Wednesday, December 14, 2011

நோம்பிக்கு வந்திருங்க......சங்கமம் 2011.

வருசமொருக்கா நடக்கற, எங்கூரு நோம்பிக்கு பூச்சாட்டியாச்சுங்க. மார்கழி மாச,மொத நாயத்தக் கிழமை, 18-11-2011 காலைல, ஈரோட்ல, ரோட்டரி சங்க சி.டி. அரங்கத்தில காலம்பற 10 மணிக்கு கூட்டமுங்க. மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர், ஸ்டாலின் குணசேகரன் ஐயா வாரமுன்னு சொல்லியிருக்கறாருங்க. பொஸ்தக திருவிழாவுலதான் கேட்டனுங்க அவரு பேச்ச, பேச்சுன்னு பேச்சு, அப்புடியொரு பேச்சுங்க. மானம் மெரண்டு மேலருந்து கொட்டற மாதர. பொறவு, ரெண்டு மணிக்கு ”பந்தக் கெடா” விருந்துங்க,சைவ விருந்தும் ஏற்பாடு செஞ்சிருக்குதுங்க. பொழுதோட அவுங்கவுங்க வூட்டுக்கு அவரக்காச் சோத்துக்கு போயிடலாமுன்னு, எங்க பிரசிடண்ட் ஐயா சொல்லிப் போட்டாருங்க.


பெரசிடண்ட் ஐயா,வார ஒரம்பறைக்கு, என்ன என்ன சமைக்கனும், எவ்ளோ சமைக்கனும்னு, திட்டமா வேலை செய்திகிட்டிருகாருங்க. இந்த வருசமும் ”பந்தக் கெடா” போடனும்னு முடிவு செஞ்சு, பண்டாரத்தை வரச்சொல்லி, எல்லாம் ஏற்பாடும் அவரே செய்யறேன்னு சொல்லிப்போட்டாருங்க. கலியாண ஏற்பாடாட்டம் நடந்துகிட்டிருக்குதுங்க.

பெரிய பண்ணை  கதிரு  ஐயா வேற அதச் செய்யோனும், இதச் செய்யோனும்னு, அப்படிச்செய்யோனும், இப்படிச் செய்யோனும்னு, பெரும்பாடு பட்டுகிட்டுறாருங்க. எதைச் செஞ்சாலும், நிறைவாச் செய்யோனும், நெனப்புல நிக்கற மாதரச் செய்யோனும்ங்கறது பெரிய பண்ணையோட  வழக்கம்பாருங்க. என்ன நாஞ் சொல்லறது.

இந்த மணியக்காரங் கார்த்தி வேற கந்தாயத்துக்கு, நோட்டத் தூக்கிட்டே திரியறானுங்க. இந்த தூங்கற மணியக்காரன எழுப்பினா பழைய கந்தாயங் கேப்பான்னு சொன்னது சரியாத்தன் போச்சு. செரி அவருதான் என்னத்த செய்வாரு, இம்புட்டுச் பணத்தையும் வசூல் பண்டி, செலவையும் சரியா செஞ்சு, ஊரு  மருவாதையா காப்பாத்தோனும்மில்லீங்க.வட்டிக் வாங்கிப் போட்டாவது சங்கமத்தை நடத்தியே தீருவேன் ன்னு கங்கணங் கட்டிக்கிட்டு வேலை செஞ்சிகிட்டுருக்காருங்க. 

 புதுசா பொண்ணுப் பாத்து, பரிசம் போட்டு, அம்பா, நாலு வார்த்தை பேசலாம்னு கெடந்த,  பகலுப் பூரா கம்பேனி காரங்க உசுர வாங்குறாங்க, ரவைக்கு, இவனுங்க தொல்லை, போதாக் கொறைக்கு, புதுப் பண்ணையக்காரி வேற, எங்கூட பேசமாட்டீங்கறீங்க, இப்பயே அக்கறை இல்லாம போச்சுங்கறா,ன்னு மொணகிக் கிட்டே அருமைகாரர் பாலாசி, வாரன்னு சொன்னவங்களுக்கு காயிதம் போடறது, வாரவங்களுக்கு தங்க, உங்க, தேவையானதைச் செய்யறது, எப்புடியெல்லாம் கூட்ட நடக்கோணும், என்னென்ன தேவையைன்னு பார்த்துப் பார்த்து செஞ்சிகிட்டிருக்காரு.....

எங்க பெரிய மாப்பிளை, ஜாபர், ஒரம்பறையெல்லாம் சரியான நேரத்துக்கு வாராங்களான்னு உறுதிப் படுத்திகோணும், வந்த ஒரம்பரைய கூட்டியாந்து, தங்க வச்சு, ஊரச் சுத்திக் காமிச்சு, பொறவைக்கு, ஊருக்கு அனுப்பி வைக்கற வரை, ஒத்தையாளா செஞ்சிகிட்டுருக்காருங்க.

எங்க முப்பாட்டன் முண்டாசு, பேருல பாதி வச்சிகிட்டு, அமெரிகாவுல கோந்துகிட்டிருக்க எங்க மாப்ளை வேற, அணுசக்கா வை(அனுஷ்கா) கூப்பிடலாம் மாம்ஸ், ந்னு தொல்லை பண்டிகிட்டிருந்தாரு. எலக்கிய நோம்பிக்கெல்லாம் இதெல்லம் கூடாது மாப்ளே ந்னு சொல்லி சமாளிச்சி வச்சிருக்கிறோம்.  ”எலவட்ட நோம்பி” கொண்டாடும்போது கூப்பிட்டுக்கலாம்னு சொல்லி சமாளிச்சி வச்சிருக்கரனுங்க.  போன வாரம்பூரா, தெனம் ரவைக்குப் போனைப் போட்டு, எனக்கு தேதாவது வேலை கொடுக்கோனும்னு மிரட்டறாரு. 


ஊரு சனமெல்லாம், வருசத்துகொருக்கா ஒருத்தரையொருத்தரு பார்க்கோனும்னு ஆசையாக் கெடக்குறமுங்க...ஆடு மாடுக்கு தண்ணி காட்ற வேலைக்கு ரெண்டு நாளைக்கு ஏற்பாடு செய்துபோட்டு நேரங்காலத்தோட, குடும்பத்தோட, நோம்பிக்கு வந்திருங்க.

                                    இலக்குவன் போலத் தம்பி
                                           இலங்கையன் தம்பி மற்றும்
                                   கலக்கமில் குகனைப் போன்று
                                           கைதரும் தோழர் வாய்த்தால்
                                  மலைக்கனம் தன்னைக் கூட
                                          மடியினில் தூக்கிச் செல்வோம்;
                                 இலக்கணம் போன்ற வாழ்வை
                                           எய்தியே உயர்ந்து வாழ்வோம்.

                                                                                      -கவியரசு கண்ணதாசன்


இந்த வரிகளைப் படித்ததும், இந்த சங்கமத்திற்கான ஏற்பாடுகளும், அதைத் தொடர்ந்து, குழும நண்பர்களின் இடையறாத பணிகளும் கண் முன்னே வந்து செல்கிறது. ஆண்டுக்கொருமுறை, இணைய உறவுகளைச்  சந்திக்க வேண்டும், இணைய உறவுகள், இணைந்த உறவுகளாக  நிலைத்திருக்க வேண்டும் என்ற ஆவலில், இந்தச் சங்கமத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது ஈரோடு தமிழ் வலைப் பதிவர்கள் குழுமம். வாருங்கள் உறவுகளே...ஈரோட்டில் சங்கமிப்போம்.....

அன்புடன்
ஆரூரன்

23 comments :

vasu balaji said...

ஏற்பாடெல்லாம் கன ஜோராட்ருக்கு. அசத்துங்க சாமியோவ்.:))

vasu balaji said...

கடுதாசு எழுதி கக்கத்துல வச்சிக்கிட்டா ஆச்சுங்களா? போஸ்டாபீசுல போட்டாதானே. நானு கொண்டோய் தமிழ்மணம் போஸ்டாபீசுல சேர்த்துட்டனுங் எசமான். :)))

ஆரூரன் விசுவநாதன் said...

இதுக்குத்தான் ஆசான் ஒருத்தரு வேணுங்கறது.

நன்றிங்க ஆசானே.....

பழமைபேசி said...

நாளுங்கெழமையும் நல்லாப் பார்த்து கலக்குங்க சாமி... மனசு நிறைஞ்சு மக்க நல்லா இருங்க சாமொ!!

ILA (a) இளா said...

எம்பட பொட்டியில நோன்பி தெரியற மாதர பண்ணுனீங்கன்னா நல்லா இருப்பீங்க

Mahi_Granny said...
This comment has been removed by the author.
Mahi_Granny said...

பெரிய பண்ணை, மணியக்காரன் , அருமைக்காரன், பெரிய மாப்பிளை எல்லாமே நல்லா இருக்கு. . நோம்பின்னாலே என்னான்னு தெரியாது எனக்கு. ஆனாலும் உங்க ஊர்க்காரர் அனைவரிடமும் புழங்கும் இந்த தமிழின் அழகே தனி தான்

அமர பாரதி said...

இப்பிடி ரகசியத்த வெளிய சொல்லிப் போட்டிங்களே மாம்சு. அடுத்த விஸ்க்கா பாத்துக்குவம்.

//”எலவட்ட நோம்பி” கொண்டாடும்போது // அந்த நோம்பியப்ப என்ன மறக்காம மறந்துறாதீங்க.

அமர பாரதி said...

மஹி அம்மா,

நோம்பி என்றால் பண்டிகை அல்லது திருவிழா.

ப.கந்தசாமி said...

நேரத்தோட வந்துடறமுங்க. பந்தக்கெடாவுல தலைக்கறி எனக்குத்தானுங்கோ.

தாராபுரத்தான் said...

பங்காளிக நாங்க வரமா இருப்போமா..

ஆரூரன் விசுவநாதன் said...

//ILA(@)இளா said...

எம்பட பொட்டியில நோன்பி தெரியற மாதர பண்ணுனீங்கன்னா நல்லா இருப்பீங்க//

தென்ன இப்புடிச் சொல்லிபோட்டீங்க மாப்ளே. செஞ்சுபோடுவோம் வுடுங்க

ஆரூரன் விசுவநாதன் said...

//Palaniappan Kandaswamy said...

நேரத்தோட வந்துடறமுங்க. பந்தக்கெடாவுல தலைக்கறி எனக்குத்தானுங்கோ.//

கோழியோப்படவே வந்திருங்க. கலக்கிப் போடுவமுங்க இந்த வருசம்

ஆரூரன் விசுவநாதன் said...

//Blogger தாராபுரத்தான் said...

பங்காளிக நாங்க வரமா இருப்போமா..//

ஆமாமுங்கண்ணா, நேரத்தோட, வந்திருங்க.

G.Ganapathi said...

தேனுங்க நெசமாலுமே என்ன ஊருக்கு அனுப்பிபுட்டு இப்படி கொண்டடரீன்களே .... தேனுங்க நெசமாலுமே என்ன ஊருக்கு அனுப்பிபுட்டு இப்படி கொண்டடரீன்களே ....

cheena (சீனா) said...

அன்பின் ஆரூரன் - பாசமான அழைப்பு - சொந்த பந்தமெல்லாம் கூடுற திருவிழால்ல - ஜமாய்ச்சிடுவோம்ல - வந்துடறோம் மொத நாளே - சங்கமம் வெற்றியுடன் - மகிழ்ச்சியுடன் - சிறப்பாக நடைபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

kathir said...

அப்படிப்போடு !!! :)))

Radhakrishnan said...

வர இயலாவிட்டாலும் வாழ்த்துகள் தாங்கிய கவிதை ஒன்றை எழுதி அனுப்புகிறேன்.

முனைவர் இரா.குணசீலன் said...

நம்ம வீட்டு நிகழ்ச்சியாச்சே...

சரியா வந்திடுவோம்ல...

ஆரூரன் விசுவநாதன் said...

நண்பர்கள் அனைவரையும் மீண்டும் ஒரு முறை வரவேற்கிறேன். நன்றி

'மனசு'அன்பு. said...

''உங்களுடன் வந்துவிட்டேன்!'', ''

'மனசு'அன்பு. said...

நமக்கு பிடித்த செய்திகளை பகிர்ந்து கொள்ளும் இடம் ..
நாங்க வரமா இருப்போமா..

லதானந்த் said...

நிகழ்ச்சி சிறப்புற நடைபெற எனது வாழ்த்துக்கள்