Tuesday, December 22, 2009

ஈரோடு வலைப் பதிவர்கள் ---சந்திப்புஇங்கிவனை யான் பெறவே என்ன… தவம் செய்துவிட்டேன்

தொலை பேசியையே “தொல்லை பேசி” என்று நினைப்பவன் நான். அலைபேசியை என்னவென்று சொல்வேன். நான் நடத்திவரும் சந்தை முகவாண்மை நிறுவனத்தில், வாடிக்கையாளர்கள் யாருக்கும் என் அலைபேசி என்னை கொடுக்க மாட்டார்கள்.

தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் உடன் பணிபுரியும் நண்பர்களின் அலைபேசியில் பேசுவேன். என்னை அழைப்பவர்கள் மிகக் குறைவு. நாள் ஒன்றிற்கு அதிகப் படியாக என் கிளை மேளாலர்கள், அல்லது நாங்கள் பணியாற்றும் வங்கிகளின் உயர் அதிகாரிகளிடமிருந்து 5 அல்லது 6 அழைப்புகள் எனக்கு வரும்.. .......

என்னிடம் அதிகமாகப் அலைபேசியில் பேசும் தங்கமணியின் அழைப்பைத் தவிர்க்க முடிவதில்லை.(ஒரு நாளைக்கு எத்தனை முறை என்று கேட்கக் கூடாது……..….)

ஆனால் ஒரு மனிதர் கடந்த ஒருவார காலமாக நாள் ஒன்றுக்கு சுமார் 15 மணி நேரம், அலைபேசியில் பேசிக் கொண்டே இருப்பதைக் கண்டவுடன் ஒருபுறம் ஆச்சரியமாகவும், மறுபுறம் வருத்தமாகவும் இருந்தது.

அலைபேசியில் பேசிக் கொண்டே, பணியாளர்களுக்கு உத்தரவிடுவது, தேநீர் அருந்துவது, பங்கு சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கேற்ப வாங்க, அல்லது விற்க என்ற கட்டளைகளை பிறப்பிப்பது, மதிய உணவுண்பது, இடையிடையில், பதிவெழுதுவது, குறுந் தகவல்களை அனுப்புவது, இப்படி தொடர்ந்து பேசிக் கொண்டே பணிபுரியும் ஒருவரை நான் கண்டது இதுவே முதல்முறை.

காதிற்கென்று ஒரு வாய் இருந்தால் அது கதறி அழுதுவிடும். எப்படித்தான் இவரை வீட்டில் வைத்து சமாளிக்கிறார்களோ? தெரியவில்லை


அடையாள அட்டை அச்சிடுவதிலிருந்து, பதிவர்கள் பெயர் பதிவு அட்டவனை தயாரிப்பது, பேனர் அச்சிடுவது, உணவிற்கு விலை நிர்ணயம் செய்தது, குறித்த நேரத்தில் அது வந்து சேர்ந்ததை உறுதி செய்தது, பதிவர்களை தொடர்புகொண்டு அவர்களின் வருகையை உறுதி செய்தது, மேடை நிகழ்வுகளை உறுதி செய்து, கூட்ட நிகழ்வுகளை அச்சிட்டு மேடையிலிருந்த அனைவருக்கும் வழங்கியது, கலந்துரையாடலை இனிதே நடாத்தியது, விருந்தினர்களை வரவேற்றது, இரவு உணவிற்குப் பின் அவரவர் ஊர் போய் சேர ஏற்பாடுகள் செய்தது,,,,இப்படி எல்லாவற்றையும் தானே முன்னின்று கவனித்து செய்துவிட்டு,

“இது உங்கள் வெற்றி, நீங்கள் செய்து காட்டியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்” என்று எங்களிடம் சொன்ன போது உடல் கூசியது………..


எல்லாப் பணிகளையும் செவ்வனே செய்து, ஆனால் அதன் வெற்றியை எல்லோருக்கும் பகிர்ந்தளித்துவிட்டு , குறைகள் இருந்தால் அது என்னுடைய கவனக் குறைவே, என்று இருகரம் கூப்பி உடல் வளைந்து, “வருந்துகிறேன், என்றவனின் மாண்பை என்னவென்று சொல்வேன்.


அவர் இட்ட சில பணிகளை நாங்கள் செய்தோம், சரியாகச் செய்தோமா? என்றால் தெரியாது…….ஆனால் எங்களுக்குத் தெரிந்த அளவில் செய்தோம்.


“முன்னோக்கிச் செல்” என்று கட்டளையிட்டுவிட்டு பின்னிருந்து வேடிக்கை பார்க்கும் தலைமைகளையெல்லாம் பார்த்திருக்கிறேன். அவர்களோடு பணியாற்றியும் இருக்கின்றேன். ஆனல் “நட என்னோடு, வெற்றி பெற்றால் அது உன்னால், தோல்வியா? விட்டுவிடு அதை நான் பார்த்துக் கொள்கின்றேன்” என்று அரவணைத்து அழைத்துச் செல்லும் தலைவனை இன்று கண்டேன்.

"இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்"

ஈரோடு பதிவர் சந்திப்பின் முழு வெற்றிக்கு உறுதுணையாய் இருந்த கார்த்தி, வால்ப்பையன், நந்து, ஜாபர், பரணி, பாலாசி, வசந்த்,பைஜு, ராஜா, கோடிஸ், என்னும் பெயர் நினைவில் இல்லா நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்

சந்திப்பில் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பாக்கிய அனைத்து பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும், நிகழ்ச்சிக்கு உலகின் பல்வேறு இடங்களிலிருந்தும் வாழ்த்துத் தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழ் மணம் திரட்டிக்கும். சங்கமம் லைவ் குழுமங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

அன்புடன்
ஆரூரன்.

60 comments :

வால்பையன் said...

உங்கள் இருவர் பணியையும் வெறும் வார்த்தையால் பாராட்ட முடியாது நண்பரே!

உறுதுணையாக இருந்தவர்களில் என் பெயரையும் சேர்ப்பதற்கே பெருந்தன்மை வேண்டும்!
உங்கள் பணியில் ஒரு சதவிகிதம் கூட என் பங்கு இருந்திருக்காது!, அத்தனையையும் நீங்களே இழுத்து போட்டு செய்தீர்கள்!

மிக்க நன்றி!

ஆரூரன் விசுவநாதன் said...

அப்படியெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது வால்...எங்களுக்கு அறிமுகமில்லாத வெளியூர் பதிவர்களை சிறப்பாக கவனித்தது பெரிய வேலைதான்.

நிகழ்ச்சியை கலகலப்பாக்கியதே நீங்கள்தான்

Kodees said...

//உங்கள் இருவர் பணியையும் வெறும் வார்த்தையால் பாராட்ட முடியாது நண்பரே!

உறுதுணையாக இருந்தவர்களில் என் பெயரையும் சேர்ப்பதற்கே பெருந்தன்மை வேண்டும்!
உங்கள் பணியில் ஒரு சதவிகிதம் கூட என் பங்கு இருந்திருக்காது!, அத்தனையையும் நீங்களே இழுத்து போட்டு செய்தீர்கள்!

மிக்க நன்றி!//

அதே!

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி கோடீஸ்......

உண்மைத்தமிழன் said...

வாழ்த்துக்கள் ஸார்..!

பல பதிவர்களின் எழுத்துக்களில் இருந்து உங்களுடைய உழைப்பையும், உண்மையான செயல்பாட்டையும் அறிய முடிந்தது..!

தங்களைச் சந்திக்க வேண்டும் என்கிற எண்ணம் மிக மிக மேலோங்கி நிற்கிறது..!

சந்திப்போம்..!

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி உண்மைத் தமிழன்.....கண்டிப்பாக சந்திப்போம்.......கொங்கு மண்ணிற்கு வரும்போது அழையுங்கள்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கிவிட்டீர்கள் ஆரூரன். மகிழ்ச்சி இன்றும் நீங்காமல் நிற்கிறது.

ஈரோடு கதிர் said...

//சரியாகச் செய்தோமா? என்றால் தெரியாது…….ஆனால் எங்களுக்குத் தெரிந்த அளவில் செய்தோம்.//

எல்லாத்தையும் நல்ல படியா செஞ்புட்டு தன்னடக்கத்த பாருங்களேன்....

நன்றி தலைவரே...

உங்கள வச்சி பல திட்டங்களெல்லாம் வச்சிருக்கேன்... அதுக்கும் சேர்த்துதான் அந்த கும்புடு...

Sanjai Gandhi said...

மிக மிக சிறப்பான ஏற்பாடுகள். சிறிய சொதப்பல் கூட இல்லை.( ரொம்ப கண்ணு வைக்கிறேனோ?). முதல் முறை ஏற்பாடு செய்தது போன்றே இல்லை. கதிரை எவ்வளவு பாராட்டினாலும் குறைவே. உங்கள் இயல்பான நட்பு பாராட்டும் விதம் அற்புதம். மேடையை ஒருங்கிணைப்பது சுலபமல்ல. அதை நீங்கள் மிக நன்றாக செய்தீர்கள். அனைவருக்கும் பாராட்டுகள். மீண்டும் விரைவில் சந்திப்போம். கோவை வந்தால் அனைவரும் மறவாமல் என்னை அழைக்கவும். சந்திப்போம். பெரும்பாலான ஈரோட்டுக்காரர்களிடம் என் நம்பர் இருக்கு. 4 ஆண்டுகள் நானும் ஈரோட்டுவாசியாக தான் இருந்தேன். :)

ஆரூரன் விசுவநாதன் said...

//எல்லாத்தையும் நல்ல படியா செஞ்புட்டு தன்னடக்கத்த பாருங்களேன்....

நன்றி தலைவரே...

உங்கள வச்சி பல திட்டங்களெல்லாம் வச்சிருக்கேன்... அதுக்கும் சேர்த்துதான் அந்த கும்புடு...//ம்ம்ம்ம்ம்.......இதுக்கா இவ்வளவு கஷ்டபட்டு இம்மாம்பெரிய பதிவப் போட்டேன்......


ஒரு ஒரையில ரெண்டு கத்தி கூடாதப்பு

ஆரூரன் விசுவநாதன் said...

//கலக்கிவிட்டீர்கள் ஆரூரன். மகிழ்ச்சி இன்றும் நீங்காமல் நிற்கிறது.//

உங்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி
நன்றி செந்தில்...

எல்லாப் புகழும் இளைஞருக்கே(இளைஞர் கதிர்) "யூத்" ன்னு சொல்லிகிட்டிருக்கிறார்....அதான்

ஆரூரன் விசுவநாதன் said...

//சஞ்சய் காந்தி//

நிகழ்வில் உங்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி...

கோவை வரும்போது சந்திக்கின்றேன்.

ஆரூரன் விசுவநாதன் said...

ஈரோடு கதிர் said...


//எல்லாத்தையும் நல்ல படியா செஞ்புட்டு தன்னடக்கத்த பாருங்களேன்....//

இப்புடியெல்லாமா நம்பறாய்ங்க.=))


/உங்கள வச்சி பல திட்டங்களெல்லாம் வச்சிருக்கேன்... அதுக்கும் சேர்த்துதான் அந்த கும்புடு.../

என்னா ஒரு வில்லத்தனம்!

S.A. நவாஸுதீன் said...

விழா வெகுசிறப்பாக நடந்துமுடிந்தது ரொம்ப சந்தோசம்.

Anonymous said...

வெற்றிகரமாக நடத்தி இருக்கிறீர்கள். வரமுடியவில்லையே என்று இருக்கிறது.

க.பாலாசி said...

//அடையாள அட்டை அச்சிடுவதிலிருந்து, பதிவர்கள் பெயர் பதிவு அட்டவனை தயாரிப்பது, பேனர் அச்சிடுவது, உணவிற்கு விலை நிர்ணயம் செய்தது, குறித்த நேரத்தில் அது வந்து சேர்ந்ததை உறுதி செய்தது, பதிவர்களை தொடர்புகொண்டு அவர்களின் வருகையை உறுதி செய்தது, மேடை நிகழ்வுகளை உறுதி செய்து, கூட்ட நிகழ்வுகளை அச்சிட்டு மேடையிலிருந்த அனைவருக்கும் வழங்கியது//

நானும் இவைகளைக்கண்டு பிரமிப்படைந்தேன்....

தேவன் மாயம் said...

மாபெரும் வெற்றியாக சந்திப்பு முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி!!

Unknown said...

பெரும்பாலான ஈரோட்டுக்காரர்களிடம் என் நம்பர் இருக்கு. ..

ஈரோட்டுகாரர்களிடம் கோவை நம்பரும்,கோயமுத்தூர்வாசிகளிடம் ஈரோட்டு நம்பரும் இருக்கும்....

ஆனா இவிங்க அங்கிட்டு வரும்போது நீங்க அங்கிட்டு இருப்பீங்களா? இல்ல இங்கிட்டு வந்துவீங்களா?

ஆரூரன் விசுவநாதன் said...

/“நட என்னோடு, வெற்றி பெற்றால் அது உன்னால், தோல்வியா? விட்டுவிடு அதை நான் பார்த்துக் கொள்கின்றேன்” என்று அரவணைத்து அழைத்துச் செல்லும் தலைவனை இன்று கண்டேன்./

இந்த மனப்பாங்கே வெற்றிக்கு வழிகோலும்.

/"இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்"//

இது உங்கள பத்தி கதிர் போட வேண்டிய பிட்டு=))

Unknown said...

டீ சாப்பிடவும், டிபன் சாப்பிடவும் ஈரோடுக்கு வந்து செல்லும் என்னை கடும் குளிர்காய்ச்சல வர விடாமல் தடுத்துவிட்டது..பரவாயில்லை..அடுத்துவருகையில் உங்கள் செல் பேசியை முழு சார்ஜில் வைக்குமாறு கேட்டு..கொல்கிறேன்.

ஆரூரன் விசுவநாதன் said...

அன்பிற்கு நன்றி நவாஸ்

ஆரூரன் விசுவநாதன் said...

அய்யய்யோ.....என்னமோ நடக்குதிங்க....

நான் போடாத கமெண்ட்டெல்லாம் என் பேருல வருது......

போலி ஆரூரன் யார்??????????????????

ஆரூரன் விசுவநாதன் said...

//கும்க்கி//

//ஆனா இவிங்க அங்கிட்டு வரும்போது நீங்க அங்கிட்டு இருப்பீங்களா? இல்ல இங்கிட்டு வந்துவீங்களா?//

கருமம் புடிச்ச காச்ச இப்பதான் வருனுமுங்களா?

தெங்கீங்ணா போறது......தெக்க நாலுமைலு, வடக்க மூணு மைலு.....

தெங்க சுத்துனாலும் ரவைக்கு வூடுவந்துருவனுங்.....

சோலியா வரும்போது "போன" போடுங்க.....வந்தரனுங்....

முனைவர் இரா.குணசீலன் said...

ஆம் நண்பரே...

நண்பர் கதிர் அவர்களின் பணியும் செயலும் பாராட்டிற்குரியதாகவே அமைந்தது.

ஊர்கூடித்தேரிழுத்துவிட்டீர்கள்..
இப்போது எண்ணிப்பார்த்தாலும் வியப்பாகவே இருக்கிறது..

முறையான தமிழ்நிகழ்ச்சிபோலவே அமைந்தது..

குறிப்பு -

அங்கு வந்திருந்த பதிவர்களிடம் மின்னஞ்சல் முகவரி. வலைப்பதிவு முகவரி வாங்கினீர்கள் இல்லையா..

அதனை தங்கள் ஈரோடு குழும வலைப்பதிவில் தொகுத்தளித்தால் நலமாக அமையும் என்று நினைக்கிறேன்..

அங்குவந்து பழகிய நண்பர்கள் பலரின் வலைமுகவரி தெரியாத சூழலில் இப்பணி இந்த நட்பை மேலும் வளர்த்துக்கொள்ள துணைபுரியும் நண்பரே..

Sanjai Gandhi said...

//குறிப்பு -

அங்கு வந்திருந்த பதிவர்களிடம் மின்னஞ்சல் முகவரி. வலைப்பதிவு முகவரி வாங்கினீர்கள் இல்லையா..

அதனை தங்கள் ஈரோடு குழும வலைப்பதிவில் தொகுத்தளித்தால் நலமாக அமையும் என்று நினைக்கிறேன்..

அங்குவந்து பழகிய நண்பர்கள் பலரின் வலைமுகவரி தெரியாத சூழலில் இப்பணி இந்த நட்பை மேலும் வளர்த்துக்கொள்ள துணைபுரியும் நண்பரே.. //

இதுக்கு தான் ஒருத்தர் வேணும்னு சொல்றது. நான் வழிமொழிகிறேன்.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி நண்பர் குணசேகரன்......

//சஞ்சய் காந்தி....//

//அங்கு வந்திருந்த பதிவர்களிடம் மின்னஞ்சல் முகவரி. வலைப்பதிவு முகவரி வாங்கினீர்கள் இல்லையா..

அதனை தங்கள் ஈரோடு குழும வலைப்பதிவில் தொகுத்தளித்தால் நலமாக அமையும் என்று நினைக்கிறேன்//


பணி துவங்கி விட்டது.....ஓரிரு நாளில் வலையேற்றப்பட்டுவிடும்

நாடோடி இலக்கியன் said...

அடுத்த முறை திருப்பூர் வரும்போது உங்களையெல்லாம் சந்திப்பதுதான் முதல் வேலை.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி முனைவர் குணசீலன்....


விரைவில் வலையேற்றம் செய்து விடுவார்கள்.

ஆரூரன் விசுவநாதன் said...

நாடோடி இலக்கியன்

//அடுத்த முறை திருப்பூர் வரும்போது உங்களையெல்லாம் சந்திப்பதுதான் முதல் வேலை.///

அதுக்கு ஈரோடில்ல வரனும்.....

Unknown said...

//ஆனா இவிங்க அங்கிட்டு வரும்போது நீங்க அங்கிட்டு இருப்பீங்களா? இல்ல இங்கிட்டு வந்துவீங்களா?//

இந்த கமெண்ட் எல்லோருக்கும் செல்லபுள்ள சஞ்செய் கந்திக்கு போட்டது பாஸ்.

பிரபாகர் said...

ஆரூரன்...

உங்களையும் கதிரையும் நினைத்தால் பெருமையாய் இருக்கிறது. என்னமாய் புரிதல் உங்களுக்குள்? தனக்குண்டான வேலைகளை ஒவ்வொருவரும் ஒழுங்காய் செய்ய, கதிருக்கு நீங்கள் பக்க பலமாய் இருக்க, கதிர் தனக்கே உரித்தான வழிநடத்துதலில் சிறப்பாய் செயல்பட, மாபெரும் வெற்றி... எல்லோரும் பாராட்டும் வகையில்...

உங்கள் அனைவரின் நட்பினால் நான் பெருமையுறுகிறேன்.

பிரபாகர்.

நாடோடி இலக்கியன் said...

//அதுக்கு ஈரோடில்ல வரனும்.....//

நான் தஞ்சையைச் சேர்ந்தவன், திருப்பூரில் எனது சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் இருப்பதால் திருப்பூரும் எனக்கு இன்னொரு சொந்த ஊர் போன்றதாகிவிட்டது.

ஈரோடு வழியாத்தான் திருப்பூருக்கு ஜன சதாப்தியில் செல்வது வழக்கம் அதை மனதில்கொண்டே சொன்னேன்.உங்களுக்கும் நான் திருப்பூரில் அடிக்கடி இருப்பது தெரியுமெனெ நினைத்துவிட்டேன்.

:)))))))))

அன்புடன் நான் said...

நல்ல பகிர்வு. தொண்டுக்கு வாழ்த்துங்க.

இராகவன் நைஜிரியா said...

அண்ணே பிரமாதபடுத்திட்டீங்க.

என்ன கலந்து கொள்ள இயலவில்லை என்ற வருத்தம் இருக்கு. எல்லாருக்கும் அந்த கொடுப்பினை இருக்குமா என்ன?

உங்களுக்குக்கும், கதிர் அண்ணனுக்கும், ஈரோடு நண்பர்களுக்கும், பாராட்டுகள்.

உங்கள் உன்னதமான பணிகளுக்கும், கூட்டு முயற்சிக்கும் தலை வணங்குகின்றேன்.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி கருணாகரசு

நன்றி ராகவண்ணே...

ஆரூரன் விசுவநாதன் said...

thank you prabhu

ILA (a) இளா said...

நடத்திக் காட்டிட்டீங்களே! அதுவே பெரிசில்லையா?

நிகழ்காலத்தில்... said...

கதிர்..

வாழ்த்துகிறேன்.

இன்னும் பலமடங்கு செயலாற்ற..

துபாய் ராஜா said...

சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்.

ஏதோ சொல்கிறேன்... said...
This comment has been removed by the author.
மணிஜி said...

எங்கள் ஊருக்கும் வாருமய்யா.. ஆருரான் அவர்களே..

அமர பாரதி said...

நிகழ்ச்சியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் ஆரூரன். அடுத்த முறை ஈரோடு வரும் போது தங்களை சந்திப்பேன். கதிருக்கும் வாழ்த்துக்கள்.

நினைவுகளுடன் -நிகே- said...

நல்ல பகிர்வு.
மிக்க நன்றி!

முருக.கவி said...

எங்கெங்கோ இருந்து முகம் தெரியாமல் எழுத்தாலேயே சங்கமித்த நண்பர்கள், தங்கள் எண்ணங்களை நேரடியாக பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்தமை சிறப்பு. அதனை செவ்வனே நடத்திமுடித்தமை கூடுதல் சிறப்பு. ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமம் நல்ல பல செயல்களின் மூலம் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்!
தங்கள் பணியும் கதிர் அவர்கள் பணியும் மிகவும் பாராட்டுதலுக்குரியது.

cheena (சீனா) said...

அன்பின் ஆரூரன்

தலைமை ஏற்று விழாவினை அழகுற நடத்தி சிறப்புடன் நீறைவு செய்தமை நன்று - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - ஒரே மேடையில் அமர்ந்திருந்தும் அறிமுகம் இல்லாத காரணத்தால் நாம் பேசிக்கொள்ள வில்லையோ

நல்வாழ்த்துகள் ஆருரன்

கலகலப்ரியா said...

அழகா சொல்லி இருக்கீங்க ஆரூர்..! கதிருக்கு பாராட்டுகள்..! உங்களுக்கும் பாராட்டுகள்.. எல்லாருக்கும் பாராட்டுகள்.. ஆள் ஆளுக்கு தன்னடக்கம்னா தாங்க முடியல சாமி... (அலைபேசி... அதை ஏன் கேக்குறீங்க..=)))...

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி சீனா ஐயா.....

நிகழ்வுகள் குறித்தபடி நடக்க வேண்டும் என்ற பதட்டம் என்னை இயல்பாய் இருக்க வைக்க வில்லை....

நிகழ்வுகள் முடிந்த பின் சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். அதுவும் ஏனோ நடக்க வில்லை.

உங்களோடு பேச முடியாததில் எனக்கு வருத்தமே.

விரைவில் சந்திப்போம்....உங்கள் வலைச் சரத்தின் வாசகன் நான்...

அன்புடன்
ஆரூரன்

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி இள

நன்றி துபாய் ராஜா

நன்றி நிகழ்காலத்தில்

ஆரூரன் விசுவநாதன் said...

தண்டோரா

//எங்கள் ஊருக்கும் வாருமய்யா.. ஆருரான் அவர்களே..//

நெசமாலுமே வந்திருவன்........

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி முருக.கவி


நன்றி அமரபாரதி

நன்றி நிகே

ஆரூரன் விசுவநாதன் said...

//கலகலப்ரியா//
பாலாண்ணே வந்திருந்தா...க,..... மாப்பு மணி வந்திருந்தா.....க....., மற்றும் நம் பதிவர்களெல்லாம்...... வந்திருந்தாக........

வாம்மா.....மின்னல்.......//ஆள் ஆளுக்கு தன்னடக்கம்னா தாங்க முடியல சாமி...//

என்னாதிது.........

மூணு நாளு கழிச்சு வந்ததுமில்லாம இது வேறயா?

ஆரூரன் விசுவநாதன் said...

//அமரபாரதி//


ஈரோடு வரும்போது அழையுங்கள், நிச்சயம் சந்திப்போம்.

முனைவர்.இரா.குணசீலன் said...

நன்றி முனைவர் குணசீலன்....


விரைவில் வலையேற்றம் செய்து விடுவார்கள்//\\

நன்றி நண்பரே..

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி ராகவண்ணே

பரிசல்காரன் said...

கதிரிடம், கல்யாணத்தில் ஒரு மணப்பெண்ணின் அண்ணனுக்குரிய பதட்டம் பொறுப்பு தென்பட்டதென்றால், உங்களிடம் பெண்ணின் தந்தைக்குரிய பணிவும், பதட்டமும் பார்த்தேன்.

ஊர்கூடித் தேரிழுத்து (வலை)உலகையே கலக்கி விட்டீர்கள்.

மறுபடி - சபாஷ்!

ஆரூரன் விசுவநாதன் said...

அன்பிற்கு நன்றி பரிசல்...... ஆனா அதுக்காக என்னை இவ்வளவு வயசானவனா காட்டியிருக்கக்கூடாது..


அன்புடன்
ஆரூரன்

V.N.Thangamani said...

இனி நான் சொல்ல என்ன இருக்கு.
எல்லோரும் போதுமான அளவுக்கு சொல்லிட்டாங்க.
சொன்னதையே திருப்பி சொன்னா போரடிக்கும்.
நன்றி அய்யா
வாழ்க வளமுடன்.

CS. Mohan Kumar said...

அற்புதம். ஒரு விழாவை நடத்துவது அதனை எளிதான காரியம் அல்ல. மேலும் பல நேரம் உரிய அங்கீகாரம் கிடைக்காது. கதிரை நீங்கள் பாராட்டிய விதம் அருமை. He deserves this praise.

தாங்களும் சிறப்பாக செய்ததாக பலரும் எழுதி உள்ளானர். வாழ்த்துக்கள்.

நான் சென்னையில் உள்ளேன். கேபிள், அப்துல்லா போன்றோரை தெரியும்

இயலும் போது சந்திப்போம்

Thamira said...

எத்தனை பதிவுகளில்தான் வாழ்த்துவது.?

தகுதியான நிகழ்வு. இன்னும் 100 பதிவுகள் வந்தாலும் சொல்வேன். பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்..

Anonymous said...

அதி தீவிர அர்ப்பணிப்பு இல்லை என்றால் இப்படி ஒரு நிகழ்வை நான் பார்த்திருக்கவே முடியாது ..... சென்னைல நாங்க எல்லாம் சிந்திப்போம் சாப்பிட போன பில் வரப்ப அவங்க அவங்க பில் என்னவோ அத கொடுக்கணும் ஆன நீங்க கிடா வெட்டமலே விருந்து வச்சு அசத்திட்டிங்க . ஈரோட்டு காரண இருந்தும் உங்களை போல் எல்லாம் ஈடுபாட்டோடு செயல்படாமல் போனதுக்கு வெட்கி தலைகுனிகிறேன்