Saturday, December 12, 2009

ஈரோட்டில் சி.எஸ். பர்தி சிலை திறப்பு விழா

என்ன மக்களே குழப்பமா இருக்கா? எனக்கும் அப்படித்தான் இருந்துதுங்க. பாருங்க, நேத்தைக்கு, நம்ம கருங்கப்பாளையம், பாரதி நினைவு நூலகத்தில பாரதியார் சிலை திறப்பு விழான்னு ஊரெல்லாம் தட்டிகட்டி இருந்தாங்க……

சரி நாமும் தான் போயி பார்ப்போமேன்னு,போனா ஒரே கூட்டமுங்க………..

என்னோடு சேர்த்து 8 பேர். அதுல ரெண்டு பேர் அந்த நூலக அலுவலர்கள். இரண்டு மூன்று கரை வேட்டிகள் வரவேற்க, முன்னாள் அமைச்சர் வந்து பாரதியார் சிலையத் திறந்து வச்சாருங்க. எல்லாரும் கை தட்டினாங்க……..சிலைய தொறந்து வச்சிட்டு அவுரு, அருங்காட்சியகத்த தொறக்கப் போனாருங்க………

அப்பால, போயி,நம்ம முண்டாசு கவிக்கு ஒரு வணக்கஞ் சொல்லாமேன்னு உள்ளாற போனனுங்னா. உள்ள நுழைஞ்சதும், பக்கத்து தெரு மார்வாடி யாவாரியாட்டம் ஒரு பொம்மையிருந்துதுங்க…..சரி ஏதோ டொனேசன் குடுத்த ஆளாட்டமிருக்கு…… வாசல்ல செருப்பு கழட்டிவுடற எடத்துல ஓரமாத்தானே இருக்கு…….இருந்துட்டு போகுட்டுன்னுட்டு நினைச்சுகிட்டு

பக்கத்துல இருந்த ஒருத்தர் கிட்ட…… ஏனுங்னா, பாரதியார் சில திறந்தாச்சுங்களான்னு? கேட்டேன்.

அவரு என்ன மேலயும், கீழயும் பார்த்திட்டு,

பார்த்தாத் தெரியலை, இதுதான்னு, அந்த யாவாரி பொம்மய காமிச்சாருங்ணா. அப்பிடியே ஆடிப் போயிட்டனுங்ணா. பொம்மைக்கு கீழ பேரு கூட இல்லங்ணா……… நீங்களே சொல்லுங்ணா…….இது பாரதியார் சிலைங்களாங்ணா?  நம்மளயவே யேமாத்தப் பாக்குறானுங்ணா.




பக்கத்துத் தெரு மார்வாடி யாவாரி சிந்திரகாந்த் சுரேஷ்சந்த் பார்தி சிலைதானுங்ணா இது.?  பத்து இருவது வருசங் கழிச்சி வாரவனுங்க சி.எஸ். பார்தி செல இதுன்னு சொன்னாலும் சொல்லீருவானுங்ணா. சாக்கிரதயா இருக்கோணுமில்லீங்ணா.

பிட் 1:

என்ன நடக்கத்திங்க….

நேற்று ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடைபெற்ற “பாரதி விழா” கூட்டத்தில் கோவை பாரதீய வித்யா பவன் தலைவர், திரு பி.கே.கிருஷ்ண ராஜ வானவராயர், கவிஞர்.பெ.தூரன் படத்தை திறப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் திரு சுடலைக் கண்ணன் பாரதி விருது வழங்குவதாகவும்…..(யாருக்கு?) பேர் எதுவும் போடப் படவில்லை.) நெல்லைக் கண்ணன் “பாரதி என்னும் மாமனிதன்” என்ற தலைப்பில் பேசப் போவதாகவும் விளம்பரத் தட்டிகள் இருந்தன. தவிர்க்க இயலாத காரணங்களால் என்னால் அந்த நிகழ்ச்சிக்கு போக முடியவில்லை.

இன்று காலை தினசரிகளில் இது பற்றிய எந்த செய்தியும் இல்லை. சாவுப் பத்திரிக்கையில் வராது போனாலும், தினமும் தந்தியடிக்கும் தமிழர் தந்தையின் பத்திரிக்கை கூட இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதாதன் மர்மம் என்ன?

பிட் 2:

அரசாங்க நூலகத்தில் சி.எஸ்.பார்தி சிலை திறக்க அனுமதி பெறப்பட்டதா? அப்படியென்றால், அதைத் அரசாங்கத்தின் எந்த பதவியிலும் இல்லாத ஒரு முன்னாள் அமைச்சர் எந்த அடிப்படையில் திறந்து வைத்தார்? வாசலில் செருப்பு கழட்டிவிடுமிடத்தில் இவ்வளவு அவசரவசரமாக ஒரு சிலை இல்லைன்னு இப்ப யாரு கேட்டா?







பிட் 3:
மக்கள் சிந்தனைப் பேரவையின் விழா பற்றிய இருட்டடிப்புக்கும், அவசர கோலத்தில் உள்ளூர் அமைப்பு ஒன்றின் பெயரால் நடத்தப் பட்ட பார்தி சிலை திறப்புவிழாவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?


24 comments :

க.பாலாசி said...

//பார்தி சிலை//

எவ்வளவு அசிங்கமான செயல்...

சரி விடுங்க...சிலையிலாவது பாரதி கொழுக் மொழுக்கென்று பணக்கார வீட்டு பையன் மாதிரி இருக்காரே....

நேத்து இத்தனை கொடுமைகள் நடந்திருக்கா...????

vasu balaji said...

//க.பாலாசி said...

//பார்தி சிலை//

எவ்வளவு அசிங்கமான செயல்...

சரி விடுங்க...சிலையிலாவது பாரதி கொழுக் மொழுக்கென்று பணக்கார வீட்டு பையன் மாதிரி இருக்காரே....//

யப்பா சாமி. அரூர் அழிம்புக்கே சிரிச்சி மாளல இவன் வேற=))

vasu balaji said...

//பக்கத்து தெரு மார்வாடி யாவாரியாட்டம் ஒரு பொம்மையிருந்துதுங்க…..சரி ஏதோ டொனேசன் குடுத்த ஆளாட்டமிருக்கு…… வாசல்ல செருப்பு கழட்டிவுடற எடத்துல ஓரமாத்தானே இருக்கு…….இருந்துட்டு போகுட்டுன்னுட்டு நினைச்சுகிட்டு//

:))))))..முடியல.

vasu balaji said...

மீசையாச்சும் கொஞ்சம் அசலாட்ருக்கு. பாராட்டுங்க சாமிகளா.

கலகலப்ரியா said...

நெஞ்சு பொறுக்குதில்லையே...! (வேடிக்கை மனிதர்கள்...) கலக்கல் பதிவு..!=)

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
மீசையாச்சும் கொஞ்சம் அசலாட்ருக்கு. பாராட்டுங்க சாமிகளா.//

யார...மீசைக்கு பெயிண்ட் அடிச்சவனையா?? அவன் யாரோட பொம்மன்னு நினைச்சு பெயிண்ட்டடிச்சானோ?

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி பாலாசி.....

பாரதி நிலையை பார்த்தீர்களா?

என்ன செய்வது?

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாண்ணே.....

இந்த பொம்மையப் பார்த்ததும் முதல்ல கோவம் வந்தது. அப்பறம் உண்மையில சிரிப்புதான் வந்தது. பரவாயில்லை, சிலைக்கு கீழ பேர் எழுதாம வுட்டான். பாக்கிறவங்களுக்கும் குழப்பமிருக்காது. செஞ்சவனுக்கும் குழப்பமிருக்காது.

ஆரூரன் விசுவநாதன் said...

வாங்க ப்ரியா.....

சரியாச் சொன்னீங்க.....

ஆரூரன் விசுவநாதன் said...

//வானம்பாடிகள் said...
மீசையாச்சும் கொஞ்சம் அசலாட்ருக்கு. பாராட்டுங்க சாமிகளா.//

//பாலாசி//
யார...மீசைக்கு பெயிண்ட் அடிச்சவனையா?? அவன் யாரோட பொம்மன்னு நினைச்சு பெயிண்ட்டடிச்சானோ?


உண்மையில சிலை செய்தவனோ, அல்லது அதை அங்கே வைத்தவனோ பாரதியாரை படத்துல கூட பார்த்திருக்க மாட்டனுங்கன்னு நினைக்கிறேன்.

ஆரூரன் விசுவநாதன் said...

முண்டாசை மறைச்சிட்டு பார்த்த அச்சு அசல் மதுரை வீரன் சாமியாட்டமே இருக்குதுங்ணா

ஈரோடு கதிர் said...

//யாவாரி சிந்திரகாந்த் சுரேஷ்சந்த் பார்தி சிலைதானுங்ணா //

அடப்பாவிகளா.....

பிட்-1 மேட்டருக்கும் இதுக்கும் முடிச்சு இருக்கும் போல இருக்கே

ஆரூரன் விசுவநாதன் said...

வாங்க கதிர்.........

சத்தியமா எனக்கு ஒன்னும் தெரியாது கதிர்......

Thamira said...

சும்மா டைம்பாஸுக்கு இந்தமாதிரி பண்ணூவாங்கன்னு நினைக்கிறேன்.

அகல்விளக்கு said...

//சி.எஸ். பார்தி//

அடப்பாவி மக்களே...

என்ன அநியாயம் இது..

thiyaa said...

தமிழ் படுற பாடு
நல்ல காலம் பாரதி இல்லை

இராகவன் நைஜிரியா said...

பாரதியை இதவிட மேலாக யாரலும் அவமானப்படுத்திவிட முடியாது.

கொடுமையடா சாமி...

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி ராகவன்ணே.....

கேக்க நாதியில்ல.....என்னவேனா பண்ணுவாங்க

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி தியா.....

ஆரூரன் விசுவநாதன் said...

சரியாச் சொன்னீங்க ஆதி......ஆனா இவனுங்களுக்கு பொழுது போகாததுக்கு பாரதியா கிடச்சார்?

ஆரூரன் விசுவநாதன் said...

என்ன பன்னறது அகல் விளக்கு....நம்ம நிலைமை அப்படி இருக்குது,

sathishsangkavi.blogspot.com said...

இவர்கள் விளம்பரத்துக்கு பாரதிய இழுக்குறாங்க.....

எந்த பத்திரிக்கையிலும் வராது..........
அப்படி வந்தா அவர்களுக்கு விளம்பரம் வராது..........(வியாபரம் மட்டுமே முக்கியம்)

KARTHIK said...

மேட்டர் இதுதான் மக்கள் சிந்தனை பேரவை காரங்க தன்னோட மகன் (ரவுடி?)பேர நேட்டீஸ்ல போடாம விட்டுட்டாங்களாமா அதான் இப்படின்னு ஊருல பேசிக்குராங்க
எது நெசமோ பார்திக்கே வெளிச்சம்.

K.R.அதியமான் said...

ஒரு செய்தி : பாரதியார், 1921இல் சென்னையில் காலாமாவதற்க்கு முன் கடைசியாக கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி : ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒரு நிகழ்சி. அங்கு சொற்பொழிவாற்ற, ஈரோடு சென்று, அங்கிருந்து மாட்டுவண்டியில் கருங்கல்பாளையம் அடைந்தார்.
அதுவே அவரது கடைசி பொதுகூட்டம். இது 1921 செப்டெம்பர் முதல் வாரத்தில் நடந்தது..