Friday, March 13, 2009

மாற்றம் என்ன கடைச்சரக்கா?

மாற்றம் என்ன கடைச்சரக்கா?

மாற்றம் என்னும் மந்திர வார்த்தையை
சொல்லுவதால் மட்டுமே மாற்றம் வந்துவிடாது. மலேசிய வரலாறு ஒரு எடுத்துக் காட்டுத்தான். ஒரு வரலாற்றைப் பின் பற்றிச் செல்லமுடியாது. நாட்டு மக்களின் சமூக பொருளாதார நிலைமை, பிரச்சனையின் தாக்கம், சம்பந்தப்பட்ட பிரச்சனையில் மக்களின் பாதிப்பின் அளவீடு, போன்ற விசயங்கள் தான் முடிவு செய்கின்றன. ருசிய புரட்சியின் அடிப்படையில் அதற்குப் பிறகு அதுபோன்ற ஒரு பெரிய வெற்றியை எட்டவில்லை என்பது உண்மை. இந்திய சுதந்திரப் போராட்டத்தை பின் பற்றி தந்தை செல்வா, பொன்னம்பலம், தொண்டமான் ஆகியோரின் போராட்டம் குறிப்பிடத்தகுந்த வெற்றியை கொடுக்கவில்லை.


தனிமனிதன் எப்பொதெல்லாம் தனக்கெதிராகவோ, தன் குடும்பதிற்கெதிராகவோ, பாதிப்பு நடைபெறும் போதுதான் தான் கூட்டத்தோடு வாழவேண்டிய அவசியத்தை உணர்கிறான். தனித்தியங்குதல் தத்துவம் தன்னைவிட வலிமையானவனைப் பார்த்ததும் தவிடுபொடியாகிறது. 


மலேசிய நாட்டைப் பொறுத்தவரை, நம் தமிழர்கள் இரண்டாந்தர குடிகள் அல்ல, மூன்றாந்தர குடிகள்தான். பல ஆண்டுகளுக்கு முன்னாள் புலம் பெயர்ந்த அவர்களின் கடின உழைப்பு அவர்களை ஒரளவு வளமான நிலையில் வைத்திருப்பது என்னவோ உண்மைதான். 

ஆனால் ஒருவிதமான இருக்க நிலையிலேயே வாழ்ந்ந்துவருவதென்னவோ நிஜம். அனைவரது உள்ளதிலும் ஒருவித பய உணர்ச்சி இருப்பதை பார்க்க முடிந்தது. அதோடுமட்டுமன்றி, பினாங்கு, மலாக்கா பகுதிகளுக்கு இந்த போராட்டம் பரவ வில்லை. சிலாங்கூர், மாநிலத்தில் தான் இதன் தாக்கம் அதிகமாக இருந்ததை காணமுடிந்தது. 

 நண்பர் திரு. மணியரசு அவர்களின் இல்லத்தில் தங்கிருந்தபோது, மலேசிய நாட்டின் பல பகுதிகளிலிருந்த மக்களோடு கலந்துரையாட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். நாள்தோரும் நாங்கள் இருவரும் பலதரப்பு மக்களையும் சென்று சந்தித்து அவர்களின் வாழ்க்கைமுறைகளையும், சமூக நிலைப்பாட்டையும் அறிந்தோம். அங்கீகரிக்கப்பட்ட இனமாக இருந்தாலும் அவர்கள் சீனர்களையும், மலாய் மக்களையும் ஒட்டியே வாழ முடிகிறது.

பல்வேறு சிறு சிறு சமய அமைப்புகள், தமிழ் கலாசாரப் பள்ளிகள், இசைப் பள்ளிகளை பார்க்க முடிந்தது. ஒவ்வொரு வாரமும் விடுமுறைநாளில் நண்பர் மணியரசு அவர்கள் வீட்டில் அருகிலிருக்கும் தமிழ்க் குழந்தைகளுக்கு தேவாரப் பாடல்களை தகுந்த ஆசிரியரைக் கொண்டு இலவசமாக சொல்லித்தருவார். பல்வேறு சமய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் சைவ சமயத்தைப் பற்றியும், தேவார, திருவாசக பாடல்களைப் பாடுவதும், சொற்பொழிவுகள் ஆற்றுவதையும் தத்துவ விசாரங்களில் ஈடுபடுவதும் எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது. தமிழின் பால் அவர்கள் காட்டிய அக்கரையும், காதலும் என்னை வியப்படைய வைத்தது.


ஆனால் இதன் பின்னனி மெதுவாகத்தான் புரிய ஆரம்பித்தது.


பல்வேறு சாதி, மற்றும், பொருளாதார பிரிவுகளில் உள்ள தமிழர்கள், தங்களது வாழ்வாதார சின்னமாக மதத்தை, மொழியை கொண்டிருக்கின்றனர். மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், மொழியின் பெயரால் ஒன்றினைய முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். பல்வேறு ஆதிக்க சக்திகளின் நெருக்கடியினால் பயந்துள்ள இவர்கள் தன் இனத்து மக்களை அடையாளங்கானவும் ஒன்றினையவும் சமயத்தையும், மொழியை பயன் படுத்துகிறார்கள்.

பல தமிழர்களின் முகவரி அட்டைகளைப் பார்த்து அவர்களின் இனத்தைச் சொல்லமுடியாது. லட்சுமணன் என்பவர் தன் பெயரை எல். மணன் என்றும் லோகநாதன் தன் பெயரை லொகன் என்றும் எழுதுவதை பார்க்கமுடியும். வெளியிடங்களில் தன் இனத்தை பெயர்கொண்டு அறிவதை அவர்கள் விரும்புவதில்லை. அந்த அளவிற்கு பய உணர்சி அவர்களுக்கு உண்டு. 

தொழில் ரீதியாக சீனர்களுடன் போட்டியிட அவர்களுக்கு அது தேவைப் படுகிறது. மலேசிய போராட்டம், அந்த நாட்டின் அரசிற்கு எதிரானதல்ல, ஆனால் அவர்களின் உரிமைக்காகத்தான் என்று அதன் தலைவர்கள் சொல்லுகிறார்கள். அவர்களின் அறிக்கைகளில், தாங்கள் மலேசிய குடிகள் என்பதையும், அதன் இறையாண்மையையும், பிரதமரையும் ஏற்றுக் கொள்வதாகவும் கூறியிருப்பது கவனத்தில் கொள்ளவேண்டியதாகும்.

ம இ கா வும் மலேசிய தமிழர்களை புதைகுழியில் தள்ளிய டத்தோ. சாமிவேலுவின் வார்த்தைகளை நம்பி தன் கடைசிக் காசினையும், அடகு வைத்த தமிழர்களின் கொதிப்பின் வெளிப்பாடுதான் இந்த்ராப் தேர்தல் வெற்றி. தமிழர்களின் நலவாழ்வு தூதன் ம இ கா அல்ல என்பதை ஆட்சியர்களுக்கு உணர்த்தவே மக்கள் அக்கட்சியைய் தேர்தலில் தோற்கடித்தனர்.


இங்கே தமிழகத்தில் அப்படி ஒரு பாதிப்பு தமிழனிடம் ஏற்படவில்லை. ஈழத்திலே நடைபெறும் இனப் படுகொலை நம்மை பெரிதாக பாதிக்கவில்லை. முல்லைப்பெரியார் பிரச்சனையும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டமோ, காவிரி நதி நீர் பிரச்சனையோ, இங்கே எந்த புரட்சியையும் ஏற்படுத்த வில்லை. பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கவில்லை. ராமேஸ்வரம் மீனவர்களின் இழப்புகளும் கூட பெரிதாக மக்களிடையே செல்லவில்லை. ஒட்டுமொத்த இனத்தின் எதிர்ப்பை ஆளும் வர்க்கம் பெறவில்லை. எனவே இங்கே மாற்றம் கொண்டுவருவது எளிதல்ல


. ஆளும் வர்க்கமும், முன்னாள் ஆண்ட வர்க்கங்களும் தங்கள் கடைசி நேர தகிடுதத்தங்களின் மூலம் மக்கள் மனதை மாற்ற முயல்வார்கள். மொத்த வாக்காளார்களிள், முடிவு செய்யாத, எந்த அரசியல் கட்சியையும் சாராதாவர்கள் தான் வெற்றியை முடிவு செய்பவர்களாக இருக்கின்றனர். தி.மு.க, அதிமுக, ஆகியோரின் ஓட்டு வங்கிகளில் பெரும் மாற்றம் இல்லை. யாருக்கு ஒட்டு இடுவது என்று முடிவுசெய்யாத, திருவாளர் பொதுஜனம் தான் வெற்றியைய் முடிவு செய்கிறார். இரண்டாவதாக எண் விளையாட்டு, யார் யாருடன் கூட்டு சேருகிறார்கள் என்பதை பொறுத்து வெற்றி நிச்சயிக்கப் படுகிறது.


மாற்றம் வரவேண்டும் என்பது எல்லோருடைய விருப்பமாக இருந்தாலும், அதை மக்களிடம் எடுத்துச் செல்லும் பணி கடினமானது. அதற்கு தன்னிகரில்லாத தலைமையும், தன்னார்வ தொண்டர்களும் தேவை. மாணவர்கள், வழக்கறிந்ர்கள், ஊடகவியலாளர்கள் முன்னின்று, சிறு வியாபாரிகள், மற்றும் இந்த அரசின், மின் தட்டுப்பாடு, பொருளாதார தேக்கம், உயர்கல்விக் கட்டணங்கள், விலைவாசி உயர்வு போன்ற வேறு காரணங்களுக்காக வெறுப்படைந்துள்ள நடுத்தர வர்கத்தினரையும், ஒன்று திரட்டுவதன் மூலம் மட்டுமே இது சாத்தியம். ஆதிக்கசமூகங்கள் தங்களுக்கு முன் இருக்கும் எதிர்ப்புக்களை பண பலம், பதவி ஆகியவற்றால் அடக்க முயல்வது இயல்பே. இப்படியான ஒரு பயத்தை ஏற்படுத்த முயல்வதன் முதல் படி தான் சீமான், கொளத்தூர் மணி, ஆகியோர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டபடியான நடவடிக்கைகள்.

நாட்கள் குறைவு, விரைவாக செயல்படுவது அவசியம்.


1 comment :

மாதவராஜ் said...

தகவல்கள் பல தெரிந்துகொள்ள வேண்டியதாக இருந்தன. பகிர்வுக்கு நன்றி. மக்களைத் திரட்டுவதற்கு இடையறாத, சலிப்படையாத முயற்சிகள் வேண்டியதிருக்கிறது. மக்களின் பொதுப்புத்தியில் ஒரு பெரும் நிலநடுக்கத்தையே உருவாக்க வேண்டியிருக்கிறது.