Thursday, September 10, 2009

BECAUSE I AM A GIRL........ஏனெனில்………நான் ஒரு பெண்.சமீபத்திலே நடந்த உலக நாடுகளின் ஆட்சியர்கள் மாநாடு குறித்த பதிவு ஒன்றை படிக்க முடிந்தது.   இன்றைய உலகை உலுக்கி வரும் பல்வேறு பிரச்சனைகளையும், அவற்றை தீர்க்கும் வழிமுறைகளையும் பல தலைவர்களும் பேசியதாகவும், அதன் முடிவில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் அந்தச் செய்தி மடல் சொன்னது.


வருமையும், ஏழ்மையும், பட்டினிச்சாவும், சுற்றுச்சூழல் மாசுபடுதலையும், பெண்களுக்கெதிரான கொடுமைகளையும், உடனடியாக ஒழிக்கப்படவேண்டும். என்பது தான் அந்த செய்தி மடலின் துவக்க வரிகள்.


தினம் தினம் வரும் பல்வேறு பத்திரிக்கைச் செய்தியைப் போன்ற ஒரு  சாதாரண செய்திதான் என்றாலும்,  உலகளாவிய பிரச்சனைகளில் ஒன்றாக இந்த பெண்களுக்கெதிரான வன்முறைகள் இடம்பெற்றது கொஞ்சம் வியப்பையும், வலியையும் கொடுத்தது, உண்மை.


பாலினம், மற்றும் வயது என்ற இரு காரணிகளால் பெண் தனிமைப்படுத்தப்படுகிறாள். வளர்ந்த சமூகத்திலும், மேல்தட்டு வர்க்கங்களில் கூட இந்த வித்தியாசத்தை பார்க்கமுடிகிறது.  பொதுவாக,  பெற்றோர், பெண் குழந்தைகளின் மீது அதிகம் பாசம் காட்டுவது நமக்கு  வெளிப்படையாக தெரிந்தாலும்,  ஆண் குழந்தைகளோடு, ஒப்பீடு செய்யப்படும் போது,   அவள் தோற்றுத்தான் போகிறாள்.


ஒரு பெண் தன் குடும்பத்தாரால் சீராட்டப்பட்டாலும், பாராட்டப்பட்டாலும்,  ஏன் இன்னும், சில வீடுகளில் செல்வத்தின் சின்னமாக  பூசிக்க பட்டாலும்,  அந்த குடும்பத்தின் ஆண் குழந்தைகளோடு  ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது இவள் இரண்டாம் பட்சம் தான். இவளுக்கு கிடைப்பதெல்லாம்   எஞ்சியிருக்கும்  மீத எச்சம் தான்.


பெண் என்பவள், ஒரு தெய்வம், எதையும் தாங்குபவள், விட்டுக் கொடுப்பவள், சமூகநீதி காப்பவள், குடும்பத்தின் அச்சாணி, ஆணிவேர் இப்படி எதாவதொரு பொய்யைச் சொல்லி அவளை தொடர்ந்து அடக்கிவைத்துக் கொண்டுதானிருக்கிறது இந்த சமூகம்.
  

சமீபத்தில் வெளிவந்த “ பெண்குழந்தைகளின்நிலையும், வளர்ந்த இந்தியசமுதாயமும்” என்ற கட்டுரை தந்த சில  தகவல்கள்.


1.பலநேரங்களில் பெண் குழந்தைகளுக்கு போதிய அளவு உணவு அளிக்கப்படுவதில்லை. அவளின் உணவுத்தேவைகள்  கூட இரண்டாம் பட்சமாகத்தான் கவனிக்கப்படுகின்றன.

2. கல்வி கூட பல நேரங்களில், பெரும் போராட்டங்களுக்குப் பிறகுதான் சாத்தியமாகின்றது.  உயர்கல்வியைப் பொருத்தவரை ஆண் குழந்தைகளின் தேவை தீர்க்கப்பட்ட பிறகுதான் இங்கு பெண் கல்வி பற்றி யோசிக்கப்படுகிறது.

3.மதத்தின் பெயராலும், சமூக, மற்றும் குடும்ப நலன் எனும் பெயராலும்,  ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டதிட்டங்களும் பெண்ணைகளை ஒடுக்கும் நோக்கத்திலேயே கட்டமைக்கப்பட்டுள்ளன.

4.வன்முறையால் பதிக்கப்படுவதில், பெண்ணினம் உலகளாவிய அளவில் முதலிடம் பெற்றிருக்கிறது.  பெண் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறைகள் அளவிட முடியா.
தன் வாழ்நாளில், நெருங்கிய உறவுகளால், வீடுகளில், பணியிடங்களில்,பள்ளிகளில், ஏன் பஸ்களில் கூட இவர்கள் நிம்மதியாக இருக்கமுடிவதில்லல.


ஒவ்வொரு ஆண்டும்,  பெண்களின்  பிரச்சனைகள் உலகத்தலைவர்களால் சுட்டிக்காட்டப்பட்டு, அதற்கெதிரான விழிப்புணர்வும், தீர்வு குறித்தும் பேசப்படுகின்றன. உடனடியாக தீர்க்கப்படவேண்டிய ஒரு பிரச்சனை குறித்து இந்த ஆய்வறிக்கை பேசுகிறது. அதன்படி   “IN THE SHADOW OF WAR” (http://plancanada.ca/downloads/biaag/BecauseIamaGirl2008Report.pdf)  இந்த ஆண்டு, போர்களுக்கும், சண்டைகளுக்கும் நடுவில் வளரும் இளம் பெண்கள் மறும் பெண் குழந்தைகளின் வாழ்வு பற்றி பேசியிருக்கிறது……


பெண் குழந்தைகளுக்கெதிரான பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு கனடா அரசு பல புதிய உத்திகளை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது. இதற்கென.

          Because…….I am Girl

 என்ற ஒரு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.  பெண்குழந்தைகளின் வாழ்விலும், வசந்தத்திலும் பங்கு கொள்ளவேண்டுமென்று உலக மக்கள் அனைவரையும் அது வரவேற்கிறது.
பெண்கள் முன்னேற்றத்தை பற்றியும், அவர்களில் வாழ்வாதர பிரச்சனைகளை பற்றி குரல் கொடுக்கமுன்வரும் அனைவரையும் கனடா அரசு வரவேற்கிறது,  பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசும் நல்ல பேச்சாளார்களை பதிவுசெய்து கொண்டு, அவர்களை பேச வாய்ப்பளிக்கிறது.
  

பெண் குழந்தைகள், பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்படுவது இன்று சாதாரணமான ஒன்றாகிவிட்டது.  ஒன்றிரண்டு வெளியே வந்தாலும் நமக்கு தெரியாமல் போவது ஏராளம்.
மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் என்பதுபோல், இந்தக் குழந்தைகள் இதை சொல்லவும் முடியாமல், தடுக்கவும் முடியாமல்,  பல ஆண்டுகள், ஒவ்வொரு நாளையும் வலியோடும் வேதனையோடும் தாண்டிசெல்வது  வேதனையின் உச்சகட்டம்.


இங்கே பிரச்சனைகள் அலசுவதும், அதற்காக கண்ணீர் விடுவதும் மட்டும் போதாது.  இங்கே பேசப்படும் பிரச்சனைகளுக்கு ஒரு சிறு தீர்வாவது காணப்பட வேண்டும்.   ஒரு வலியை உணர்கிறோம், அதைவிட இன்னும் கொஞ்சம் அதிக வேறுவலி வரும்போது பழைய வலி மறைந்துவிடும் என்பது வலி பற்றிய ஆய்வியலார் கண்டுபிடிப்பு.-அப்படி நம்மால் இருக்கமுடிவதில்லை.


இந்த பிரச்சனை உங்களுக்கு ஒரு வலியை கொடுத்தது உண்மையென்றால்,  நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.  


உங்களின் அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண் குழந்தைகளோடு முடிந்தவரை அன்போடு பேசுங்கள்.  அவர்களில் வலிகளுக்கு நாம் மருந்தளிக்க முடியும் என்பதை புரியவவயுங்கள்.  அவர்களின் பிரச்சனைகளின் தீவிரத்தை புரிந்து கொள்ள முயன்று உங்களாலான உதவிகள் செய்யுங்கள்

பிரச்சனைகளை தீர்க்கும் வழிகளை சொல்லிக்கொடுங்கள். சுய பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்துங்கள்.


ஆண்களை விட பெண்கள் இதைச் சரியாக செய்யமுடியுமென்று நம்புகிறேன். உங்கள் வீட்டிற்கருகிலோ, அலுவலகத்திலோ, அல்லது வேரெங்கோ செல்லுமிடங்களிலெல்லாம், பார்க்கும் பெண் குழந்தைகளோடு, அன்பாய், ஆதரவாய் பேசுங்கள்.  உங்களிடம் சொன்னால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். 


வக்கிரம் பிடித்த இந்தச் சமூகத்தினால் குத்தி, கிழித்து, குதறப்பட்ட அந்த பிஞ்சு உள்ளங்களுக்கு  நீங்கள் மருந்தாகுங்களேன்.


20 comments :

சின்ன அம்மிணி said...

இன்றைக்கும் பல ஆண்குழந்தைகளுக்கு சாதாரணமாகக்கிடைக்கும் சில பெண் குழந்தைகளுக்கு சலுகைகளாத்தான் தரப்படுகின்றன.

ஓட்டு போட்டாச்சு.

மாதவராஜ் said...

இதுபோன்ற உண்மைகளை திரும்ப திரும்பச் சொல்ல வேண்டியிருக்கிறது. தேவையான பதிவு.

கதிர் - ஈரோடு said...

//உங்களின் அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண் குழந்தைகளோடு முடிந்தவரை அன்போடு பேசுங்கள். //

அருமையான வரிகள்

சிறந்தொரு இடுகை

வாழ்த்துகள் ஆரூரன்

ஆரூரன் விசுவநாதன் said...

//நன்றி கதிர்.....//

//அன்பிற்கு நன்றி சகோதரர். மாதவரஜ்.//

//சின்ன அம்மினி//

இன்றைக்கும் பல ஆண்குழந்தைகளுக்கு சாதாரணமாகக்கிடைக்கும் சில பெண் குழந்தைகளுக்கு சலுகைகளாத்தான் தரப்படுகின்றன.

சரியாகச் சொன்னீர்கள்.

ஹேமா said...

ஆரூரன்,என்னதான் உலகம் நாகரீகத்தாலும்,விஞ்ஞான வளர்ச்சியாலும் முன்னேறிக்கொண்டு இருந்தாலும் பெண்களின் விஷயத்தில் மந்தநிலைதான்.சமூகத்தின் மனதில் அது ஆண்டாண்டு காலமாக பதியப்பட்ட ஒரு பதியம்.அவர்களாக் களைந்தாலே ஒழிய பெண்களின் நிலைம அதேதான்.

ஆரூரன் விசுவநாதன் said...

//ஹேமா//


அடுத்த தலைமுறைக்கும் இதை எடுத்துச்செல்லும் வகையில் இங்கே ஒரு ஆண் வளர்க்கப் படுகிறான் என்பது தான் சோகம்.


இந்த நிலை தொடரக்கூடாது என்பது என் ஆசை.

"நெஞ்சுக்கு நீதியும், தோளுக்கு வாளும்"

போன்ற வரிகளெல்லாம் ஓசை எழுப்பும் வார்தைகளாக போய்விட்டன.

அன்புடன்
ஆரூரன்

முருக.கவி said...

பெண்களை மதிப்பதாலும், உணர்வுகளைப் புரிந்து கொள்வதனாலும் மட்டுமே இம்மாற்றம் நிகழ முடியும்! பெண்குழந்தைகளுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். உணர்வுப்பூர்வமான கட்டுரை.
வாழ்த்துகள்!

க.பாலாஜி said...

//ஆண் குழந்தைகளோடு, ஒப்பீடு செய்யப்படும் போது, அவள் தோற்றுத்தான் போகிறாள்.//

காரணம் ஆணாதிக்கம்....இன்றும் பெண்களை ஒரு போகப்பொருளாகவே நினைக்கும் நிலை கிராமப்புரங்களில் இருக்கிறது. நகர்புறங்கள் இவ்விஷயத்தில் பரவாயில்லை.

நல்ல தேவையானதொரு சிந்தனைப்பகிர்வு...இந்தச்சமுதாயம் அவளின் முக்கியத்துவம் உணரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை நம்புவோமாக...

ஆரூரன் விசுவநாதன் said...

முருக.கவி

//பெண்குழந்தைகளுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். உணர்வுப்பூர்வமான கட்டுரை//.

நன்றி.

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாஜி...

//நல்ல தேவையானதொரு சிந்தனைப்பகிர்வு...இந்தச்சமுதாயம் அவளின் முக்கியத்துவம் உணரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை நம்புவோமாக...//


என்ன சீரியஸ் அயிட்டீங்க பாலாஜி. பதிவோட விளைவா? வேளைப் பளுவா?

அன்புடன்
ஆரூரன்

Deepa (#07420021555503028936) said...

அற்புதமான பதிவு. நன்றி.

ஆரூரன் விசுவநாதன் said...

வருகைக்கு நன்றி தீபா

அன்புடன்
ஆரூரன்

Mãstän said...

நல்ல பதிவு. தேவையானது கூட.

பழமைபேசி said...

சிறப்பான இடுகை.... வேளைப்பளு கூடிடுச்சு...அதான் தாமதம்...

இன்னும் நிறைய எதிர்ப்பார்க்குறோம்!

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி.....மஸ்தான்....

ஆரூரன் விசுவநாதன் said...

இன்னும் நிறையவா.........அவ்வ்வ்வ்.....
இப்பவே கண்ணைக் கட்டுதே......


நன்றி

அன்புடன்
ஆரூரன்

க. தங்கமணி பிரபு said...

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htmஅல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htmஎன்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!

ஆரூரன் விசுவநாதன் said...

கண்டிப்பாக செய்கிறேன்
நன்றி
அன்புடன்
ஆரூரன்

வானம்பாடிகள் said...

அருமையான பதிவும் கருத்துகளும். பகிர்ந்தமைக்கு நன்றி

ஆரூரன் விசுவநாதன் said...

வானம்பாடிகள்

அன்பிற்கு நன்றி
அன்புடன்
ஆரூரன்