Friday, September 18, 2009

துறவியாகப் போகவிருந்த தந்தை பெரியார்.......

பேரண்புடைய பெரியார் அவர்கட்கு, வணக்கம். என் உடல் நிலை நல்லவிதமாக முன்னேறி வருகிறது.  வலியும் அதற்கு காரணமாக இருந்த நோய்க் குறியும்  இப்போது  துளியும் இல்லை.  பசியின்மையும், இளைப்பும், இருக்கிறது.  டாக்டர் மில்லரின் யோசனைப்படி, இத்திங்கள் முழுவதும் இங்கிருந்துவிட்டு நவம்பர் முதல் வாரம் புறப்பட எண்ணியிருக்கிறேன். இங்கு ராணி, பரிமளம்,செழியன்,ராஜாராம்,டாக்டர் சதாசிவம் ஆகியோர் உடனிருந்து கனிவுடன் என்னைக் கவனித்து கொள்கிறார்கள்.  சென்னை மருத்துவமனையிலும்,விமான தளத்திலும் தாங்கள் கவலையுடனும், கலக்கத்துடன் இருந்த தோற்றம், இப்பொதும் என் முன் தோன்றியபடி இருக்கிறது.  ஆகவே தான் கவலைப்பட வேண்டியதில்லை. முற்றிலும் நீங்கிவிட்டது என்பதனை விளக்கமாக தெரிவித்திருக்கிறேன்.  தங்கள் அன்பிற்கு என் நன்றி.  தங்கள் பிறந்த நாள் மலர் கட்டுரை ஒன்றில் மனச் சோர்வுடன் துறவியாகிவிடுவேனோ, என்னவோ, என்று எழுதியிருந்ததைக் கண்டு மிகவும் கவலை கொண்டேன்.  தங்கள் பணி, மகத்தான விழிப்புணர்ச்சியை சமூகத்தில் கொடுத்திருக்கிறது.  புதியதோர் பாதை மக்களுக்கு கிடைத்திருக்கிறது.  எதிர்பாராத வகையில், இத்தனை மகத்தான வெற்றி வேறு எந்த சமூக, சீர்திருத்தவாதிக்கும், கிடைத்ததில்லை.  அதுவும் நமது தமிழ்நாட்டில்.  ஆகவே  சலிப்போ, கவலையோ துளியும் தாங்கள் கொள்ளத் தேவையில்லை.  என் வணக்கத்தை திருமதி. மணியம்மையார் அவர்களுக்கு தெரிவிக்கவும்.

அன்பு வணக்கங்கள்

தங்களன்புள்ள

அண்ணாதுரை.

நியூயார்க்

10/10/68 தந்தை பெரியாருக்கு அண்ணா எழுதிய கடிதம்.


பெரியார் ஏனப்படிச் சொன்னார்.?...... தெரிந்தவர்கள் விளக்குங்களேன்.


அன்புடன்
ஆரூரன்.


14 comments :

வானம்பாடிகள் said...

இதுவரை கேள்விப் படாத தகவல். நன்றி ஆரூரன்.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி வானம்பாடிகள்

அன்புடன்
ஆரூரன்

க.பாலாஜி said...

மிகவும் அரிய தகவல். சின்ன வயதில் தந்தையுடன் கொண்ட மனகசப்பின் காரணமாக துறவியாக முடிவெடுத்து காசிக்கு சென்றிருக்கிறார். ஆனால் திருமணத்திற்கு பின் 19 வருடங்கள் கழித்து இந்த நிலைக்கு ஏன் வந்தார் என்று தெரியவில்லை. பார்ப்போம் பதில் கூறும் அன்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று...

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி பாலாஜி....என்னுள்ளும் இதே கேள்விதான்.

பார்ப்போம்.....

அன்புடன்
ஆரூரன்

க.பாலாஜி said...

தாங்கள் தேடும் பதில் இந்த வலையில் (http://www.tamildesam.org/special-pages/indian-leaders/thanthai-periyar/social-activities/) கிடைக்கிறதா என்று பாருங்கள்...நானும் படித்தேன் ஆனால் குழப்பமே மிஞ்சியது...

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி பாலாஜி....முயற்சித்துவிட்டு தொடர்பு கொள்கிறேன்.

அன்புடன்
ஆரூரன்

ஆரூரன் விசுவநாதன் said...

இதுகுறித்த தகவல்கள் இல்லை, பாலாஜி....காத்திருப்போம்...

மாதவராஜ் said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே...

பழமைபேசி said...

அண்ணே, காலையில கொஞ்ச நேரம் வாய்ப்புக் கெடச்சது... இப்பட்த்தான் வீட்டுக்கு வந்து இருக்கேன்.... மறுபடியும் வந்து படிக்கிறேன்....

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி தோழர்...

ஆரூரன் விசுவநாதன் said...

வாங்க....வாங்க.....அதுக்குத்தான காத்துட்டுருக்கறம்....

செம்மொழி said...

எனக்குப் பதில் தெரியவில்லை நண்பரே .. ஆனால் இது ஒரு அறிய பதிவு மட்டுமல்ல ..வித்தியாசமான பதிவும் கூட ..

செம்மொழி said...

மன்னிக்கவும் - பிழை .. ' அரிய ' பதிவு ..

ஆரூரன் விசுவநாதன் said...

வாருங்கள் செம்மொழி...


நன்றி..

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்