காவடிச்சிந்து என்ற பெயரால் புகழ் பெற்ற சிந்து பாடல்களைப் பாடியவர் சென்னிகுளம் அண்ணாமலைக் கவிராயர். இது குறித்த என் முந்தைய பதிவு.
http://arurs.blogspot.com/2010/01/blog-post_12.htmlபல கும்மிப் பாடல்களும் காவடிச் சிந்து நடையில் எழுதப் பட்டதையும் இங்கே காணலாம்
http://arurs.blogspot.com/2010/01/blog-post_07.html
மகாகவி பாரதியும் பல பாடல்களை காவடிச் சிந்துவில் எழுதியிருப்பினும் முதல் பாடலாக நினைப்பதும், அவர் மிக இளவயதில் பாடியதாக் கூறப்படுவதுமான பாடல்.
“பச்சைத் திருமயில் வீரன்
அலங் காரன் கொளமாரன் -ஒளிர்
பன்னிரு திண்புயப் பாரன் - அடி
பணி சுப்பிரமணியற் கருள்
அணிமிக்குயர் தமிழைத் தரு
பக்தர்க் கெளிய சிங்காரன் - எழில்
பண்ணு மருணாச்சலத் தூரன்”
அண்ணாமலை ரெட்டியார் தனது 26ஆவது அகவையில் 1891 ஆம் ஆண்டு காசநோயினால் மறைந்தார். அப்போது மகாகவிக்கு வயது சுமார் 9 இருந்திருக்க வேண்டும். அண்ணாமலை கவிராயரின் பாதிப்பு பாரதியிடமும் இருந்தது குறிப்பிடத் தகுந்தது.
அதேபோல் துணைவியார் செல்லம்மாவைப் பார்த்து பாடியதான இந்தப் பாட்டும்
”தேடக் கிடைக்காத சொன்னமே-உயிர்
சித்திரமே! மட அன்னமே! - அரோ
சிக்குது பால் தயிர் அன்னமே!-மாரன்
சிலைமேல் கணை கொலை வேலென
விரிமார்பினில் நடுவே துளை
செய்வது கண்டிலை இன்னமே-என்ன
செய்தேனோ நான் பழி முன்னமே
கன்னத்தினில் குயில் சத்தமே- கேட்கக்
கன்றுது பார் என் சித்தமே- மயக்
கஞ் செய்யுது காமப்பித்தமே-உடல்
கனலேறிய மெழுகாயினது
இனியாகிலும் அடிபாதகி
கட்டியணைத்தொரு முத்தமே-தந்தால்
கைதொழுவேன் உனை நித்தமே”
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = == = = = == = = = = = = = = = = = =
திருமணம் ஆகாத நண்பர்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் என்ற குறுஞ்செய்தி எனக்கு திருமணமான நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார்.
”கல்யாணம் ஆகாதவனுக்கு ஒரு கவலைன்னா, ஆனவனுக்கு ஆயிரம் கவலை”. பல நேரங்களில் திருமணமான நண்பர்கள், திருமணமாகாத நண்பர்களைப் பார்த்து டேய்...நானே மாட்டிகிட்டு முழிக்கிறேன்......என்று சிலாகிப்பதைப் பார்க்கமுடிகிறது........
மகாகவி என்ன சொல்கிறார்...............
“வசிட்டனுக்கு இராமற்கும் பின்னொரு
வள்ளுவர்க்கு முன் வாய்த்திட்ட மாதர்போல்
பசித்தோராயிர மாண்டுதவஞ் செய்து
பார்க்கினும் பெறல் சால வரிது காண்,
புசிப்ப தும்பரினல் அமுதென்றெணிப்
புலையர் விற்றிடுங் கள்ளுணலாகுமோ
அசுத்தர் சொல்வது கேட்கலிர், காளையீர்!
ஆண்மை வேண்டின் மணஞ்செய்த லோம்புமின்.
அதுசரிதான்......நாம என்ன வசிட்டனா? இராமனா? வள்ளுவனா?
ஆனாலும் ஒன்னைச் சொல்லித்தான் ஆகோனுங்க.........
நம்ம தங்கமணிக்கு ஈடாவாங்களா இவங்கெல்லாம்........நம்மையே வச்சி குடும்பம் நடத்தறாங்கல்லோ......... என் தங்கமணி வாழ்க.......
என்னவேணா பேசலாங்கண்ணு.....ரவைக்கு வூட்டுக்குப் போகணுமில்ல.....அதான்!!!!!!
11 comments :
//என்னவேணா பேசலாங்கண்ணு.....ரவைக்கு வூட்டுக்குப் போகணுமில்ல.....//
ஆமாங்க...
அப்புறம் வீட்ல காவடிசிந்து தான்....
அடங்கொன்னியா! தங்கமணிக்கு காவடி தூக்கறத சொல்றதுக்கா? அதுக்கெதுக்கு அருணாசல கவி, பாரதியெல்லாம் சாட்சி:))
=))... superb... (i luv kavadisindhu.. :D)
//.நம்மையே வச்சி குடும்பம் நடத்தறாங்கல்லோ..//
பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்போம்...(உங்களுக்குச் சொன்னேன்...)
காவடிச்சிந்துடன் நல்ல பகிர்வு...
||என் தங்கமணி வாழ்க.......||
ரிப்பீட்டிக்கிறேன்...
இப்படிக்கு
தங்கமணிக்கு சொம்பு தூக்குவோர் சங்கம்
களை கட்டுது.... வாழ்த்துகள்!!
த.சொ.தூ.ச உறுப்பினன்.
சந்துல சிந்து பாடியிருக்கீங்க.
காவடி தூக்கிகிட்டே காவடி சிந்து....
பகிர்வு.
தேன் சிந்தும் சிந்துகவி, கவிஞரே, பிடியுங்கள் நூறூ பொற்காசுகள்!
பணம் சம்பாதிக்கலாம் வாங்க கூகிள் வழியா
Free Google Adsense Training In coimbaotre Tamilnadu India
Free Web Design Training In coimbaotre Tamilnadu India
Free SEO Training In coimbaotre Tamilnadu India
//
திருமணம் ஆகாத நண்பர்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் என்ற குறுஞ்செய்தி எனக்கு திருமணமான நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார்.
”கல்யாணம் ஆகாதவனுக்கு ஒரு கவலைன்னா, ஆனவனுக்கு ஆயிரம் கவலை”. பல நேரங்களில் திருமணமான நண்பர்கள், திருமணமாகாத நண்பர்களைப் பார்த்து டேய்...நானே மாட்டிகிட்டு முழிக்கிறேன்......என்று சிலாகிப்பதைப் பார்க்கமுடிகிறது........
//
ஆஹா உண்மை உண்மை முற்றிலும் உண்மை
Post a Comment