Friday, October 09, 2009

சிலை அரசியல்.....

இந்த ஒரு வாரம என்ன பதிவு போடலாம்னு
யோசிச்சு ஊரெல்லாம் சுத்தி சுத்தி வந்து,
கண்ணுக்கு பட்டதெல்லாம் போட்ட புடிச்சி
வச்சனுங்ணா.   நம்ம மக்கள் தான் போட்டா
தெங்கன்னு........  வேற கேட்டு
அன்புத் தொல்லை குடுக்கறாங்களே.........

சரி விசயத்துகு வருவோம்..... நம்ம கதிருக்கு
வாழ்த்து பதிவெல்லாம் போட்டோம்,
(டெம்போலாம் வச்சுகடத்துனோங்கற மாதர)
 மனுசன் கண்டுக்காம "குட்நைட்ன்னு"
சொல்லிபோட்டு   போயிட்டாருங்ணா.

நானும் கொஞ்சம் சாட மாடயா   கேட்டுப்பார்த்தா.
...ம்ஹும் ஒன்னும் தேறலைங்ணா.......
அப்பறம் தனியா கட பூட்ற நேரத்துல கட்டிங்
தேடி அலைஞ்சு ....ஒன்னும் நடக்கலிங்ணா....


நொம்ப கலச்சு வூட்டுக் போய் நல்லா
அசந்து போய் தூங்கி போட்டனுங்.


திடீர்னு பக்கத்துல  இருந்த கேமராவுக்குள்ளார
இருந்து டொக்..டொக்...னு சத்தம்.....
பயந்து போய் திறந்தா.......காலம்பற எடுத்த
போட்ட வுல இருந்த பெருந் தலையெல்லாம்
வெளிய வந்து பேச ஆரம்பிச்சிட்டாங்ணா....

இருக்கறவுங்க பேசறதையே கேக்கமுடியல
இன்னும் செத்துப் போனவுங்க பேசறத.....
தாரு கேக்கறதுங்கறீங்களா.....சரி..... சரி....




அவிங்க போட்டாவையும், பேசினதையும்
பதிவாபோட்டுட்டனுங்ணா.... அதுல பாருங்க
தாரு தென்னா பேசுனாங்கன்னு
மறந்து போச்சுங்ணா....




போட்டாவையும்  பேசுனதையும் பதிவா
போடறனுங்ணா.....தாரு பேசிருப்பாங்கன்னு
நீங்களே முடிவு பண்டிக்கோங்ணா....









                                                                    
 


நாலு பக்கம் தட்டி வச்சு
நடுவுலதான் என்ன வச்சு
காக்கா,குருவிக் காக்கிப்புட்டான் கக்கூஸா
கருமம், .   வருசத்துக்கு 
ஒரு முறைதான் சர்வீஸாம்.





சும்மா இருந்த என்னவச்சு அரசியல்-நான்
ஆரியனா? திராவிடனா? ஆய்வு செய்யுது அறிவியல்
சாதி ஒழிப்பும், சமத்துவமும் மேடையில்
சதை வணிகம்,சாராயம், -வாழ்வியல்.


 
தல, தல ன்னு திரிஞ்சதெல்லாம் காணலை
தறுதலைகள் மட்டும் இப்போ கட்சியில
கட்டுனவ என்ன ஆனா தெரியல
எட்டாவதா வச்சிருந்தவ…….. ஆட்சியில






வாய் கிழிய வசனம் பேசி
வழி நெடுக வசூல் பண்ணி
சேத்துக் கிட்டான் சொத்து,நாடு முழுசும்
சனம் சோத்துக்கிங்கே சாகுதடா தெனமும்.




கருப்புச் சட்ட போட்டுக் கரான்
மஞ்ச துண்டும் போத்திக் கரான்
நாத்திக கர்ஜனை.-நடுநடுவே
நவக்கிரகத்துக்கும் அர்ச்சனை.



வருசத்துக்கு ஒருதரம்
காருவண்டி பறக்குது
திருவிழாவில் தொலைஞ்ச கணக்கா
ஊரு சனம் முழிக்குது.




 இருக்கும் வரைக்கும்  உசுர எடுத்த
செத்த பின்னும் சிலைய வச்சான்
எடுத்துபுட்டான் கைய ஒருத்தன் ராவுல-இனி
எத்தன தல உருளப்போகுமோ  நாட்டுல....


 
ஒருத்தன் கைய ஒடைக்கிறான்
ஒருத்தன் தலைய உடைக்கறான்
காக்கிச் சட்டத் திருடனும்
காவலுக்கும் நிக்கிறான்.







30 comments :

ஈரோடு கதிர் said...

//நானும் கொஞ்சம் சாட மாடயா கேட்டுப்பார்த்தா.
...ம்ஹும் ஒன்னும் தேறலைங்ணா.....//

சத்தம் போடாதீங்க....பாஸ்
(கொடை - கேபினட் மீட்டிங் போகலை)
நாளைக்கு.....

க.பாலாசி said...

//கருப்புச் சட்ட போட்டுக் கரான்
மஞ்ச துண்டும் போத்திக் கரான்
நாத்திக கர்ஜனை.-நடுநடுவே
நவக்கிரகத்துக்கும் அர்ச்சனை.//

அண்ணா அண்ணா அடிக்காதிங்னா....எனக்கும் அவருக்கும் சம்பந்தமில்லிங்க...ஆரூரன்னா யாருன்னே எனக்கு தெரியாதுங்னா...என்ன விட்டுடுங்க....(விரைவில் ஒரு டாட்டா சுமோ வரப்பபோகுதுன்னு நினைக்கிறேன்)

//ஒருத்தன் கைய ஒடைக்கிறான்
ஒருத்தன் தலைய உடைக்கறான்
காக்கிச் சட்டத் திருடனும்
காவலுக்கும் நிக்கிறான்.//

ஆகா.... போலீஸ்காரரையும் விடலையா? ஸ்ஸ்...இப்பவே கண்ணகட்டுதே....

சிலை அரசியல கிழிச்சி தொங்க போட்டிருக்கீங்க....நல்லாருக்கு....

ஆரூரன் விசுவநாதன் said...

அட....அட....இத.. இத... இதத் தான எதிர்பார்த்தோம்.....


மறந்து போடாதீங்...கதிர்....

ஆரூரன் விசுவநாதன் said...

எத்தன தடவ கிழிச்சாலும் இவனுங்களுக்கு பத்தாது பாலாஜி.....

டாடா சுமோ என்ன.....எதுல வேணாலும் வரட்டும்....

சொல்லுவேன்.....சொல்லுவேன்....சொல்லிகிட்டே இருப்பேன்......

vasu balaji said...

/பட்டதெல்லாம் போட்ட புடிச்சி/

போட்டோ

/நொம்ப கலச்சு /

நெம்ப களைச்சு.

/முடிவு பண்டிக்கோங்ணா..../

பண்ணிக்கோங்ணா

பின்னூட்டம் போட்டு கண்டுக்காம இருக்குறாரு கதிர்.

கவிதை கலக்குது. தாருன்னு சொன்னா ஆட்டோ வருமேன்னு கலங்குது

ஈரோடு கதிர் said...

//எட்டாவதா வச்சிருந்தவ…….. ஆட்சியில//

கொஞ்ச நஞ்ச குசும்பு இல்ல

அதுதான் சிலை வைக்க என்னனென்மோ பண்ணுனது மறந்து போச்சா...


//காக்கிச் சட்டத் திருடனும்//
உள் குத்துல ஒரு சைடு குத்தா...
வெள்ளச் சட்டைக்காரங்கதானே நிக்கிறாங்க

கலகலப்ரியா said...

silaiya vachchu polanthutteenga ponga.. :-s

கலகலப்ரியா said...

vote poda mudiyala.. avvvv.. appalikka try panren..

Unknown said...

நானு வழி தெரியாம இங்க வந்துட்டனுங்..
இனிமே இந்தப்பக்கம் தல வச்சு படுக்க மாட்டனுங்..


ஆனா ஓட்டு மட்டும் போட்டுடனுங்..
அது ஏதோ சனநாய கடமையாமே??!!

ஹேமா said...

நையாண்டிகளுக்கே நையாண்டி.கவனமா இருங்க ஆரூரன்.உங்களுக்கும் ஆபத்து.

பிரபாகர் said...

நல்லா யோசிச்சிருக்கீங்க... புகைப்படங்களுடன் அருமை...

ஓட்டும் போட்டாச்சு. கலக்கல் நண்பரே...

பிரபாகர்.

சத்ரியன் said...

ஆரூர்,

கதிர் கட்டிங்குக்கு ரெடி பண்ணிட்டிருந்தா இந்த கவிதையே வெளியில தெரியாம இல்ல போயிருக்கும்?

நல்லா போட்டிருக்கீங்க மானங்கெட்டவனுகளுக்கு வேட்டு (கவிதை).

கெளப்புங்க பட்டைய....!

ஆரூரன் விசுவநாதன் said...

//வானம்பாடிகள்//

தென்னங்ணா....பண்டறது...நீங்க மெட்ராஸு போய் நொம்ப வருச மாச்சுங்ளா.....எங்கூரு பேச்சு மறந்து போச்சு பாருங்க.... ஒருவாட்டி வந்துபோட்டு போங்க......அட ஒரு போட்டா புடிச்சாவது அனுப்புங்ணா......

ஆரூரன் விசுவநாதன் said...

அதுங் கதிர்....காக்கிச்சட்டைன்னாத்தான் தெரியும்...வெள்ளைச் சட்டைன்னா....தெரியாதுபாருங்க....

அப்பறம் கதர் சட்டை கோஷ்டி கோவிச்சுக்கும்.....நாங்க என்ன திருடனான்னு?.......கொள்ளைக்காரங்க வேற திருடங்க வேறதான கதிர்...

ஆரூரன் விசுவநாதன் said...

வாங்க ப்ரியா......

எல்லாம் நீங்க குடுக்கற தைரியந்தான்........பாலா சார் நடத்தின பதிவர் சந்திப்பில சந்திச்சப்பறம் கொஞ்சம் தைரியம் வந்திருச்சுங்....க்கா....(இதுக்கு வேற நீங்க கோவிச்சுக்குவீங்க)

அப்பறம் ஓட்டுவேற போடறேன்னு சொல்லீட்டீங்கள்ள......விட்டுருவமா......

ஆரூரன் விசுவநாதன் said...

//பட்டிக் காட்டான்//


தெரிஞ்சோ...தெரியாமலோ.... சனநாயகத்தைக் காப்பாத்திட்டீங்க.....ராசா.........


ஆட்டோ, கீட்டோ வந்தா கூப்பிடுங்க...... எதுக்கும் கொஞ்சம் சாக்கிரதையாவே இருந்துக்கோங்க........

நன்றி

ஆரூரன் விசுவநாதன் said...

//ஹெமா//


எத்தனயோ இழந்துவிட்டோம்.....

" பிறந்து பிறந்து ஆளாக
வளர்ந்து வளர்ந்து மடியும்,
மீண்டும் தான் புதிய புதிய ஜனனம்
பயமென்னடா எமனிடம்"
என்ற பாடல் வரிகள் எங்கோ கேட்கின்றன....


உங்கள் அன்பிற்கு நன்றி ஹேமா.....

ஆரூரன் விசுவநாதன் said...

//சத்திரியன்//

நன்றி சத்திரியன்.....

ஆரூரன் விசுவநாதன் said...

//பிரபாகர்//


நன்றி பிரபாகர்....உங்கள் மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்கற வரைக்கும் என்னை யாரும் அசைச்சிட முடியாது...

டிஸ்கி:
ஹி....ஹி.....
சன் மியூசிக் லேட்நைட் பார்த்ததோட விளைவு.... ஒன்னும் மனசுல வச்சுக்காதீங்க...

S.A. நவாஸுதீன் said...

எந்தத்தலையையும் விட்டுவைக்கலையே. சரிதான்

ஆரூரன் விசுவநாதன் said...

வாங்க நவாஸ்.....

நான் என்ன பன்றதுங்க நவாஸ்......தலைதான இதெல்லாம் சொன்னது......

நன்றி

இளந்தமிழன் said...

http://ilanthamizhan.blogspot.com/2009/09/blog-post_30.html

புலவன் புலிகேசி said...

அருமை....

அன்புடன் நான் said...

தல, தல ன்னு திரிஞ்சதெல்லாம் காணலை

தறுதலைகள் மட்டும் இப்போ கட்சியில…

கட்டுனவ என்ன ஆனா தெரியல

எட்டாவதா வச்சிருந்தவ…….. ஆட்சியில//


இருக்கும் வரைக்கும் உசுர எடுத்த

செத்த பின்னும் சிலைய வச்சான்

எடுத்துபுட்டான் கைய ஒருத்தன் ராவுல-இனி

எத்தன தல உருளப்போகுமோ நாட்டுல....






ஒருத்தன் கைய ஒடைக்கிறான்

ஒருத்தன் தலைய உடைக்கறான்

காக்கிச் சட்டத் திருடனும்

காவலுக்கும் நிக்கிறான்.//


அருமை முழுமையாய் ர‌சித்தேன். பார‌ட்டுக்க‌ள்.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி.......கார்த்திகேசு

நன்றி.....புலவன் புலிகேசி

நன்றி.....இளந்தேவன்

பித்தனின் வாக்கு said...

சத்தியமான உண்மைகளை நச் என்று சொல்லியிருக்கின்றிர்கள். நல்லா இருக்கு, இது எல்லாம் ஒரு திட்டா? இதை வீட எத்தனை பார்த்திருப்போம். கவலைப் படாதிர்கள் டாடா சுமாவேல்லாம் வராது. அவர்கள் சூடு சொரனை கெட்டு போய் ரொம்ப நாள் ஆகுது.
நீங்க பணவிசயத்தில் ஏமாத்தினால்தான் எல்லாம் சேர்ந்துவரும், ஏன் என்றால் அவர்களுக்கு இப்ப பணம்தான் குறி.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி தோழர் பித்தன்

velji said...

காக்கிச் சட்டை திருடனும் காவலுக்கு நிக்கிறான் -தலைகளை மட்டும் சொல்லி என்ன செய்ய என்பது போல்..,சரியாய் முடித்திருக்கிறீர்கள்!

vasu balaji said...

தீபாவளி வாழ்த்துகள் ஆரூரன்

S.A. நவாஸுதீன் said...

நண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!