Saturday, February 20, 2010

அவளுக்கான தாஜ்மகால்..





1989 ம் ஆண்டு, அப்போது,  கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பில் இறுதியாண்டு மாணவன் அவன்.  கல்லூரி தமிழ்ப் பேரவையினுடைய தலைவன்.  கல்லூரி நிர்வாகத்தின் செல்லப் பிள்ளை, முதல்வரும், ஆசிரியர்களும் நெருக்கமானவர்கள்.(வேறு வழி????????)

கல்லூரி நிர்வாகம், எதிர்கட்சியைச் சேர்ந்ததாக இருப்பினும், அவன் ஆளும் கட்சியைச் சேர்ந்தவன்.  ஆளும் கட்சியின் அனைத்துத் தரப்போடும் நெருங்கிய நட்புடையவன்.  கல்லூரிப் பேரவையின் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன், அன்றைய முதல்வரைச் சந்தித்து ஆசி பெற்றவன்.  பல அமைச்சர்களை அந்த கல்லூரிக்கு அழைத்துவந்து பல விழாக்கள் நடத்தியவன்.

அந்த திராவிட தலைவனின் பேச்சில் மயங்கியவன், மொழியும், இனமும்  இரண்டு கண்கள் என்று கூறிக்கொண்டு திரிந்தவன்.  தான் சார்ந்த அந்த கட்சியின் நலனுக்காக  எதையும் இழக்கும் துணிவு உடையவன்.  மேடைப்
பேச்சுக்கள் அவனின் மிகப் பெரிய பலம்.

அடிதடி சண்டைகள், காவல் நிலையம், அரசியல்வாதிகளிடம் தஞ்சம், கட்டைப் பஞ்சாயத்து இதெல்லாம் தினசரி நிகழ்ச்சி நிரலில் இருந்தது.  இளம் வயதுக்கே உரித்தான துடிப்பு, வேகம், இன்னும் எல்லாம்.........

அரசியல்வாதி அப்பா, சமையற்கட்டை தாண்டாத தாய், அவன் காலை எழுந்தவுடன் வெளியே சென்றால், நள்ளிரவில் வீடு திரும்புவது வாடிக்கை. எங்கு செல்கிறான், என்ன செய்கின்றான் என்று வீட்டில் யாருக்கும் தெரியாது, தெரிந்து கொள்வதிலும் யாருக்கும் அக்கரை இருந்ததில்லை.

இப்படித்தான் அவனை நான் அறிமுகப்படுத்த முடியும்.


1990ம் ஆண்டு சனவரி 26ம் நாள் புது தில்லியில் நடைபெற இருந்த குடியரசு தின விழாவில், கலந்து கொள்ள, பல்கலைக் கழகத்தின் சார்பில் அனுப்பப்பட்ட சாரணர் குழுவில், கல்லூரி முதல்வர் அவன்பால் கொண்ட பேரன்பினால், அவன் பெயரும் இணைக்கப்பட்டது. அதுவரை அவனுக்கு சாரணர் இயக்கம் பற்றி ஏதும் தெரியாது என்பது தான் உண்மை.

அந்த ஆண்டின் நவம்பர் மாதத்தின் இறுதி நாட்கள்......சென்னையில், தமிழகம் முழுவதிலிருந்தும் வந்து பல்வேறு கல்லூரிகளின் மாணவ மாணவியர்களின் குழுக்களோடு இணைந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்சில் புதுதில்லி நோக்கிய அவன் பயணம் தொடங்கியது.

புதுதில்லியில் இறங்கி,  பின், சுமார் ஒரு மாத காலம், தங்கி ஊர் சுற்றி, மகிழ்ந்த நாட்கள்  விரைவாகவே முடிந்துவிட்டது. எல்லோரும் அவரவர் வீடு திரும்பினர்.  புதிய நண்பர்களோடு சில மாதங்கள் கடிதத் தொடர்பு இருந்தது....பின்னாளில் அதுவும் குறைந்து, நின்று போனது,

அந்தக் குழுவில் இருந்த ஒரு பெண் மட்டும் ஏனோ அவனை மிகவும் பாதித்தாள். அவளோடு பேசிக் கொண்டிருப்பதை அவன் மனம் மிகவும் விரும்பியது. எதிலுமே விருப்பமின்றி திரிந்து கொண்டிருந்த அவன் மீது அவள் காட்டிய அக்கறை அவனை அவளிடம் மிக நெருங்க வைத்தது,  அவளை பார்க்காமல், அவளிடம் பேசாமல் அவனால் இருக்கமுடியாது என்ற நிலைமைக்கு அவன் வந்துவிட்டான்.

வண்ணச் சீரடி மண் மகள் அறிந்திலல் என்பது அவளுக்கே பொருத்தமான வரிகள். இரண்டு சகோதரிகள், தாய், தந்தை பாட்டி என்ற அளவில் அவள் குடும்பம். கேட்டதெல்லாம், கேட்ட உடனே கிடைக்குமளவிற்கு செல்வச் செழிப்பில் வாழ்பவள்.  பகவத் கீதை முழுவதையும் அழகாய் சொல்லக் கூடியவள். பாட்டும், பரதமும் அவள் அசைவிற்கு காத்துக்கிடக்கும்.


அதே கல்லூரியில் இளங்கலை முடித்து, முதுகலை பட்டப் படிப்பில் சேர்ந்து, படிக்கத் தொடங்கியவனின் நடவடிக்கைகள் அனைவரின் புருவத்தையும் உயர்த்தியது.  நடை, உடை, பழகும் விதம் எல்லாவற்றிலும் மிகப் பெரிய மாற்றம்.  அடிதடியில் முன்னிற்பவன் அமைதியாய்...... ஆவேசப் பேச்சுக்கள் குறைந்து அன்பானவனாய்....ஏனோ தானோ என்று படித்தவன் பல்கலைக் கழகத்தின் முதல் மாணவனாய்.........


ஏதோ ஒரு புத்தாண்டின் முன் இரவில், தெருவில் சென்ற ஒருவன், அவனும் அவன் நண்பர்களும் அமர்ந்திருக்கும் போது சத்தமாக விசில் அடித்தான் என்பதற்காக, அவனையும், அவன் நண்பர்கள் எட்டுபேரையும் அடித்துத் துவைத்து மருத்துவமணையில் சேர்த்தவன்,  ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து போகும் ஆக்ராவின் அந்த பளிங்கு மாளிகையின் முன் புற்தரையில் படுத்துக் கொண்டு கண்ணீர் விட்டு கதறுகிறான்.  பல கோடிகளை  விழுங்கி, பல்லாயிரம் மனிதர்களின் உழைப்பைத் தின்று பிரமாண்டமாய் எழுந்து நிற்கும் அந்த கட்டிடத்தைவிட  இத்தனையும் ஒரு பெண்ணுக்காய், அவள் நினைவாய், அவள் மீதான காதலால்  செய்து முடித்தானே, அந்த அன்பு அவன் முன்னால் விசுவரூபமெடுத்து நின்றது.

வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவனுக்கு வசந்த தினம்.  ஆம் அன்றுதான் அவளை, அவள் படித்த பல்கலைக் கழக உணவு விடுதியில் சந்திப்பான்.  ஒன்றாய் மதிய உணவு, ஒருவார நிகழ்வுகள் பற்றிய பரிமாற்றங்கள்...... எதிர் இருக்கையில் அமர்ந்து அவள் பேசுவதை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பது அவனுக்கு பிடித்தமான ஒன்று.

இப்படிச் சென்று கொண்டிருந்த வேளையில் அவளுக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டது,  அவள் திருமணம் குறித்த தகவலை அவள் தொலைபேசியில் சொன்னபோது உடனடியாக வாழ்த்துச் சொன்னாலும் அவனுள் ஏதோ கனத்தது.  திருமணத்தன்று வாழ்த்துத் தந்தியை அனுப்பிவிட்டு உடல் சோர்ந்து போகுமளவு தெருத்தெருவாய் நடந்து திரிந்தான்.  அதன் பிறகு அவள் நல்ல முறையில் வாழ வேண்டும் என்பதற்காக தினமும் பிரார்த்திக்கத் தொடங்கினான்.

அவளின் நலங்கருதி, அவளை அதற்குப் பிறகு சந்திக்க முயற்சிக்க வில்லை.  அவளோடு இருந்த காலங்களின் பசுமையை நினைவுகூர்ந்து கொண்டே காலந்தள்ள பழகிவிட்டிருந்தான்.......

அவனுக்கும் அவளுக்கும் காதலா?  தெரியாது.......

நட்பா??????தெரியாது............

அதையும் தாண்டியதா????தெரியாது...........

ஆனால் அவள் இருப்பு அவனை மகிழ்ச்சியில் வைத்திருந்தது. அவள் பேச்சு அவனை  அமைதியாக்கியது,,,,,, மனிதனாக்கியது........


எங்கோ, எப்படியோ, போயிக்கொண்டிருந்த அவன் வாழ்வில் ஒரு நெறிமுறையை ஏற்படுத்திக் கொடுத்தவள்.  அவள்...... அவனைப் பொருத்தவரையில் அவள் ஒரு தேவதை..........முற்றிபோன மனநோயைக் குணப்படுத்தி இயல்புக்கு அவனைக் கொண்டு வந்தவள்.........

அவள் நினைவாக இன்றும் அவள் பிறந்த பிப்ரவரி மாத கடைசி நாளில் அவளுக்காய் விரதமிருக்கிறான்.  அவளின் நினைவாக கடந்த இருபது வருடங்களாக அவனுக்குப் பிடித்த இனிப்புச் சுவை மறுத்து வாழ்ந்து வருகிறான். இப்படி அவள் நினைவாக, அவளுக்காக கட்டிய தாஜ்மகாலில் அவன் இன்றும் வாழ்ந்து  வருகிறான்,,,,,,,


34 comments :

vasu balaji said...

ஆஹா ஆரூரன்! அழகான வெளிப்பாடு. மென்மையான உணர்வின் வெளிப்பாடு அருமை. அடிக்கடி எழுதுங்க சாமி. அப்படியே தமிழ்மணத்தில உங்க ஓட்டையும் போடுங்க:))

மண்குதிரை said...

அவன் யார் நண்பா?

பிடித்திருக்கிறது.

ஈரோடு கதிர் said...

சிறுகதை தானே!!!???

ஈரோடு கதிர் said...

//திருமணத்தன்று வாழ்த்துத் தந்தியை அனுப்பிவிட்டு உடல் சோர்ந்து போகுமளவு தெருத்தெருவாய் நடந்து திரிந்தான்//

பிடித்த வரி

Anonymous said...

அருமையான உணர்வுகளின் வெளிப்பாடாக சிறுகதை.

க.பாலாசி said...

கதையை படிச்சி முடிக்கும்போது மனசுக்குள்ள ஒருவிதமான ஏக்கம் உண்டாகுதுங்க... பல விசயங்கள்ல என்னோட அனுபவங்களும் அடங்கியிருக்கறதாலோ என்னவோ தெரியல...

//அவளின் நலங்கருதி, அவளை அதற்குப் பிறகு சந்திக்க முயற்சிக்க வில்லை. அவளோடு இருந்த காலங்களின் பசுமையை நினைவுகூர்ந்து கொண்டே காலந்தள்ள பழகிவிட்டிருந்தான்.......//

கலங்கினேன்...

கலகலப்ரியா said...

மிக மிக அருமை ஆரூர்.... இப்படி எத்தனை....

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
சிறுகதை தானே!!!???//

எதுக்கும் நாமளும் கேட்டுவைப்போம்...

சிறுகதை தானே?????

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்கு விஸ்வா!

என்னவோ,எனக்கும் கேட்க்க தோணுது,"புனைவுதானே?" :-)

அகநாழிகை said...

நல்லாயிருக்கு. பகிர்தலுக்கு நன்றி.

மாதேவி said...

"அவள் நினைவாக......"
படித்து முடித்ததும் அசையாமல் அமைதியாக இருந்துவிட்டேன்.

க ரா said...

அருமையான கதை. இது கதைதானே.

அன்புடன் நான் said...

நீங்க ஒரு நெறிமுறையோடு வாழ்வதற்கு இதுதான் காரணமோ...?

அன்புடன் நான் said...

இது முற்றிலும் புனைவுதானே.....?
யாரையும் (உங்களையும்) குறிபிடுவதில்லையே???

அன்புடன் நான் said...

வலைதளம் எதற்கெல்லாம் பயன்படுது பாருங்கோ?

சத்ரியன் said...

விசுவநாதன்,

கொஞ்சம் காதைக் குடுங்க. அட! கடிக்க மாட்டேன். நம்புப்பா.

சொந்தக் கதைய இப்பிடி சந்தியிலா கட்டித் தொங்க விடறது?

நல்லாயிருக்கே!

கண்ணகி said...

நெஞசம் மறக்கவில்லையோ..அது நினைவை இழக்கவில்லையோ....கதைதானே....

நசரேயன் said...

//அவளுக்காக கட்டிய தாஜ்மகாலில் அவன் இன்றும் வாழ்ந்து வருகிறான்,,,,,,,//

எங்கே கீழ்பாக்கத்திலே இருக்கா?

மசக்கவுண்டன் said...

இப்பத்தான் உங்க ஊருப்பக்கம் வந்திருக்கிறனுங்க. உங்க பதிவுகளைப் படிச்சுட்டு அப்றமா கருத்து சொல்றனுங்க

புலவன் புலிகேசி said...

உண்மை நண்பரே..இந்த உறவுக்கு பெயர் கிடையாது..ஆனால் உன்னதமான உறவு...அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்...

தாராபுரத்தான் said...

அடை காத்து வந்து அதை சொல்லுவதிலும் சுகம் தெரிகிறது. நட்புமல்ல....காதலுமல்ல...என்ன?

மதுரை சரவணன் said...

neengkal kattiya thaajmahal naanraaka ullathu. arumai. ippadi anaivarum irungthu vittaal pirachchanai illai. thadiyum, kudiyum illai. ithu puthumai.

பிரேமா மகள் said...

அங்கிள் இது இங்க சொந்த கதையா? அப்புறம் அந்த ஆண்டி என்ன ஆனாங்க?

thiyaa said...

ஆஹா....
அருமை

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

கண்ணகி said...

ஏன் சார் இப்போதெல்லாம் எழுதுவதில்லை...யாரேனும் காய்ப்படுத்திவிட்டார்களா...அல்லது வேலைப்பளுவா....எழுத வாருங்கள்..பதிவுலகம் ஒரு வடிகால்..

க. சீ. சிவக்குமார் said...

அட... அவனா நீங்க...
முதல்லயே சொல்லக்கூடாது?

Anonymous said...

படித்து முடித்தவுடன் இதயம் கனத்தது,மனம் ஏதோ ஒன்றை ஞாபகபடுத்தியது,அருமை நண்பரே...

Ahamed irshad said...

நல்ல சிறுகதை...நல்லாயிருக்கு..

அன்புடன் நான் said...

என்னங்க ஆளையே காணோம்?

அன்புடன் நான் said...

என்னங்க ஆளையே காணும்?

அன்புடன் நான் said...

ஏங்க தாஜ்மஹால் கட்டதான் 20 வருசம் ஆச்சி...
கட்டுனத்துக்கு அப்புறமும் 20 வருசம் ஆகுமா?
பதிவு போடுங்க இல்லாங்காட்டியும் வந்த விலைக்கு வித்துபுடுங்க.

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

nice
www.natarajadeekshidhar.blogspot.com

பவள சங்கரி said...

ஓ, அப்படியா? இதுதான் காரணமா, கண்ணா. அடடா. சரி சரி.