யோசிச்சு ஊரெல்லாம் சுத்தி சுத்தி வந்து,
கண்ணுக்கு பட்டதெல்லாம் போட்ட புடிச்சி
வச்சனுங்ணா. நம்ம மக்கள் தான் போட்டா
தெங்கன்னு........ வேற கேட்டு
அன்புத் தொல்லை குடுக்கறாங்களே.........
சரி விசயத்துகு வருவோம்..... நம்ம கதிருக்கு
வாழ்த்து பதிவெல்லாம் போட்டோம்,
(டெம்போலாம் வச்சுகடத்துனோங்கற மாதர)
மனுசன் கண்டுக்காம "குட்நைட்ன்னு"
சொல்லிபோட்டு போயிட்டாருங்ணா.
நானும் கொஞ்சம் சாட மாடயா கேட்டுப்பார்த்தா.
...ம்ஹும் ஒன்னும் தேறலைங்ணா.......
அப்பறம் தனியா கட பூட்ற நேரத்துல கட்டிங்
தேடி அலைஞ்சு ....ஒன்னும் நடக்கலிங்ணா....
நொம்ப கலச்சு வூட்டுக் போய் நல்லா
அசந்து போய் தூங்கி போட்டனுங்.
திடீர்னு பக்கத்துல இருந்த கேமராவுக்குள்ளார
இருந்து டொக்..டொக்...னு சத்தம்.....
பயந்து போய் திறந்தா.......காலம்பற எடுத்த
போட்ட வுல இருந்த பெருந் தலையெல்லாம்
வெளிய வந்து பேச ஆரம்பிச்சிட்டாங்ணா....
இருக்கறவுங்க பேசறதையே கேக்கமுடியல
இன்னும் செத்துப் போனவுங்க பேசறத.....
தாரு கேக்கறதுங்கறீங்களா.....சரி..... சரி....
அவிங்க போட்டாவையும், பேசினதையும்
பதிவாபோட்டுட்டனுங்ணா.... அதுல பாருங்க
தாரு தென்னா பேசுனாங்கன்னு
மறந்து போச்சுங்ணா....
போட்டாவையும் பேசுனதையும் பதிவா
போடறனுங்ணா.....தாரு பேசிருப்பாங்கன்னு
நீங்களே முடிவு பண்டிக்கோங்ணா....


நாலு
பக்கம் தட்டி வச்சு
நடுவுலதான்
என்ன வச்சு
காக்கா,குருவிக்
காக்கிப்புட்டான் –கக்கூஸா
கருமம்,
…. வருசத்துக்கு
ஒரு முறைதான் சர்வீஸாம்.
சும்மா
இருந்த என்னவச்சு அரசியல்-நான்
ஆரியனா?
திராவிடனா? ஆய்வு செய்யுது அறிவியல்
சாதி
ஒழிப்பும், சமத்துவமும் மேடையில்
சதை
வணிகம்,சாராயம், -வாழ்வியல்.
தல, தல
ன்னு திரிஞ்சதெல்லாம் காணலை
தறுதலைகள்
மட்டும் இப்போ கட்சியில…
கட்டுனவ
என்ன ஆனா தெரியல
எட்டாவதா
வச்சிருந்தவ…….. ஆட்சியில
வாய்
கிழிய வசனம் பேசி
வழி
நெடுக வசூல் பண்ணி
சேத்துக்
கிட்டான் சொத்து,நாடு முழுசும்
சனம்
சோத்துக்கிங்கே சாகுதடா தெனமும்.
கருப்புச்
சட்ட போட்டுக் கரான்
மஞ்ச
துண்டும் போத்திக் கரான்
நாத்திக
கர்ஜனை.-நடுநடுவே
நவக்கிரகத்துக்கும்
அர்ச்சனை.
வருசத்துக்கு
ஒருதரம்
காருவண்டி
பறக்குது
திருவிழாவில்
தொலைஞ்ச கணக்கா
ஊரு
சனம் முழிக்குது.
செத்த
பின்னும் சிலைய வச்சான்
எடுத்துபுட்டான்
கைய ஒருத்தன் ராவுல-இனி
எத்தன
தல உருளப்போகுமோ நாட்டுல....
ஒருத்தன்
கைய ஒடைக்கிறான்
ஒருத்தன்
தலைய உடைக்கறான்
காக்கிச்
சட்டத் திருடனும்
காவலுக்கும்
நிக்கிறான்.