Tuesday, November 10, 2009

யாராச்சும் சொல்லுங்களேன்..........ப்ளீஸ்

இன்று அதிகாலையில் விழித்து விட்டேன். வீட்டின் முன் அறையில் இருக்கும் கணிணியை உயிர்ப்பித்து படித்துக் கொண்டிருந்தேன். நேரம் போனதை அறியவில்லை.

வெளியே ஏதோ சத்தம் கேட்டது………..

என் இரண்டாவது வாண்டு உள்ளே நுழைந்தான்……….

நான்: என்னடா……..பண்ணையக்காரி சத்தம் கேக்குது….என்ன குறும்பு செஞ்ச……………?

அவன்: ஹூம்……….உங்களத்தான் திட்டிகிட்டிருக்கறாங்க……… ஏம்பா? எத்தன தடவ சொன்னாலும் புரியாதா உங்களுக்கு? குட்பாயா நடந்துக்க….மாட்டீங்கறீங்க…………..
இருங்க…இருங்க…..உங்கம்மாகிட்டயே சொல்லறன்………….

நான் : ஏய்….உத வாங்கப் போற…….

அவன்: ம்ம்ம்ம்…..ஏங்கிட்டத்தான் உங்க வீரமெல்லாம்……(இது எப்படி இவனுக்குத் தெரியும்) போங்க……. போங்க..…. மேடம் கூப்படறாங்க…

சமயலறைக்குள் நுழையும் போதே அர்ச்சனை காதில் கேட்கத் தொடங்கியது.

ஒரு பொறுப்பும் இல்ல….இங்க நான் ஒருத்தி காலைல இருந்து தனியா அல்லாடறன்……வேலைக்காரி லீவு………..கூடமாட ஒத்தாச பண்ணாம காலங்கார்த்தால கம்ப்யூட்டர் முன்னால போய் உக்காந்திட்டா…….. என்னதான் செய்யறது……….. ?

இல்லம்மா…….வந்திட்டன்ல…..என்ன செய்யனும்……. .சொல்லு என்று சொல்லி முடிக்குமுன்……

இந்த கத்திரிக்காயை சின்ன சின்னதா வெட்டிக்கொடுங்க…….

நான் சரி என்று ஒரு பாத்திரத்தை கையிலெடுக்க……

பெரிய பாத்திரத்தை எடுத்து காயை நல்லா கழுவீட்டு வெட்டுங்க……

தண்ணீர் பிடித்து, “அஞ்சலி கட்டரை எடுத்து டேபிளின் மேல் வைத்து வெட்டத் தொடங்குமுன்…..

ரொம்ப பெரிசு பெருசா வெட்டாதீங்க……. பொடியா வெட்டுங்க

சரி..........

காம்பை வெட்டிட்டு அப்பறம் வெட்டுங்க……

சரி என்று காம்புகளை வெட்டிவிட்டு காய்களை கழுவிக் கொண்டிருந்த போது……….

என்ன பண்ணிகிட்டிருக்கிறீங்க ……?, எல்லாவற்றையும் தன் பக்கம் எடுத்து வைத்து அவளே வெட்டத் தொடங்கியவள்……

மச மசன்னு நின்னுகிட்டிருக்காதீங்க……. பசங்களுக்கு லஞ்ச்க்கு கொஞ்சம் சப்பாத்தி தேச்சுக் குடுங்க…

சரி என்று , நானும் பிசைந்து வைத்திருந்த கோதுமை மாவைக், கையில் எடுத்தவுடன்.

வரமாவு போட்டு தேயுங்க…..இல்லைன்னா தேய்க்க வராது

சரி என்று தலையாட்டிவிட்டு, மாவையும் அதைத் தேய்க்கும் பலகை, கட்டையை கையில் எடுத்து அதை துடைக்க ஒரு துணியையும் கையிலெடுத்த நேரத்தில்….

பலகைய தொடச்சிட்டு தேயுங்க…….குப்பையிருக்கும்................

சரி என்று சொல்லி, துடைத்துவிட்டு, மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டத்தொடங்குய போது ……

சின்ன சின்னதா உருட்டுங்க……..அப்பறம் தேய்க்க முடியாது.

சரி என்று தலையை மட்டும் ஆட்டி விட்டு சிறிதாக உருட்ட தொடங்கியவுடன்….

என்ன பண்ணிகிட்டிருக்கிறீங்க……தள்ளுங்க……..என்றபடி என்னிடமிருந்த அனைத்தையும் தான் வாங்கி அவளே சப்பாத்தி தேய்க்கத் தொடங்கியவள் என்னைப் பார்த்து,

அரிசி ஊற வைத்திருக்கிறேன். கலைஞ்சு, குக்கர்ல போட்டு, நாலு டம்ளர் தண்ணி ஊத்தி மூடி வையுங்க என்றாள்.

அரிசிப் பாத்திரத்தை எடுக்குமுன்

பெரிய பாத்திரத்தை எடுத்து, தண்ணி நிறைய ஊத்தி கழுவுங்க….

சரி என்று பெரிய பாத்திரத்தை எடுத்து தண்ணீர் பிடித்து அரிசியை அதில் கொட்டியவுடன்………

என்ன பண்ணிகிட்டிருக்கிறீங்க……..போங்க போய் பசங்க ரெடியாயிட்டாங்களான்னு பாருங்க………

ஹாலில் தயாராக நின்று கொண்டிருந்த வாண்டுகள் என்னைப் பார்த்தவுடன் ஒருவொருக் கொருவர் பார்த்துக் கொண்டு கண் சிமிட்டி சிரித்தனர்.

என்னடா……..ரெடியா?…….இங்க நின்னு சிரிச்சிகிட்டிருக்கிறீங்க…….

ஒண்ணுமில்லப்பா என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தனர்…….

ம்ம்ம்ம்….என் பொழப்பு உங்களுக்கு சிரிப்பா இருக்கு என்று நினைத்துக் கொண்டிருந்த போது பின்னிருந்து குரல்……….

என்ன பண்ணிகிட்டிருக்கிறீங்க……டிரைவர் லீவு இன்னைக்கு……நீங்க தான் கொண்டு போய் ஸ்கூலில் விட்டிட்டு வரனும். காரை எடுத்து வெளில வையுங்க………….

கார் சாவியை கையிலெடுத்துத் திரும்புகையில்,

பார்த்து…….. ரொம்ப ரோட்டு ஓரத்தில நிறுத்தி விடாதீங்க……..
அப்பறம் கதவ திறந்து ஏற முடியாது.

சரி என்று சொல்லிவிட்டு காரை ஸ்டார்ட் செய்து காம்பவுண்டுக்கு வெளியே நிறுத்தி விட்டு மெயின் கேட்டை இழுத்து சாத்தத் தொடங்கு முன்….

மீண்டும் என்ன பண்ணிகிட்டிருக்கிறீங்க……….

கதவ நல்லா சாத்திட்டு நீங்க ரெடியாகுங்க………நானே பசங்கள விட்டுட்டு அப்படியே “ஐ ப்ரோ’ ஷேப் பண்ணிட்டு வந்தர்ரேன்….. என்று சொல்லிக் கொண்டே பறந்தாள்.

எனக்குப் புரியவில்லை……என்னை உதவிக்கு கூப்பிட்டாள்….ஆனால் எல்லா வேலைகளையும் அவளே செய்தாள்……..பின் எதற்கு என்னைக் கூப்பிட்டாள்……..

ஏன்? எதற்காக? இவள் இப்படி நடந்துகொள்கிறாள்? இவளுக்கு என்ன ஆயிற்று? வரட்டும் கேட்டு விட வேண்டியதுதான்…..என்று முடிவு செய்து வீட்டிற்குள் சென்றபோது…….. சமையலறையில் ஏதோ சத்தம்……எட்டிப் பார்த்த போது………….

சமையல் மேடைக்கு மேலிருந்த சாமி படத்திற்கு விளக்கேற்றி, பூ வைத்து ஏதோ பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்த அம்மா, அப்பாவிடம்…

குடிக்க சுடுதண்ணீர் கெட்டிலில் தண்ணீர் ஊற்றி ஸ்விட்ச் ஆன் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு மீண்டும் பாடலை தொடர்ந்தாள்.

அப்பா கெட்டிலில் தண்ணீர் ஊற்றத் தொடங்கியதும்,

என் செய்யறீங்க……..முக்கால் வாசி தண்ணி ஊத்துங்க போதும்….. என்று சொல்லிவிட்டு மீண்டும் ஏதோ முணுமுணுக்கத் தொடங்கினாள்

அப்பா சரி என்று சொல்லிவிட்டு தண்ணீர் பிடித்து ஊற்றத்தொடங்குமுன்………..

மூடியை நல்லா மூடி ஸ்விட்ச் போடுங்க……

அப்பா சரி என்று தலையாட்டி விட்டு மூடியை மூடத்தொடங்குமுன்…

என்ன செய்யறீங்க……தள்ளுங்க……. சுடு தண்ணி வைக்கத் தெரியல….. இதுல ஊர் ஊராப் போயி ராமாயணம் வேற….. என்றவாறு அவளே மூடியை மூடி ஸ்விட்சையும் ஆன் செய்தாள்…..

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து அப்பா ஏனோ சிரித்தார். அந்த சிரிப்பு எனக்கு எதையோ அவர் சொல்ல முயல்வதை காட்டியது.

எனக்கு ஒன்று புரிந்தது. இவர்களை புரிந்து கொள்ள முயற்சிப்பதை விட, சரி என்று ஏற்றுக் கொள்வதே சரி. என்று சொல்ல வந்திருப்பாரோ?

ஏன்? எதற்காக? இவள் இப்படி நடந்துகொள்கிறாள்? இவளுக்கு என்ன ஆயிற்று? வரட்டும் கேட்டு விட வேண்டியதுதான்…. என்ற முந்தைய நினைப்பை மறக்கத் தொடங்கினேன்.

ஏன்? ஏன் இப்படி? ஏன் இந்த கொல வெறி என்று இவளைக் கேட்பதைவிட…..உங்களிடம் கேட்பதென்று முடிவு செய்து, இந்த பதிவை இட்டிருக்கின்றேன்……யாராச்சும்  சொல்லுங்களேன்……ப்ளீஸ்

40 comments :

பட்டிக்காட்டான்.. said...

யாராச்சும் தெரிஞ்சா சொல்லிருங்கப்பா..
அண்ணன் கேக்குராரில்ல.. :-)

S.A. நவாஸுதீன் said...

போகப்போக பழகிடும் பாஸ். இதெல்லாம் இல்லேன்னாதான் கேள்வி கேக்கனும்.

S.A. நவாஸுதீன் said...

//வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து அப்பா ஏனோ சிரித்தார். அந்த சிரிப்பு எனக்கு எதையோ அவர் சொல்ல முயல்வதை காட்டியது.//

அப்பாவுக்கே இன்னும் விளக்கம் தெரியலை. நமக்கெங்கே தெரியப் போகுது பாஸ்.

பிரபாகர் said...

உங்க வீட்டிலயுமா?, நல்லாருக்குங்க....

பிரபாகர்.

நாகா said...

ஹா ஹா.. இது எல்லா வீட்டுலயும் நடக்கறது தான் சார். ஃப்ரீயா இருந்தால் அல்லது விருப்பம் இருந்தால் ஒரு தொடர் பதிவு எழுதுங்க, உங்களை கூப்பிட்டுருக்கிறேன்.

T.V.Radhakrishnan said...

:-)))

கதிர் - ஈரோடு said...

அண்ணாச்சி... ரொம்ப...ஸ்லோ நீங்க....

ரொம்பா பையன் உங்க ஒசரத்து வளந்தாச்சி... இன்னுமா...இதுகூட புரியல

அட போங்க போய் மத்யானச் சோத்து ரெடி பண்ணுங்க...

சும்மா இடுகை போட்டுக்கிட்டு

ஹேமா said...

ஆரூரன் இதுக்கு மொக்கைன்னு போட்டிருக்க வேணாம்.இதுதான் வாழ்வியல்.
ரசித்தேன்.என் அப்பாவின் பாடு கண்ணுக்குள் வந்து போனது.

க.பாலாசி said...

//ஒரு பொறுப்பும் இல்ல….இங்க நான் ஒருத்தி காலைல இருந்து தனியா அல்லாடறன்……வேலைக்காரி லீவு………..கூடமாட ஒத்தாச பண்ணாம காலங்கார்த்தால கம்ப்யூட்டர் முன்னால போய் உக்காந்திட்டா…….. என்னதான் செய்யறது……….. ?//

அப்ப உங்கவீட்லையும் ஆரம்பிச்சாச்சா.....ரைட்டு....

நம்மள வேலைவாங்குற மாதிரி பெண்களே எல்லா வேலையையும் செய்திடுறாங்க. நானும் கவனிச்சிருக்கேன். அவங்களுக்கு தேவை ஒரு பேச்சுத்துணையும், ஒத்தாசை செய்யுறதுமாதிரி பாவலாவும்தான்னு நினைக்கிறேன்.

வானம்பாடிகள் said...

உங்கள பார்த்து பசங்க சிரிச்சாங்க ரைட்டு. அப்பாவ பார்த்து நீங்க சிரிக்காம உங்கள பார்த்து அப்பா சிரிச்சாருன்னா, உங்க தங்கமணிய பார்த்து தான் அம்மாவும் அப்புடி மாறிட்டாங்க போல. அட போங்க ஆரூரன் கேள்வி கேக்குற விசயமா இது. எங்கூட்டுல இப்புடி. உங்கூட்டுல எப்புடின்னு தொடர் இடுகையா போட்டு கோத்து வுட்ற மேட்டரு=))

S.A. நவாஸுதீன் said...

வானம்பாடிகள் said...
// அட போங்க ஆரூரன் கேள்வி கேக்குற விசயமா இது. எங்கூட்டுல இப்புடி. உங்கூட்டுல எப்புடின்னு தொடர் இடுகையா போட்டு கோத்து வுட்ற மேட்டரு=))//

பதிவுல மட்டுமில்லாமல் பின்னூட்டத்தில் கூட பட்டைய கெளப்புறீங்களே சார்

ஆரூரன் விசுவநாதன் said...

வாங்க நவாஸ்.........
அனுபவம் பலமா இருக்கும்போல இருக்கு........

சீக்கிரம் கத்துக்க முயற்சி செய்யறன்.

ஆரூரன் விசுவநாதன் said...

வாங்க பட்டிக் காட்டான்.......

நன்றி

ஆரூரன் விசுவநாதன் said...

//பிரபாகர்//


உங்க வீட்டிலேயுமா?

ஆஹா........அங்கயும் அப்படித்தானா?

வெரிகுட்..... துணைக்கு ஆள் கிடைச்சிருச்சு

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி டி.வி.ஆர்

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி நாகா......

எனக்குமட்டும் தான் இப்படின்னு நினைச்சு கிட்டேன்....அட உலகமே இப்படித்தானா?


சரி.....சரி ....மனச தேத்திக்குவோம்

ஆரூரன் விசுவநாதன் said...

சரியாச் சொன்னீங்க கதிர்......

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாசி பெண்களைப் பற்றிய உங்க புரிதல் நல்லா இருக்கு....வாழ்த்துக்கள்

ஆரூரன் விசுவநாதன் said...

இதுக்குத்தான் பாலாண்ணே. வேணுங்கறது......


நல்ல யோசனை.....நீங்களே அத தொடங்கி வையுங்க.....

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி ஹேமா........

காமராஜ் said...

நல்லாருக்கு அரூர்

கபிலன் said...

ரொம்ப நிதர்சனமான உண்மை. அப்படியே பதிவு செஞ்சிருக்கீங்க.
அருமை : )

"Posted by ஆரூரன் விசுவநாதன் at 1:44 PM
Labels: மொக்கை "

இதுக்கு போய் மொக்கைன்னு லேபல் கொடுத்திருக்கீங்களே...Lifestyleனு கொடுக்கணும் : )

கலகலப்ரியா said...

slow slow... ungala seiya solrahtukku namale seithudalaam... oru kathrikkaaya oru mani neramaa cut pannaa enna panrathu... intha aambalaingale ipdiththaan... konjam speeeeeeed kaththukkunga saamingalaa...

கலகலப்ரியா said...

kalakkal pathivu..!

ஆரூரன் விசுவநாதன் said...

சரிங் அம்மிணி.............
சீக்கரம் கத்துக்கரனுங்.......

அப்படியே வேற டிப்பு ஏதாவது இருந்தா குடுங்கம்மிணி.....

ஆரூரன் விசுவநாதன் said...

வாங்க கபிலன்.......

இம்சைதான் life style -ஆ......ரொம்பத்தான் மாறிப் போச்சு உலகம்.....

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி தோழர்.......

Anonymous said...

நல்ல இன்ரஸ்டிங்கா இருந்திச்சு!
ரசிச்சு படிச்சேங்க.

அறிவிலி said...

:)))))))))

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி அனானி

நன்றி அறிவிலி

நசரேயன் said...

அங்கேயும் அப்படித்தானா !!!!!!!!!!!!

கலகலப்ரியா said...

டிப்புதானுங்களே... சொல்லுவோமில்ல... உங்க ஸ்பீடுக்கு... இன்னைக்கு இதுவே ஜாஸ்தி... இது மண்டைல ஏறட்டும் முதல்ல.... அடுத்த மண்டைவலி பதிவில வர்றப்போ... மத்தது டிப்புறோம்.. (ஹெ... யாரு கிட்ட...)

ஆரூரன் விசுவநாதன் said...

வாங்க நாசரேயன்..... எல்லா வீட்டிலேயும் இப்படித்தான்..............

சத்ரியன் said...

//ஏன்? ஏன் இப்படி? ஏன் இந்த கொல வெறி என்று இவளைக் கேட்பதைவிட…..உங்களிடம் கேட்பதென்று முடிவு செய்து, இந்த பதிவை இட்டிருக்கின்றேன்……யாராச்சும் சொல்லுங்களேன்……ப்ளீஸ்//

இருங்க ஆரூர்,

உங்களுக்குத்தான் பயம். நான் வேணும்னா, "அக்கா" கிட்ட கேட்டுச் சொல்லவா?

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு இரசித்தேன். ஹா ஹா ஹா ஹா
இதுக்தான் நான் கல்யானம் பண்ணிக் கொள்ளவில்லை. நன்றி.

ஆரூரன் விசுவநாதன் said...

வாங்க சத்திரியன்......

கேட்டுச் சொன்னாலும் சரி....நீங்களே சொன்னாலும் சரி.....யாராச்சும் சொல்லுங்களேன் ப்ளீஸ்......

ஆரூரன் விசுவநாதன் said...

பித்தனின் வாக்கு....


கொடுத்த வச்ச மனுசன்யா......ஆனா.....

இதெல்லாம் இல்லைனாலும் போரடிச்சுப் போயிடும் பித்தன்....சீக்கிரம் கல்யாணம் பண்ணிகிட்டு ஜோதியில ஐக்கியமாகுங்க....

தியாவின் பேனா said...

அழகாக சொல்லியிருக்கீங்க..

ஈரோடு தங்க விசுவநாதன் said...

நன்றி தியா......

ஆதிமூலகிருஷ்ணன் said...

:-))