தண்ணீர் விட்டா வளர்த்தோம்.....சர்வேசா
கண்ணீரால் வளர்த்தோம்
நேற்றைய செய்தி தாள்கள், ஊடகங்கங்கள், இணையங்கள், எங்கு காணினும் ஆசிரியர் தின விழாச்
செய்திகள், வாழ்த்துக்கள். டாக்டர் ராதா கிருஷ்ணன் பிறந்த நாள் விழா செய்தி தொகுப்புகள். பள்ளிகளில் ஆசிரியர்கள் ஆட, பாட, மாணவர்கள் வேடிக்கை பார்க்க, மாணவர்கள் ஆசிரிய ஆசிரியைகளைப் பற்றி கவிதை மழை பொழிய சிறப்பாக முடிந்தது ”ஆசிரியர் தினம்”
இந்த கொண்டாட்டங்கள் குறித்த எந்த வருத்தமும் எனக்கில்லை. 1947க்கு முன்னர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத, சுதந்திரப் போராட்டத்தில் எந்த ஒரு சிறு பங்களிப்பும் செய்திராத, ஆதிசங்கரர் தொகுத்த இந்து மத சாரத்தை ஒருங்கிணைத்து இந்து தத்துவ ஞான மரபு குறித்த புரியாத புத்தகங்கள் எழுதினார் என்பதைத் தவிர என்ன செய்துவிட்டார்? சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.
உலக தத்துவ ஞானிகளில் ஒருவர் என்று உருவகப்படுத்தப்பட்ட இவரின் தத்துவங்களும் தீர்க்க தரிசன வரிகளும் இன்று எங்கே போயிவிட்டன். சோசலிச கொள்கைகளில் நம்பிக்கை கொண்டு மத வாதத்திற்கு எதிராக இருந்த பண்டித நேரு அவர்களாலேயே நிராகரிக்கப் படமுடியாத அளவிற்கு திடிரென சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் குடியரசுத் தலைவராக வளர்ந்த கதையின் பின்னனி குறித்து பலரும் பேசுவதை எழுதுவதை கேள்விப்பட்டிருக்கின்றேன்.
இந்த விவாதங்களுக்கு நான் வரவில்லை.......
வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் நேற்று
"ஒருநாடு உரிமையோடு விளங்க வேண்டுமென்றால் முதலில் அதன் பொருளாதாரச்
சுரண்டலைத் தடுக்க வேண்டும்; இரண்டாவதாகத் தாய்மொழியின் வாயிலாக அறிவை
வளர்க்க வேண்டும். இந்த இரண்டும் எல்லா நாடுகளுக்கும் பொதுவான உணமை. இதனை
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே நன்றாக உணர்ந்து வாழ்க்கையில் காட்டித்
தொண்டு செய்தவர் வ.உ.சி"
என்று டாக்டர் மு.வ. அவர்கள் சொன்னது போல் நாடு
மொழி இரண்டிற்கும் பெருந்தொண்டாற்றிய பெருமகன்.
நன்றி-தமிழ் விக்கி
வ.உ.சி யின் பிறந்தநாளை அனைவரும் மறந்து
போனதுதான் வருத்தப்பட வேண்டிய விசயம். தமிழக அரசோ, காங்கிரஸ் கட்சியோ
யாரும் இதைப் பற்றி கவலைப் பட்டதாக தெரியவில்லை.
அருந்தமிழுக்கு அவர் ஆற்றிய பணிக்காகக்கூட அவரை நினைத்துப் பார்க்கவில்லை தமிழக தமிழறிஞர்கள்.
சிறையில் இருந்த நாட்களிலேயே தமிழ் இலக்கிய இலக்கணங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிய வ.உ.சி. அவர்களால் தமிழன்னைக்குக் கிடைத்த அணிகலன்கள் பல.
- வ.உ.சிதம்பரம் பிள்ளை தற்சரிதம் (சுயசரிதம்)
- திருக்குறள் மணக்குடவர் உரைபதிப்பு
- மனம் போல் வாழ்வு (மொழி பெயர்ப்பு தத்துவ நூல்)
- அகமே புறம் (தத்துவம்)
- மெய்யறம் (ஆன்மீகப்புரட்சி நூல்)
- திருப்பொய்கையார் இன்னிலை (பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. அதன் உரைநூல்)
- தொல்காப்பியம் இளம்பூரணர் உரைபதிப்பு
- வலிமைக்கு மார்க்கம் (மொழிபெயர்ப்பு நூல்)
- சாந்திக்கு மார்க்கம் (தத்துவம்)
- சிவஞானபோத உரை (சைவ சித்தாந்த உரை நூல்)
- மெய்யறிவு (அற நூல்)
வாழ்ந்த வள்ளுவனையே ஏற்காத காரணத்தால் மறக்கடிக்கப் படுகிறாரோ? இல்லை மழுங்கிப் போகத் தொடங்கிவிட்டானோ தமிழன்..........
(கடவுள் வாழ்த்தில் தொடங்கி முதல் நான்கு அதிகாரங்களை வள்ளுவர் எழுதியிருக்க வாய்ப்பில்லை. இது ஏதோ இடைச் செருகல் என்று முதன்முதலில் சொன்னவர் வ.உ.சி. )
20 comments :
வஉசி பிறந்த நாள் பற்றி இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்... நன்றி.
கப்பலோட்டிய தமிழனை மறந்தது வலிக்கத் தான் செய்கிறது.
எண்ணெய் ஊத்து எதாவது... பிரச்சினை வந்தால்தானே உனக்கும் பொழுது போகும்...
கொஞ்சம் ரணமாகத்தான் இருக்கிறது
இது ஒன்றும் தமிழர்களுக்கு புதிது அல்லவே?
வலிக்கிறது..
கப்பலோட்டிய தமிழனைப் பற்றிய தகவல்களுக்கு நன்றிங்க ஆரூரன்.
ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை ஏதோ சாதிச் சங்கப் பிரமுகர் போல போஸ்டர்களில் பார்க்க நேர்வது தான் இன்னும் கொடுமையானது.
எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களைப் பற்றிய தகவல்களையும் (அல்லது சுட்டியைத் தந்திருக்கலாமே..
வ.உ.சி. அவர்களின் பிறந்த தினத்தை மறந்தது கண்டிப்பாக வருந்த வேண்டிய விடயம்தான்........ நினைவு படுத்தியதற்கு நன்றி ஆரூரன்.....நல்ல பகிர்வு....
பகிர்வுக்கு நன்றி...
மறந்துவிட்ட என்போன்றோருக்கு நினைவுபடுத்தியமைக்கு நன்றி ஆருரான்
நாட்டுக்குழைத்த தமிழனை தமிழர்கள் மட்டுமே போற்ற வேண்டும், போற்ற முடியும். இந்தியன் என்று சொல்லிக்கொள்ளும் தமிழரல்லாத எவனும் தமிழனின் உழைப்பையோ தியாகத்தையோ மதிக்க தயராக இல்லை. தமிழர்கள் அனைவரும் வ.உ.சியை போற்றுவோம். தமிழன் என்று கொண்டாடுவோம்.
இந்தியன் என்ற உணர்வும்,தாய்நாட்டு பற்றும் எனக்கு சற்று அதிகம்தான்.சாராசரியை விட கூடுதல் தேசப்பற்று எனக்கு.ஆனால் கடந்த சில வருடங்களாக இரண்டும்கெட்டான் நிலையில் குழம்பி வருகிறேன். காரணங்களை சொல்லுகிறேன். தொடர்ச்சியாக மத்தியில் ஆளும் அரசு தமிழனுக்கும் தமிழ் இனத்திற்கும் பாரபட்சம் காட்டி தீங்கு இழைத்து வருவதாக ஆழமாக நம்புகிறேன்.இந்தியன் என்ற உணர்வு நீர்த்து போய் தமிழன் என்ற நிலைக்கு கொஞ்ச கொஞ்சமாக தள்ளபடுவதாக உணர்கிறேன்.
கைராளி மலையாளச் சேனலில் செய்தித்தொகுப்பினிடையே வ.உ.சி.யின் வாழ்க்கைக் குறிப்பை ஒளிபரப்பினார்கள்...
தமிழ்ச்சேனல்கள் அனைத்தும் அதைக்கூடச் செய்யவில்லை... :-(
நல்லதொரு பகிர்வுங்க
உங்கள் மனதின் வலி புரிகின்றது !!!!
என்னடா புள்ள அக்கரையா காலைல 4.30 மணிக்கு வந்திருக்கேன்னு பார்த்தேன். இதானா. காலையில டீக்குடிக்க வ.வு.சி பூங்கா பக்கமா போனீங்களா?:))
நமக்கு, ரஜினி/வைரமுத்து வீட்டு கல்யாண விஷேசம் பார்த்தா போதாதா?
சினிமாக்காரங்களைவிட, சுதந்திரத்துக்காக, ஆங்கிலேய வணிக சர்வாதிகாரத்தை
அடக்க, சுயசொத்துக்களை விற்று, கடன்பட்டு, இறுதியில், சிறைபட்டு, சொக்கும் இழுத்த செம்மல் பிறந்தநாள் டிஅர்பி ரேட் ஏறுமா? எவன் பாப்பான் அதை! "செக்கு" காட்சியாய் இருக்கிறது. செக்கு மாடுகளாய் சினிமாக்காரர்களை "சுற்றிக் கொண்டே" நாம்.
நமக்கு, ரஜினி/வைரமுத்து வீட்டு கல்யாண விஷேசம் பார்த்தா போதாதா?
சினிமாக்காரங்களைவிட, சுதந்திரத்துக்காக, ஆங்கிலேய வணிக சர்வாதிகாரத்தை
அடக்க, சுயசொத்துக்களை விற்று, கடன்பட்டு, இறுதியில், சிறைபட்டு, சொக்கும் இழுத்த செம்மல் பிறந்தநாள் டிஅர்பி ரேட் ஏறுமா? எவன் பாப்பான் அதை! "செக்கு" காட்சியாய் இருக்கிறது. செக்கு மாடுகளாய் சினிமாக்காரர்களை "சுற்றிக் கொண்டே" நாம்.
:).. ம்ம்..
வ உ சி செக்கு இழுத்தார், நாம் சினிமா என்னும் செக்கை சுற்றிக் கொண்டிருக்கிறோம்.
கோவையில் வஉசி யின் படம் தாங்கிய திருமண வரவேற்பு பிளக்ஸ் பார்த்தேன். பரவாயில்லையே செக்கிழுத்த செம்மலை இங்காவது நினைவாக போற்றுகிறார்களே என்று.. பின்னர தான் தெரிந்த வஉசி யின் சாதிக்காரர்களாம் அந்தத்தம்பதியர்.
என்ன செய்வது...
unmaidhaan V.O.C mattumillai, Thamilnaattil pirandha ella nallavarkalukkum idhey nilamithaan.
aanaal naankal murasoli maaranukku parlimentil silai vaipom.
nandri nallavan
||மறந்து போன தலைவனும்...||
தலைவனா?
Post a Comment