என் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. வலது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் 10 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்கவைத்துப் பார்த்தபோது அவனால் படிக்கமுடியவில்லை. ஆனால் அதே இடது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு வலது கண்ணால் 20 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்க முடிகிறது.
இரண்டு கண்களாலும் பார்க்கும் போது இந்த குறைபாடு தெரியவதில்லை. ஆனால் பள்ளியிலே கரும்பலகையில் எழுதும் வரிகளைப் படிக்கும்போது சிரமப் படுகின்றனர். ஆனால் அதை அவர்கள் சொல்வதில்லை. எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துவிடுகின்றனர்.
ஈரோட்டில் உள்ள மிகப் பெரிய கண் மருத்துவமணையில் பரிசோதித்த போது, நிரந்தரமாக கண்ணாடி அணியவேண்டும் என்று சொல்லிவிட்டனர். கண்ணாடியும் வாங்கி கொடுத்துவிட்டேன்.
அடுத்த சில நாட்களில், என்னுடைய பள்ளித் தோழர்.ஒருவரை சந்தித்தேன்.....பள்ளி நாட்களிலேயே பெரிய சோடாபுட்டிக் கண்ணாடி அணிந்திருந்தார். -6 என்ற அளவில் கண் பார்வைக் குறை அவருக்கு இருந்தது. ஆனால் நான் சந்தித்த அன்று கண் கண்ணாடி அணியாமல், பைக் ஓட்டிவந்ததை பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியமடைந்தேன்.
என்னப்பா, கண்ணாடி போடாத உன்னை அடையாளமே தெரியவில்லை.......கண்களுக்கான அறுவைசிகிச்சை செய்து கொண்டாயா? அல்லது காண்டாக்ட் லென்ஸ்ஸா? என்று கேட்டேன்.

பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் கண்பார்வை குறைபாடுகளை நீக்க பயிற்சி அளிக்கின்றனர். அதில் போய் பயிற்சி பெற்று வந்தேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக கண்ணாடி அணிவதில்லை என்றதை கேட்டதும் ஆச்சரியப்பட்டுப் போனேன்.
அவரிடம் மேலும் தகவல்களை வாங்கிக் கொண்டு இளவலை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி வந்து சேர்ந்தேன்.
பாண்டிச்சேரி, கடற்கரை சாலையின், வடக்கு மூலையில், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் இந்த பள்ளி அமைந்திருக்கிறது.
திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் அந்த பள்ளிக்குச் சென்றேன். அப்பள்ளிக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் விடுமுறை. ஞாயிற்றுக் கிழமை வேலை செய்கிறார்கள். எனவே மறுநாள் காலை 8 மணிக்கு வரச்சொன்னார்கள்.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை, நாம் விருப்பப்பட்டு கொடுக்கும் நன்கொடையை மட்டும் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப் பட்டது.
விடுமுறை தினமாக இருந்த போதும், அங்கிருந்த ஒரு உதவியாளர், எங்கே தங்கியிருக்கிறீர்கள்? என்று கேட்டார். இனிதான், ஏதாவது ஹோட்டலில் அறை எடுக்க வேண்டும் என்றேன். அவசியமில்லை, ஆசிரமத்தின் விடுதியில் தங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி ஆசிரம விடுதியின் தொலைபேசி எண்ணை கொடுத்தார்.
அழகான தனியறை. குளியலறை இணைந்த, இரண்டு படுக்கைகள், கொண்ட அந்த அறைக்கு வாடகை நாள் ஒன்றுக்கு ரூ.70/- மட்டுமே.
செவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு அங்கு சென்றேன். ஆரம்ப கட்ட பெயர் பதிவு, பரிசோதனை ஆகியவற்றை முடித்து, பயிற்சி தொடங்கப் பட்டது. சுமார் 2 மணி நேரம் பயிற்சி அளித்தனர்.
கிட்டப் பார்வை, தூரப்பார்வை, போன்ற அனைத்து கண் குறைபாடுகளுக்கும் பயிற்சி அளிக்கின்றனர். நான் சென்ற போது ஹைதராபாத்திலிருந்து ஒரு தம்பதியினர் தங்கள் இரண்டு பெண்குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். 8, 4 வயதுடைய அந்த இரண்டு குழந்தைகளும் கண்ணாடி அணிந்திருந்தனர். அக் குழந்தைகளின் தந்தையும் கண்ணாடி அணிந்திருந்தார்.
அவரின் நண்பரின் ஆலோசனையின் பேரில் குழந்தைகளை அழைத்துவந்திருப்பதாக சொன்னார். நேரம் ஆக ஆக, பல குழந்தைகள், நடுத்தரவயதினர், வயதானவர்கள் என்று சுமார் 30 அல்லது 40 பேர்கள் பயிற்ச்சிக்கு வந்திருந்ததை பார்க்க முடிந்தது. இதில் பல வெளிநாட்டவர்களும் அடக்கம்.
செய்வாய் முதல் ஞாயிறுவரை 6 நாட்கள் இப்பயிற்சியை நடத்துகின்றனர். காலை 8 மணிமுதல் 10 மணிவரை, மாலை 3 மணிமுதல் 5 மணிவரை. நாள் ஒன்றுக்கு 4 மணிநேரம் பயிற்சி கொடுக்கின்றனர். முறையான கண் சிமிட்டுதல், தூரத்தில் இருப்பதை படிப்பது, இருட்டு அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் சிறு எழுத்துக்களை படிப்பது போன்ற பல பயிற்சிகள்.....
ஆச்சரியப் படும் விதமாக, பயிற்சி முடிந்த ஆறாவது நாள் அங்கேயே கண் பரிசோதனை செய்து பார்த்ததில் பார்வையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. தொடர்ந்து ஆறுமாதம் பயிற்சியை தொடருங்கள் பின் கண் பரிசோதனை செய்து பாருங்கள்.....கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே வராது என்று பயிற்சியாளர் சொன்னார்.
கடந்த 40 ஆண்டுகளாக இந்த பள்ளி நடப்பதாகவும், இதுவரை ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்றிருப்பதாகவும் அறிந்து கொண்டேன். முன்கூட்டியே பதிவு செய்து கொண்டு செல்வது நல்லது. மார்ச் முதல் வாரம் முதல் ஜூன் முதல்வாரம் வரையிலான பள்ளிக்கூட விடுமுறை நாட்களில், அதிகமான கூட்டம் வருவதால் அந்த காலகட்டத்தில் செல்ல விரும்புபவர்கள் முன் கூட்டியே பதிவு செய்தால் தான் இடம் கிடைக்கும்.
பயிற்சிகள் முடிந்து வெளியே செல்லும் வாயிலின் மேல்புறத்தில் இருந்த "மதர் மிரா" வின் இந்த வாசகம் பல அர்த்தங்களை எனக்குச் சொன்னது...............

பயிற்சி குறித்த மேலும் விவரங்கள்
SCHOOL FOR PERFECT SIGHT
PONDICHERRY
PHONE: 0413-2233659
EMAIL: auroeyesight@yahoo.com
auroeyesight@vsnl.net
49 comments :
அருமையான தகவல். பலருக்கும் பயன்படும்! பகிர்வுக்கு நன்றி!
மிக நல்ல அவசியமான பதிவு... எனது மேனேசர்ட சொல்லியிருக்கேன். இதே பிரச்சனை அவரது மகளுக்கும் இருக்கிறது.
நன்றிகள்...
அருமையான பயன்படக்கூடிய தகவல் நண்பரே.. மிக்க நன்றிகளும் பாராட்டுக்களும்!
அருமையான பதிவு..அவசியம் அனைவருக்கும் பயன்படும்
நல்ல பயனுள்ள பதிவு!
எங்கள் குழுமத்தில் பரிந்துரைத்திருக்கிறேன்!
மிக விபரமான தகவல். பகிர்வுக்கு நன்றி.
மிக அருமையான பலருக்கு பயன் படும் பதிவு... உங்கள் நல்ல உள்ளத்துக்கு வாழ்த்துக்கள்...
எனக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது..
நல்ல வழிகாட்டியாக இந்த பதிவு அமைந்தமைக்கு மகிழ்ச்சி..!!
பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல..!!
நம்பிக்கை எதையும் குணப்படுத்த கூடியதே..!!
மிக அருமையான தகவல் பரிமாற்றம்... மிக்க நன்றி
நிறைய நண்பர்களுக்கு இதை மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளேன்
நன்றி
நல்ல தகவலுக்கு நன்றி. மேவிவரங்களுக்கு கீழ்க்கண்ட தளத்தினைப் பார்க்கலாம்:
http://sriaurobindoashram.info/Content.aspx?ContentURL=_StaticContent/SriAurobindoAshram/-03%20The%20Ashram/Departments/School%20For%20Perfect%20Eyesight/-00%20Contents.htm
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய இடுகை.
கூடவே அம்மா வைத்தியம் ஒன்றும் பகிர்தலுக்காக.கிராமப் புறங்களில் இடித்து வறுத்து எடுத்த சுத்தமான விளக்கெண்ணெய் தினம் இரு சொட்டு இரவிலும்,காலையில் குளித்த பின் இட்டு வந்தால் கண்ணுக்கும் குளிர்ச்சி,கண் வலி வராது.
Thanks for sharing this useful info.
ஆரூரன் - நல்ல தகவல். இதை அனைவரும் அறியச்செய்யவேண்டும். எப்படி? பதிவர்களே உதவுங்கள்!
Excellent and very useful article. Thanks for sharing
நல்ல பகிர்வுங்க..
ரொம்ப ஆச்சரியமா இருக்கு ஆரூர்...! அருமையான பகிர்வு...!
மிக பயனுள்ள இடுகை. வயது வரம்பிருக்கிறதா? (ஆனால் பண்டிச்சேரிதான் பிரச்சனை!!)
அருமையான தகவல். பலருக்கும் பயன்படும்! பகிர்வுக்கு நன்றி!//
நானும் வழிமொழிகிறேன்
தகவலைப் பகிர்ந்து கொண்டேன் நண்பரே
தகவலுக்கு மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்..
அரிய நல்ல பல தகவல்களை அளித்துள்ளீர்கள் ஆரூரன்... மிக்க நன்றி!
உபயோகமான தகவல்...
அருமையான விசயம் அன்பரே.
உங்கள் குழந்தைக்கு உள்ளது போலவே தான் எனக்கும்.. எனக்குத் தெரிய வந்தது 11வது படிக்கும் பொழுது தான்...
ஆச்சரியமான அருமையான தகவல். நல்வாழ்த்துகள். நன்றி நிகழ்காலத்தில் சிவா
அன்பின் ஆரூரன் விசுவநாதன்
அரிய பயனுள்ள தகவல்கள் - பகிர்ந்தமைக்கு நன்றி
நல்வாழ்த்துகள் ஆ.வி
பலரும் பிரயோசனப்படும்
பதிவு ஆரூரன்.
மிகவும் உபயோகமான தகவல். பகிர்வுக்கு ரெம்ப நன்றி!!
ப்ளீஸ் வோட்டு போடுங்க மக்கா.. எல்லாருக்கும் தெரிய வேணாம்?
உண்மையில் உங்களை பாராட்ட வேண்டும். யாம் பெர்ற இன்பம் பெருக இவ்வையகம்..இது பலரை சென்றடைய வேண்டும்.
அருமையான தகவல்,பகிர்வுக்கு நன்றி!
சிறு இடைவெளிக்குப் பின் வெளிவந்துள்ள, மிகப் பயனுள்ள இடுகை. இடைவெளிக்கான காரணமும் புரிந்தது.
very good information keep going n thank u.
very good information.thank u.
பகிர்வுக்கு நன்றி!
நல்லது யார் பண்ணாலும் நல்லது தான்!
Extremely useful information- I have visited many times to Pondy, not aware of this. I will take my son during this vacation.
:) ஆச்சரியமாக இருக்கிறது. கண் குறைபாடுகளைப் போக்கும் பயிற்சி அதிசயமே. நமது மூளைக்குச் செல்லும் நரம்புகளைப் பலப்படுத்தும் பயிற்சியாக இருக்குமோ எனும் எண்ணம் எழத்தான் செய்கிறது. இதுகுறித்து கண் மருத்துவர்களின் கருத்து அறிய ஆவல். பயிற்சியின் மூலம் பலகாலம் நோயின்றி வாழ்ந்த மனிதர்களை நினைவுபடுத்தியதும் இதே பதிவுதான், வாழ்த்துகள்.
மிக நல்ல செய்தி...தகவலுக்கு நன்றி...நிகழ்காலத்தில் பக்கம் பார்த்து வந்தேன் நன்றி...நானும் தெரிந்தவர்களுக்கு சொல்கிறேன்...
பயனுள்ளத் தகவல்.... பகிர்வுக்கு மிக்க நன்றி.
அருமை, குழந்தைக்கு இப்பொழுதே சிகிச்சையை தொடர்நந்த்து மகிழ்சி. என்னால் முடிந்தவரை நானும் பகிர்கிறேன்.
மிக்க நன்றி நண்பரே..:)
இந்தியா செல்லும்பொழுது அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். அருமையான அனைவருக்கும் மிக்க பயனுள்ள தவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
Very important sharing by you. tமுன்பேயே தெரிந்தாலும் இவ்வளவு விரிவாக யாரும் சொல்லி நான் பார்க்கவில்லை, கேட்கவில்லை. மிக மிக நன்றி.
Thank you very much...
ithanai enathu blogilum aduthu potu kolgiraen
very nice & useful post. thanks a lot . the last words " faith that cures". it is true.
good message,thanks
பலருக்கும் பயன் தரும் தகவல். உங்களின் இப்பதிவை நானும் பகிர்ந்திருக்கிறேன்.
இப்படி ஒரு தகவல் ஆச்சரியத்தை தருகிறது நம் முன்னோர்களின் பயிற்சியின் முறையை எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் செயல்படுத்தும் அந்த ஆசிரம நிர்வாகிகளுக்கும் இதை பகிர்ந்த உங்களுக்கும் என் ஆத்மா நன்றிகள் ..........
பகிர்வுக்கு நன்றி!
vary use full sir
THANKS SIR VERY USE FULL MESSAGE
Post a Comment