Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Friday, February 04, 2011

எழவு........எத்தனை பெரியார் வந்தாலும் உங்களைத் திருத்த முடியாதுடா...



போன வாரத்தில ஒருநா, எங்கூரு பெரிய மனுசர் ஒருத்தரு வூட்டுக்கு, போயிருந்தனுங்க. முன் அறையில, நம்மூரு கெவருமெண்டு பஸ்ஸில இருக்கறமாதர ஒரு தாடி வச்ச சாமியாரு, கைல ஏடெல்லாம் வச்சிகிட்டு நிப்பாருங்கல்ல, அதுல கூட “பொறப்பொக்கும் எல்லாவுசுருக்கும்னுஎழுதியிருக்குமுங்கல்ல, அந்த போட்டா மாட்டியிருந்துச்சுங்க.  நான் பார்க்கப் போன பெரிய மனுசரும், அந்த கரைவேட்டி கச்சைக்காரர் தானுங்க.

அவரும், நம்மளை மதிப்பா கூட்டிகிட்டுப் போயி சோத்து மேசையில உக்காரவச்சு, பொங்கலு, பனியாரம், வடை எல்லாம் போட்டு, சாப்பிடச் சொன்னாரு. ஆனா பாருங்க, அவரு ஒரு கிண்ணத்தில கொஞ்சூண்டு கஞ்சியூத்தி, அதை கரண்டியில மொண்டு குடிச்சிகிட்டே சொன்னாரு.. சக்கரை எச்சாப் போச்சுங்க..அதுனால காலைல கோதுமைக் கஞ்சிதானுங்க. எனக்கு ஆகாரம்னார்..

அடக் கொடுமையே...எல்லாப் பலகாரத்தையும் செஞ்சி அடுத்தவனுக்குப் போட்டுப் போட்டு, இவர மோட்டுவளையப் பார்க்க வச்சிட்டானேன்னு வெசனப் பட்டாலும்,  சரி, நமக்கு கெடச்சதுல கவனமா இருப்பமுன்னு இருந்தனுங்க..

பொறவு, பேசிகிட்டே முன்னுக்க வந்து உக்காந்தோம்.  அப்ப, அவரோட மேனசரு வந்து, வேலை வேணும்னு யாரோ வந்திருக்கறதா சொன்னாரு.  நாங்க உக்காந்திருந்த அந்த அறையில, நேர்முகத் தேர்வு நடந்தது. வேலை கேட்டு வந்தவரப் பார்த்தா, ராசா கணக்கா இருந்தாருங்க. (நம்ம லச்சத்து எழுபத்தஞ்சாயிரம் கோடி ராசா இல்லீங்க, நெசமாலுமே ராசாவாட்டம் இருந்தாரு).

நம்ம தொழிலதிபரும், அவரு அறிவுக்கெட்டுன அளவு கேள்வி கேட்டாரு. இதுல இன்னொரு விசியத்தையும் சொல்லோனும்.  நம்மாளு ரொம்ப நாளா இ.கை.பெ.(அதானுங்க கை நாட்டு).  இப்ப கொஞ்ச வருசமாத்தான் எழுதிப் பழகி, காசோலைல கையெழுத்துப் போடற அளவு வளந்திருக்காரு..  அதுலையும், அவரோட பேரில் இருக்கிற  கடேசி எழுத்துல வார கொம்பு, காசோலைக்கு வெளில, மேசைல தான் இருக்கும். 

இவுரே, இத்தனை கேள்வி கேட்டதும் எனக்கு வந்தவரை நெனச்சு ரொம்ப வெசனமாப் போச்சு. வந்தவரும் எல்லாத்துக்கும் பவுசா பதில் சொல்லிகிட்டே இருந்தாரு. 

கடேசியா ஒரு கேள்வி கேட்டாரு பாருங்க...நீங்க என்ன சாதின்னு?

வேலை கேட்டு வந்தவரு தட்டுத் தடுமாறி, பதில் சொல்லத் தயங்கிக் கிட்டே ஏதோ ஒரு சாதிப் பெயரைச் சொன்னாரு.  
 சரி...நான் வேலை காலி இருந்தால் உன்னைய கூப்பிடறேன். இப்போ ஏதும் காலி இல்லை,. 
என்று சொல்லி வந்தவரை அனுப்பிப் போட்டு எங்கிட்ட சொன்னாரு
..
.இந்தப்...........பயலுகளெல்லாம் நமக்கு ஒத்து வரமாட்டானுங்க.........பொழங்கற சாதியா இருந்தாத்தான் பரவாயில்லீங்க”.  ன்னாரு...


அடங்கொன்னியா, பொழங்கக்கூடாத எனம்னு எவண்டா சொன்னான்? அவனும் மனுசந்தானேடா. மாட்டைப் புடிச்சாந்து நடுவூட்ல வச்சி  கெரகப் பிரவேசம் செய்யறீங்க.  நாயைக் குளிப்பாட்டி நடுவூட்ல வச்சி கொஞ்சறீங்க. இப்பத்தாண்டா புரியுது நீயேன் மோட்டுவளையப் பார்த்துகிட்டு சோறு குடிக்கறேன்னு நினைச்சுகிட்டனுங்க..

..இந்தக் கெரகம் புடிச்சவனூட்லயா சோறு தின்னோம்னு ஆயிப்போச்சுங்க...எழவு எத்தனை பெரியார் வந்தாலும் உங்களைத் திருத்த முடியாதுடான்னு நினைச்சுகிட்டு ஓடிவந்து போட்டனுங்க.






Wednesday, January 26, 2011

குற்றமென்ன செய்தேன் கொற்றவளே…..குற்றமென்ன செய்தேன்?..








நான் யாருக்கு என்ன தீங்கிழைத்தேன். என்னால் பாதிக்கப்பட்டவர்கள் யார்?  மத்தியின் முன் மாநிலமாக அல்ல, வெளியே திராவிடம் பேசி, உள்ளே தேசியம் காக்கும் லட்சக் கணக்கான திருடர்கள் முன்னனி கட்சியின் பிரஜைகளில் ஒருவனாக கேட்கின்றேன்.  எதிர்த்து வாக்களித்தேனா? நீங்கள் வரும்போது வரவேற்பு ந்டாத்தி பாதபூசை செய்யாமல் இருந்தேனா? கொள்ளையடித்ததில் பங்கு கொடுக்காமலிருந்தேனா? என்ன குற்றம் செய்தேன் கொற்றவனே..என்ன குற்றம் செய்தேன்? ...................

 கூற மாட்டீர்களா? நீங்கள் கூற வேண்டாம்......................

இதோ அறங்கூறும் அமைச்சர் செகத் ரட்சகன் இருக்கின்றார், மறவர் குடிப்பிறந்த மாணிக்கம் கோழைமணி இருக்கின்றார், டை” மண்டும் கூட இருக்கின்றார்.  கொள்ளையடித்துக் கொள்ளையடித்து, கோமான்களாகிய மக்கள் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள்.  கோமணம் உருவப்பட்டதுகூடத் தெரியாமல், வேடிக்கை பார்க்கும் தன்மானத் தமிழர் கூட்டம் இருக்கின்றது..அவர்கள் கூறட்டும்.....என்ன குற்றம் செய்தேன்??

 நான் எழுதாத இலக்கியமா? இத்தனை ஆண்டுகாலமாக,தமிழ் திரைப்படத்துறைக்கு நான் செய்தது கொஞ்சமா? நஞ்சமா?  சுத்தியின் சத்தம்” என்ற அந்த ஒரு காவியத்திற்கே குறைந்தது 10 ஆஸ்கார் விருதுகள் வழங்கப் பட்டிருக்க வேண்டும்....பார்ப்பண சூழ்ச்சியின் விளைவாக எனக்கு அது கிடைக்காமல் போனதை உலகம் அறியும்.

 வாழும் வள்ளுவர்ன்று என் மக்களால் கொண்டாடப்படுவதை அறிந்தும், மாநிலத்தின் நலனை கருத்தில் கொள்ளாமல், ஏதேச்சதிகாரத்தோடு நடந்து கொள்ளுவதாகவே நான் கருதுகின்றேன்.  இந்த மாற்றாந்தாய்ப் போக்கை மத்திய அரசாங்கம் கைவிட வேண்டும்... அறிஞர்அண்ணா அன்றே சொன்னார்....
 தம்பி...கக்கக்க....காகக்க்க......காக்கா கக்கா கா.
 
ஆடையிழந்து, அம்மணமாய்த் திரிந்த தமிழன்னைக்கு, லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் செலவு செய்து, செம்மொழியாடை கட்டியவன் நான் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது....
ஈழத்தில் போர்நிறுத்தம் இல்லையென்றால், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் என்று சொல்லி காலையுணவுக்குப் பின் தொடங்கி மதிய உணவுக்குள் போராட்டத்தை கை விட்ட கதை உலகறியும். பாலுக்கும் காவலாய், பூனைக்கும் தோழனாய் நடித்து என் ராஜ விசுவாசத்தை அவ்வப்போது வெளிக்காட்டிக் கொண்டுதான் இருக்கின்றேன். 

சமீபத்தில் கூட உங்கள் ஆட்சிக்கு ஆபத்து வந்தபோது உடுக்கை இழந்தவன் கை போலே....அங்கே வந்து தம்பி ராசாவைப் பலி கொடுத்து உங்க அரசினை காப்பாற்றினோம் என்பதை நினைவூட்டக் கடமைப் பட்டிருக்கின்றேன்.
 
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்...ஆனால், தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் சொல்லித்தந்த பாடம் நினைவில் இருப்பதால் இத்தோடு விட்டு விடுவோம்...

 அடுத்த குடி அரசு தினத்திற்கு நான் இருப்பேனோ இல்லையோ தெரியாது...உங்களின் அடிவருடியாக, அடிமையாக இத்தனை நாள் காலத்தை ஓட்டிவிட்ட எனக்கு..பதவிகளின் மீது பெரிய ஆசை கிடையாது.  காலம் முழுவதும் மக்களின் கண்ணீரைத் துடிக்கும் கைக் குட்டையாகவே வாழ விரும்புகின்றேன்.  ஆனாலும், கட்சி கண்மணிகள் நேற்றிரவு இருந்தே, கொதித்துப் போயிருப்பதாலும், ஆரியர்களின் சூழ்ச்சி என்று தமிழினம் பொங்கியெழாமல் இருக்கவேண்டுமே என்ற கவலையினாலும்  இதை எழுதுகிறேன்.....

கமல பூட்டன், கமல விபூட்டன் இல்லையென்றாலும் பரவாயில்லை.....குறைந்த பட்சம் கமலத்திரு (பத்ம பூஷன், பத்ம விபூஷன், பத்மஸ்ரீ......நாங்க கிரந்தம் பயன்படுத்தம் மாட்டமில்ல..அதான் தமிழ படுத்தி எடுத்து விட்டோம்) பட்டமாவது அளித்திருப்பீர்கள் என்று எதிர்பார்த்திருந்தோம்... ஆனால் மீண்டும் பெரிய அண்ணன் தோரணையில் நடந்து கொண்டீர்கள்.  சரி அண்ணா சொன்னது போல.......தம்பி...மறப்போம்....மன்னிப்போம்....

இனியாவது உடனடியாக, அடுத்த மாத இறுதியில் ஒரு நல்ல நாளில் மீண்டும் குடி அரசு தின விழா நடத்தி, எனக்கு ஏதாவது ஒரு பட்டம் கொடுத்து, பெருமையடைந்து கொள்வதோடு மட்டுமன்றி,  இந்நிகழ்வு வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் எதிர்கால சந்ததிகளுக்கு நேரு குடும்பத்தின் பெருமைகளை பறைசாற்ற ஒரு வாய்ப்பாக அமைவது நிச்சயம்..


Saturday, September 26, 2009

நாணயம் இல்லாத மகாத்மா......

தொல்லைக் காட்சியை பார்த்து பல மாதங்கள் ஆகிவிட்டன.   நேற்று மாலை            "இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக"  சேனல்  ஒன்றை பார்த்தேன். அதில் அறிஞர் அண்ணா  விழா பற்றிய விளம்பரம் ஒன்று வந்தது. அதில் மத்திய அமைச்சர் ஒருவர்....மாமேதை.....பேசியது.....

"அண்ணா நாணயம் மிக்கவர்.  எனவே தான் அவர் படம்  நாணயத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது"

அப்படியென்றால் நோட்டில் இருக்கும் காந்தி நாணயம் இல்லாதவரா...?


மரமண்டை, கதர்ச்சட்டைகளும் கை தட்டுகிறது. 

ஜால்ரா அடிப்பதற்கு ஒரு அளவில்லை.....   சரி போய் தொலையட்டும்.....கதர்ச்சட்டைகளுக்காவது அறிவு வேண்டாம்.


தொங்க பாலுவுக்கும்,  வாச மூப்பனுக்கும் காவடி தூக்கவே நேரம் பத்தல

பெரியார் பேரனுக்கு மப்பு குறைஞ்சாத்தான.....




மானங்கெட்டவர்கள்.....


Friday, September 18, 2009

துறவியாகப் போகவிருந்த தந்தை பெரியார்.......

பேரண்புடைய பெரியார் அவர்கட்கு, வணக்கம். என் உடல் நிலை நல்லவிதமாக முன்னேறி வருகிறது.  வலியும் அதற்கு காரணமாக இருந்த நோய்க் குறியும்  இப்போது  துளியும் இல்லை.  பசியின்மையும், இளைப்பும், இருக்கிறது.  டாக்டர் மில்லரின் யோசனைப்படி, இத்திங்கள் முழுவதும் இங்கிருந்துவிட்டு நவம்பர் முதல் வாரம் புறப்பட எண்ணியிருக்கிறேன். இங்கு ராணி, பரிமளம்,செழியன்,ராஜாராம்,டாக்டர் சதாசிவம் ஆகியோர் உடனிருந்து கனிவுடன் என்னைக் கவனித்து கொள்கிறார்கள்.  சென்னை மருத்துவமனையிலும்,விமான தளத்திலும் தாங்கள் கவலையுடனும், கலக்கத்துடன் இருந்த தோற்றம், இப்பொதும் என் முன் தோன்றியபடி இருக்கிறது.  ஆகவே தான் கவலைப்பட வேண்டியதில்லை. முற்றிலும் நீங்கிவிட்டது என்பதனை விளக்கமாக தெரிவித்திருக்கிறேன்.  தங்கள் அன்பிற்கு என் நன்றி.  தங்கள் பிறந்த நாள் மலர் கட்டுரை ஒன்றில் மனச் சோர்வுடன் துறவியாகிவிடுவேனோ, என்னவோ, என்று எழுதியிருந்ததைக் கண்டு மிகவும் கவலை கொண்டேன்.  தங்கள் பணி, மகத்தான விழிப்புணர்ச்சியை சமூகத்தில் கொடுத்திருக்கிறது.  புதியதோர் பாதை மக்களுக்கு கிடைத்திருக்கிறது.  எதிர்பாராத வகையில், இத்தனை மகத்தான வெற்றி வேறு எந்த சமூக, சீர்திருத்தவாதிக்கும், கிடைத்ததில்லை.  அதுவும் நமது தமிழ்நாட்டில்.  ஆகவே  சலிப்போ, கவலையோ துளியும் தாங்கள் கொள்ளத் தேவையில்லை.  என் வணக்கத்தை திருமதி. மணியம்மையார் அவர்களுக்கு தெரிவிக்கவும்.

அன்பு வணக்கங்கள்

தங்களன்புள்ள

அண்ணாதுரை.

நியூயார்க்

10/10/68



 தந்தை பெரியாருக்கு அண்ணா எழுதிய கடிதம்.


பெரியார் ஏனப்படிச் சொன்னார்.?...... தெரிந்தவர்கள் விளக்குங்களேன்.


அன்புடன்
ஆரூரன்.


Thursday, September 17, 2009

பார்ப்பணீயத்தின் புதிய தில்லாலங்கடி…..-ஒரு விளக்கம்

நண்பர் வால் பையனின் கட்டுரையும் அதைத் தொடர்ந்து வெளிவந்த விமர்சனங்களுக்கும், பதிலெழுதாமல் விட மனம் ஒப்பவில்லை. அவர் சொல்ல வந்த விடயத்தை விட்டுவிட்டு, எப்படிச் சொல்லவந்தார் என்பதில் மூத்த 'தலை'களெல்லாம் போட்டி போட்டுக் கொண்டு விமர்சித்தது ஏன் என்று தெரியவில்லை. எனவே இப்படி ஒரு பதிவு....  

"பார்பனீயம் என்பது ஒரு சாராரை அடிமைப்படுத்தி அல்லது அறிவு ரீதியாக சிறுமைப்படுத்தி அடக்கி ஆளும் குணம்! அக்குணம் இருப்பவர்கள் பார்பனரல்லாத மற்ற மனிதர்களும் இருக்கிறார்கள், அக்குணம் இல்லாத பார்ப்பனர்களும் இருக்கிறார்கள். நான் பொதுவாகவே சாதியத்தை எதிர்ப்பதால் இது எந்த வகையிலும் பார்பனர்களுக்கு எதிரான பதிவல்ல என்பது தெரியும், ஒருவேளை இதில் குறிப்பிட்டு பார்பனர்களை சாடுவது போல் இருந்தால் அது சாதி ரீதியாக குறிப்பீடாமல் பார்பனீய ரீதியாக குறிப்பிடுவது மட்டுமே!" 

நல்ல முன்னுரை என்பதை விட நல்ல தற்காப்புரையுடன் நண்பர் வால் எழுதியிருப்பதாக தோன்றுகிறது.

நண்பர் வாலின் இடுகை(http://valpaiyan.blogspot.com/2009/09/blog-post_16.html)
குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்த தன்னுடைய நண்பர்கள், அல்லது வேண்டப்பட்டவர்கள் மனம் புண்படக்கூடாது என்பதற்காக இப்படி ஒரு முன்னுரையை எழுதியிருக்கலாம்.


எனது பதிவுகள்:

1. பார்ப்பணீயம் என்பது

"ஒரு சாராரை அடிமைப்படுத்தி அல்லது அறிவு ரீதியாக சிறுமைப்படுத்தி அடக்கி ஆளும் குணம்! அக்குணம் இருப்பவர்கள் பார்பனரல்லாத மற்ற மனிதர்களும் இருக்கிறார்கள், அக்குணம் இல்லாத பார்ப்பனர்களும் இருக்கிறார்கள்" 

என்பது சரியானதாக இல்லை.

சக மனிதனில் தன்னை முன்னிலைப்படுத்துக்கொள்ள , தன் கல்வியறிவினாலும், அதன்மூலம் பெற்ற அறிவுஜீவித்தனத்தையும் அடிப்படையாகக் கொண்டு படிக்காத பாமரர்களையும், நடுத்தரவர்கத்தையும், சமூகத்தின் பல்வேறு தட்டுகளில் வசித்த மக்களை அடக்கி ஆளும் முகமாக செயல்படும் பார்ப்பனர்களின் சிறப்பு குணாதிசியமே" பார்ப்பணீயம்" என்று கொள்ளலாம்.

"இதில் சேராத பார்ப்பணர்களும் உண்டு" என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

2."பார்பனீயம் வேறு, உயர் ஜாதீயம் வேறு"(டோண்டு அவ்ர்கள் கவனிக்க....)

"உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற தங்கள் வருணாசிரமக் கொள்கையை கொண்டுவந்தவர்களே இந்த பார்ப்பனர்கள் தானே. இவர்களும் தங்களுக்கு நிகராக யாரையும் உருவகப்படுத்தவில்லை. மற்றவர்கள் அனைவரையும் தங்களுக்கு கீழ்ப் பட்டவர்களாகத்தான் உருவகப் படுத்தினார்கள். அளவில் மிகப்பெரிய கூட்டமாக இருந்த மக்களை அடக்கியாள இவர்களுக்கு பணபலமும், புஜ பலமும், தேவைப்பட்டது. அதனால், தங்கள் கருத்துக்கு வலு சேர்க்க இவர்கள் சேர்த்துக்கொண்ட இன்னொரு கூட்டம் தான் உயர்ஜாதீயம். இவர்களைக்கூட தங்களுக்கு சமமானவர்களாக, பார்ப்பனர்கள் ஒரு போதும் இவர்கள் ஏற்கவில்லை.

இந்த நாடுமுழுவதும், காசி, அயோத்தி  உட்பட பல இடங்களில் மக்கள் அனைவரும் கோவிலின் கர்ப்பகிரகம் வரை சென்று,  சிலையைத் தொட்டு, பூசிக்கும் முறை இருக்கும் போது, இங்குள்ள உயர்ஜாதியும், நம்மோடு வெளியில் நிற்பதேன். இதைக்கேட்க ஒரு பாஜாகவும், இந்துமுன்னனியும் தயாராயில்லை.  திராவிட தறுதலைகளும் இதை ஏற்றுக்கொண்டு மஞ்சள் துண்டு போர்த்தி வெளியே நம்மோடு நிற்கின்றன.

பார்ப்பனன் உன்னை வெளியே நிறுத்தினான், அதை எதிர்க்க முடியாத நீ, அடுத்தவனை வெளியே நிறுத்தினாய்......




2.பைபிளின் மூல மொழி பற்றிய கருத்து தவறானதானாலும், ஹீப்ரூ மொழிபற்றிய "வாலின்" கருத்து சரியானதே. அழிந்து பட்ட நிலையிலிருக்கும் அதனை இப்பொழுதுதான் மீட்டுவருகின்றனர்.


அதற்கான ஆதார தொகுப்பு:

அ)"கிரேக்க ஆட்சியின் போது, மத அடிப்படைவாத யூதர்களுக்கும், கிரேக்க கலாச்சாரத்தை பின்பற்றிய மிதவாத யூதர்களுக்குமிடையில் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டுள்ளன. (சிரியாவில் இருந்து வந்த) அசிரிய படைவீரர்கள் துணையுடன் மிதவாத யூதர்கள் தமது அரசியல் ஆதிக்கத்தை அவ்வப்போது நிலைநாட்டி வந்துள்ளனர். இதன் காரணமாகவும் இயேசுவும், அவரது சீடர்களும் அரேபிய மொழியை பேசியிருக்கலாம். ஏனெனில் பண்டைய சிரியர்கள், (ஹீப்ரு, அரபு மொழிகளை ஒத்த௦) அரேமிய மொழி பேசி வந்துள்ளனர். இருப்பினும் வேதாகமத்தில் பல சுவிசேஷங்களை எழுதிய இயேசுவின் சீடரான பவுல், அரேமிய மொழிக்குப் பதிலாக கிரேக்க மொழியை பயன்படுத்தினார். இதனால் தான் பைபிளின் மூல நூல் கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருந்தது. ஒரு பாலஸ்தீன யூதரான பவுல், கிரேக்க நகரமொன்றில் பிறந்து வளர்ந்தவர். அத்தோடு ரோம குடியுரிமை பெற்றிருந்தார். இதனால் பவுலின் வருகைக்கு பிறகு கிறிஸ்தவ கருத்துகள் பிற நாடுகளிலும் பரவ ஆரம்பித்தது"

(http://kalaiy.blogspot.com/2009/04/blog-post_12.html)



ஆ)இஸ்ரேல் என்ற தேசம் உருவான போது, அங்கே யூதர்களின் புராதன மொழியான ஹீபுரூ பேசுவோர் யாரும் இருக்கவில்லை. எல்லோரும் அதற்கு முன்னர் வாழ்ந்த நாட்டு மொழிகளையே பேசினர், இன்றும் கூட வயோதிபர்கள் ஜெர்மன்,பிரெஞ்சு, ஆங்கிலம், அரபு என்று பல்வேறு மொழிகளை வீடுகளில் பேசி வருகின்றனர். இளம் சந்ததி மட்டுமே ஹீப்ரூ மொழியை தமது தாய் மொழியாக்கியது

http://kalaiy.blogspot.com/2008/11/blog-post_28.html


சம்ஸ்கிரதத்தை ஒரு மொழி என்று என்னால் ஏற்க முடியவில்லை. வால் பையனின் வார்த்தைகளின் படி

" மொழி என்பது ஒலி வடிவ தகவல் தொடர்பு சாதனம்" என்றால், வீட்டில் சம்ஸ்கிரதத்தில் பேசும், கடிதமெழுதும் பார்ப்பனர்களை நம்மால் காண முடிவதில்லையே.

மொழிக்கான அடிப்படையே இல்லாததால் தான் இவர்கள் அடுத்தபடியில் நிற்கும் ஹிந்திக்கு வால்பிடிக்கின்றனர். மற்றவர்களிடமிருந்து தன்னை உயர்த்திப்பிடிக்க, இவர்களின் அடுத்த இலக்கு, ஏதாவது ஒன்றைச் சொல்லி மக்களை ஒன்றுதிரளச் செய்வதுதான்.

இந்தியன் என்ற "தேசியம்" பேசும் இவர்கள்,  என்றாவது இந்தியன் என்ற பொது இனம் என்று பேசியிருக்கிறார்களா? இந்துக்கள் என்ற பறந்துபட்ட பதத்திலாவது, பேசியிருக்கிறார்களா? இல்லையே.

பிறப்பால்,மொழியால்,கலாச்சாரத்தால், நடைமுறைப் பழக்கவழக்கத்தால், விரிவடைந்திருக்கும் மக்களை ஒன்று திரட்டவும், அவர்களின் இன தனித்துவத்தை இழக்கச்செய்யும் விதமானதாக பயன் படுத்தப்பட்டது தான் இந்த 'ஹிந்தி'ஹிந்து,ஹிந்துத்துவம், கடவுள் போன்ற கதையெல்லாம். 

ஹிந்தி பேசுபவனையெல்லாம் இவர்கள் உயர்ந்தவர்கள், தங்களுக்குச் சமமானவர்கள் என்று இவர்கள் ஏற்றுக்கொள்வதில்லையே.

மக்களை ஒன்று திரட்டுவதும், அதன்பின் அவர்களை தங்களுக்கீழ் கொண்டுவந்து, தங்கள் மேதாவித்தனத்தை வெளிக்காட்ட முனைவதும் இவர்களின் இயல்பே. 

நம்மூரில் கூட சில கதர்ச் சட்டை மேதாவிலாசங்களும், தேசியம் பேசும் அறிவுஜீவிகளும் கூட்டங்களில் பேசி முடித்தவுடன், "ஜெய் ஹிந்த்" என்பதை காண முடிகிறது. இவர்கள் ஹிந்துவை வாழ்த்துகிறார்களா? இந்தியாவை வாழ்த்துகிறார்களா?

ஹிந்தி கற்பதும் கற்காததும் அவரவர் விருப்பம். மொழியை அடிப்படையாக கொண்டு நம்மை ஒன்றினைத்து அடக்கியாள முயலும் இவர்களின் சாகச திட்டங்களும், அதன் தொடர்பாக நம் இனத்தின் தனித்துவங்களை அழிக்கமுயலும் இவர்களின் திட்டமும் தான் நமக்கு பிரச்சனை.





Friday, March 13, 2009

மாற்றம் என்ன கடைச்சரக்கா?

மாற்றம் என்ன கடைச்சரக்கா?

மாற்றம் என்னும் மந்திர வார்த்தையை
சொல்லுவதால் மட்டுமே மாற்றம் வந்துவிடாது. மலேசிய வரலாறு ஒரு எடுத்துக் காட்டுத்தான். ஒரு வரலாற்றைப் பின் பற்றிச் செல்லமுடியாது. நாட்டு மக்களின் சமூக பொருளாதார நிலைமை, பிரச்சனையின் தாக்கம், சம்பந்தப்பட்ட பிரச்சனையில் மக்களின் பாதிப்பின் அளவீடு, போன்ற விசயங்கள் தான் முடிவு செய்கின்றன. ருசிய புரட்சியின் அடிப்படையில் அதற்குப் பிறகு அதுபோன்ற ஒரு பெரிய வெற்றியை எட்டவில்லை என்பது உண்மை. இந்திய சுதந்திரப் போராட்டத்தை பின் பற்றி தந்தை செல்வா, பொன்னம்பலம், தொண்டமான் ஆகியோரின் போராட்டம் குறிப்பிடத்தகுந்த வெற்றியை கொடுக்கவில்லை.


தனிமனிதன் எப்பொதெல்லாம் தனக்கெதிராகவோ, தன் குடும்பதிற்கெதிராகவோ, பாதிப்பு நடைபெறும் போதுதான் தான் கூட்டத்தோடு வாழவேண்டிய அவசியத்தை உணர்கிறான். தனித்தியங்குதல் தத்துவம் தன்னைவிட வலிமையானவனைப் பார்த்ததும் தவிடுபொடியாகிறது. 


மலேசிய நாட்டைப் பொறுத்தவரை, நம் தமிழர்கள் இரண்டாந்தர குடிகள் அல்ல, மூன்றாந்தர குடிகள்தான். பல ஆண்டுகளுக்கு முன்னாள் புலம் பெயர்ந்த அவர்களின் கடின உழைப்பு அவர்களை ஒரளவு வளமான நிலையில் வைத்திருப்பது என்னவோ உண்மைதான். 

ஆனால் ஒருவிதமான இருக்க நிலையிலேயே வாழ்ந்ந்துவருவதென்னவோ நிஜம். அனைவரது உள்ளதிலும் ஒருவித பய உணர்ச்சி இருப்பதை பார்க்க முடிந்தது. அதோடுமட்டுமன்றி, பினாங்கு, மலாக்கா பகுதிகளுக்கு இந்த போராட்டம் பரவ வில்லை. சிலாங்கூர், மாநிலத்தில் தான் இதன் தாக்கம் அதிகமாக இருந்ததை காணமுடிந்தது. 

 நண்பர் திரு. மணியரசு அவர்களின் இல்லத்தில் தங்கிருந்தபோது, மலேசிய நாட்டின் பல பகுதிகளிலிருந்த மக்களோடு கலந்துரையாட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். நாள்தோரும் நாங்கள் இருவரும் பலதரப்பு மக்களையும் சென்று சந்தித்து அவர்களின் வாழ்க்கைமுறைகளையும், சமூக நிலைப்பாட்டையும் அறிந்தோம். அங்கீகரிக்கப்பட்ட இனமாக இருந்தாலும் அவர்கள் சீனர்களையும், மலாய் மக்களையும் ஒட்டியே வாழ முடிகிறது.

பல்வேறு சிறு சிறு சமய அமைப்புகள், தமிழ் கலாசாரப் பள்ளிகள், இசைப் பள்ளிகளை பார்க்க முடிந்தது. ஒவ்வொரு வாரமும் விடுமுறைநாளில் நண்பர் மணியரசு அவர்கள் வீட்டில் அருகிலிருக்கும் தமிழ்க் குழந்தைகளுக்கு தேவாரப் பாடல்களை தகுந்த ஆசிரியரைக் கொண்டு இலவசமாக சொல்லித்தருவார். பல்வேறு சமய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் சைவ சமயத்தைப் பற்றியும், தேவார, திருவாசக பாடல்களைப் பாடுவதும், சொற்பொழிவுகள் ஆற்றுவதையும் தத்துவ விசாரங்களில் ஈடுபடுவதும் எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது. தமிழின் பால் அவர்கள் காட்டிய அக்கரையும், காதலும் என்னை வியப்படைய வைத்தது.


ஆனால் இதன் பின்னனி மெதுவாகத்தான் புரிய ஆரம்பித்தது.


பல்வேறு சாதி, மற்றும், பொருளாதார பிரிவுகளில் உள்ள தமிழர்கள், தங்களது வாழ்வாதார சின்னமாக மதத்தை, மொழியை கொண்டிருக்கின்றனர். மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், மொழியின் பெயரால் ஒன்றினைய முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். பல்வேறு ஆதிக்க சக்திகளின் நெருக்கடியினால் பயந்துள்ள இவர்கள் தன் இனத்து மக்களை அடையாளங்கானவும் ஒன்றினையவும் சமயத்தையும், மொழியை பயன் படுத்துகிறார்கள்.

பல தமிழர்களின் முகவரி அட்டைகளைப் பார்த்து அவர்களின் இனத்தைச் சொல்லமுடியாது. லட்சுமணன் என்பவர் தன் பெயரை எல். மணன் என்றும் லோகநாதன் தன் பெயரை லொகன் என்றும் எழுதுவதை பார்க்கமுடியும். வெளியிடங்களில் தன் இனத்தை பெயர்கொண்டு அறிவதை அவர்கள் விரும்புவதில்லை. அந்த அளவிற்கு பய உணர்சி அவர்களுக்கு உண்டு. 

தொழில் ரீதியாக சீனர்களுடன் போட்டியிட அவர்களுக்கு அது தேவைப் படுகிறது. மலேசிய போராட்டம், அந்த நாட்டின் அரசிற்கு எதிரானதல்ல, ஆனால் அவர்களின் உரிமைக்காகத்தான் என்று அதன் தலைவர்கள் சொல்லுகிறார்கள். அவர்களின் அறிக்கைகளில், தாங்கள் மலேசிய குடிகள் என்பதையும், அதன் இறையாண்மையையும், பிரதமரையும் ஏற்றுக் கொள்வதாகவும் கூறியிருப்பது கவனத்தில் கொள்ளவேண்டியதாகும்.

ம இ கா வும் மலேசிய தமிழர்களை புதைகுழியில் தள்ளிய டத்தோ. சாமிவேலுவின் வார்த்தைகளை நம்பி தன் கடைசிக் காசினையும், அடகு வைத்த தமிழர்களின் கொதிப்பின் வெளிப்பாடுதான் இந்த்ராப் தேர்தல் வெற்றி. தமிழர்களின் நலவாழ்வு தூதன் ம இ கா அல்ல என்பதை ஆட்சியர்களுக்கு உணர்த்தவே மக்கள் அக்கட்சியைய் தேர்தலில் தோற்கடித்தனர்.


இங்கே தமிழகத்தில் அப்படி ஒரு பாதிப்பு தமிழனிடம் ஏற்படவில்லை. ஈழத்திலே நடைபெறும் இனப் படுகொலை நம்மை பெரிதாக பாதிக்கவில்லை. முல்லைப்பெரியார் பிரச்சனையும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டமோ, காவிரி நதி நீர் பிரச்சனையோ, இங்கே எந்த புரட்சியையும் ஏற்படுத்த வில்லை. பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கவில்லை. ராமேஸ்வரம் மீனவர்களின் இழப்புகளும் கூட பெரிதாக மக்களிடையே செல்லவில்லை. ஒட்டுமொத்த இனத்தின் எதிர்ப்பை ஆளும் வர்க்கம் பெறவில்லை. எனவே இங்கே மாற்றம் கொண்டுவருவது எளிதல்ல


. ஆளும் வர்க்கமும், முன்னாள் ஆண்ட வர்க்கங்களும் தங்கள் கடைசி நேர தகிடுதத்தங்களின் மூலம் மக்கள் மனதை மாற்ற முயல்வார்கள். மொத்த வாக்காளார்களிள், முடிவு செய்யாத, எந்த அரசியல் கட்சியையும் சாராதாவர்கள் தான் வெற்றியை முடிவு செய்பவர்களாக இருக்கின்றனர். தி.மு.க, அதிமுக, ஆகியோரின் ஓட்டு வங்கிகளில் பெரும் மாற்றம் இல்லை. யாருக்கு ஒட்டு இடுவது என்று முடிவுசெய்யாத, திருவாளர் பொதுஜனம் தான் வெற்றியைய் முடிவு செய்கிறார். இரண்டாவதாக எண் விளையாட்டு, யார் யாருடன் கூட்டு சேருகிறார்கள் என்பதை பொறுத்து வெற்றி நிச்சயிக்கப் படுகிறது.


மாற்றம் வரவேண்டும் என்பது எல்லோருடைய விருப்பமாக இருந்தாலும், அதை மக்களிடம் எடுத்துச் செல்லும் பணி கடினமானது. அதற்கு தன்னிகரில்லாத தலைமையும், தன்னார்வ தொண்டர்களும் தேவை. மாணவர்கள், வழக்கறிந்ர்கள், ஊடகவியலாளர்கள் முன்னின்று, சிறு வியாபாரிகள், மற்றும் இந்த அரசின், மின் தட்டுப்பாடு, பொருளாதார தேக்கம், உயர்கல்விக் கட்டணங்கள், விலைவாசி உயர்வு போன்ற வேறு காரணங்களுக்காக வெறுப்படைந்துள்ள நடுத்தர வர்கத்தினரையும், ஒன்று திரட்டுவதன் மூலம் மட்டுமே இது சாத்தியம். ஆதிக்கசமூகங்கள் தங்களுக்கு முன் இருக்கும் எதிர்ப்புக்களை பண பலம், பதவி ஆகியவற்றால் அடக்க முயல்வது இயல்பே. இப்படியான ஒரு பயத்தை ஏற்படுத்த முயல்வதன் முதல் படி தான் சீமான், கொளத்தூர் மணி, ஆகியோர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டபடியான நடவடிக்கைகள்.

நாட்கள் குறைவு, விரைவாக செயல்படுவது அவசியம்.


Thursday, March 05, 2009

சீக்கிரம் விழி தமிழா ..........
புறப்படப்போகிறது நம் கடைசிப் பேருந்து.

அதிகார வர்க்கம் என்றும் நம்மை ஆளத்தொடங்கும் போது தன் கோரக்கைகளை தம்மோடு இருக்கும் கைக் கூலிகளை கொண்டு மறைத்துக் கொண்டுதான் நெருங்கி வருகின்றன. எந்த ஒரு இனமோ, அரசோ, கொள்கையோ அழிக்கப் படுவதற்க்கு, அதற்குள்ளாகவே, அது சார்ந்த எட்டப்பர்களின் உதவி அவசியமாகிறது. அதிகார வர்க்கத்தின் எடுபிடிகளாக இருந்து கொண்டு, தான் உயர்ந்தவன், அல்லது உயர்ந்தவனுக்கு சமமானவன் என்ற நினைப்பினால் தான் பார்ப்பண சமூகம் ஒருகட்டத்தில் செயல்பட்டு வந்தது, ஒரிரு இடங்களில் இன்றும் செயல்படுகிறது. முதலாளி வர்க்கத்தின் அடிவருடிகளான இந்த சமுதாய்ம் தமிழ்ச் சமுதாயத்தின் மீது தனக்காக எந்த ஒரு நேரடியான அடக்குமுறையையோ, அடிமைத்தனத்தையோ ஏற்படுத்த வில்லை, மாறாக தன் சுயநலனுக்காக, தனக்கென ஒரு தர்மத்தை, நியாயத்தை ஏற்படுத்திக் கொண்டு எவனோ ஒரு முதலாளிக்காக செயல் பட்டுவந்தனர். தமிழ் நாட்டில் பார்ப்பண எதிர்ப்பியக்கம் தொடங்ப்பட்டதும் ஆதிக்க சமுதாயத்தின் இந்த திருட்டு வேளைகளுக்காகத்தான். எச்சைச் சோற்றுக்கு அலையும் இந்த கூட்டத்தில் இன்று எல்லா சமூகத்தினரும் இணைந்துள்ளனர். சாதி மேட்டுக்குடி இந்துக்கள் தான் உண்மையில் மற்றவர்களை அடிமைகளாக வைத்திருந்தனர், அதற்கு இந்த பார்ப்பன சமுதாயம் உடந்தையாக இருந்தது. ஆங்கிலேயர்களிடம் தங்கள் படிப்பறிவின் மூலம் ஒட்டிக் கொண்ட இந்த சமூகத்தின் பலரும் தன்னை வளர்த்துக் கொள்ள எதையும் செய்யத் தயாரயினர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும்பான்மையான இடங்களில் பிற சாதி மேட்டுக் குடி இந்துக்கள் தான் தாழ்த்தப் பட்ட மக்களை அடிமைகளாக வைத்திருந்தனர்.

பார்ப்பண எதிர்ப்பியக்கம், முதலாளிதத்துவ ஆதிக்க சமுதாய வளர்ச்சி என்பதெல்லாம் நம்மை ஏமாற்ற நம்முடன் இருக்கும் இந்த கருங்காலி கங்காணிகள் எழுப்பும் பசப்பு வார்த்தைகளன்றி வேறு என்ன? அடுத்தவனை அண்டிப்பிழைத்தும், சுரண்டித்தின்றும் பழக்கப் பட்ட இவர்களுக்கு இன்று விழித்த்ழுந்துள்ள கூட்டத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத பொழுது இப்படி ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு பேசுவது வழக்கம் தானே. அறிவியற்பூர்வமாக தவறு செய்வதை கற்றுவைத்துள்ள இவர்களது திறமை தான் அன்றே கச்சேரிக்கு வந்ததே. தன் தொடக்க காலத்தில் காங்கிரஸ் தலைமையயை எதிர்க்க இவர்கள் கையில் எடுத்த ஆயுதங்கள் தான் இந்த பார்ப்பண எதிர்ப்பியக்கம், சாதி ஒழிப்பு, இந்தி எதிர்ப்பு, தனி தமிழ் தேசியம் என்பதெல்லாம்.. இந்திய தேசியம் என்பது வெறும் பார்ப்பண வல்லாதிக்க குழுக்களின் ஏமாற்று வித்தை எனக் கொள்வது சரியல்ல. அது ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தின் வெளிப்பாடு.


உலகம் முழுவதும் சிங்கள பேரினவாத அரசிற்கு எதிராக குரல் கொடுக்கப் பட்டுவரும் இந்த வேளையில், இந்த கைக்கூலிகள் மட்டும் கத்தியை கீழே போட்டு விட்டு வா, பிறகு பேசலாம் என்கிறார்கள். யார் கத்தியை போட்டால் என்ன? போடாவிட்டால் என்ன? ஆயுதங்களை கை விட வேண்டியது விடுதலைப் புலிகளே தவிர அங்கு அவதிப் படும் அப்பாவித்தமிழர்கள் அல்ல. பச்சிளங்குழந்தைகள், பள்ளிச்சீறார்களின் மீது குண்டெறிந்து கொன்றார்களே, அவர்களை விட்டுவிட்டு “ உன்னைக் காப்பற்ற வேண்டுமெனில் அவனை கத்தியயை கீழே போடச் சொல்” என்பது தான் உங்கள் நாகரிகமா? இவர்கள் எஜமான விசுவாசத்தை பாராட்ட வார்த்தகளே இல்லை.

உலகெங்கிலும் தமிழனின் துரோகி இன்னொரு தமிழன் தான். இலங்கையிலாகட்டும், மலேசியாவிலாகட்டும், தமிழகத்திலாகட்டும், நம்மை வைத்துச் சீட்டாடியவர்கள், நம் தமிழ் தர்மதுரைகள் தான். பெருகிவரும் இனத்துரோகிகளின் எண்ணிக்கையை பார்க்கும் பொழுது, இன்னொரு அழித்தொழிப்பு இங்கும் அவசியாமாகிவிடுமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது.



சரி விசயத்திற்கு வருவோம்……

தமிழ்ப் பற்றும், இன உணர்வும் உள்ள தலைவர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்ட தமிழ்ச் சமுதாயத்தின் ஒரு சிறுதுளியான என் வேண்டுகோள்.

1. இந்த பாராளுமன்றத் தேர்தலிலாவது இரண்டு திருட்டு (திராவிட) கட்சிகளையும், இந்திய தேசியம் பேசும் அயோக்கியர்கள் கூட்டத்தோடும் எந்த கூட்டணியும் இல்லாமல் இன உணர்வோடு அனைவரும் ஒன்று திரண்டு தேர்தலை சந்தியுங்கள். துரோகிகளை அடையாளம் காட்டுவோம்.
2. தெலுங்கானா கொள்கையாய் முன் வைத்து தேர்தலை சந்தித்தவர்களை தயவு செய்து பாருங்கள். இன உணர்வு கொழுந்து விட்டு எரியும் இந்த சூழ்நிலையில், தடுமாறும் தமிழினம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, உங்களைக் காப்பாற்றும். இன உணர்வாளர்களே ஒன்று கூடுவோம்.
3. வழக்குரைனர்கள், மாணவர்கள், சீமான்கள், ஊடகவியலாலர்கள், கல்வியாளர்கள், அர்சியல் சாராத இன உணர்வாளர்கள், உள்ளிட்ட ஒரு பெருங்கூட்டம் உங்கள் பின்னால் வர காத்திருக்கிறது. நெடுங்கனவான தமிழ் தேசியத்தை காண இதைவிட ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது.
4. ஒருவேளை, பாரளுமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றி பெற முடியவில்லை என்றால், வரும் சட்டமன்றத்தேர்தலில் உங்கள் ராஜ் தந்திரங்களை மாற்றிக் கொள்ளுங்கள். உங்களை இன்று உள்ள நிலைக்கு உயர்த்திய தமிழனுக்காக இதையாவது செய்யுங்கள்
5. சூழ்நிலைகளின் அடிப்படையில் தான் பெரும் தலைமைகள் உருவாகி உள்ளன. அஸ்ஸாம் கண பரிஷத்தும், தமிழ் மாநிலக் காங்கிரஸும், ராமாரவ் தலைமியிலான் தெலுங்கு தேசமும், எம்.ஜி.ஆரின் அதிமுக, என இப்படிப் பல் கட்சிகள் சூழ்நிலையின் தாக்கத்தில் தான் பெரும் வெற்றி பெற்றன் என்பதை நீங்கள் அறிவீர்கள். வெற்றி பெற்றபின் அந்த தகுதிக்கு தன்னை ஆட்ப்டுத்திக்கொள்ளாதவர்கள் நிலைத்திருக்க முடிவதில்லை. எடுத்துக் காட்டு: தமிழ் மாநில காங்கிரஸ்..
6. தமிழார்வமும், இன உணர்வும் கொண்ட நீங்களே, பல்வேறு காரணங்களுக்காக பிரிந்து கிடந்தால் உங்களை நம்பி இருக்கும் எம் போன்ற தமிழரெல்லாம் எங்கு செல்வது. மேடைகளில் உங்கள் முழக்கத்தை கேட்டுவிட்டோம். உங்கள் முகஙகளையும் காட்டுங்கள். தமிழீழ எதிர்ப்பு அதிமுகவுடனோ, திருட்டுத் தலைமை திமுகவுடனோ, தேசிய இனங்களை அடக்கி வரும் எந்த தேசிய கட்சிய்னருடனோ கூட்டணி வைத்தால், இந்த தமிழ்ச் சமுதாயமும் உயிர் நீத்த தோழர்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்.