Monday, December 28, 2009

ஞானும் எண்ட .................ஹீரோ .பிரபாகரனும்

ஒந்நு இல்லேட்டாஎண்ட நண்பன் பிரபாகரனைப் எனிக்கு ரொம்ம பிடிக்குன்னு..ஆயால்  ஒரு பிடிக்கிட்டாப் புள்ளி..கொறச்ச காலத்தில் ஆயாளோட வல்லியம் சினேகம் உண்டாயிட்டு.


தேனுங்ணா,.. தென்னடா,..இவன் திடீர்னு இப்படி ஆயிட்டான்னு பாக்கிறீங்களா? அது ஒன்னுமில்லைங்கணா,   இந்த தலைப்ப படிச்சிபோட்டு,  ஏதாவது  ஒரு நாதாரி , இவனுக்கும்  ???அவருக்கும் ஏதோ தொடர்பிருக்குன்னு சொல்லும், அவ்வளவு தான்,  நம்மூரு ஸ்காட்லாந்து (யா)வார்டு, வந்து, நம்மள அள்ளிகிட்டுப் போய், ஏதோ காஷ்மீர் தீவிரவாதிய புடிச்சிட்டதா,  பேட்டி குடுப்பாங்கதேவையாங்ணா இதெல்லாம்! நான் புள்ளகுட்டிக் காரனுங்ணா.

அதுமாத்தரம் இல்லீங்ணா, எங்க தலைவர் அதாங்ணா.நம்ம வானம்பாடிகள் வேற..இந்த மாதர எழுதி, என்னோட ‘எக்கோ’ அதாங்ணா, நம்ம வாத்தியார் சொல்லிதாந்தாரல்லோ ‘கிருதா’(ego) அத கிளப்பியூட்டுட்டாருங்ணா.


அதுமட்டுமில்லாம, நம்ம சேரநன் நாட்டை அவ்வளவு சீக்கிரம் மறக்கமுடியுமுங்ளா, என்னா வளம,,,என்னா பசுமை,.ம்ஹும்,,,என்னத்தச் சொல்ல……அது ஒரு காலமுங்ணா…….


பழைய நெனப்புடா..பேராண்டி……ன்னு எங்கனயோ பாடறது உங்குளுக்கும் கேக்குதுங்களாங்ணா


அத்தோட போச்சுங்களா,அந்தூருக்காரங்கதான் எலக்கியந் தெரிஞ்சவிங்கன்னு வேற நம்மூரு  பெரிய பெரிய எழுத்தாணிகள்லாம் சொல்லிகிட்டிருக்காங்கஅதான் இந்த புது மொயற்சின்னு வச்சுக்கங்களேன்.


சரி விசியத்துக்கு வருவோம்,பிரபாகரன்:-

நான் பள்ளிக்கூடம் படிக்கிற காலத்தில, அப்ப நமக்கு வயசு,15 இருக்குமுங்க.    எங்க தெருவுக்குப் பக்கத்துத் தெருவில் ஒரு பிரபாகரன் இருந்தாருங்க.  அவருக்கும் நம்ம  வயசுதான் இருக்குமுங்க. கிருத்துவ குடும்பத்தைச் சார்ந்த அவர் ஒவ்வொரு ஞாயித்துக் கெழமையும்  காலைல 7 மணிக்கு, வெள்ளைச் சட்டை, வெள்ளைப் பேண்ட், கையில் வேத பொஸ்தகத்தோட , சர்ச்க்கு எங்கள் தெரு வழியாக நடந்து போவாருங்க.  அவரு  அம்மாவும் தங்கச்சியும் கூடபோவாங்க.

அளவா, தச்ச வெள்ளைப் பேண்ட், முழுக்கை வெள்ளைச் சட்டை, கருப்பு பூட்டு, கருப்பு பெல்ட், எண்ணை தொட்டு படிய வாரின தலை, நேரான பார்வை, இதெல்லாம் நம்மள ரொம்ப டிஸ்டப் பண்டிபோடுச்சுங்ணா.

நாம எப்பவும் போல லுங்கிய கட்டிகிட்டு, ரோட்ல போற வாரவுங்கள கலாய்ச்சிகிட்டு, அக்கம் பக்கத்திலிருக்கும் பொடிசுங்கள கூட்டி வச்சு அலப்பற பண்ணிகிட்டிருப்பம்.  போற வாரவங்கள்ளாம், நம்ம ஒரு நிமிசம் நின்னு, நம்மள ஒரு மாதர பாத்து மனசுக்குள்ள திட்டி போட்டு போனாத்தானுங்க நமக்கு காலைச் சோறு இறங்கும்.


ரோட்ல போற எல்லாரும் நம்ம நல்ல முறையில (இப்புடிவெற நெனப்பா?) கவுனிச்சிட்டு போகும் போது, அவரு மட்டும், நாம ரோட்டில இருக்கிறோங்க நினைப்பே இல்லாத மாதர போவாருங்க.  ஒரு நா கூட அவரு நம்மள நிமுந்து கண்ணால பாத்ததில்லீங்கணா.  ஒரு கைல பொஸ்தகம், ஒரு கைல தங்கச்சி கையப் புடிச்சிகிட்டு, இந்தல்ல அந்தல்ல பாக்காம, ஒரே நேர் கோட்ல, நடந்து போவாரு,  அப்பறம் 10 மணிக்கு திரும்பி வாருவாரு.


என்றா இது,,,,,ஒரு பெரிய மனுச, (நாந்தான்நாந்தான்.)ரோட்டில நிக்கறம், கொஞ்சங்கூட சட்டபண்டாம போறானேன்னு வெசனமாச்சுங்ணா.  இத இப்டியே வுடக் கூடாதுன்னு ஒரு நா, அவரு வரும் போது  சைக்கிள எடுத்துகிட்டுப் போய், அவுருக்கு நேர,  அவரு பேண்ட்ல முட்டறா மாதர போயி நிறுத்தி, அப்புடியே அவுரு மூஞ்சியப் பார்த்தனுங்ணா.   ஒரு மாத்தமும் இல்லைங்ணா,  நிமுந்து பார்த்தாரு, லேசா விலகி, அவுருபாட்டுக்கும் நடக்க ஆரம்பிச்சிட்டாருங்ணா.

மொகத்துல ஒரு பதட்டமில்ல, பயமில்ல,  அப்புடியோரு ஆள நான் பாத்ததே இல்லீங்க.  அளவுக்கு மீறின முதிர்ச்சி………

ரசினிகாந்த் சினிமா பார்த்தாலே, ஒரு வாரத்துக்கு தலைய கலைச்சி வுட்டுகிட்டு, சட்டைல மேல ரெண்டு பட்டனை கழட்டிவுட்டுகிட்டு கீழ் ரெண்டு பட்டன கழட்டி வுட்டு அதுல ஒரு முடிச்சு போட்டுகிட்டு திரியறவங்க நாம……ஆனாப் பாருங்க, அதுக்கு பொறகு, அவுரு நமக்கு ஹீரோ ஆயிட்டாருங்ணா.  அவுரு மாதர பேண்ட் போடறது, ஷூ போடறது, யாராவது ஏதாவது கேட்டா, நிதானமா திரும்பி, தலைய மட்டும் லேசா ஆட்டி என்னான்னு கேக்கறது. அப்புடி, இப்புடின்னு ரொம்ப..


முடியலைன்னாலும் தம் கட்டிகிட்டு, பயப்படாத மாதர நடிச்சு ,  ஒரு தோசைய முக்காமணி நேரம் மெதுவா பிச்சி சாப்புட்டு,  யாருகிட்டயும் எதுவும் பேசாம, அளவா சிரிச்சு, ஒடம்பு, மனசு அத்தனையிலும் நிதானத்த கொண்டு வந்து, அப்புடியே மொத்தமா மாறின நாளாவது நாள்.


ராத்திரி ஒரு மணி இருக்கும், வூட்ல யாரோ பெல் அடிச்சாங்க. என்னடான்னு போயி பார்த்தா,  எதிர்த்த வூட்டுக்காரரு, சிவில் எஞ்சினியரு, ஆளு பார்த்தா மிலிட்டரிக்காராட்டமிருப்பாரு. நம்மோட குருவுல அவுரும் ஒருத்தரு. பெரிய மூளைக்காரரு. 


எவனோ ஒரு திருடன் ஓடறான், வாப்பா போயி புடிப்போன்னாரு, உடனே எந்திருச்சு லுங்கிய மடிச்சி கட்டிகிட்டு, கைல நம்ம சைஸுக்கு ஒரு தப்பக் குச்சிய தூக்கிகிட்டு, சந்து பொந்தெல்லாம் தேடுனா, ஒரு குறுக்கு சந்தில லைட் கம்பத்துகிட்ட யாரோ உக்காந்திருந்த  மாதர இருந்தது. 


மெதுவா கிட்டப் போய் எட்டி தல மசற புடிச்சு, தப்ப குச்சில பட்டையா அடிக்க,  அவன் அய்யோ, அம்மா, கத்த, மொத்த சனமும் ரோட்டுக்கு வந்திருச்சுங்க.


அப்பறம் அவனை புடிச்சு பெருசுங்கெல்லாம் விசாரிச்சா, அவன் எதோ நாயி தொரத்துச்சுன்னு ஓடி இருக்கான், இவரு திருடன்னு நினைச்சு என்னை எழுப்ப………பாவம் ஒரு அப்பாவிய போட்டு அடிச்சு, அவன் வாயி மூக்கெல்லாம் ரத்தம்……எல்லாம் முடிஞ்சு பார்த்தா, வெவகாரம் நடந்த எடம் நம்ம ஹீரோ வூட்டு வாசலு. அட இப்பவாவது மனுச நம்மள நிமிந்து பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பாரான்னு பார்த்தா..ம்ஹூம்.  அதே பார்வை, அதே நிதானம்.


ஆனாப் பாருங்க……அவுரு தங்கச்சி சொன்னனில்ல அது மட்டும்
லேசா தலைய சாச்சு, ஒரு சிரிப்பு..அப்பத்தான் புரிஞ்சுதுங்க அட நாம ஹீரோ வாயிட்டம்னு…….


அதுக்கப்பறம், ஞாயித்துகிழமையானா, ரோடெல்லாம் ஒரே அலப்பறை தான்.  என் ஹீரோ என்ன பார்க்கிறாரோ இல்லையோ, என் ஹீரோயின் என்னப் ஓரக்கண்ணால் பார்த்து விட்டு  ஒரு சிரிப்பாங்க……..நானும் ஹீரோ ஆயிட்டேன்……….

28 comments :

பிரபாகர் said...

ஆரூரன்,

உங்களுக்குள்ள இருக்கிற ஹீரோ இப்பத்தான் தெரிய ஆரம்பிச்சிடுக்காரு.

அமர்க்களமா போகுதுங்கோ! கலக்குங்க!

அடுத்த பார்ட் இன்னும் எத்தன நிமிஷத்துல போடறீங்க? ஆவலா இருக்கேன்...

பிரபாகர்.

க.பாலாசி said...

//ஆனாப் பாருங்க……அவுரு தங்கச்சி சொன்னனில்ல அது மட்டும்
லேசா தலைய சாச்சு, ஒரு சிரிப்பு …..அப்பத்தான் புரிஞ்சுதுங்க அட நாம ஹீரோ வாயிட்டம்னு……...//

அதானே எங்கடா ஹீரோயின் எண்டர் ஆகலையேன்னு பார்த்தேன். நம்மளோட டார்கெட்டே அதானே. அடுத்தது டூயட்தானே. ம்ம்ம்...தொடருங்கள்....

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...

/ அதானே எங்கடா ஹீரோயின் எண்டர் ஆகலையேன்னு பார்த்தேன். நம்மளோட டார்கெட்டே அதானே. அடுத்தது டூயட்தானே. ம்ம்ம்...தொடருங்கள்..../

ங்கொய்யால இப்புடி கொம்பு சீவியே ஜீரோ ஆக்கறதுக்கு காத்து கெடக்காய்ங்க:))

வானம்பாடிகள் said...

/அவுரு தங்கச்சி சொன்னனில்ல அது மட்டும்
லேசா தலைய சாச்சு, ஒரு சிரிப்பு …..அப்பத்தான் புரிஞ்சுதுங்க அட நாம ஹீரோ வாயிட்டம்னு…….//

ம்கும். இப்போ இத தங்கச்சி படிக்கட்டும். இதே மாதர ஒரு சிப்பு, ஒரு சாய்ப்பு. அப்புறம் புரியும் ஜீரோவானது.:))

தொடருங்க சாமி.:))

ஈரோடு கோடீஸ் said...

நல்ல தொடக்கம், தொடருங்கள். வாழ்த்துக்கள்

அன்புடன்

ஈரோடு கோடீஸ் said...
This comment has been removed by the author.
ஈரோடு கோடீஸ் said...

/// /* Font Definitions */
@font-face
{font-family:Latha;
panose-1:2 0 4 0 0 0 0 0 0 0;
mso-font-charset:1;
mso-generic-font-family:auto;
mso-font-pitch:variable;
mso-font-signature:1048576 0 0 0 0 0;}
@font-face
{font-family:aAvarangal;
panose-1:2 11 3 3 2 0 0 2 0 4;
mso-font-charset:0;
mso-generic-font-family:swiss;
mso-font-pitch:variable;
mso-font-signature:-///

ரீடரில் உங்க பதிவு இப்படிதான் தெரிகிறது கவனியுங்க!

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி கோடீஸ்...கவனிக்கின்றேன்.....

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி பிரபா......இதோட தொடர்ச்சி அல்ல அடுத்த இடுகை.....


அதுல இன்னொரு பிரபாகரனைப் பற்றி வரும்

நீங்களும் இருக்கிறீர்கள் அந்த பட்டியலில்

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி பாலாண்ணே

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி பாலாசி

இராகவன் நைஜிரியா said...

அண்ணே நடத்துங்க...

அண்ணே இப்பவும் பார்க்க ஹீரோ மாதிரித்தான் இருக்கீங்க..

கலகலப்ரியா said...

வாவ்.. அட்டகாசமான ஆரம்பம்... =))))))... என்னா ஸ்டைலு... ..ன்னா ஸ்டைலு... செம கலக்கலு...

ஆரூரன் விசுவநாதன் said...

ராகவண்ணே, வணக்கம்,

நன்றி

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி ப்ரியா

ஹேமா said...

//ரசினிகாந்த் சினிமா பார்த்தாலே, ஒரு வாரத்துக்கு தலைய கலைச்சி வுட்டுகிட்டு, சட்டைல மேல ரெண்டு பட்டனை கழட்டிவுட்டுகிட்டு கீழ் ரெண்டு பட்டன கழட்டி வுட்டு அதுல ஒரு முடிச்சு போட்டுகிட்டு திரியறவங்க நாம……//

ஆரூரன் இப்பவும் அப்பிடித்தானா ?ரஜனிக்கு இப்போ தலைல முடியே இல்லையே.அப்போ நீங்க !

ஈரோடு கதிர் said...

தலைவரே....

கலக்கிபுட்டீங்க போங்க...

பிரபானு... டைட்டில்ல படிச்சபோதே... ஏங்கனையோ உள்குத்து இருக்குமாட்றதுக்குனு பார்த்தேன்...

உள்குத்து இருக்கற மாதரதான் தெரிது.. ஆனா என்னானுதான் புரியல...

அப்றமா கேக்கறேன் இருங்க

ஆரூரன் விசுவநாதன் said...

//ஹேமா//


//ஆரூரன் இப்பவும் அப்பிடித்தானா ?ரஜனிக்கு இப்போ தலைல முடியே இல்லையே.அப்போ நீங்க !//

அவரளவுகு மோசமில்லை ஹேமா, எதோ கொஞ்சம் இருக்கு.....இன்னும் கொஞ்சம் மோசமான " மொட்ட பாஸ்'ஆயிடுவம்ல....

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி கதிர்....

VELU.G said...

எல்லா நெல்லாதான் இருக்குங்கண்ணா, என்ற ஊட்டாண்ட கூட இப்படி ஒன்னு நடந்துச்சுங்கண்ணா, அப்புறமா நடந்ததெல்லாம் வேணாம். சந்தோஷமாவு இருங்கண்ணா சாக்கிரதையாவும் இருங்கண்ணா

.. அருமையான நடை, கண்டிப்பாக அடுத்த பாகம் வெளியிடவும்,

cheena (சீனா) said...

கேரள - சேர நன்னாட்டின் நடை - கொங்கு நடை - நகைச்சுவை - பிரபாகரன் அழுத்தமானவர்தான்

ம்ம்ம் - தங்கச்சி சிரிச்சுடுச்சுல்ல - ஹீரோயின் ஹீரோ - அடுத்த பார்ட் எப்போ ? சீக்க்ரம்

நல்லாருக்கு ரசிச்சென் ஆரூரன்

நல்வாழ்த்துகள்

துபாய் ராஜா said...

நல்ல நகைச்சுவையான எழுத்துநடை.

வாழ்த்துக்கள்.

அப்பன் said...

கதை போறபோக்கு சாியில்லை போலதொியுதுங்ளே,,

ஆரூரன் விசுவநாதன் said...

//அப்பன்//


நன்றி ஐயா

நன்றி சீனா ஐயா

நன்றி துபாய் ராஜா

நன்றி வேலு

பித்தனின் வாக்கு said...

ஆகா கவுந்துட்டிங்களே துரை. கூடிய சீக்கிரம் பாட்டில் பிடிப்பேர் சங்கத்தின் தலைவராவது எப்படின்னு இந்தக் கதையில் சொன்னாலும் சொல்வீங்க போல. எப்படியே கதை சுபமா முடிஞ்சா சரி. நன்றி. அய்யா.

வால்பையன் said...

நல்லா அரசியல் பண்ணுறிங்கண்ணா!

என்னமோ, ஏதோன்னு வந்தேன், ரீடரை பார்த்துட்டு!

அன்புடன் அருணா said...

ஹாஹாஹா...நல்லாருக்கு!

Abhishek Prabhu said...

ஹாய் ஆரூரன்,
தயவு செய்து என்ன பத்தி மட்டும் போட்டுடாதே! நம்ம டீலிங் எ அப்புறம் மேல் வச்சுக்கலாம். நீ வேற பிரபாகரன் பத்தி சொல்றேன் நு சொன்னாயா. அது தான் என்னக்கு பயமா போச்சு !!!!!!!!!!!!