Thursday, February 16, 2012

வாழ்க காதலிகள்...வாழ்க காதலர் தினம்...

.

அவனவன் வாழ்த்து அட்டையோடையும், ரோசாப்பூவோடையும் மந்திரிச்சூட்ட கோழி மாதிரி ஊரெல்லாந் திரியரானுங்க.....நம்மாளு என்னடான்னா போன் அடிச்சா எடுக்கவே மாட்டீங்கறாளே... ....

நேத்து ரொம்ப பேசிப் போட்டமோ? என்ன கெரகமோ? சரி கடைசியா ஒரு தடவை முயற்சி செய்வோம்.........

ட்ரிங்.....ட்ரிங்......ட்ரிங்.....ட்ரிங்.....ட்ரிங்........

அவள்: அலோவ்..........

அவன்: அலோவ்....ஏண்டி செல்லம் இவ்வளவு நேரமா போன் எடுக்கல,? டிராவல்ல இருந்தியா?

அவள்: நேத்து என்னை எவ்வளவு டென்சன் படுத்தின............இப்ப படு........நான் பதிலே சொல்ல மாட்டேன்..........

அவன்: ப்ளீஸ்...ப்ளீஸ்.....சாரிடி ச்செல்லம், ஏதோ கோவத்தில பேசிப்புட்டேன்.......

அவள்: அதெல்லாம் முடியாது.......கோவத்துல எப்பப் பார்த்தாலும் கண்டபடி பேசறது......அப்புறம் சாரி சொல்ல வேண்டியது..உனக்கு இதே வேலையாப் போச்சு.....

அவன்: இல்லடி மயிலு.......ஏதோ ஒரு கோவம்...அதான்.......

அவள்: உன் கோவத்துக்கு நாந்தான் கிடைச்சனா???வேற எங்கயாவது போயி காட்ட வேண்டியதுதானே உன் கோவத்தை......

அவன்: வேற எங்கடி ராசாத்தி போவேன்.......கோவம், மகிழ்ச்சி, துக்கம், வேகம்,ஆசை, தாகம், தவிப்பு, அப்புறம் அது.......எல்லாத்துக்கும் நீதானடி ச்செல்லம்....

அவள்: ம்ம்ம்...நெசமாவா.....

அவன்: (ஆஹா........பட்சி மாட்டிகிச்சு...........கண்டினியூ டிராக்.......)சத்தியமாடி செல்லம்

அவள்: என்னை அவ்வளவு புடிக்குமா? உனக்கு....

அவன்: (என்ன பண்ணி தொலைக்கறது.....வேற எவளும் திலும்பிக்கோட பாக்க மாட்டீங்கறாளுகளே....)ம்ம்ம்ம்....

அவள்: எவ்வளவு புடிக்கும்............?

அவன்: ((ஏண்டி லூசா நீ?........எத்தனை தடவதான் இந்தக் கேள்வியைக் கேப்ப....எத்தனை தடவைதான் ஒரே பொய்யை நானுஞ்சொல்லறது)

சொல்லவே முடியாத அளவுக்கு.....எனக்கு எல்லாமே......... நீதான்.....

அவள்: ஐ ம் சாரி.......ஐ லவ்யூ டியர். ஐ ம் வெரிமச் இன் லவ் வித் யூ....ஐ. காண்ட் லிவ் வித் அவுட் யூ.....டியர்...

அவன்: ஐ டூ லவ் யூ டியர்.....

எங்கிருந்தோ ஒரு குரல்:
அடத் தூ......மானங்கெட்டதுகளே.......இதெல்லாம் ஒரு பொழப்பு......

7 comments :

Admin said...

சரியாகச் சொன்னீர்கள்..எல்லா இடங்களிலும் இப்படி நடந்து கொண்டுதானிருக்கிறது.பத்து நிமிடங்களுக்கு மேல் செல்போன் பேசும் முக்கால்வாசி பேர் பேசுவது மேற்கண்டதுதான்.

Admin said...

தமிழ்மணத்தில் இணைத்து வாக்கிட்டேன்.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றிங்க. மது

சத்ரியன் said...

ஏனுங் மாமா,

ஒன்ற மாப்ள பேசினத ஒட்டு கேட்டீங்களாக்குங்.

மைண்ட் வாய்ஸ் மொதக்கொண்டு போட்டிருக்கீங்களே.

அருமை மாமா.

vasu balaji said...

பழய நெனப்புதான் பேராண்டின்னு பாட்டு வரி கவனம் வருது:))

Unknown said...

ஏனுங்க...ஆனந்தவிகடன் என்விகடன்ல உங்க தளத்தைப் பற்றி சொல்லியிருக்காங்க....வாழ்த்துகள்ங்க.......

க.பாலாசி said...

பொழப்பு இப்டிதான் ஒடுதுங் சார்.. :)))