வங்கிகள் ”வராக்கடன்”
என்று தள்ளுபடி செய்த தொகை குறித்துப் பெரும் சர்ச்சைகள். இன்றைய பெரும் வங்கிகள் அனைத்துமே தனியார் வங்கிகளாக பலராலும் நடத்தப்பட்டவைதான். 1970களில்
அரசு அவற்றை முழுமையாக தனதாக்கிக் கொண்டு, அவர்களுக்கு அது விரும்பிய, அல்லது நிர்ணயத்த
தொகையை, கொடுத்து அவர்களை வெளியேற்றியது.
பேங்க ஆப் பெங்கால்,
பேங்க் ஆப் மெட்ராஸ், பேங்க் ஆப் பம்பாய் என்ற ஆங்கில அரசின் சாசனங்கள் மூலம் அனுமதி
பெற்று தொடங்கப்பட்ட தனியார் வங்கிகளின் மொத்த பங்கு முதலீட்டில் 60% ரிசர்வ் வங்கியுடன்
சேர்ந்து விலைக்கு வாங்கி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உருவானது. பின்னர், மூலதனப் பற்றாக்குறை ஏற்படும் போது, அரசு
தன் வரிப்பணத்திலிருந்தோ, கடன் பெற்றோ, மூலதனத்தை அதிகப்படுத்தி தனதுடமையாக்கிக் கொண்டது.
பரோடா மன்னர் மூன்றாம் சாயாஜிராவ் கெயிக்வாடிடமிருந்து
பேங்க ஆப் பரோடா, சுப்பாராவ் பையிடமிருந்து கனரா வங்கி, செட்டிநாடு ராஜா ராமசாமி செட்டியார்களிடமிருந்து
இந்தியன் வங்கி, ஸ்பிக் நிறுவனர் சிதம்பரம் செட்டியாரிடமிருந்து இந்தியன் ஓவர்சீஸ்
வங்கி, பட்டாபி சீத்தாரம்மைய்யரிடமிருந்து ஆந்திரா வங்கி, இப்படி பலவற்றையும் இந்திய
அரசு கையகப்படுத்திய வரலாறு தெரிந்ததுதான்.
வங்கிகளை எடுத்துக் கொண்ட அரசு அதற்கான இழப்பீடாக கொடுத்த தொகை குறைவு என்ற
ஒரு வழக்கு காவாஸ்ஜி கூப்பர் என்பவரால் தொடரப்பட்டு, பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பின்
படி இழப்பீடுகள் வழங்கப்பட்டன. விருப்பமிருப்பவர்கள்
வாசித்துப் பார்க்கலாம். (Rustom Cavasjee Cooper
vs Union Of India on 10 February, 1970)
Equivalent citations:
1970 AIR 564, 1970 SCR (3) 530
பல்வேறு காரணங்களுக்காக,
பல்வேறு நிறுவனங்கள் மத்திய மாநில அரசுகளின் முதலீட்டைக் கொண்டு துவங்கப்பட்டன. பின்னால்,
பணத்திற்கான தேவைகள் வரும்போதும், தொடர்ந்து நட்டத்தில் நடந்துவருவதனாலும், அரசுகள்
தாங்கள் தொடங்கிய நிறுவனங்களையே விற்கவும் தொடங்கின.
1975ல் துவங்கப்பட்ட
computor management corporation pvt lid (currently CMC LTD) (அன்றைய கால IBM நிறுவனத்தினை வாங்கியது) 2001ல் டாட்டா கன்சல்டன்ஸிக்கு
விற்கப்பட்டதுதான், இந்தியாவின் முதல் இலாபத்தில் இயங்கிய நிறுவன, தனியார்மயமாக்கல்
என்று நினைக்கின்றேன். மாருதி உத்யோக் என்ற பெயரில் துவங்கப்பட்ட மாருதி கார் நிறுவனத்தின்
பங்குகள் 25%, அரசு ஒரு பங்கின் விலை ரூ 125/ என்ற விலையில் 2003ஆம் ஆண்டு விற்பனை
செய்தது. 1999-2004 வாஜ்பாய் அரசாங்கம், தன்னுடைய பற்றாக்குறைகளை சமாளிக்க பொதுத்துறை
நிறுவனங்களை பெருமளவில் விற்பனை செய்தது. பாரத்
அலுமினியம், இந்துஸ்தான் ஜின்க், (இதுதான் இன்றைய ஸ்டெரிலைட்), இந்தியன் பெட்ரோ கெமிக்கல்ஸ்
(IPCL) இன்றைய ரிலையன்ஸ், விதேஷ் சன்சார் நிகாம்
லிமிடெட் இன்றைய டாட்டா டெலி போன்றவை. ஐ.சி.ஐ.சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஹெச் டி எஃப்
சி, ஐடிபிஐ, ஐஎஃப்சிஐ, போன்ற அனைத்துமே மத்திய அரசின் மூலதனத்தைக் கொண்டு துவங்கப்பட்டவைதான்.
பின்னர் அரசு, பங்கு வெளியீடுகள் மூலம் விற்பனை செய்துவிட்டது.
வங்கிகள் ஒவ்வொரு
ஆண்டும் வெளியிடும் இலாப நட்ட கணக்குகளில், கடன் வாங்கியவர் கட்டாமல் விட்டுவிட்டு,
காணாமல் போயிருந்தாலும், அதைக் குறிப்பிடாமல், அந்தத் தொகை வர வேண்டிய பணம் என்று குறிப்பிட்டு
வந்தன. உண்மையில் அவை வரவே வராது. இப்படியான நிலையில், வங்கியின் பங்குகளை வாங்குபவர்,
பங்கின் விலையை அதன் சொத்து மதிப்பைக் கொண்டே நிர்ணயிக்கிறார். வெளிநாட்டினர் இதன் அடிப்படையிலேயே அந்த வங்கியில்
முதலீடு செய்கிறார். ஒரு வங்கி தன் மொத்த மூலதனத்தையும்
கடனாக கொடுத்து, அதை வாங்கியவர்கள் அனைவரும் நாட்டை விட்டு ஓடிவிட்டபின்னரும், அவர்களுக்குக் கொடுத்த கடன் மீது வட்டியை ஏற்றி,
மேலும் அதிகரித்த தொகையை, வரவேண்டிய பணமாக காட்டி வந்ததால், ஒரு வங்கியின் உண்மையான
நிதிநிலை குறித்து நாம் அறியமுடியாமல் இருந்தது.
வங்கிகளின் செயல்பாடுகளை
ஒழுங்குபடுத்தும் வேலையில் இறங்கிய ரிசர்வ் வங்கி, ஒவ்வொரு வங்கியும், தான் கொடுத்த
கடன் மீதான தவணைத் தொகை அல்லது வட்டி, தொடர்ந்து மூன்று மாதங்கள் வராமல் போனால் அதை
வராக்கடன் பட்டியலில் சேர்த்து, தன்னுடைய மொத்த சொத்துமதிப்பில் இருந்து அதைக் கழித்துவிட்டு
மீதித் தொகையைத்தான் கணக்கில் காட்ட வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் அடிப்படையில்,
GNPA(Gross Non Performing Assets) கணக்கிடப்பட்டு, நம் பார்வைக்கு வரத்தொடங்கின. அதன்
அடிப்படையிலேயே பங்குகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டன. குறிப்பிட்ட கால அளவிற்கு மேல் வராமல் இருக்கும்
கடன் தொகையை, தள்ளுபடி செய்து, தன் பேலன்ஸ் ஷீட்டில் ”வரவேண்டியவை” என்ற இடத்தில் கழித்துக்
காட்ட வேண்டும்.
வராக்கடன், கடன்
தள்ளிவைப்பு, தள்ளுபடி என்று எந்தப் பெயரில்
எழுதப்பட்டாலும், அதை வசூலிக்கும் வழிவகைகளை வங்கிகள் எடுத்துக் கொண்டுதான் இருக்கும். இந்தியாவில் கடன் பெற்று, வெளிநாடுகளுக்குத் தப்பி
ஓடியவர்களின் இங்கிருக்கும் சொத்துக்கள், நிலுவையில் இருக்கும் வழக்குகள் முடிந்தபின்,
முறைப்படி ஏலத்தில் விடப்பட்டு, கிடைக்கும் தொகை, அவர்களின் வங்கிக் கடன் கணக்கில்
வரவு வைக்கப்படும். இன்று தள்ளுபடி செய்யப்பட்டதாக சொல்லப்படும் தொகை எதிர்காலத்தில்,
வழக்குகள் மூலமோ, சமாதானம் மூலமோ கடன் பெற்றவரிடமிருந்து திரும்பப் பெறப்படும்போதும்,
அந்த ஆண்டின் இலாப நட்டக் கணக்கில் இதர வருமானங்கள்” என்ற பெயரில் சேர்க்கப்படும்.
68000 கோடி வராக்கடன்
தள்ளுபடி என்பது, ஒரு வங்கிகளுக்கும் அதன் பங்குதாரர்களுக்கும் இடையிலான பிரச்சனை. அரசாங்கமும் ஒரு பங்குதாரர் என்ற வகையில் தள்ளுபடி
செய்யப்படும் தொகையில், அரசின் பங்கிற்குரிய தொகை அதன் நட்டமாக அமையும். அந்தத் தொகை,
அரசின் வரிவருவாயோ, அல்லது அது பெற்ற கடனாகவோ இருக்கும். இந்தத் தள்ளுபடிக் கணக்கை
வங்கிகள் கொடுக்காத நிலையில், சாதாரண சிறு முதலீட்டாளர்கள் முதல், அந்நிய முதலீட்டு
நிறுவனங்கள் வரை அனைவருமே பாதிக்கப்படுவர்.
ஒரு வங்கி தான் வழங்கிய கடனில் எவ்வளவு
தொகை தள்ளுபடி செய்கிறதோ, அதில் ஒரு பகுதி
அது மறைமுகமாக, சிறு முதலீட்டாளர்களையும் பாதிக்கிறது. பணி ஓய்வு பெற்ற ஒருவர், அல்லது தன் சேமிப்பை வங்கிப்
பங்குகளில் முதலீடு செய்தவர்கள் பலர் இன்று தங்கள் முதலீட்டின் பெரும்பங்கை இழந்திருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், தங்கள் வாழ்நாள் சேமிப்பின்
பெரும்பகுதியை இழந்தவர்களும் இங்கு இருக்கிறார்கள்.
ஒரு சிறு வணிகர்
அல்லது விவசாயி வாங்கும் கடன்களைத் தள்ளுபடி செய்வார்களா? என்ற கேள்வி அர்த்தமற்றது. அந்த சிறு விவசாயியோ, வணிகரோ, தன் சொத்திற்கு மேலாக
கடன் தொகை அதிகரிக்கும் நிலையிலோ, எங்கிருக்கிறார் என்று தெரியாத அளவில், உள்நாட்டிலேயே
எங்காவது சென்றுவிட்டால், அவரையும் வங்கிகளால்
ஒன்றும் செய்யமுடியாது. இங்கே பேசப்படுபவது
(will full defaulters) ஏமாற்றும் உள்நோக்கத்தோடு கடன் வாங்கியவர்கள், அல்லது கடனை
கட்டும் அளவிற்கு தகுதியிருந்தும், சட்டத்தின் இடைவெளிகளில் தப்பிக்க நினைப்பவர்கள்,
அல்லது குறிப்பிட்ட தொழில் செய்யவதாகக் கடன் பெற்று அதை வேறு வகையில் பயன்படுத்தி நட்டம்
ஏற்பட்டதாக கணக்கு காட்டுபவர்கள். இவர்கள் மீது குற்றவியல் சட்டப் பிரிவின் கீழ் வழக்குகள்
தொடரப்படும்.
”தனி, வரையரை”
( PVT LTD - LTD)என்ற வகைப்பாடே, தொழில்முனைவோரை ஊக்குவிக்கத்தான். தன் ஒட்டுமொத்த
சொத்து இழக்கும் நிலை குறித்த, ஒரு தொழில்முனைவோனின் பயத்தை நீக்குவதற்காகவே. தனிநபர்கள், கடன் பெற்றுக் கட்டமுடியாமல் போனால்,
அவர்களுக்கும் சட்ட ரீதியான பாதுகாப்பு இருக்கிறது. திவாலானவர் ( INSOLVENT )என்று நீதிமன்றம் மூலம்
தெரியப்படுத்துவதன் மூலமும், கடன்காரர்களிடமிருந்து
சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்படுகிறார்.
இந்த சிக்கலில்,
அரசாங்கங்களை நேரடியாக குறைகூற முடியாது. குறிப்பிட்ட
நபர்களுக்கு கடன் கொடுக்கச் சொல்லி நிதியமைச்சகமோ, அல்லது அரசின் செல்வாக்கான ஒருவர்
சொல்லியோ, கொடுக்கப்பட்டதாகவோ தகவல்கள் இதுவரை இல்லை. இவற்றைத் தள்ளுபடி செய்வதும்
அரசோ, மத்திய வங்கியோ அல்ல. அந்த வங்கியின்
இயக்குநர்கள் குழுவின் பரிந்துரையின் பேரிலேயே நடக்கின்றன. சில வங்கி
அதிகாரிகள் ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்து, முறையற்ற வகையில் கடன் கொடுத்ததே பிரச்சனையாகி
இருக்கிறது. சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளும், சட்டப்பூர்வ நடவடிக்கைகளைச் சந்திக்க
வேண்டியிருக்கின்றது. வங்கி அதிகாரிகளின் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கைகளின்
மூலம், எதிர்காலத்தில் இதைக் கட்டுப்படுத்த முடியும்.
முதலாளிதத்துவப்
பொருளியலை ஏற்று, சந்தைகளைத் திறந்து வைத்திருக்கும் நாடுகளின் தீர்க்க முடியாத பிரச்சனைகளில்
இதுவும் ஒன்று.
வங்கியின் பெயர் மொத்த முதலீடு அரசு
பங்கு
ஸ்டேட் பேங்க்
ஆப் இந்தியா (மார்ச்2019) 892.46 57.68%
கனரா வங்கி 753.24 78.55%
இந்தியன் ஓவர்சீஸ்
வங்கி 9141.65 95.84%
இந்தியன் வங்கி 480.29 83.46%
இந்தியாவின் பொதுத்துறை
நிறுவனங்கள் மொத்தம் எத்தனை? அதில் எத்தனை இலாபத்தில் இயங்கி வருகின்றன, நம்
வரிப்பணத்தின் பெரும்பங்கைத் தின்று தீர்த்துக் கொண்டிருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள்
குறித்து வாய்ப்பிருக்கும் போது படித்துப் பாருங்கள். இலாபத்தில் இருக்கும் நிறுவனங்களை
பெரும் முதலாளிகள் குறைந்த விலையில் வாங்கிக் கொள்கிறார்கள். நட்டத்தில் இயங்குபவை, தொடர்ந்து நட்டத்திலேயே இயங்கி
வருகின்றன. முடங்கிக் கிடக்கும் அரசின் முதலீடு,
அதற்காக ஒவ்வொரு ஆண்டும் அரசு செய்து வரும் செலவுகள் இவற்றைக் கணக்கில் எடுத்துப் பார்த்தால்,
68000 கோடி ஒரு தொகையே இல்லை.
சமீபத்தில்
IRCTC எனப்படும் இரயில்வேயின் பங்குகளை, சரியான முறையில் கணக்கீடு செய்யாமல் குறைந்த
விலைக்கு விற்றதில் அரசுக்குப் பெரும் நட்டம் ஏற்பட்டிருக்கிறது. 2019 அக்டோபர் மாதம் அரசு தன்னிடமிருந்த பங்குகளில் 64.5 கோடி பங்குகளை
ரூ320/- என்ற விலையில் பொதுவிற்பனை செய்தது.
இன்று அவற்றின் விலை 1325/- ஒரு பங்கிற்கு ரூ1000 நட்டம் என்று வைத்தாலும்,
64.5 கோடி பங்குகளுக்கு?
பொதுத்துறை நிறுவனங்களின்
பட்டியல் :
Following CPSEs or PSU in India have
been identified as Maharatnas:
- National
Thermal Power Corporation (NTPC)
- Oil
and Natural Gas Corporation (ONGC)
- Steel
Authority of India Limited (SAIL)
- Bharat
Heavy Electricals Limited (BHEL)
- Indian
Oil Corporation Limited (IOCL)
- Coal
India Limited (CIL)
- Gas
Authority of India Limited (GAIL)
- Bharat
Petroleum Corporation Limited (BPCL)
“NAVARATNA”
- Bharat
Electronics Limited (BEL)
- Container
Corporation of India (CONCOR)
- Engineers
India Limited (EIL)
- Hindustan
Aeronautics Limited (HAL)
- Hindustan
Petroleum Corporation Limited (HPCL)
- Mahanagar
Telephone Nigam Limited (MTNL)
- National
Aluminium Company (NALCO)
- National
Buildings Construction Corporation (NBCC)
- National
Mineral Development Corporation (NMDC)
- Neyveli
Lignite Corporation Limited (NLCIL)
- Oil
India Limited (OIL)
- Power
Finance Corporation[PFC]
- Power
Grid Corporation of India Limited(PGCIL)
- Rashtriya
Ispat Nigam Limited
- Rural
Electrification Corporation[REC]
- Shipping
Corporation of India (SCI)
“MINI RATNA” i
- Airports
Authority of India (AAI)
- Antrix
Corporation
- Balmer
Lawrie
- Bharat
Coking Coal Limited[BCCL]
- Bharat
Dynamics Limited[BDL]
- Bharat
Earth Movers Limited[BEML]
- Bharat
Sanchar Nigam Limited (BSNL)
- Bridge
and Roof
- Central
Warehousing Corporation
- Central
Coalfields Limited
- Chennai
Petroleum Corporation[CPCL]
- Cochin
Shipyard[CSL]
- Dredging
Corporation of India[DCI]
- Educational
Consultants India[EDCIL]
- Kamarajar
Port
- Garden
Reach Shipbuilders & Engineers[GRSE]
- Goa
Shipyard[GSL]
- Hindustan
Copper[HCL]
- HLL
Lifecare
- Hindustan
Newsprint
- Hindustan
Paper
- Housing
and Urban Development Corporation
- HSCC
- India
Tourism Development Corporation[ITDC]
- India
Trade Promotion Organisation[ITPO]
- Indian
Rare Earths[IREL]
- Indian
Railway Catering and Tourism Corporation[IRCTC]
- Indian
Renewable Energy Development Agency
- Ircon
International
- Kudremukh
Iron Ore Company
- Mazagon
Dock Limited
- Mahanadi
Coalfields[MCL]
- MOIL
- Mangalore
Refinery and Petrochemicals Limited[MRPL]
- Mishra
Dhatu Nigam
- MMTC
Ltd.
- MSTC
Limited
- National
Fertilizers[NFL]
- National
Small Industries Corporation Limited
- National
Seeds Corporation
- NHPC
Ltd.
- Northern
Coalfields[NCL]
- North
Eastern Electric Power Corporation Limited[NEEPCL]
- Numaligarh
Refinery
- ONGC
Videsh
- Pawan
Hans
- Projects
and Development India Limited[PDIL]
- RailTel
Corporation of India
- Rail
Vikas Nigam Limited
- Rashtriya
Chemicals & Fertilizers[RCF]
- RITES
- SJVN
Ltd.
- Security
Printing and Minting Corporation of India
- South
Eastern Coalfields[SECL]
- State
Trading Corporation of India
- Telecommunications
Consultants India[TCIL]
- THDC
Ltd.
- Western
Coalfields[WCL]
- Water
and Power Consultancy Services
- Mineral
Exploration Corporation Limited
“MINI RATNA” ii
- Artificial
Limbs Manufacturing Corporation of India
- Bharat
Pumps & Compressors[BPC]
- Broadcast
Engineering Consultants India
- Central
Mine Planning and Design Institute
- Central
Railside Warehouse Company
- Engineering
Projects
- FCI
Aravali Gypsum and Minerals (India) Limited
- Ferro
Scrap Nigam Limited
- HMT
(International) Ltd.
- Indian
Medicines & Pharmaceuticals Corporation Limited
- MECON
- National
Film Development Corporation of India[NFDC]
- PEC
Ltd.
- Rajasthan
Electronics & Instruments Limited
- Ministry
of new and renewable energy (MNRE) and Solar Energy Corporation of India
Ltd (SECI)
இது தவிர இன்னும் பல நிறுவனங்களையும் அரசுகள் நடத்தி
வருகின்றன. இதில் மாநில அரசுகள் நடத்தும்
நிறுவனங்களின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. நேரம் இருப்பவர்கள் இதையும் படித்துப்
பாருங்கள்:
http://www.bsepsu.com/list-cpse.asp