Wednesday, January 19, 2011

தமிழ் மணத்தை ஏன் குறை சொல்ல வேண்டும்?



தமிழ் மணம் விருது-2010ல் இறுதிக்கட்டத் தேர்வில் பதிவர்களை நடுவர்களாக நியமித்தது குறித்து வரும் விமர்சனங்கள் ஏற்புடையதாகத் தெரியவில்லை. தாங்கள் எப்படி பணியாற்றினோம் என்பது குறித்து நடுவர்களாக இருந்த பதிவர்கள் (கோவி, ஜோதிஜி) மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர். குறிப்பிட்ட பிரிவுகளில் போட்டியிடாத பதிவர்களிடம் வேறு இரண்டு பிரிவுகளில் தேர்வான இடுகைகளை அளித்து மதிப்பெண் பெற்று, அதே போல் இன்னொரு பதிவரிடமும் மதிப்பெண் பெற்று, அவைகளைத் துணைக்கு வைத்து தேர்வுக் குழு தேர்வு செய்ததாகவே என் புரிதல் உள்ளது.
  
அடுத்து, பதிவர்களின் இடுகைகளுக்கு வேறு எழுத்தாளர்களையோ, வலைப்பதிவு தொடர்பு அல்லாதவர்களையோ நடுவர்களாக நியமித்திருந்தாலும் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் எழத்தான் செய்யும். வலைப் பதிவு எழுத்திற்கும், மற்ற எழுத்தாளர்களின் எழுத்திற்கும் நிரம்ப வித்தியாசங்கள் இருக்கும் பட்சத்தில், வலைப் பதிவு எழுத்துக்களை ஆய்வு செய்ய, எடை போட வலைப்பதிவு எழுத்து மனோபாவம் கொண்ட பதிவர்களே சரியான தீர்வாக இருப்பார்கள்.

நடுவர்களாக இருந்த பதிவர்களின் மேல் இருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பையொட்டியே,இந்த விமர்சனங்கள் வந்திருப்பதையும் காண முடிகிறது.வலைப்பூ என்றால் என்னவென்றே தெரியாத ஆளை நடுவராக நியமித்து, அவர் யாரென்று தெரிய வந்தால் அவரின் சாதியோ, இனமோ, அரசியல் பார்வையோ அல்லது அவர் கொண்டிருக்கும் கொள்கையோ, யாரோ ஒரு பதிவருக்கு பிடிக்காததாகப் போனால், அங்கேயும் இதே குரல் கூடவோ, குறையவோ ஒலிக்கத்தானே செய்யும்.

குறையோ, விமர்சனமோ வைக்கும் முன்பாக, எதனடிப்படையில் வைக்கிறோம் என்பது முக்கியம். இறுதிக்கட்டத் தேர்வில் இருந்த நடுவர்கள் மேல் கொண்டிருக்கும் பார்வையின் விளைவே, இந்த விமர்சனங்களுக்கு அடிப்படையாக இருப்பதாகவே நம்புகிறேன்.

உண்மையை சொல்லவேண்டுமெனில் பல காரணங்களை முன்னிருத்தி சில பதிவர்கள் மேல் எனக்கும் மாறுபட்ட கருத்து இருந்தாலும், அவர்கள் இடுகை அழுத்தமான, ஆழமான பார்வையோடு, ஏற்றுக் கொள்ளும் வகையில், மனதிற்கு திருப்தியாக இருக்கும் போது அதற்கு வாக்களித்தும் இருக்கிறேன். 
  
இது வரை தமிழ்மணம் குறிப்பிட்ட ஒரு சார்பு நிலை எடுத்ததாக வலையுலகத்திற்கு வந்த மூன்று ஆண்டுகளில் ஒருபோதும் நான் உணர்ந்ததில்லை. மேலும் இதுவரை எதுகுறித்தாவது கேட்கும் போது தமிழ்மண நிர்வாகிகள் விளக்கமாக, வெளிப்படையாகவே பதிலும்  அளித்துவருகின்றனர். பதிவர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தோடு மூன்றாவது ஆண்டாக போட்டியை நடத்தி வரும் தமிழ் மணம், நடுவர்களை நியமித்ததை ஆதரிப்பது நமது கடமை. இந்தப் போட்டியின் வெற்றியே மற்ற திரட்டிகளையும் இது போல் நடத்த ஊக்குவிக்கும், அதன் பொருட்டு இன்னும் பதிவர்களுக்கும் சில ஊக்கம் கிடைக்கும் என்பதையும் மறவாமல் இருப்பது அவசியம்.


பொதுவாகவே, ஒரு போட்டியை நடத்தும் அமைப்பிற்கு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும்  அதிகாரம் இருக்கின்றது என்ற அடிப்படையை உணராமல் பேசுவதும் எழுதுவதும் முட்டாள்தனமானது.

எந்த ஒரு அமைப்பின் மீதி நமக்கு நம்பிக்கையில்லையோ , அந்த அமைப்பின் சட்ட திட்டங்களை ஏற்றுக்கொண்டு இணைந்து செயல்படுவதாக கூறிக் கொண்டு, ஓட்டுப் பட்டிகளை  இணைத்துக் கொள்வதும் மறுபுறம், அந்த அமைப்பை விமர்சிப்பதுமான  இரட்டை முகம் நமக்கு வேண்டாமே.

ச்சீச்சீ இந்த பழம் புளிக்கும் என்னும் விதமான செயல்பாடுகள் சில குள்ள நரிகளுக்கு வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்கலாம்.
பதிவுலக நண்பர்களே, நமக்கு இது தேவையில்லை.
  


17 comments :

எல் கே said...

//எந்த ஒரு அமைப்பின் மீதி நமக்கு நம்பிக்கையில்லையோ , அந்த அமைப்பின் சட்ட திட்டங்களை ஏற்றுக்கொண்டு இணைந்து செயல்படுவதாக கூறிக் கொண்டு, ஓட்டுப் பட்டிகளை இணைத்துக் கொள்வதும் மறுபுறம், அந்த அமைப்பை விமர்சிப்பதுமான இரட்டை முகம் நமக்கு வேண்டாமே. ///

இதனுடன் மட்டும் ஒத்துப் போகின்றேன் :)

ஜோதிஜி said...

பல சமயம் மௌனமாக இருந்து விடுவது நமக்கு பெரும்பாலான பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க உதவும்.

ஈரோடு கதிர் said...

சரியான புரிதல் இருந்தால்
குறை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை

அமர பாரதி said...

ஆரூர், அத்தனை பேரும் வெற்றியடைய நினைக்கும் நிலையில் இப்படி எழுத தோன்றுகிறதோ? தோல்வியை ஒப்புக் கொள்ளும் பக்குவமே கொஞ்சம் கூட இல்லாதவர்கள். சில காலம் முன்பு ஒரு பதிவர் கூகுளையே இந்த ரீதியில் கேள்வி கேட்டார். நம்மவர்களுக்கு போட்டியில் கலந்து கொண்டாலே முதல் பரிசு கிடைக்க வேண்டும்.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

//ஒரு போட்டியை நடத்தும் அமைப்பிற்கு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இருக்கின்றது//

போட்டியை நடத்தும் அமைப்பின் உழியர்கள் அதில் பங்கேற்கக முடியாது என்ற விதியும் இருப்பதை தாங்கள் அறிவீர்கள்.அப்படியிருக்க நடுவர்கள் பங்கேற்பது குறித்து உங்கள் மனசாட்சி உடன்படுகிறதா?

அன்புடன் நான் said...

ஜோதிஜி said...
பல சமயம் மௌனமாக இருந்து விடுவது நமக்கு பெரும்பாலான பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க உதவும்.//

இதுதான் எனக்கு சரியா படுதுங்க...

குடுகுடுப்பை said...

நானும் தமிழ்மணத்தை ஆதரிக்கிறேன்.நடுவர்கள் தேர்ந்தெடுத்ததில் அனைத்து தரப்பு சார்ந்துமே தேர்ந்தெடுத்துள்ளார்கள்.முற்றிலும் எல்லோரையும் திருப்திப்படுத்தும் விதத்தில் எந்தக்காலத்திலும் நடுவர்கள் தேர்ந்தெடுக்கமுடியாது.ஆனாலும் விமர்சனம் தவிர்க்கமுடியாதது. தமிழ்மணத்தின் சேவை அளப்பறியது குறைகளை பதிவர்கள் சுட்டிக்காட்டுவதில் தவறில்லை, அது பதிவுச்சூழலை முன்னேற்றுவதாக இருக்கவேண்டும்.

பழமைபேசி said...

யாரையாவது நம்பித்தானே ஆக வேண்டும்?

இக்பால் செல்வன் said...

தமிழ்மணம் பதிவுலகத்தில் ஒரு சிறு எறும்பினைப் போன்று, தமிழ்மண விருதுகள் எறும்பின் முதுகில் சுமந்து செல்லும் உணவைப் போன்று. அதனால் தமிழ்மணம் பற்றிக் குறை கூறுவதை விட்டுவிட்டு பதிவுலகில் ஆரோக்கியமான/அற்புதமான படைப்புகளை தர முயல்வதே ஒரு நல்ல பதிவுலகப் படைப்பாளியின் பணியாக முடியும். மற்றவையெல்லாம் ! ஜுஜுபி ........

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

இதுல இவ்வளவு விசயம் நடந்திருக்கா

தமிழ்மணம் என்ற அமைப்பின் சேவை அனைவரும் அறிந்ததே.

இந்த விசயம் திருப்தி இல்லை என்றால், அதற்கு தீர்வை முதலில் கூற வேண்டும்.

இப்படி இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.. அப்படி இருந்திருந்தா நல்லா இருக்கும்ங்கற பேச்செல்லாம் சரியான்னு தெரியல.

Unknown said...

எல்லோரின் எதிர்பார்ப்பினையும் பூர்திசெய்யும் நடுவர்களை தெரிவு செய்தல் சாத்தியமில்லாதது, ஆனால் விமர்சனங்கள் வரவேற்க தக்கனவே!!!

ஷர்புதீன் said...

சரியான புரிதல் இருந்தால்
குறை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை

i strongly agreed

Anonymous said...

தமிழ் மணம் விருது வழங்கும் விழாவில் பரிமாறிய ”போளி” ரொம்ப நன்றாக இருந்தது.

அதைத் தயாரித்த அனைத்து நல் இதயங்களுக்கும் என் பனிவன்புள்ள வாழ்த்துக்கள்.

Shanthamoorthi said...

May be next time we will ask tamilmanam to have voting for Judges first!!!!

Thamira said...

ஏற்புடைய நல்ல கருத்துகள் ஆரூரன்.

r.v.saravanan said...

சரியான புரிதல் இருந்தால்
குறை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை

repeat

Anonymous said...

விமர்சனமே சொல்லக் கூடாதுன்னா எப்படி முன்னேர்றது? விமர்சனங்களை வரவேற்கிறேன்.

விருதுகளை விமர்சிக்கறவங்க, ஒரு கட்டுரைக்கு நடுவர் தரும் வாக்கு சார்பற்றதாக இருக்க, என்ன செய்யணும்ன்னு சொன்னா நல்லா இருக்கும். யாரு எழுதினார்கள் என்பதை மறைத்து அனுப்பினாலும் கூட, சொல்லப்பட்ட கருத்து மீது சார்பு இருக்கத் தான் செய்யும்.

உதாரணத்துக்கு, ஆன்மிகம் பிரிவுல வெற்றி பெற்ற ரெண்டு இடுகையுமே நாத்திக வாதத்தைக் கொண்டிருந்தது. காரணம் என்னன்னு சொல்லவே தேவையில்ல. நடுவர்கள்ல பல பேரு நாத்திக எண்ணம் கொண்டவங்களா இருந்திருப்பாங்க. இதை எப்படிச் சரி செய்ய? குறை சொல்றவங்க தீர்வையும் சொல்லிப்போட்டு போங்கப்பு!