செய்தி:
முல்லைப்
பெரியார் வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு திகைப்பும், வியப்பும்
ஏற்படுத்துகிறது.
உச்ச
நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த இயலாத வகையில் புதிதாக ஒரு சட்டத்
திருத்தத்தை நிறைவேற்றிட கேரள முதல்வர் போன்று எனக்கு துணிவில்லை.
1998ல்
இருந்து நடைபெரும் வழக்கில் 11 ஆண்டுகளுக்குப் பிறகும் தீர்ப்பை எதிர் நோக்கும்
நேரத்தில் மீண்டும் ஒரு விசாரணை, ஐந்து நீதிபதிகள் தலைமையில் குழு, என்ற
முடிவு-இன்னும் எத்தனை ஆண்டுகளோ என்று வருத்தப் படாமல் இருக்க முடியவில்லை.
தாமதிக்கப் பட்ட நீதி- மறுக்கப்பட்ட நீதி என்ற ஆங்கில பழமொழி பலித்துவிடாமல் இருக்க-
யாரிடம் போய் முறையிடுவதென்றே தெரியவில்லை.
நினைவிற்கு வந்தது:
விடங்கொண்ட
மீனைப் போலும்
வெந்தழல்
மெழுகைப் போலும்
படங்கொண்ட
பந்தழல்வாய் பற்றிய தேரை போலும்
இடங்கொண்ட
ராமபாணம் செருக்களத்து உற்ற போலும்
கடன்
பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் ஈழ வேந்தன்.
-கம்பன்
சராசரி இழிச்ச வாயன்(இந்தியன்):
உச்ச
நீதிமன்றத்தின் இந்த முடிவிற்கு,தமிழக அரசின் வழக்கறிஞர் முதலில் ஆட்சேபம்
தெரிவித்தவர், பின் எழுத்துப் பூர்வமாக ஏற்பதாக எழுதிக் கொடுதிருப்பதாக முல்லைப்
பெரியார் அணை உரிமை மீட்புக் குழுவின்
தலைவர், பழ.நெடுமாறன் குற்றஞ்சாட்டியுள்ளாரே …………….
செய்தி:
இடைத்
தேர்தலில் அனைத்து கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில்லை என
முடிவெடுத்தால் தேர்தலில் போட்டியிடுவோம்-மருத்துவர்
ராமதாஸ்.
ஆளுங்கட்சி
எதிர்க்கட்சி என்றார்கள்
எதிர்க்கட்சி
என்று ஏதுமில்லை
ஆளுங்கட்சி,
ஆளவிரும்புகிற கட்சி
என
இரண்டு கட்சிகள் தான்
-தமிழன்பன்
சராசரி இழிச்சவாயன்:
இன்னா.....டாக்டரு…….இன்னாதிது?
கெலிச்சுப் போய் நீங்க வாங்குவீங்க…..எங்களுக்காண்டி வேற கேமா? (game)
லாபத்திலயா
பங்கு கேக்கறோம்…….எதோ புரோக்கரேஜ் மாதிரி ஒரு சின்ன டிப்ஸ்
வாங்கிக்கறம்…..அது பொறுக்கலையா? உங்களுக்கு.
செய்தி:
தேசிய
ஒருமைப் பாட்டு வாரவிழா- ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரம் நடைபெறும். மாவட்ட ஆட்சியர்
சுடலைக் கண்ணன் தகவல்
19/11/2009-
தேசிய உறுதிமொழி தின விழா
20/11/2009-பிற்பட்டோர்
&சிறுபாண்மையினர் நல தினம்
21/11/2009
–மொழி
ஒற்றுமை தினம்
22/11/2009-நலிவுற்ற
பிரிவினர் தினம்
23/11/2009-கலாச்சார
ஒற்றுமைதினம்
24/11/2009-மகளீர்
தினம்
25/11/2009-பாதுகாப்பு
தினம்
நினைவிற்கு வந்தது:
வெளுத்ததெல்லாம்
பாலுமல்ல இந்தியாவே- வெளி
வேசமெல்லாம்
உண்மையல்ல இந்தியாவே.
பழுத்த
சூதர் தலைவரைப்போல் இந்தியாவே-இங்கு
பழகக்
கண்டோம் விழித்துக் கொள்வாய் இந்தியாவே
உதட்டிலே
தேன் உள்ளத்திலே நஞ்சு இந்தியாவே-கொண்ட
உத்தமர்கள்
மெத்த உண்டு இந்தியாவே
சிலந்திவலை
ஈயைக் கொல்லும் இந்தியாவே- தனிச்
செல்வர்
கட்சி பொதுமை கொல்லும் இந்தியாவே
மலம்
விரும்பும் ஜந்து போல்வார் இந்தியாவே- பண
மகிமை
பேசிக் கொள்கை விற்பார் இந்தியாவே.
பணத்தின்
ஜாலம் பசப்பு வார்த்தை இந்தியாவே- கொள்கை
பறித்திட
நீ பார்த்திடாதே இந்தியாவே
அனைத்தும்
தியாகம் செய்தும் இந்நாள் இந்தியாவே- வெற்றி
அடைய
லெனின் கொடியின் கீழ் நில் இந்தியாவே
-ஜீவா
கவிதைகள்
சராசரி இழிச்ச வாயன்:
தேசியன்ன
இன்னாதுபா…..ஒரே மெரசளாக் கீது…?
பின்னாடிக்கறவனையும், நலிஞ்சவனையும், நம்ம மினியம்மாளையும் முன்னாடி இட்டாறதுதான் தேசியம் மாமு……..
******************************************
செய்தி:
இந்தியாவில்
குடும்ப அமைப்புகள் சீரழிவதற்குக் காரணம் ஒழுக்கக் கேடான ஆண் பெண் உறவுகளே……….தன்னார்வ
தொண்டு நிறுவனம் அறிக்கை
படித்ததும் நினைவிற்கு வந்தது
அப்பனுக்கு
அறுபதினாயிரம் மனைவிகள்
ஒரு
சந்தேகமும் இல்லை
மகனுக்கு
ஒரு மனைவி
ஆயிரம்
சந்தேகங்கள்
-கபிலன்
சராசரி இழிச்சவாயன்:
நோ……..கமெண்ட்ஸ்………..
**************************************************
செய்தி:
செல்போனில்
வேகமாக பரவும் ஆபாச காட்சிகள்
மாணவியிடம்
சில்மிஷம் செய்ததாக ஆசிரியருக்கு தர்ம அடி
பெருந்துறை
பெண் மர்ம சாவு…கள்ளக்காதலனிடம் விசாரணை
படித்ததும் நினைவிற்கு வந்தது:
நமது
காலத்தில் காதல் பண்டைக் காலத்து மக்களின் காதலைப் போல் முற்றும் பாலுறவு
வேட்கையிலிருந்து பிறந்ததல்ல. முதலாவதாக, இது பரஸ்பார காதலாக இருக்கிறது. இந்த
அம்சத்தில் ஆணுக்குச் சமமாக பெண் இருக்கிறாள்.
இரண்டாவதாக இருதரப்பினரும் அன்புடையவர் அருகில் இல்லாத, அதாவது பிரிவைப்
பெரிய துன்பமாக கருதுகின்றனர். அதனால் அவர்கள் காதல் தீவிரமும்,நிரந்தரமும் பெற்று
விளங்குகிறது.
அவர்கள்
ஒருவரையொருவர் அடைய உயிரைப் பணயம் வைப்பதற்கு கூட முன்வருகின்றனர்.
பிரடரிக் எங்கல்ஸ்
குடும்பம்,
தனிச் சொத்து,அரசு ஆகியவற்றின் தோற்றம்
சராசரி இழிச்சவாயன்:
தோழர்…சொன்னா
கரீட்டாத்தான் இருக்கும்பா…….. அவுரு
அவுங்க நாட்டப் பத்தித்தான் சொல்லிருப்பாரு………நாங்க சோசலிஸத்தை வுட்டு நாளாச்சுல்ல……..இப்பல்லாம்
நாங்க முதலாளில்ல……
30 comments :
//அப்பனுக்கு அறுபதினாயிரம் மனைவிகள்
ஒரு சந்தேகமும் இல்லை
மகனுக்கு ஒரு மனைவி
ஆயிரம் சந்தேகங்கள்//
யப்பாடி, கபிலனோட கவிதை ஆயிரம் அர்த்தம் சொல்லுதே!!!!
thank you for this sharing!
comments by commanman are superb!
thank u velji
thank u chinna ammini......
//மெரசளாக் //
அப்டின்னா..?
வித்யாசமான பதிவு... அசத்தல் ப்ளஸ் கலக்கல்...
கம்பனும்... கபிலனும்.. தமிழன்பனும்... கூடுதல் ப்ளஸ்...
கைய குடுங்க சாமி. பிரமாதம். நோ கமெண்ட்ஸ் கவிதை அசத்தல். இப்புடி முக்கு விடாம அடிச்சாலும் எவனுக்கும் உறைக்காதுதான். ஆனாலும் சலிச்சிப் போயாவது மாறுவானோ.
ச்சேரி. தமிழர் நல வாழ்வுக்காக கனாக்கண்டா மாதிரி பிரணாப்பு பக்சேக்கு தூது போயிருக்காராம்லோ. நாங்க நம்பீட்டம். நீங்க ஒன்னுன்ஞ் சொல்லலையே. நம்பலையா?
அருமையான சாடல்கள் நண்பரே...
இதெல்லாம் அத நா.களுக்கு உரைக்காது.
பிரபாகர்.
நன்றி பாலாண்ணே.........
கவுண்டமணி செந்தில் காமெடி பழசாயிடுச்சில்ல..... பிரணாப் போனா என்ன இல்ல யாரு போனா என்ன?
நன்றி பிரபு.....
அடிக்கற மணியை அடிப்போம்
விடியும் போது விடியட்டும் ன்னுதான் இதெல்லாம்
நன்றி ப்ரியா......
//மெரசளாக் கீது//
பயமுறுத்தலா இருக்கு
கதம்பம் - கலக்கல்
நன்றி நவாஸ்.....
நல்ல நையாண்டி.
நல்ல கவிதைகள்.
அசத்தல்
நன்றி தோழர்.....
பின்னி பெடல் எடுத்து இருக்கீங்க...
// படித்ததும் நினைவிற்கு வந்தது
அப்பனுக்கு அறுபதினாயிரம் மனைவிகள்
ஒரு சந்தேகமும் இல்லை
மகனுக்கு ஒரு மனைவி
ஆயிரம் சந்தேகங்கள்
-கபிலன் //
படிச்சதும் எனக்கு வந்த சந்தேகமே வேற..
ஒன்ன வச்சுகிட்டே மனுஷன் இந்த அவதிப் படறானே... இவரு எப்படி 60000 த்த சமாளிச்சார்னே புரியலை. அதான் சந்தேகப் பட நேரமில்லாம போயிடுச்சுன்னு நினைக்கிறேன்.
கலக்கல் கதம்பம்ங்க
அதென்ன தேசிய உறுதி மொழி தினம்.... ஆமா... அதென்ன உறுதி மொழி எடுப்பாய்ங்க...
நன்றி நண்பர் இராகவன் நைஜீரியா......
ஒன்னு இருக்கும் போதுதான் பிரச்சனை.....ஒன்னுக்கு மேல போயிட்ட அப்பறம் 10 என்ன 100 என்ன என்று நினைக்கின்றேன்.
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி
வாங்க கதிர்....
இங்க தேசியம்னா என்னன்னே தெரியாத இவனுங்க என்ன எழவ எடுப்பானுங்களோ.....
நலிவடைந்தோர் முன்னேற்றம், தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம், பெண்கள் முன்னேற்றம் தான் தேசிய ஒருமைப்பாடுங்கிற இவனுங்க புரிதலை எங்க போய் முட்டிக்கறதுன்னுதான் தெரியல.....
எல்லா கட்சிகளுமே நல்ல கட்சிகள் தான்- ஆட்சிக்கு வரும் வரை.
எல்லா மனிதர்களும் யோக்கியர்கள் தான்- கஷ்டங்கள் வராத வரை.
எல்லா மிருகங்களும் சைவம் தான்- அதற்கு பசி எடுக்காத வரை.
வாவ்!
:-))
விஸ்வா...
இந்தியாவுக்கு எதுக்கு தேர்தல்!
thank you pa.raa.
thank you tamil udhayam
thank u vaal
////மெரசளாக் கீது//
பயமுறுத்தலா இருக்கு//
oho... epdi ellaam varthai pudikkaaynga.. avvvv... by heart panna try panren.. nanri arur..
தங்களின் கதம்ப பார்வை...வாசம் வீசுகிறது.
இழிச்ச?
இஃகிஃகி... இழிஞ்சி போன வாயா? இளிச்ச வாயாங்க அது??
அடுத்த மாசம் ஊருக்கு வர்றப்ப காட்டிக் கொடுக்குறேன்.. எப்படி வரிசைப்படுத்துறதுன்னு... இன்னும் format சரியா வரலையே?
கதம்பம்... இரசித்தேன்!
தங்களின் ஆன்மிக மற்றும் நல்ல கருத்துக்களுக்காக தங்களுக்கு விருது அளித்துள்ளேன். விருதினைப் பெற்று என்னை சிறப்பிக்கவும். நன்றி.
இடம்விட்ட மீனைப் போலும் எரிதணல் மெழுகுபோலும்
படம்எடுத் தாடுகின்ற பாம்பின் வாய்த்தேரை போலும்
தடங்கொண்ட ராமபாணம் செருக்க ளத்துற்ற போது
கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்
இது கவிச்சக்கரவர்த்தி கம்பன் எழுதியது அல்ல.
இது அவன் பெருமையை உரைத்த பெருங்கவிஞர் சீர்காழிக்கவிராயர் எழுதியது.
Post a Comment