Monday, September 07, 2009

எப்படிச்............ சொல்வேனடி......

மாலைப் பொழுதின் பின்னேரம்
உழைப்பின் சலிப்பில் என் தேகம்
திடீர் மாற்றம் என்னருகில்
திரும்பிப்பார்த்தேன் வியப்புடனே


பவளமல்லியின் வாசனையை
தாங்கிச்செல்லும் பூங்காற்று
பார்க்கும் இடங்கள் எங்கெங்கும்
பன்னீர் துளியாய் சாரல் மழை

ஈரம் கண்ட,  வறண்ட நிலம்
ஈந்து தந்த மண் வாசம்
தூர விளக்கின் வெளிச்சத்தில்
தனியாய் கண்டேன் – தேவதையை

மெல்லிய புன்னகை உதட்டோரம்
மேவிய எழிழாய் அவளுருவம்
உள்ளம் குளிர உடல் குளிர
உடனே போனேன் அவளருகில்

உலகில் அழகுகள் பல இருந்தும்
என்னை ஏனோ?   பிடிக்குமென்றால்
எதை நீ விரும்பிக் கேட்டாலும்
எதிர்ப்பில்லாமல் உடன் தருவேன்


என்னிடம் உள்ள அத்தனையும்
எடுத்துக் கொடுப்பேன் உனக்காக
ஆசைப்பட்டு நீ கேட்டால் அதை
அள்ளித்தருவேன் உடனடியாய்
தேவை எதுவாயிருந்தாலும்
வரமாய் தருவேன் –கேள் என்றால்

விரைவாய் கேட்டுப் பெற்றுக்கொள்
விடைபெறும் நேர மிதுவென்றால்
மலர்முகச் சிரிப்பும், மடைதிறப் பேச்சும்
குயிலினை குரலும் குங்குமச்சாயலும்
எனக்கு மட்டும் என்றிருந்தால்
வானம்,    என்வசம் என்பதனை……….
                                                
                                      எப்படிச் சொல்வேன் அவளிடத்தில்...

உலகே எதிர்த்து நின்றாலும்,
ஒன்று திரண்டு வந்தாலும், – உன்
ஒற்றைச் சிரிப்பு போதுமடி.-வெட்டிச்
சாய்ப்பேன் வேறோடு.-இதை

                                     எப்படிச் சொல்வேன் அவளிடத்தில்...


அன்பாய் என் கரம் பற்றித்தான்,
ஆசையில் உன் தேள் சாய்ந்துத்தான்,
உடன் வர நீ மட்டும் சம்மதித்தால்,
உலகை வெல்வேன்..... என்பதனை

                                    எப்படிச் சொல்வேன் அவளிடத்தில்... 

உன் வசம் வீசும் காற்றும்,
உன் சுவாசம் வீசும் சூடும்,
என்றும் என்னுடன் இருப்பதென்றால்,
எதுவும் வேண்டாம் இவ்வுலகில். - இதை

                                    எப்படிச் சொல்வேன் அவளிடத்தில்...

சோதனை  ஆயிரம் வந்தாலும்,
வேதனையில் உயிர் அழுதாலும்,
சாதனை என்றும் நிரந்தரமே. -நான்
தோற்றதும்,  தோற்பதும்  உன்னிடமே-இதை

                                   எப்படிச்சொல்வேன் அவளிடத்தில்...

போரைக் கண்டு பயமில்லை,
தோல்விகள் என்பது எனக்கில்லை.
வெற்றிக் களைப்பில் இளைப்பாற –உன்
மடியில் கொஞ்சம் இடம் வேண்டும்-இதை
                                                
                                  எப்படிச்சொல்வேன் அவளிடத்தில்...

17 comments :

கதிர் - ஈரோடு said...

ப்ளீஸ் எப்படியாவது சொல்லிடுங்களேன்

சரி.. இன்னிக்கு வாக்கிங் போகும்போது எப்படி சொல்லறது வேணா நாம டிஸ்கஸ் பண்ணலாம்

இஃகிஃகி...

கவிதை அருமை அரூரன்

ஆரூரன் விசுவநாதன் said...

எப்புடிச் சொல்லுவன்.....

முடியாதே........

அவள் பறந்து போனாளே,
எனை மறந்து போனாளே....

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

T.V.Radhakrishnan said...

:-)))

பழமைபேசி said...

கவிதை அருமை... வடிவான வார்த்தைகள்....

//எழிழாய்//

என்னோட பக்கத்துக்கு வந்து போறவங்க நீங்க... அவ்வ்வ்வ்.......

//கவிதை அருமை அரூரன்//

மாப்பு வீட்டுத் திண்ணையில முதல் ‘லொல்’
பாலாண்ணன் வீட்டுத் திண்ணையில ரெண்டாவது ‘லொல்’
இப்ப இங்க மூனாவது ’லொல்’, அண்ணன் பெயர் ஆரூரன்

கடைசியாக் கொஞ்சம் சாந்து பூசி, ’எப்படிச் சொல்வேன் அவளிடத்தில்...’ வரியை வரிசைப்படுத்துங்க(format)...

க.பாலாஜி said...

//மலர்முகச் சிரிப்பும், மடைதிறப் பேச்சும்
குயிலினை குரலும் குங்குமச்சாயலும்
எனக்கு மட்டும் என்றிருந்தால்
வானம், என்வசம் என்பதனை……….//

ஆகா...சான்சே இல்ல...சூப்பர் வரிகள்...

//உலகே எதிர்த்து நின்றாலும்,
ஒன்று திரண்டு வந்தாலும், – உன்
ஒற்றைச் சிரிப்பு போதுமடி.-வெட்டிச்
சாய்ப்பேன் வேறோடு.-இதை//

இந்த தள்ளாத வயசுலையும் என்னா வீரம்...எல்லாம் காதலின் சாரம்....ம் நடக்கட்டும்....

கவிதை...அழகு...அருமை...நல்ல தமிழ்க்கொஞ்சும் வார்த்தைகள்...எப்படி சொல்வேனடி...

ஆரூரன் விசுவநாதன் said...

பழமை பேசி.....

மாப்பு வீட்டுத் திண்ணையில முதல் ‘லொல்’
பாலாண்ணன் வீட்டுத் திண்ணையில ரெண்டாவது ‘லொல்’
இப்ப இங்க மூனாவது ’லொல்’, அண்ணன் பெயர் ஆரூரன்

தென்னமோ அவசரத்தல சரியா பாக்குலீங்கண்ணா, கரீட்டா கண்டுபுடிச்சுபுட்டீங்க...தாரு பார்க்கப்போரா' ன்னு நெனச்சனுங்கண்ணா.....இனிமேட்டு இந்த மாதர வாராம பார்த்துக்கறனுங்கண்ணா....

உங்கள் வருகைக்கு நன்றி, தொடர்ந்து விமர்சியுங்கள்.
அன்புடன்
ஆரூரன்.

ஆரூரன் விசுவநாதன் said...

பாலா....சீ என்ன மாதர இளவட்டத்த பார்த்து, தென்ன சொல்லிபுட்டீங்க.... எல்லாம் இந்த கதிரு பன்றது.......

நன்றி பாலாஜி...
அன்புடன்
ஆரூரன்

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி ராதாகிருஷ்ணன்.

ஹேமா said...

ஆரூரன்,அழகான வார்த்தைகள் சேர்த்திருக்கிறீங்க.அவங்க பாத்தாலே காதல் வந்திடும்.

Anonymous said...

நல்லாத்தான் எழுதியிருக்கீங்க. ஆனா அவங்க ஏன் பறந்து போனாங்க.

SUMAZLA/சுமஜ்லா said...

வார்த்தைகள் மிகவும் அழகு!

ஆரூரன் விசுவநாதன் said...

"அழகான வார்த்தைகள் சேர்த்திருக்கிறீங்க.அவங்க பாத்தாலே காதல் வந்திடும்."


அதெல்லாம் வந்திச்சுங்க...பிரச்சனையே...அப்புறம் தானே


நன்றி

அன்புடன்
ஆரூரன்

ஆரூரன் விசுவநாதன் said...

"நல்லாத்தான் எழுதியிருக்கீங்க. ஆனா அவங்க ஏன் பறந்து போனாங்க".


அதுதாங்க எனக்கும் தெரியல்லை.......

நன்றி
அன்புடன் ஆரூரன்.

ஆரூரன் விசுவநாதன் said...

வருகைக்கு நன்றி சுமஜ்லா...


அன்புடன்
ஆரூரன்

வானம்பாடிகள் said...

இப்படியே சொன்னா அழகா இருக்குமே. அசத்துறீங்க.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி வானம்பாடிகள்

அன்புடன்
ஆரூரன்