Thursday, September 03, 2009

தொல்லையடி நீயெனக்கு…….தொந்தரவு நானுனக்கு……….

மாலைநேரங்களில் நண்பர் கதிருடன் நடை(ஓடி)பழக ஆரம்பித்த புதிதில், ஒருநாள்

வாருங்கள் கதிர், ஒருநாள் நாம் சங்ககிரி கோட்டைக்கு போய் வரலாம் என்றேன். 
அவரும் சரி, என்றார். ஆனால் அதன் பிறகு இருவரும் அதைப்பற்றி மறந்துவிட்டோம்.

கடந்த ஞாயிறன்று, வீட்டில் தங்கமணியோடு சேர்ந்து சமையல் செய்து கொண்டிருந்தபோது, கதிரிடமிருந்த அழைப்பு, சங்ககிரி செல்ல………..

கதிர் திருச்செங்கோட்டில் இருப்பதாகவும், நேராக சங்ககிரி வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தார்.  அவசரசமாக புறப்பட்டு பஸ் ஏறினேன்.

அன்று முகூர்த்த நாள், சேலம் செல்லும் எல்லா பேருந்துகளும் பட்டுச்சேலைகளாலும், மண(ன)ம் நிறைந்த பல வண்ண மலர்களாலும், மலர்களுக்கேற்ற வண்டுகளாலும், நிரப்பப்பட்டிருந்தன……..தள்ளுநரால்(அதாங்க கண்டக்டர்…….பஸ் நின்னா இறங்கி தள்ளுவாருள்ள) அழைத்துச்(தள்ளி) செல்லப்பட்டு ஓரிடத்தில் ஒதுங்கினேன்.


நின்றுகொண்டிருந்த எனக்கு இடதுபுற இருக்கையில் ஒரு

இறுக்கமான தேனீர் சட்டை(T.shirt ஐ தமிழ்ல எப்படிங்கண்ணா எழுதறது........). நீல ஜீன்ஸ், கருப்பு கண்ணாடியுடன், ஒரு இளைஞனும்,  அவருக்கருகில்,  ஒரு இளம் பெண்கல்லூரி செல்பவராக இருக்கவேண்டும்……

அந்தப் பெண்ணின் முகம் ஏதோ பழக்கமான முகமாகத் தோன்றியது.  நம் அண்டை வீட்டுப் பெண் போன்ற  முகசாயல்.   அழகான பெரிய கண்களாலும், ஒல்லியான தன் கைகளாலும் மெல்லிய குரலில் அபிநயம் பிடித்தபடி, சுவராசியமாக  ஏதோ பேசிக்கொண்டே வந்தாள்.  


கண்களை உருட்டி, இமைகளை அசைத்து, புருவங்களை ஏற்றி, இறக்கி, கைகளை ஆட்டி, ஆட்டி, இந்தப் பெண்கள் எதைப்பற்றியோ பேசும் அழகு.. அலாதியானது. 


நான் திரும்பி அவளைப் பார்க்க,   அவள் பேச்சு தடைபட்டது. கடைசியாகச் சொன்ன வார்த்தையையே திரும்ப, திரும்ப, தடுமாறி, தடுமாறிச் சொன்னதாக எனக்குப் பட்டது. அவளும் என்னை அறிந்திருப்பாளோ……..?

 பார்வையை முன்னோக்கி நகர்தினாலும், ஏனோ அப்பெண்ணின் முகம் மனதைவிட்டு அகலவில்லை மீண்டும் அந்தப்பெண் ஆலாபனைகளுடன் பேசத் தொடங்கினாள்..

புருவங்களை உயர்த்தி, இமைகளை  விரித்து, கண்களை மலர்த்தி, கைகளள உயர்த்தி சிவந்த ஈறுகள் தெரிய,  அழகிய சிரிப்புடன் …….அப்படியா? என எதைப்பற்றியாவது இந்தப் பெண்கள் கேட்கும் போது,……….. சொல்லவந்ததை நா(ன்)ம் மறந்து விடுகிறோம்


மீண்டும் அந்தப் பெண் மீது பார்வையை திருப்ப……..மீண்டும் அவள் பேச்சு தடைப்பட்டு..வார்த்தைகள் சிதறத் தொடங்கியது.  நானும் பார்வையை முன்னோக்கி செலுத்தினேன்.

மிகுந்த ரசனையோடு, அனுபவித்து அவள் எதையோ விருப்பப்பட்டவருடன்  பேசி வர..அவளின் ஆனந்த வெளிப்பாடுகள்,முக மலர்ச்சி……… என்னை மீண்டும் மீண்டும் அவளை பார்க்கத் தூண்டியது.  என்னால் அப்பெண்ணின் முகத்தைத் தவிர்க்க முடியவில்லை………… என் பார்வையை தவிர்த்து  அவளால் பேச முடியவில்லை..இருவரும் அவஸ்தையில்………….


சங்ககிரியில் பஸ் நிற்க.................. நான் இறங்க….....…மூவர் (இன்னொருத்தர் இதையெல்லாம் பார்த்தும், கேட்க முடியாம இருந்த  அப்பெண்ணின் நண்பர்)   மனதிலும் மிகுந்த நிம்மதி.

11 comments :

கதிர் - ஈரோடு said...

பாருய்யா...

40 வயசில சைட் அடிச்சத....
எப்படி நளினமா எழுதறாருண்ணு

நமக்குத்தான் சுட்டுப்போட்டாலும்
இந்த நளினி அடச்சீ.. நளினம் மட்டும்
வரவே மாட்டேங்குது.

ஏனுங்க ஆரூரன்...
பஸ்லியே பெருமூச்சு விட்டதாலத்தான்,
மலையேறும் போது
ரொம்ப மூச்சு வாங்குச்சோ

ஆரூரன் விசுவநாதன் said...

தேனுங் கதிர், தென்ன பாவம் பண்டுனனுங்க.....பொசுக்குன்னு வயச சொல்லிபுட்டீங்களே....

இதெல்லாம் நாயமுங்களா....

ம்ம்ம்ம்ம்.......போச்சு...போச்சு.....எல்லாம் போச்சு.....இத்தன நாள் காப்பாத்திவச்சதெல்லாம் வெளிய வந்திருச்சு.....

கதிர் உங்ககூட டூ..................

க.பாலாஜி said...

//…இறுக்கமான தேனீர் சட்டை(T.shirt ஐ தமிழ்ல எப்படிங்கண்ணா எழுதறது........).//

அட இதுகூட நல்ல தமிழா இருக்கே...

பஸ்ல சைட்டடிச்சிகிட்டு வந்தத என்னமா விளக்குறாருப்பா...

//என் பார்வையை தவிர்த்து அவளால் பேச முடியவில்லை…..இருவரும் அவஸ்தையில்………….//

அது ஒண்ணுமில்லிங்க...இந்த தாத்தா ஏன் நம்மளயே உத்து பார்க்கிறார்னு பார்த்திருப்பாங்க...(40 வயசு ஆயிடுச்சில்ல)

ஒரு சின்ன நிகழ்வுதான் என்றாலும் சொல்லபட்ட விதம்... சுவாரசியம்....அருமை....

T.V.Radhakrishnan said...

:-)))

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாஜி, நீங்களுமா?

இதெல்லாம் நல்லால்ல....முடியல.....அப்புறம் அழு.....துருவன்..

ஆரூரன் விசுவநாதன் said...

வாங்க ராதாகிருஷ்ணன். நீங்க மட்டும் ஏன் பேசாம இருக்கீங்க....ம்ம்ம்....சொல்லுங்க....சொல்லுங்க....

முருக.கவி said...

அண்ணா, வீட்ல அண்ணி படிச்சாங்களா?

Anonymous said...

சார், டைட்டில் சூப்பர்.

ஆரூரன் விசுவநாதன் said...

அய்யோ...அம்மா....நாயில்லை.....

வூட்டல கீது சொல்லிபோடாதீங்கம்முணி... ஏதோ நேரத்துக்கு சோறு கெடச்சிகிட்டிருக்குது.....கெடுத்துப்போடாதீங்க...ஆமா...
அன்புடன்
ஆரூரன்

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி, anonymous

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்