இன்று காலை 7.30 மணிக்கு
நண்பர் கதிரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு.
மிக சுவராசியமான தகவலை என்னிடம் சொன்னார்.
கதிர் என்னிடம், ஏங்க,
உங்களுக்கு சண்முகராஜன் தெரியுமா?
இல்லைங்களே, யாரது. ?
ஆப்பிரிக்காவிலிருந்து
அழைத்திருந்தார். விழாவிற்கு வாழ்த்துச்
சொன்னார் என்றும் தெரிவித்தார்.
பவானி பகுதியைச்
சார்ந்தவர், ஆப்பிரிக்க நாடான “தோஹா”(பெயர் தவறாக இருப்பின் மன்னிக்கவும்.) வணிகம் செய்து வரும் இவர், இன்று காலை கதிரை
அலைபேசியில் அழைத்து, விழாவிற்கு வாழ்த்துத் தெரிவித்ததொடல்லாமல், சந்திப்பின் செலவினங்களுக்காக ரூபாய் 1000/-
நாண்பர் ஒருவர் மூலம் கொடுத்தனுப்புவதாகவும் தெரிவித்தார்.
விழா நிகழ்வுகள்
முழுவதையும், தன் நண்பர் மூலம் இலவசமாக வீடியொ எடுத்துத் தருவதாகவும்,
உறுதியளித்ததொடல்லாமல், அவருடைய நண்பர் பவானி ஸ்டார் வீடியோ உரிமையாளரிடம் அழைத்து
நிகழ்ச்சியை ஒளிப் பதிவு செய்து தருமாறும் கூறியிருந்தார். அவரும். கதிரை தொடர்பு கொண்டு தன் வருகையை
உறுதி செய்திருக்கிறார்.
தமிழ்மணத்தின் சார்பில் கோவை
காசி அவர்களும், கல்வெட்டறிஞர் திரு, இராசு அவர்களும் விழாவில் கலந்து கொள்வதாக இன்று தொலைபேசியில்
உறுதியளித்தார்கள்.
க.சீ. சிவக்குமார்
கலந்து கொள்வதாக உறுதியளித்தாக தமிழ் மணம் கனேசன் ஐயா, தெரிவித்திருந்தார். க.சீ. சிவக்குமார் அவர்களை தொடர்பு கொள்ள
முயற்சித்து வருகின்றோம்.
துபாயிலிருந்து நண்பர்
நாகா, செந்தில் வேலன், அசாமில் எல்லைப் பாதுகாப்பு படையில் பணிபுரியும் நண்பர்
தேவராஜ் விட்டலன் ஆகியோர் அலைபேசியில் வருகையை உறுதி செய்துள்ளனர்.
பல்வேறு
பகுதிகளிலிருந்தும் நண்பர்களின் வாழ்த்தும், நிதி ஆதரவும் தொடர்ந்து
கொண்டிருக்கிறது.
நிகழ்ச்சியை சிறப்பாக
நடத்த வேண்டுமே என்ற கவலையும் கூடிக் கொண்டே போகிறது……
தண்டிகை தாங்கியும்,
காளாஞ்சி ஏந்தியும், தமிழ்செய் கம்பன்
அண்டையில் பாதச்சம்
மாளியும் தூக்கி அடிமையும் பட்டு
வெண்டுவ கோத்திரன்
தீத்தான் செவ்வந்தி விளங்கு கங்கை
மண்டலம்
கீர்த்திதனைப்படைத்தான் கொங்கு மண்டலமே.
சிவனே பரம்பிறிது இல்லை
எனாதததல் சிரம் துணிக்க
உவந்தனன் சோழன் எனமறு
வேடமாய் ஓடிவந்து
கவன்றிடு ராமா நுசன்
தனைத் தேற்றியும் காத்தளித்த
மவனகை கொங்குப்
பிராட்டியரும் கொங்கு மண்டலமே
கவி கம்பனுக்கும், காவி
ராமானுசனுக்கும் தங்குமிடமளித்து தகைசார்ந்த வாழ்வளித்த கொங்கு மண்டலத்தில்
கூடுவோம் வாரீர்……
காவிரிதன் கரைதனையே
களமாக்கி
பொங்கு தமிழ் வளர்க்கப்
புறப்பட்டோம்.
எங்கும் தமிழ், எதிலும்
தமிழ் என்றுறுதி கொண்டோம்.
கொங்கு தமிழ் காவலனாய்,
மொழிகாக்கப் புறப்பட்டோம்
சேரவாரும் செகத்தீரே………….
பதிவுலக நண்பர்கள்,
தங்களின் புத்தக படைப்புகளை கொண்டுவந்தால், விழா அரங்கில் காட்சிக்கு வைக்கவும்,
விற்பனை செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
43 comments :
இடுகை அழகு போங்க...
அய்யா.... நண்பர்களே...
தாங்கள் வருகை உறுதிப்படுத்தாதவங்க உடனே கொஞ்சம் சொல்லுங்க.. ப்ளீஸ்
விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் நண்பா
நன்றி கதிர்
நன்றி நவாஸ்
அருமை ஆரூரன். எப்படிப் பாராட்ட. பதிவர் கூடலுக்கு முன் உதாரணமாக அமைய வாழ்த்துகள்.
//ஈரோடு கதிர் said...
இடுகை அழகு போங்க...
அய்யா.... நண்பர்களே...
தாங்கள் வருகை உறுதிப்படுத்தாதவங்க உடனே கொஞ்சம் சொல்லுங்க.. ப்ளீஸ்//
வழிமொழிகிறேன்....
நன்றி பாலாசி
நன்றி பாலாண்ணே....
வெற்றி விழாவிற்கு வாழ்த்துக்கள்
//நாட்கள் ஆக ஆக , சூழ் கொண்ட தாயாய், உள்ளம். பெற்றெடுத்துப் பேர் சூட்டி, உச்சி முகர்ந்தால் தான் தீரும் இந்த வலி.//
அருமை விஸ்வா!சிறக்க வாழ்த்துக்கள்!
தமிழ்மணம் காசி அவர் பெயர்!
உங்கள் பதிவில் கனேஷன் என்று இருக்கிறது, அப்படி ஒருவரும் இருக்கிறார், ஆனால் அமெரிக்காவில் இருக்கிறார், அவர் வருவாரான்னு தெரியலையே!?
நண்பர்களின் அன்பில் நானும் சொக்கி போனேன்!
வருகை உறுதி செய்யப்படுகிறது..!
//வால்ப் பையன்//
வால், அமெரிக்காவில் உள்ள நா. கணேசன் அவர்கள் தமிழ் மணத்தின் சார்பில், கோவை காசி அவர்கள் கலந்து கொள்கிறார் என்பதை உறுதி செய்திருக்கிறார்.
நன்றி கருணாகரசு
நன்றி நாகா
நன்றி பா.ரா. உங்கள் புத்தகம் விரைவில் என் கையில் கிடைத்துவிடும் என நினைக்கின்றேன். படித்துவிட்டு தொடர்பு கொள்கிறேன்.
ஆரூரன்.,
பதிவு மிகவும் அழகாக இருக்கின்றது.
”தோஹா” ஆப்ரிக்காவில் இருப்பதாக தோன்றவில்லை.
அது அரேபிய நாடாகத்தான் அறிய வந்திருக்கிறது.
எங்கு பிடித்தீர்கள் அந்த கொங்கு சதகத்தினை..?
அப்புறம்.,
என்னை நேரில் சந்திக்கையில் உங்களுக்கு ஒரு முத்தம் பாக்கியிருக்கிறது....எழுத்துப்பிழைகளுக்காக.
வாருங்கள்....வந்து கொங்கு மண்டலத்தின் கலாச்சாரத்தையும், பெருமைகளையும் எங்களோடு சேர்ந்து கொண்டாடுங்கள்.
எழுத்துப் பிழைகளுக்காக வருந்துகிறேன்....
அன்புடன்
ஆரூரன்
உங்கள் அன்பிற்கு நன்றி கும்க்கி
இணையதளத்தில் இணைந்திருந்த நண்பர்கள்
இனிதே இங்கு ஒருங்குகூடி, இணையத்தமிழ்
வளர்க்கும் எண்ணம் இனிதே நிறைவேற வாழ்த்துகள்!
ஆழிப்பெருங்கடலுள் அடியேனும் சிறு துளியாய் சங்கமிக்கிறேன்.
ஆஹா... அசத்துங்க ஆரூர்...! எல்லாம் நல்லபடி அமைய நல்வாழ்த்துகள்...! (அட ச்சே... மாட்டர் தெரிஞ்சிருந்தா... என்னோட புக் ரெண்டு வெளியிட்டிருக்கலாமே... ஜஸ்ட்டு மிஸ்ட்டு... =)))
நன்றி முருக கவி...
இப்பொழுதும் வாய்ப்பு உண்டு ப்ரியா...... மின் அஞ்சலில் அனுப்புங்கள் வெளியிட்டு விடுவோம்.
பதிவர் சந்திப்பு நல்லபடி நடக்க வாழ்த்துக்கள்
நன்றி சின்ன அம்மிணி
//ஆரூரன் விசுவநாதன் said...
இப்பொழுதும் வாய்ப்பு உண்டு ப்ரியா...... மின் அஞ்சலில் அனுப்புங்கள் வெளியிட்டு விடுவோம்.//
=))... ம்ம்... அனுப்பிச்சாலும் அனுப்பிடுவேன் ஜாக்கிரத.. (அன்புக்கு நன்றி...)
தோஹா இருப்பது கத்தார்லங்க
// என்னை நேரில் சந்திக்கையில் உங்களுக்கு ஒரு முத்தம் பாக்கியிருக்கிறது....எழுத்துப்பிழைகளுக்காக.//
அங்கிலுக்கு குடத்தது பத்தாதா தல :-))
//கார்த்திக்//
// என்னை நேரில் சந்திக்கையில் உங்களுக்கு ஒரு முத்தம் பாக்கியிருக்கிறது....எழுத்துப்பிழைகளுக்காக.//
அங்கிலுக்கு குடத்தது பத்தாதா தல :-))
அய்யோ சாமி......நான் வரல இந்த ஆட்டத்துக்கு......
நன்றி கார்த்திக்
வெற்றி விழாவிற்கு வாழ்த்துக்கள்
வெற்றி விழாவிற்கு வாழ்த்துக்கள்
நன்றி நி.கே
நாட்கள் ஆக ஆக , சூழ் கொண்ட தாயாய், உள்ளம். பெற்றெடுத்துப் பேர் சூட்டி, உச்சி முகர்ந்தால் தான் தீரும் இந்த வலி. ................விழா சிறப்புற எடுத்து கொள்ளும் கரிசனம் தெரிகிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அன்பிற்கு நன்றி சித்ரா....
ஒரு செய்தி : பாரதியார், 1921இல் சென்னையில் காலாமாவதற்க்கு முன் கடைசியாக கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி : ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒரு நிகழ்சி. அங்கு சொற்பொழிவாற்ற, ஈரோடு சென்று, அங்கிருந்து மாட்டுவண்டியில் கருங்கல்பாளையம் அடைந்தார்.
அதுவே அவரது கடைசி பொதுகூட்டம். இது 1921 செப்டெம்பர் முதல் வாரத்தில் நடந்தது..
க.சீ சிவகுமார் ஏன் வரவில்லையென்று நேற்றே கேட்க நினைத்தேன், மறந்துவிட்டேன். ஏதும் தகவல்?
நான் முதன்முறையாக வருகிறேன் மிக அழகான
சந்திப்பாக அமைந்திருக்கிறது நீங்க எழுதியிருப்பதிலிருந்தே தெரிகிறது.. மிகுந்த சந்தோஷம்.
http://niroodai.blogspot.com
//நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த வேண்டுமே என்ற கவலையும் கூடிக் கொண்டே போகிறது…\\
நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது நண்பரே...
வாழ்த்துகள்
நிகழ்காலத்தில்.......
நன்றி நண்பா
நன்றி மலிக்கா.....
ஈரோடு கோடீஸ்....
க.சீ. சிவக்குமாரின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு உடல் நலம் இல்லையாம். இன்று காலை அழைத்திருந்தார்.
விரைவில் சந்திப்பதாகவும் கூறினார்...
அமர்கள படுத்திட்டீங்க போல விஸ்வா!
வாழ்த்துக்கள்!
நன்றி பா.ரா
Post a Comment