Tuesday, October 06, 2009

வனம்…..,



கடந்த செவ்வாய்க் கிழமை மாலை ஈரோட்டிலிருந்து கிளம்பி கோபி,சத்தியமங்கலம்,பண்ணாரி வழியாக ஆசனூர் சென்று ஞாயிறு மாலை திரும்புவது என்று  முடிவுசெய்து, நானும் என் நண்பர்களும்  குடும்பத்தோடு புறப்பட்டோம்.

மாதமொருமுறை அங்கே நண்பர்களோடோ, தனியாகவோ, வருடத்திற்கு இரண்டு, மூன்று முறை குடும்பத்தோடும் சென்று வருவேன்.

 ஈரோட்டிலிருந்து சுமார் 100கி.மீ தூரத்தில், ஈரோடு- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குக்கிராமம் ஆசனூர்.   குளிர்ந்த, சுத்தமான, காற்று, அமைதியான சூழ்நிலை, நகர பரபரப்பற்ற மனிதர்கள், வனமும் வனம் சார்ந்த பகுதிகள்.   யானை, மான், காட்டெருமை, போன்ற வன நண்பர்கள்(விலங்குகள் என்று சொல்லின் அர்த்தம் இப்போது மாறிவிட்டது மட்டுமல்லாமல் கொஞ்சம் மட்டமாகவும் தெரிகிறது.) வாழும் பூமி.. 



சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை



 
 
 
 
 
 




வனம்

தன்னுள்ளே வரித்து,   தனக்கே உரித்தான செடிகொடிகளின் 
சுவாசத்தோடும், ஈர மண்ணின் வாசத்தோடும்
என்னை ஆலிங்கணம் செய்கிறது..

அந்த  அணைப்பில், என் கர்வமெல்லாம், உடைத்து நொறுக்கப் பட்டு
தூள்தூளாகும்.....

நள்ளிரவு நேரங்களில், கடுங் குளிரில், அட்டைப் பூச்சிகளும், 
பேர் தெரியாத பூச்சிகளும் கடிப்பதை அறியாது 
தங்கும் விடுதிகள் முன்  வெட்ட வெளியில் மணிக்கணக்கில்
அமர்ந்திருக்கிறேன்.   பார்க்க, பார்க்க பரவசமூட்டும் எழில்,
விவரிக்க இயலா போதை 

சிறு வண்டுகளின் ரீங்காரம், எங்கோ தொலைவில் கத்தும் தவளை, 
அருகே ஓடும் நீரின் சலசலப்பு சத்தம்,  தடைகளைத் தாண்டி, 
வேகங்காட்டி, மூங்கில் செடிகளை ஊடுருவி ஆர்ப்பரித்து 
ஒலியெலுப்பும், காற்று 

………இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

மழைக்  காலங்களில் 
செழுமை அழகு, வழிய வழிய  சேற்றிழாடும், சிறு குழவியாய் 

சுட்டெறிக்கும் கோடையிலோ, 
பார்க்கப் பார்க்க சலிக்காத கருவுருவச் சிலையாய்

வீசும் காற்றில், பேயாய்ச் சுழன்றும், 
வாரியிரைத்தும், வன்மம் காட்டியும் அழகாய் சிரிக்குது வனம்.




செழுமையும், அழகும், ஆழ்ந்த  பின்னனியும், 
பல்வேறு காலகட்டங்களில்,பல்வேறு மனிதர்களின் 
ஏற்ற இறக்கங்களைப் பார்த்தும், ஏதுமறியாதது போல் அமைதி. 

உடல் விறைக்கும் குளிரும், ஊடாக வெயிலும்,
சாரல் மழையும், அதனோடு கூடி,சில நேரங்களில் 
சூரியக் கதிர்களும்,  ஒரு சில நிமிடங்களில்,அனைத்தும் மறைந்து,

குளிர் காற்றும், வெயிலும், மழையும், சாரலுமாக, 
மாறி மாறி  இயற்கை இங்கே 
ஆடும் களியாட்டம் மிக அற்புதம்.

எத்தனையோ வளங்களை, எத்தனையோ மர்மங்களை, 
எத்தனையோ உயிரினங்களை எத்தனையோ ஆச்சரியங்களை, 
அற்புதங்களை தன்னுள்ளே வைத்து இயல்பாக சிரிக்கிறாள்.  

ஆளரவமற்ற நீண்ட வெறித்த தார்ச் சாலைகளில்
தொடர்ந்து நடக்கிறேன்.  
மலை, வெயில், குளிர், காற்று,  எதைப் பற்றியும்
கவலையில்லாமல், 
காட்டு மலர்களின் மனம் வழிகாட்ட தொடர்ந்து செல்கிறேன்.

மானினம் ஓர் புறம், மயிலினம் மறுபுறம், 
மத்தகம் நிமிர்த்திப் பிளிரும் 
யானைகள் ஒருபுறம்.  
இன்னும் பேர்தெரியாத வனவுயிர் ஆயிரமாயிரம்.....

 

கலைந்த தலை, மழையில் நனைந்த உடை, 
அறுந்துபோன செருப்போடு,
சேற்றை வாரி இறைத்து என்னை அழுக்கில் குளிப்பாட்டி
சென்ற இயற்கையின் எந்த படைப்பின் மீதும் கோபமில்லாமல்,

இப்படி இயற்கையோடு இயற்கையாய், இயல்பாய்,………..


 என்னைத் தொலைத்து, என்னுள் தொலைந்த,.. என்னைத் தேடி நான்.


20 comments :

vasu balaji said...

/என்னைத் தொலைத்து, என்னுள் தொலைந்த,….. என்னைத் தேடி நான்…. …/

பெரிய அவஸ்தை இது. ரொம்ப அழகாச் சொல்றீங்க.
/கலைந்த தலை, மழையில் நனைந்த உடை,
அறுந்துபோன செருப்போடு,
சேற்றை வாரி இறைத்து என்னை அழுக்கில் குளிப்பாட்டி
சென்ற இயற்கையின் எந்த படைப்பின் மீதும் கோபமில்லாமல்,/

உள்ளுக்குள்ள இருக்கிறது காத்து மாதிரி, ஸ்படிகம் மாதிரி ரொம்ப தூய்மையாக உணரும்போது இந்த புற அழுக்கெல்லாம் ஒண்ணுமே இல்லை ஆரூரன். ஸ்கந்தாஸ்ரமம் போன போது இப்படி உணர்ந்தோம்.
இது அனுபவம் தானே! அப்புறமெப்படி புனைவாம்.

க.பாலாசி said...

தாங்கள் விவரித்த விதமே அந்த இடங்களை பார்க்கத்தூண்டுகிறது. படங்களை பார்க்கும்போதே ஒரு போதை உண்டாகிறது. ரம்யமான காட்சிகள்.

இதற்கான உங்களின் வர்ணணை அழகை கண்முன்னே நிறுத்துகிறது....

ஈரோடு கதிர் said...

எல்லாஞ்செரி...
என்ன எல்லாம் ரோடு படமாவே இருக்கு

குளிருக்கு சொட்டர் போட்ட மேட்டரெல்லாம் சொல்லவேயில்ல...

ஆனாலும் மக்கா... அனுபவிச்சிருக்கீங்க

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி பாலாஜி.... உங்களோடு செல்ல வேண்டிய இடங்களில் ஒன்று கூடுகிறது. விரைவில் செல்வோம்.

ஆரூரன் விசுவநாதன் said...

//கதிர்//

காட்டுக்குள்ள கேமாரா எடுத்திட்டு போறதில்லை.....அதவேற பாதுகாக்கனுமே.....நாமளே......குணா கமல் ரேஞ்சுல சுத்தகிட்டி இருக்கறோம்....இதுல இது வேறயா.....

நன்றி கதிர்

ஆரூரன் விசுவநாதன் said...

//வானம்பாடிகள்//

//உள்ளுக்குள்ள இருக்கிறது காத்து மாதிரி, ஸ்படிகம் மாதிரி ரொம்ப தூய்மையாக உணரும்போது இந்த புற அழுக்கெல்லாம் ஒண்ணுமே இல்லை ஆரூரன்//

உண்மை...உண்மை...

Unknown said...

நானும் ஆசனூர் பத்தி கேள்விப்பட்டுரிருக்கிறேன், ஆனா போகத்தாங்க முடியல..

நசரேயன் said...

ஊர் சுத்தி பாக்க நல்ல இடம்ன்னு சொல்லுறீங்க

ஹேமா said...

பச்சைப் பசேலென இயற்கை அன்னை எவ்வளவு அழகாய் கோணி நாணி நிற்கிறாள்.அதோடு நீங்கள் வர்ணித்த விதம் இப்பவே உடனேயே போகத்தூண்டும் விதம் அசத்தல்.கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//என்னைத் தொலைத்து, என்னுள் தொலைந்த,….. என்னைத் தேடி நான்…//

Super

பழமைபேசி said...

12 மணி நேரம் நெளுவு எடுத்து உட்டுட்டாங்க இன்னைக்கு... வெறும் படம் மட்டுந்தான் பார்த்திருக்கேன்...நன்றி!

ஆரூரன் விசுவநாதன் said...

வாங்க பட்டிக் காட்டான்....



அதுக்கென்ன அங்கயே ஒரு பதிவர் சந்திப்பு வச்சுடுவோம்.....

ஆரூரன் விசுவநாதன் said...

நாசரேயன்....

இல்லை நாசரேயன், சுற்றிப் பார்ப்பதை விட அங்கே சும்மா உட்கார்ந்திருப்பதுதான் சுகம்.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி ஹேமா.....இது போன்ற சிறு சிறு மகிழ்வுகள், என்னை ஊக்கப்படுத்தி, பணி சிறக்க உதவுகின்றன.

இதுவும் இல்லையென்றால் பைத்தியம் பிடித்துவிடும் என நினைக்கின்றேன்.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி டி.வி.ஆர்.

ஆரூரன் விசுவநாதன் said...

//நன்றி பழமை பேசி//

படிச்சிட்டு, திரும்பவும் எழுதுங்க....

S.A. நவாஸுதீன் said...

பசுமையாய் ஒரு பதிவு.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி நவாஸ்...

anujanya said...

இந்த இடுகையும், புகைப்படங்களும் ரொம்ப பிடிச்சிருக்கு.

//மானினம் ஓர் புறம், மயிலினம் மறுபுறம்,
மத்தகம் நிமிர்த்திப் பிளிரும்

யானைகள் ஒருபுறம்.
இன்னும் பேர்தெரியாத வனவுயிர் ஆயிரமாயிரம்.....

கலைந்த தலை, மழையில் நனைந்த உடை,
அறுந்துபோன செருப்போடு,

சேற்றை வாரி இறைத்து என்னை அழுக்கில் குளிப்பாட்டி
சென்ற இயற்கையின் எந்த படைப்பின் மீதும் கோபமில்லாமல்,//

இந்த வரிகளை மிக ரசித்தேன்.

அனுஜன்யா

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி நண்பரே....