Tuesday, September 01, 2009

தீரன் சின்ன மலையும் நானும்-நினைவுக் குறிப்புகள்



ஈரோட்டில் எனது கலைப்பயணத்தை     (என்ன கலைங்கறீங்களா?.......பொட்டிதட்டறதுதான்)..  துவங்கினாலும்,  சேலம் எனக்கு தலைமையிடமானது.   தினசரி காலை 8,மணிக்கு புறப்பாடு, 1.30 மணிநேர பயணம், இரவு 7 மணிவரை கலைச்சேவை,   இரவு 9மணிக்கு நிலைசேர்தல்இப்படி என் வாழ்க்கை ஒடிக்கொண்டிருந்த நேரம்..

ஈரோட்டிலிருந்து சுமார் 25கி.மீ. தூரத்தில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை 47-ல் இருக்கும் ஒரு சிறிய ஊர் சங்ககிரி.   ரயில் நிலையம் “சங்கரி துர்க்” சென்னை-கோவை மார்க்கத்தில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் உட்பட சில ரயில்கள் மட்டுமே நின்று செல்லும் சிறிய ரயில் நிலையம்.



ஓவ்வொரு முறை நான் சங்ககிரியைக் கடக்கும் போதெல்லாம்,  அந்த ஊரின் நடுவே இருக்கும்  மலையையும், அதன் மீது தெரியும் கோட்டை மதிற் சுவர்களும் என்னை அடிக்கடி கனவுலகத்திற்கு தள்ளிச் செல்லும்.  

பீரங்கித் தாக்குதல்கள், வீர வசனங்கள், நாடாண்டவனை கைதியாய், நடைபிணமாய், பின் தூக்குமரத்தில் சாகப்போகும் வீரனன,   வெற்றிக் களிப்பில்,.. வென்றவன்!,  சாவில் விளிம்பில்.. தோற்றவன்! இப்படி

 “எத்தனை துக்கங்கள்? எவ்வளவு வலிமிகுந்த தருணங்கள்?  எத்தனை வெற்றிக் களிப்புகள்?……எத்தனை .ராஜ தந்திரங்கள்?……எத்தனை சாவுகள்?, எத்தனை மரண தண்டனைகள்,?..  இன்னும் எத்தனையோ? எத்தனைகளை  அமைதியாய் சுமந்து நிற்கும்  இந்த நினைவுச் சின்னங்களை போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி ஏற்படும்.

கடந்த சில வருடங்களில் பல உள்ளூர் நண்பர்களை அழைத்திருக்கிறேன்.
வாருங்கள்! சங்ககிரி கோட்டைக்குப் போய்வருவோம் என்று,    அதுவரை அன்பாய் பேசியவர்கள் கூட அதிரடியாய்  தலைதெறிக்க ஓடினர்.

சங்ககிரியிலேயே இருக்கும் ஒரு நண்பரை அழைத்து என் ஆசையைச் சொன்னவுடன் அவர்

மாப்ளமாப்ள...அங்க மட்டும்..வேணாங்  மாப்ல..

.ன்..?

வேண்டாம் மாப்ள அங்க………….

ம்ம்ம்ம்ம்ம்...

அங்க ……...அது.இருக்குங்கறாங்க!……இது...இருக்குங்கறாங்க!?

எது..?

அதெல்லாம் உங்குளுக்கு  புரியாதுங்  மாப்ள. அங்கெல்லாம் வேணாம்……

அதெல்லாம் முடியாது.. என்னைய கூட்டுட்டுதான் போகனும்..

வேண்டாங்  மாப்ள, வேற எதுவேன கேளுங்க?,   இது மட்டும் வேண்டாங்  மாப்ள..

அன்னைக்கு கூட ஒரு நாள் ஒரு பேப்பர்ல சங்ககிரி கோட்டையைப் பத்தி ஒரு கட்டுரை வந்தது,,,,,,, அந்த நிருபர் இங்க  வந்து போட்டோல்லாம் எடுத்து போட்டிருந்தாரே.

“அவன் வெளியூரு..உள்ளூரு விசயம் தெரிஞ்சா..டவுசர் கிழிஞ்சிடும்ல” ன்னுட்டு
ஓடினவர்,  இப்போதெல்லாம் நம்ம போன் நம்பரை பார்த்தாலே போனை எடுக்கறதில்ல.

அதன் பிறகு சங்ககிரி கோட்டையை  பார்க்கும்  ஆவல் மேலும் அதிகமாகியதுஆனாலும் சந்திரமுகி படத்தில வடிவேலு பேசறமாதிரி பேசிட்டு ஒடுனவனை நினைச்சா,.  தனியாகச்  செல்லவும் மனம் ஒப்பவில்லை.

.பயமா?  சே.சே.எங்க பரம்பரையிலே யாருக்கும் பயமில்லைல…… நாங்கள்ளாம் யாரு?  சிங்க.முள்ள.! இருந்தாலும்.. ஒரு துணைக்கு இருக்கட்டுமேன்னு ஒருத்தரை தேடினா. ஒருத்தரும் சிக்க மாட்டீங்கறாங்களே……ன்னு தேடிகிட்டிருந்த நேரத்தில்

திடீர்ன்னு வந்து சிக்கினார் நண்பர் ஈரோடு கதிர்..கூடவே நம்ம பதிவர் க. பாலாஜியும்..

அப்புறமென்ன…….கி..ளம்பிட்டம்ள……….

8 comments :

ஈரோடு கதிர் said...

சூப்பர் ஓ சூப்பருங்க..

ஓ ஒருத்தரும் கிடைக்காமதான் நான் சிக்கிக்கிட்டேனா?

ஆரூரன் விசுவநாதன் said...

வாங்க கதிர்.....அடடா....தெரியாம உம்மைய சொல்லிபுட்டனே......

அன்புடன்
ஆரூரன்

க.பாலாசி said...

//அதுவரை அன்பாய் பேசியவர்கள் கூட அதிரடியாய் தலைதெறிக்க ஓடினர்.//

அதபத்தியெல்லாம் சொல்லவேயில்ல...

//பீரங்கித் தாக்குதல்கள், வீர வசனங்கள், நாடாண்டவனை கைதியாய், நடைபிணமாய், பின் தூக்குமரத்தில் சாகப்போகும் வீரனன, வெற்றிக் களிப்பில்,….. வென்றவன்!, சாவில் விளிம்பில்….. தோற்றவன்! இப்படி//

உங்களின் ஆர்வம் கண்டேன் ஆயினும் இதுபோன்றதொரு ஆழம் அதிலிருக்கும் என்று நான் எண்ணவில்லை...உங்களின் வரலாற்று சிந்தனையில் அந்த நேரத்தில் கொஞ்சம் திகைத்துதான் நின்றிருந்தேன்...(வாய குடுத்து மாட்டிக்காதடா பாலாஜின்னு)

நாடோடி இலக்கியன் said...

நல்ல ஃபிளோ இருக்குங்க உங்க எழுத்து நடையில், இன்னும் கொஞ்சம் சிரத்தையோடு கையாளுங்கள்.

வாழ்த்துகள் நண்பரே.

ஆரூரன் விசுவநாதன் said...

சொன்ன வரமாட்டீங்கல்ல......

அதான்.....

நன்றி பாலாஜி

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றிங்க....நாடோடி இலக்கியன்

ஆரூரன்.

முருக.கவி said...

போகும்போது எங்களையும் கூப்பிடுங்கண்ணா. நாங்களும் வருகிறோம். பேச்சுநடையைப் போலவே எழுத்துநடையிலும் கலக்கறீங்க!

ஆரூரன் விசுவநாதன் said...

இப்படி ஒருத்தரைத்தான் ரொம்ப நாளாத் தேடினேன்....இப்ப வந்து சொல்லறீங்களே.... சரி விடுங்க.....அடுத்த முறை ஒன்றாய் செல்வோம்
அன்புடன்
ஆரூரன்.