்லாம,
செயிக்க வழி இருக்குதான்னு
........ ………………..கனவு காணுது பகலிலே



வவுத்துப் பசி தீருமாம்,
வரும நீங்கி ஓடுமாம்
கட்டித் தங்கங் கூட சும்மா
,  கடத்தெருவுல  கெடக்குமாம்

தேடித் தேடி ஓடி வந்து,
தேனும், பாலும், நிறையுமாம்
தேர்தலுன்னு வந்துபுட்டா,
கேட்டதெல்லாம் கிடைக்குமாம்-சனம்  
…………...கனவு காணுது பகலிலே 

Sunday, September 27, 2009

ஹலோ........எங்களத் தெரியுதா?

"சொல்லின் செல்வர் சம்பத்"




E.V.K.சம்பத் அவர்தம் துணைவியார் திருமதி சுலோச்சனா சம்பத் தந்தை பெரியாருடன்


 நாமக்கல் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அதிமுக அவைத்தலைவர் திருமதி.சுலோச்சனா சம்பத்  கணவரும், முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் தந்தையும், தந்தை பெரியாரின் சகோதரர்  ஈ.வெ.கிருட்டிணசாமியின் மகனுமான  திரு.E.V.K சம்பத்.

திமுக வின் பிரச்சார பீரங்கி என பெயர் பெற்றவர்.  "சொல்லின் செல்வர் சம்பத்" என்று புகழப் பெற்றவர்.  இவரின் பாராளுமன்ற பேச்சுக்கள் ஒரு காலத்தில் மிகப் பிரபலமானவை.  முன்னாள் பிரதமர் இந்திராவின் கூட்டங்களில் மொழிபெயர்ப்பாளாராக இருந்தவர்.

தமிழர்கள் நலனும், தமிழ் மொழியும் காப்பாற்றப்படும் என்று, பிரதமர் நேரு எழுத்துப்பூர்வ உறுதியளித்தது கடிதம் எழுதியிருந்தது   இவரின் பெருமைக்கு சாட்சியம்.











ஈரோட்டில் அவரது சிலை...........சிவப்பு மையில் வட்டமிடப்பட்டுள்ளது.

                          --------------------------------------------------
அறிஞர் அண்ணா


.முத்தமிழறிஞர். வாழும் வள்ளுவர்,டாக்டர். கலைஞருக்கு காஞ்சியில் நேற்று விழா எடுக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே.  அந்த விழா மேடையின் பின்புறத்தின்  இவர் படம் வைக்கப்பட்டிருந்ததை பார்த்திருப்பீர்கள். பார்க்கதவர்களுக்கு சிறப்புப் படம்.



அறிஞர் அண்ணா உருவம் சிவப்பு மையால் வட்டமிடப்பட்டுள்ளது.


வாழ்க திராவிடம்....வாழ்க பெரியாரியம்......
வாழ்க  முட்டாள் தொண்டர்கள்..
வாழ்க  அப்பாவி மடையர்கள்...ச்சீ....அப்பாவி மக்கள்