Tuesday, September 07, 2010

பீட்டர் பாண்டியன்.............................................


மதுரைப் பகுதியில்   1812-1828 வரை ஆட்சியாளராக இருந்த ஆங்கிலேயர் ரெளஸ் பீட்டர்.  பெரிய குளம், போடி பகுதிகளில் வன விலங்குகளின் தொல்லைகளுக்கு உள்ளான மக்களைக் காப்பாற்றிய பெருமை அவரையே சாரும்.  மதுரை மீனாட்சியம்மன், அழகர் கோவில்களுக்கு பெருமதிப்பிலான தங்க நகைகளை காணிக்கையாக அளித்தவர்.  

இவரின் கொடைத்திறத்தையும், வீரத்தையும் பாராட்டி அக்காலத்தில் நிறைய நாட்டுப்புறப் பாடல்கள் இருந்திருக்கின்றன.  பாண்டிய மன்னனே திரும்ப வந்து ஆள்வதாக மக்கள் கருதி அவரை “பீட்டர் பாண்டியன்” என்றே அழைத்திருந்திருக்கின்றனர்.  “பீட்டர் பாண்டியன் அம்மானை” என்ற நூலும் அக்காலத்தில் பிறந்திருக்கின்றது.  அந்த நூல் இன்று கிடைக்கவில்லை.

அரசாங்க கருவூலத்திலிருந்து பணத்தை எடுத்து ஏழை எளிய மக்களுக்கு வாரி வழங்கிய  அவரை ஆங்கில அரசாங்கம் பதவி நீக்கம் செய்தது. அதைத் தொடர்ந்து அவர் 1828 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.  இவரின் வெண்சலவைக் கல்லறை மதுரை தெற்கு ஆவணி மூல வீதியின் மேற்குப் பகுதியில் உள்ள தேவாலயத்தில் முன் தளத்தில் உள்ளது.

பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களின் அறியப்படாத தமிழகம் ”நூலிலிருந்து........

9 comments :

கலகலப்ரியா said...

தெரிஞ்சுக்கறோம் நிறைய... எழுதுங்க..

பவள சங்கரி said...

புதிய செய்தி. நன்றி ஆரூரன்....

பவள சங்கரி said...

புதிய செய்தி. நன்றி ஆரூரன்....

sakthi said...

ஆருரன் சார் வரலாற்று சிறப்புமிக்க செய்திகளாக பதிவிடுகின்றீர்கள்.உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது. பீட்டர் பாண்டியனை பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி!!!!

vasu balaji said...

பீட்டர் பாண்டியன் கட்டிக்காத்த நாட்டை குவார்ட்டர் பாண்டியன் அழிக்கிறானே ஆசானே..அவ்வ்வ்:((

க.பாலாசி said...

//ஏழை எளிய மக்களுக்கு வாரி வழங்கிய அவரை ஆங்கில அரசாங்கம் பதவி நீக்கம் செய்தது//

அப்பலயே இந்த மாதிரி நடந்திருக்கு.. என்னத்த சொல்றது...

நல்ல பகிர்வுங்க...

அன்பரசன் said...

எனக்கும் புதிது..

ஆட்டையாம்பட்டி அம்பி said...

ஈரோடு நம்ம ஊரு!

மேலும படியுங்கள் நம்ம தலைவரைப பற்றி:

http://tamilkadu.blogspot.com

Thamira said...

சுவாரசியமான புதிய தகவல். பீட்டர் தற்கொலை செய்து கொண்டிருந்திருக்க வேண்டாம் இல்லையா.?