Thursday, September 23, 2010

ஆண்......பாவம்........

 


பொதுவுடமை தத்துவம்

கலைந்த தலை
எண்ணை வடியும் முகம்
வீச்சமாய் ஒரு நைட்டி
விதரணை யில்லாப் பேச்சு
வீட்டுக்குள் இவள்.....

முடிந்த அளவு தவிர்க்கின்றேன்
இவளின் பார்வையை


மலர்ந்த முகம்
அலை கூந்தல்
தளிர் நடை
அழகில் சோலை
கடைத் தெருவில் அவள்

தாண்டிச் சென்ற பின்னும்
தொடர்கின்றேன் திருட்டுதனமாய்............

அவர்கள் கடந்ததும்
திரும்பிப் பார்த்து........

த்தூ..இவனும் ஒரு மனிதனா?
எப்படி வெறித்துப் பார்க்கிறான்?.
சொன்னாள் என்னவள்

திரும்பிப் பார்க்கிறேன்
தாண்டிச் சென்றவளை.....
அவளும் திரும்பி ஏதோ
சொல்கிறாள் அவனிடத்தில்.....

இதைத்தான் அவளும் சொல்லியிருப்பாளோ!!


ஏனோ நானும் அவனும்
வெட்கப்படவில்லை.
வேதனைப் படவுமில்லை.
எவன் சொன்னான் -தோற்றுவிட்டது
பொதுவுடமை தத்துவமென்று.

25 comments :

பவள சங்கரி said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......ஆரூர்.....ம்ம்

அகல்விளக்கு said...

அருமையா இருக்கு அண்ணா....

இதுபோல இன்னும் நிறைய எழுதலாமே.... :)

VELU.G said...

ரொம்ப நல்லாயிருக்குங்க

வால்பையன் said...

இருக்கு இருக்கு

கலகலப்ரியா said...

ஆரூர்.. என்னாச்சு... :)))

பழமைபேசி said...

யாருங்யா அது, எங்க முதலாளியக் கை தேர்ந்த கவிஞனாக்கியது??

vasu balaji said...

ஓ. இதுக்கு பேருதான் பொதுவுடமைத் தத்துவமா:))

காமராஜ் said...

மனம் ஒரு குரங்கா,
அழகானதையெல்லாம் பார்க்கவும் ரசிக்கவும் மோதுகிற மனதை ஐபிசி யினால் மட்டுமல்ல தர்ம
நியாயங்களால் கட்டுப்படுத்த முடியாது.
அது அப்படித்தான்.
அதையே கவிதையாக்குகிற நுனுக்கம் நல்லாருக்கு.

ஆரூரன் விசுவநாதன் said...

//யாருங்யா அது, எங்க முதலாளியக் கை தேர்ந்த கவிஞனாக்கியது??//

வஞ்சப் புகழ்ச்சியா? வேணாங்க.....

ஏண்டா எழுதறன்னு கேளுங்க....அப்பீட்டயிக்கிறேன்

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி தோழர் காமராஜ்....

இதை நான் கவிதையாக பார்க்க வில்லை. இயல்பான நிகழ்வாக பார்த்தேன். புழக்கத்தில் இல்லாத வார்த்தைகளும், சொல்லியவிதமும் இதை கவிதையாக்கிவிட்டன என்று நினைக்கின்றேன்.

ஈரோடு கதிர் said...

அட்ரா சக்க்க்க்க்க...

சொல்லவேயில்ல!

ஆரூரன் விசுவநாதன் said...

//Blogger வானம்பாடிகள் said...

ஓ. இதுக்கு பேருதான் பொதுவுடமைத் தத்துவமா:))//

ஆசானே! சொல்லிக் கொடுத்த நீங்களே கேள்வியும் கேக்கலாமா?

ஈரோடு கதிர் said...

அகல்விளக்கு said...||

அருமையா இருக்கு அண்ணா....

இதுபோல இன்னும் நிறைய எழுதலாமே.... :)||

அதுக்கு தொடர்ந்து எதாவது ஃபிகர் ரோட்ல நடந்திக்கிட்டேயிருக்கனுமே!

ஆரூரன் விசுவநாதன் said...

//Blogger கலகலப்ரியா said...

ஆரூர்.. என்னாச்சு... :)))//

ஹும்ம்ம்...(பெருமூச்சு...பெருமூச்சு)
என்னென்னமோ ஆச்சு போங்க....

ஆரூரன் விசுவநாதன் said...

Blogger அகல்விளக்கு said...
//இதுபோல இன்னும் நிறைய எழுதலாமே.... :)//

தம்பி ராசா......ஏன்???????ஏன் இந்த கொலவெறி???????

நான் நல்லா இருக்கறது புடிக்கலையா???

ஆரூரன் விசுவநாதன் said...

//Blogger வால்பையன் said...

//இருக்கு இருக்கு//

இது என்னாத்துக்கு?????சரி நேர்ல வந்து கேட்டுக்கறன்

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றிங்க வேலு

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றிங்க சித்ரா

//Blogger நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......ஆரூர்.....ம்ம்//

ம்ம்ம்....start your count..........

1,
2,
3,
4,

ஆரூரன் விசுவநாதன் said...

Blogger ஈரோடு கதிர் said...

அட்ரா சக்க்க்க்க்க...

சொல்லவேயில்ல!//

ஏன்??????சொல்லியிருந்தா?????

உங்க பங்குக்கு நீங்களும் பகடி பேசறதுக்கா??????

ஆரூரன் விசுவநாதன் said...

//Blogger ஈரோடு கதிர் said...

அகல்விளக்கு said...||

அருமையா இருக்கு அண்ணா....

இதுபோல இன்னும் நிறைய எழுதலாமே.... :)||

அதுக்கு தொடர்ந்து எதாவது ஃபிகர் ரோட்ல நடந்திக்கிட்டேயிருக்கனுமே!//

ரோட்ல ஃபிகர் நடந்துகிட்டேயிருக்கும்..நான் வூட்டுக் போகனுமில்ல.....

இதுக்கே ராத்திரி சோறு இல்லைன்னுட்டாங்க வூட்ல.....

sakthi said...

எவன் சொன்னான் -தோற்றுவிட்டது
பொதுவுடமை தத்துவமென்று.


அது சரி

sakthi said...

நல்லாயிருக்குங்க ஆருரரே

க.பாலாசி said...

//தாண்டிச் சென்ற பின்னும்
தொடர்கின்றேன் திருட்டுதனமாய்............//

என்னமோ போங்க... பொதுவுடமை வாழ்க...

*இயற்கை ராஜி* said...

கலக்கல்ஸ்...

Unknown said...

ஏழுகடல் தாண்டி, ஏழு மலைத் தாண்டி போனால் தான் முடியும் என்ற ரீதியில் எங்களை பயமுறுத்தினார்கள்... வலைப்பூ-வை உருவாக்க வேண்டும் என துவங்கியப்போது. இருந்தபோதிலும் மிக எளிது என நம்பிக்கையூட்டிய "நண்பேன்டா"களின் உதவியால் இன்று bharathbharathi.blogspot.com என்ற தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.

தட்டுத்தடுமாறி "தத்தகா, பித்தகா" என்று இரண்டு அடிகள் வைத்து விட்டோம். இன்னும் சரியாக நடைப்பயில வரவில்லை, எப்படியாயினும்; உங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது. மேலும் ஆலோசனைகளைத் தாருங்கள்.

இந்த வலைப்பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்க. இது சின்னஞ்சிறு மனிதர்களின் உலகம். தவறுகளை புறக்கணித்து வாழ்த்துங்கள்.. கருத்துரைகளை ஆவலாய் எதிர் நோக்குகிறோம்..

வந்து பாருங்கள் bharathbharathi.blogspot.com
உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...

நன்றி..

அன்புடன்...
பாரத்பாரதி-க்காக

எஸ்.பாரத்,
மேட்டுப்பாளையம்...