ஆசை முகமறந்து போச்சே-இதை
யாரிடம் சொல்வேனடி தோழி….
நேசமறக்கவில்லை நெஞ்சம்-எனில்
நினைவு முகமறக்கலாமோ?..........
கண்ணில்தெரியுதொரு தோற்றம்-அதில்
கண்ணனழகு முழுதில்லை
நண்ணுமுக வடிவு காணில்-அந்த
நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்………
கண்ணன்முகமறந்து போனால்-இந்தக்
கண்களிருந்து பயனுண்டோ?..
வண்ணப்படமுமில்லை கண்டாய்-இனி
வாழும் வழியென்னடி தோழி…
குளிர் மிகு வாடைபோல்
மிகுந்த ஈரத்துடன்,
மிகத்தெளிவாக, அதே நேரத்தில்,
காதலாகி, கசிந்து, கண்ணீர் மல்க,
தேனில் குழைத்த குரலோடு….
அவளே உருகி, தன் உணர்வை
வெளிப்படுத்துவதுபோல்
அவளே உருகி, தன் உணர்வை
வெளிப்படுத்துவதுபோல்
உயிரோட்டத்துடன்
அந்தப் பெண் பாடிக்கொண்டிருந்தாள்.
செம்பட்டுப்புடவை அணிந்து
தலைநிறைய
அவனுக்குப் பிடித்த வாசத்துடன்,
பிடிக்காத பெயர் கொண்ட அந்த
……மல்லிகைப் பூவை நெருக்கமாகக் கட்டி,
……மல்லிகைப் பூவை நெருக்கமாகக் கட்டி,
நான் தெரிகிறேனா என்று
இடைக்குப்பின்னிருந்து
எட்டிப்பார்க்கும் கூந்தலில்
தொங்கவிட்டுக் கொண்டு…
பொன்னும் வைரமும் எங்கும் ஒளிவிட
மகிழ்ச்சியில் உள்ளம் பொங்கி வழிந்திட,
முகமுழுதும் பிரகாசமாய்,
சிவந்த ஈறுகள் தெரிய……………
சிவந்த ஈறுகள் தெரிய……………
….
சட்டென ஒட்டிக்கொள்ளும்… தொற்றுபோல்….
பளிச்சிடும் புன்னகையுடன்,
காதிற்கும் பின்னும், பிடறியிலிருந்தும்
இறங்கி
வழிந்தோடிய மென் கருப்பு
மயிற்கால்கள்,
அவள் நிறத்தை
இன்னும் எடுப்பாக்கியது.
ஏகாந்தம் கூடுகிறது…… என் நினைவிழக்கிறேன்…….
ஏற்படும் அதிர்வுகளால்
முகம் மேலும் சிவப்பாக,
கண்களை மூடிக்கொண்டு
பாடும் பாட்டில்
தன்னை மறந்து
அவள் பாடிக்கொண்டிருந்தாள்
.
யாரோ……… யாரையோ நினைத்து………….யாரோ பாடுவதாக………
எதற்காகவோ பாடியது,……….
ஆனால் இப்பெண்ணால் எப்படி தானே,
தனக்காகப் பாடுவதுபோல் பாட முடிகிறது.
இந்த இடத்திற்கு, இந்தப் பாடல்
பொருத்தமானதுதானா?.......
குரலின் வசீகரம் என்னை மயக்குகிறது……….
தன்னிலவு அவள் முகமோ,
தாரகைகள் நகையோ
விண் நீளம் கார்குழலோ……
“ மேவும் எழிலெல்லாம்
மெல்லியின்
வாய் கள்வெறியோ?
என்று இவளைப் பார்த்துத்தான்
எழுதியிருப்பானோ என் பாட்டன்
.இருக்காது………அவன் இவளைப் பார்த்தால்
எதுவும் எழுதியிருக்கமாட்டான்.
வாயடைத்துப் போயிருப்பான்.
எழுதுவதே மறந்து போயிருக்கும் அவனுக்கு.
நானே சொக்கிபோய் கிடக்கும் போது
அவன் என்ன செய்வான்….பாவம்………..
அவனுக்கு வார்த்தைகளே வராது….
சித்தம் தடுமாறும் என்றார்கள்.
தவறு,…..மிகத் தவறு………
எதைப் பற்றியுமான சிந்தனையும்
இல்லை
என்னுள். நிச்சலமனாக ஆனால்
எதையோ தேடும் நிலையில் பரபரப்பு……
மீண்டும் நினைவிழக்கிறேன்……….
எல்லோரும் என் முகத்தைப் பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள். நான் அவளழகில்
தொலைந்திருந்தேன்.
ஏதோ உணவு கொடுக்கப்பட்டது…..
ஏதேதோ பேசுகிறார்கள்
நிறைய சிரிக்கிறார்கள்.
அவளை எனக்கு பிடித்திருக்கிறதா? என்று
யாரும் என்னை கேட்கும் அவசியம்
இல்லாதிருந்திருக்க வேண்டும்.
அவர்களாகவே முடிவு செய்துவிட்டார்கள்.
எங்களிருவருக்கும்
திருமணம் செய்து வைப்பதென்று..........
அவள் முகமும், இனிமையான குரலும்
என்னைச் சுற்றி சுற்றிவர…..
எனக்கும் அங்கு நடந்த சம்பவங்களுக்கும்
எந்தத் தொடர்புமற்று……
எங்கோ மிதந்து கொண்டிருந்தேன்.
எங்கள் திருமணம்
ஓரிரு மாதங்களுக்குள் நடந்து முடிந்தது.
மீதிப் பகுதியை நாளை தொடர்வேன்.............
16 comments :
ஆஹா... அருமை... இனிமையான பதிவு.. ! ஆசை முகம் மறந்து போச்சே பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்...! பாடல் மறந்து போச்சேன்னு சொல்ல முன்னாடி ஞாபகப் படுத்தியமைக்கு நன்றி ஆரூர்..!
வருகைக்கும் பதிவிற்கும்
நன்றி ப்ரியா........
நாளையும் தொடர்கிறேன்.
ஆரூரன் எங்கே உங்களைக் காணோம்.
சுகம்தானே !அழகான கண்ணன் பாடலோடு அழகான புனைவு.ரசித்தேன்.
மிக்க நலம் நலமறிய ஆவா
அலுவலகப் பணி........இனி தொடர்வேன்.
நன்றி ஹேமா.......
அண்ணே வாங்க. நடுவுல வந்தப்பவும் மறக்காம நம்மள மறந்ததுக்கு என்ன பண்ணலாம்னு சொல்லிட்டா வசதி. அருமையான புனைவு. எனக்கும் ரொம்ப பிடிச்ச பாட்டு. அதுவும் டி.கே.ஜெயராமன் பாடினது வித்யாசமா இருக்கும். ஆமாம். எங்களுக்கெல்லாம் இடுகை போடுறது ஆஃபீஸ் வேலையிலையே சேந்துடிச்சே. உங்க ஆஃபீசில இதுக்கு ஒரு போராட்டம் நடத்தியே ஆகணும். லேட்டா வந்தாலும் லெவலாத்தான் வந்திருக்கீங்க.
வாங்க பாலாண்ணே.......ஏதோ சின்னப்பயன்.....தெரியாம செஞ்சுபுட்டன்.....
இனி தொடர்ந்து வந்து விடுவேன்....அன்பிற்கு
நன்றி....
//……மல்லிகைப்//
அட... குண்டு மல்லி... குண்டு பிடிக்காதுங்களா...
.......லொல்லப்பாரேன்...
மாசக்கணக்கில பார்க்காம உங்க முகமே மறந்து போச்சு
//ஆசை முகமறந்து போச்சே............ //
னு பாட்டு வேறயா....
நன்றி கதிர்......
சா....தீ......மல்லி தலைவா.....
மறந்து போச்சா?........அய்யய்யோ? இதக் கேக்க ஒரு ஆளில்லையா......?
வரேன்...... வரேன்.... நேர்ல வந்து பேசிக்கறன்.
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் இந்த இடுகை கண்டு மகிழ்ந்தேன். மீண்டும் பிறப்பெய்தும் தங்களின் எழுத்துக்கள் என்ன தவம் செய்தனவோ என்றே தோன்றுகிறது.
//காதிற்கும் பின்னும், பிடறியிலிருந்தும்
இறங்கி வழிந்தோடிய மென் கருப்பு
மயிற்கால்கள், அவள் நிறத்தை
இன்னும் எடுப்பாக்கியது.//
அழகினை ஆராதிக்கும் இந்த வரிகளின் வசீகரம் மிக பிடித்திருக்கிறது.
நல்ல இடுகை...
.இருக்காது………அவன் இவளைப் பார்த்தால்
எதுவும் எழுதியிருக்கமாட்டான்.
வாயடைத்துப் போயிருப்பான்.
எழுதுவதே மறந்து போயிருக்கும் அவனுக்கு.
நானே சொக்கிபோய் கிடக்கும் போது
அவன் என்ன செய்வான்….பாவம்………..//
நல்லாயிருக்கு...
நீங்க முனைவரா?
இந்தக் கொட்டாய்லயும் பாட்டுதான் ஓடிட்டு இருக்கா? கேட்டு இரசிச்சேன், இரசிச்சேன்...
இந்தக் கொட்டாய்லயும் பாட்டுதான் ஓடிட்டு இருக்கா? கேட்டு இரசிச்சேன், இரசிச்சேன்...
நன்றி நண்பா
சி.கருணாகரசு....
//நீங்க முனைவரா?//
இல்லை நண்பரே......
இப்பொழுதுதான் எழுதப் பழகி வருகிறேன்.
வருகைக்கும் இடுகைக்கும் நன்றி
ரொம்ப நல்லாருக்குங்க. தொடர்ச்சிக்காக காத்திருக்கிறேன்...
பிரபாகர்.
வாங்க பாலாசி.......
நன்றி
நன்றி பிரபா....
Post a Comment