Friday, October 01, 2010

இலக்கிய இன்பம்


பல்வேறு சிறப்புக்களை தன்னுள்ளே பொருந்தியிருக்கும் மொழி நம் தமிழ் மொழி என்பதில் சந்தேகமில்லை. ஒரு பொருளை அல்லது பயன்பாட்டைக் குறிக்க பொதுவான சொற்கள் இருப்பினும், நம் மொழியில் சிறப்புப் பெயர்களால் குறிப்பிடப்படுவது சிறப்பே.

ஒருவன் - ஒருத்தி என்ற சொற்களை ஆண்பால் - பெண்பாலைக் குறிக்கப் பயன்படுத்துகிறோம்.  ஒருவர் என்ற சொல் இருபலரையும் குறிக்குமுகமாக பயன்படுத்தப் படுவது நம் சொல் வளத்தினை உலக்குக்குப் பறைசாற்றுகிறது. 

“ ஒருவனுக்கும் ஒருத்திக்கும் உருவென்றால் அவ்
  வுருவை இக் தொருத்தன் என்கோ? ஒருத்தி என்கோ?
  இருவருக்கும் உரித்தாக ஒருவர் என்றோர்
  இயற்சொல் இல தெனின் யான் மற் றென் சொல் வேனே.”

                                     -குமரகுருபரர்


இலை என்ற ஒற்றைச் சொல் பொது வழக்காக இருப்பினும் இதற்கு நான்கு வேறு சொற்களும் உண்டு.  மா,  வாழை முதலின ”இலை” என்றும்..நெல், கேழ்வரகு முதலியன ”தாள்” என்றும், கரும்பு, சோளம் போன்றவை “தோகை” என்றும், தென்னை, பனை போன்றவை ”ஓலை” என்றும் வழங்கபடுகிறது.

பூ என்ற பொதுப்பெயர் அரும்பும் போது “அரும்பு” என்றும், பேரரும்பான போது “போது” என்றும் மலர்ந்த பின் மலர் என்றும், வீழ்ந்தபின் “வீ” என்றும் வாடிய பின் ”செம்மல்” என்றும் அழைக்கப் படும்.

போதொடு நீர் சுமந்தேத்தி, புகுவார் அவர்பின் புகுவே-அப்பர்

அரும்பு என்னும் ஒரு நிலைக்கே, அதன் அளவையொட்டி, அரும்பு, மொட்டு, முகிழ், முகை, மொக்குள் என்ற பல்வேறு சொற்களால் அறிப்படுகின்றன.


”உடலால் இருவர், உயிரால் ஒருவர் ”, ”ஈருடல் ஓருயிர்” என்ற பதங்களெல்லாம் வெறும் பிதற்றல்களாக போயிருக்கும் இந்நாளில், தலைவனும் தலைவியிம் எவ்வாறு ஒன்றாயிருந்தனர் என்பதை “மருவிய பாங்கி மதியிடம் படுத்தல்” என்னும் அகப்பொருள் துறையின்கண் அமைந்த  கச்சியப்ப முனிவரின் இந்தப் பாடல். 

உயிர் எழுத்துக்களில் மட்டுமன்றி மெய்யெழுத்துக்களிலும் அகரம் கரந்து உறைகிறது.  “ அகர முதல எழுத்தெல்லாம்” என்ற வள்ளுவரின் கருத்துக்கு விளக்கம் தருவது போல் அமைந்துள்ளது .

  ” பன்னீருயிரும் பதினெண் உடலும் பயின்று இயக்கும்
    அந்நீர் என அடல் வேலோன் தனக்கும், அமிழ்து உயிர்க்கும்
    முந்நீர் தரள முறுவல் முரி புரு வத்திவட்கும்
    நன்னீர் உயிர் ஒன்று, மெய்யிரண்டாகி நயந்ததுவே”  

இனிமை என்பது தமிழுக்கு “ழ” கரத்தால் மட்டும் ஏற்பட்டதன்று, எழுத்தினிமை போன்றே, சொல்லினிமை, செய்யுளினிமை, அணியினிமை, இலக்கியவினிமை, இசையினிமை, கூத்தினிமை எனப் பிற இனிமைகளுமுண்டு.

                                    -தேவநேயப் பாவாணர், - தமிழ் வரலாறு.

16 comments :

vasu balaji said...

நல்லாருக்குங்க ஐயா. மாப்பூஊஊஊஊ.

Thamira said...

படிக்கவே மகிழ்ச்சியா இருக்கு.

(அப்புறம் அது வாழையா? அல்லது வாலைதானா?)

sakthi said...

எழுத்தினிமை போன்றே, சொல்லினிமை, செய்யுளினிமை, அணியினிமை, இலக்கியவினிமை, இசையினிமை, கூத்தினிமை எனப் பிற இனிமைகளுமுண்டு.

படிக்க இனிமை

பவள சங்கரி said...

மிக இனிமையான பதிவு ஆரூர்.ஆம், எனக்கும் அந்த சந்தேகம், வாலையா, அல்லது வாழையா?

கலகலப்ரியா said...

:D... இன்புற்றோம்... சூப்பர் ஆரூர்... வாழ்க உங்கள் தமிழ்த் தொண்டு...

ஆரூரன் விசுவநாதன் said...

தவறைச் சுட்டிக்காட்டிய அனைவருக்கும் நன்றி. திருத்திவிட்டேன்.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி ஆசானே.......பழி தீத்துகிட்டீங்க...ம்ம்ம்ம்

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றிங்க ஆதி,

நன்றிங்க சக்தி

நன்றிங்க ப்ரியா

நன்றிங்க நித்திலம்

Unknown said...

நீங்க என்ன படிச்சிருக்கீங்க தலைவா?

ஆரூரன் விசுவநாதன் said...

வாங்க ஜி.யெஸ்.கே. அதிகம் படித்தவனில்லை. இப்பொழுதுதான் படிக்கத் தொடங்கியிருக்கின்றவன். ஏதோ படித்த விடயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறவன்.

VELU.G said...

ரொம்ப நல்லாருக்குங்க

பழமைபேசி said...

அருமைங்க முதலாளி!!!

*இயற்கை ராஜி* said...

இனிமை.அருமை... :-))

தாராபுரத்தான் said...

எந்திரதனமான வாழ்க்கைக்கு இது போன்ற இலக்கிய இன்பம் மகிழ்ச்சி தருகிறதுங்கோ..எனது இடுக்கைக்கு வந்திருந்து எனது பேரனுக்கு தமிழ் பெயர் அமைய வாழ்தியமைக்குமு் நன்றிங்கோ.தமிழ் பெயர் அமைந்தால் மட்டும் போதாது...உங்களைப்போல் தமிழ் உணர்களோடு வளர வேண்டும் என்று வாழ்த்துங்கள் அய்யா.

தாராபுரத்தான் said...

மன்னிக்கவும் ஆர்வக்கோளாறு தட்டச்சில் பிழை ஏற்படுத்தி விட்டது.

mrknaughty said...

நல்லா இருக்கு
thanks
mrknaughty
click here to enjoy the life