Thursday, October 14, 2010

அழிக்கப்படும் புராதனங்கள்- மாவட்ட ஆட்சியருக்கு ஒரு வேண்டுகோள்

புதுக்கோட்டை புராதனங்கள் அபாய நிலையில்!!!

Posted by fourthpress on October 13, 2010

சிதறாமல் அமர்வாரா ஜைனர்? ஜைனர் புடைப்பு சிற்பங்கள் கொண்ட ஆளுருட்டி மலை


புதுக்கோட்டை மாவட்டமே, தொன்மையானது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், கற்கால மனிதர்கள் வாழும் குகைகள், புதை பொருள் தாளிகள், cane circle எனப்படும் கல் வளைவுகள், நடுகற்கள் ஆரம்பித்து, ஜைன குகைகள், புடைப்பு சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள், முதல் தமிழ் மூல எழுத்துக்களாம் பிராம்மி எழுத்துக்கள், முதல் காலச் சோழர்களின் கோயில் ஆகியவை நிரம்பிய, சித்தன்னவாசல், குடுமியான் மலை, நார்த்தாமலை, கடம்பர்மலை, ஆளுருட்டிமலை ஆகியவை நிரம்பிய பகுதி புதுக்கோட்டை. அந்தப் பெயர் இனி நிலைக்குமா என்பது சந்தேகமே. கடந்த சில மாதங்களாக மிக அதிகமாக கல் குவாரி காண்டிராக்டர்களால், அடி முடி காணாமல், தொல்லியல் துறையின் சட்டங்கள், தடுப்பு சட்டங்கள், (ban) ஆகியவை மதிக்கப் படாமல், இந்த காலத்தால் அழியாத புராதனச் சின்னங்கள் பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் அதிரும் குண்டுகளால், குகைகளும், நிற்கும் இடங்களும் மக்கள் நடமாடுகையிலேயே ஆட்டம் கொண்ட வண்ணம் உள்ளது. இப்படியே தொடர்ந்தால், மத்தியத் தொல்லியல் துறையால் காக்கப்படும் இச்சின்னங்களும் குவாரிக் கற்களாக இரையாகும் நாள் வெகுதூரமில்லை. மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளையும், அங்குள்ள காவலர்களையும் தொடர்பு கொண்ட போது, யாரிடம் முறையிட்டாலும், அரசியல் பலமிக்க கல் குவாரிக் காரர்களை தடுக்க முடியவில்லை என்று வருத்தமே தெரிவிக்கின்றனர். இனியும் தாமதியாமல், தமிழ் நாடு அரசு தொல்லியல் சின்னங்கள் உள்ள மலைகள் முழுவதையுமே காப்பதற்கான சட்டம் இயற்றி,(இல்லை இருக்கும் சட்டத்தை தூசி தட்டி எடுத்து) உடனேயே இந்த காலவரையற்ற குண்டுவெடிப்புகளை தடுக்காவிட்டால், தமிழகத்தின் தொன்மைக்குப் பெருமையாக விளங்கும் இச்சின்னங்கள் இனி புகைப்படங்களாக மட்டும் காணும் நிலை உருவாகிவிடும். அரசு உடனடியாக கவனிக்குமா?

வெடித்து வைக்கப்பட்டுள்ள கற்குவியல்கள் தகர்க்கப்பட்ட கற்குவாரிகள் படுகைக்கு மிக அருகே




 மாபெரும் அழிப்பு நடவடிக்கையை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு மின் அஞ்சல் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வலைப்பதிவர்கள் அனைவரும் தங்கள் வலைப் பக்கங்களில் இதை மறு வெளியிடு  செய்து தருமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.

அன்புடன் 
ஆரூரன் விசுவநாதன்


நன்றி:-http://fourthpillar.wordpress.com/


புதுக்கோட்டை ஆட்சியர் மின் அஞ்சல் முகவரி:-
collr.tnpdk@nic.in மற்றும் collrpdk@tn.nic.in


To
The Collector,
Pudukottai Dist.
Order immediatly to stop quarrying. Such a monument can not be built by present or future govt. Such monuments are telling poetry, history of geography of glorious past.
Regds:\



collrpdk@tn.nic.in 


15 comments :

Chitra said...

குறித்த காலத்துக்குள், கலெக்டர் செவி மடுத்து ஆவன செய்ய வேண்டும்.

vasu balaji said...

செஞ்சுருவோம்.

பவள சங்கரி said...

கண்டிப்பாக செய்ய வேண்டியதுதான். நன்று செய்தீர்கள்.......வாழ்த்துக்கள்.

sakthi said...

புராதனங்களை காப்பது நம் கடமை என அரசு எப்போது உணரப்போகின்றது ...

எஸ்.கே said...

மிக நல்ல கட்டுரை! நன்றி!

Unknown said...

புராதனங்களை காப்பது நம் கடமை. தேவையான பதிவு..வாழ்த்துகள்

பழமைபேசி said...

ப்ச்... வருத்தமா இருக்கு!

பழமைபேசி said...

ப்ச்... வருத்தமா இருக்கு!

கலகலப்ரியா said...

நடவடிக்கை எடுத்தாங்கன்னா இது ஒரு நல்ல முன்னுதாரணமா இருக்கும்...

உன்னால் முடியும் தம்பி மாதிரி நாட்டையே புரட்டிப் போடலாம்...

கனவோ..?!

பை த வே... பெட்டிஷன் ரெடி பண்ணி தீவிரமா கையொப்பம் வாங்கி அனுப்பலாமே...

KS MALARMANNAN said...

இது உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை ; புராதனங்களை காப்பது நம் கடமை ............... நல்ல முயற்ச்சி ............. என் ஆதரவு கண்டிப்பாக உண்டு...

காமராஜ் said...

excellent job comrade.
my email sent to the concern, already.
and
hats off veyilaan,
baalaasi

hariharan said...

நல்ல முயற்சி...

கற்பூரவாசனை தெரியாத....ளுக்கு வெறும் கற்களாகவும் அதை பணமாக்கவும் தான் தெரிகிறது. அரசாவது உடனடியாக தடுத்து நிறுத்தி வேலி அமைக்கவேண்டும்.

மாதேவி said...

புராதனங்கள் :(

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

வணக்கம் ஆருரன் அப்படியே நானும் கலெட்டருக்கு ஒன்று அனுப்பிவிட்டேன்.

மதுரைக்காரன் said...

Nice post. not only in pudukottai district, such things are happening in some parts of madurai region also such as Nagamalai, Keelavalavu.