Wednesday, December 30, 2009

வெண்ணைய் வெட்டி வினவுக்கு……......

அதிமேதாவி, ஆல் இன் ஆல் அழகு ராசா வணக்கம்

// உலகில் நேர்மறையாக எழுதவேண்டிய விசயங்கள் மலையளவு இருக்கும் போது தொடர்ந்து பிரச்சினைகளையும், தகராறுகளையும் அலசி ஆய்வதிலிருந்து என்று விடுதலை கிடைக்குமோ தெரியவில்லை. ஆனால் ஊர் உலகமென்றால் பிரச்சினைகளும் இருக்கும்தானே?//

ஊர் உலகமென்றால் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும் என்ற முடிவுக்கு வந்த  பின் என்னாத்துக்கு முன்னாடி பெரிய பில்டப்பு?  நாங்களும் ரவுடி தாண்டி(அதான் அரசியல்வாதி தான்னு) சொல்லிக்கவா? மலையளவு விசயங்கள் எழுத இருக்கும் போது நாம ஏன் இந்த மயிரு புடுங்கற  விசயத்துக்கு வந்தோம்………


//இரவு நடந்த மதுவறைக் கொண்டாட்டங்களில் பேசப்பட்ட வரலாற்றுப் புகழ் விவகாரங்கள் காதுகளுக்கு வரவில்லை என்பதைத் தாண்டி எதையும் நொள்ளை சொல்வதே வினவின் குணம் என்பதால் விட்டுவிட்டு மேலே செல்வோம்.//

பக்கத்தூட்ல என்ன நடக்குதுன்னு, ஒட்டுக் கேக்கிறத நிறுத்தினாவே, போதும் எல்லாப் பிரச்சனையும் தன்னாலே ஓய்ந்துவிடும்.  அதுசரிஅத நிறுத்திப்போட்டா பொழப்புக்கு எங்க போறது.?????????? அவன் கழுவியிருக்கானா? இவன் கழுவியிருக்கானான்னு பாக்கறது தான் பொழப்பே, அப்புறம் அதுல குணத்த பத்தி என்ன சுய விமர்சனம்.


//யாரையோ திருப்திப்படுத்தவோ, முன்னெச்சரிக்கைக்காகவோ, ஜாக்ரதையாக எழுதி பதிந்து கொண்டார். இதன் பின்னணி என்ன?//

ஒரு தேசிய இனம் அடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்து, சுய நிர்ணய உரிமைக்காக, ஏகாதிபத்தியங்களுக்கெதிராக போர் தொடுத்த வேளையில் சர்வ தேசியம், வர்க்கப் போராட்டம் என்று மட்டுமே   பேசச் சொல்லிக் கொடுக்கப் பட்டிருந்தாலும்,  யாரையோ ஏமாற்ற, அல்லது திருப்தி படுத்த , முன்னெச்சரிக்கையாக  தமிழ்தேசியம் ஏகாதிபத்தியங்களுக்கு துணைபோகும் என்று நீங்களே பேசும் போது, அவர் எம்மாத்திரம்.

//அதிலும் நற்குடிபெண்களென்றால் பர்தா இல்லாமல் வாழமாட்டார்கள் என்ற ரேஞ்சில் தனது அடிமைத்தனத்தை சிலாகித்திருந்தார். இப்பத்தான் பதிவுலகம் வந்திருக்கும் அந்த பேதைப்பெண்ணுக்கு உலகம், அடிமைப்பெண்கள், சுதந்திரப் பெண்கள், மத பிற்போக்குத்தனங்கள் எல்லாம் புரிவதற்கு பதிவுலகமென்ன முற்போக்கு சிங்கமாகவா உள்ளது?//

ஏகாதிபத்தியத்தியத்தின்,  கொடுமையான விளைவுகளே, சமூக  சீர்கேடுகள்.   சாதி, மதம், இனம், போன்ற அடையாளங்களை முன்னிறுத்தி, வர்க்க அடையாளங்களை அழிக்கப் பார்க்கின்றன என்று பேசிய நாம், இன்று, சமூக சீர்கேடுகளை நீக்கப் பாடுபடுவதன் ரகசியமென்ன?  மாடு போடும் சாணிகளை பொறுக்கி விட்டால், இனி குப்பையாகாது என்ற நம்பும் முற்போக்கு சர்வதேசிய சிங்கமளவிற்கு, பதிவுலகத்திற்கு பத்தாதுதான்.


//இவ்வளவிற்கும் இவர் பர்தாவை எதிர்க்கவில்லையாம். அவரவர் மதம் சார்ந்த நம்பிக்கைகளை அவரவர் பின்பற்றுவது சரியாம். ஆனால் அதற்காக மற்ற மதத்தவர்களை நொட்டம் சொல்வது சரியல்ல என்பதே பிரியாவின் வாதம்.//

 பஸ் ஸ்டேண்டு கக்கூஸ்ல பக்கத்து அறையில இருந்தவன் உளரலை அரைகுறையா கேட்டுகிட்டு,  ஏதோ தானே பக்கத்துல இருந்து பார்த்து, படிச்சு,  மாதிரி எழுதுவதுதான் சகிக்கவில்லை.   சம்மந்தப்பட்ட பதிவின் பின்னூட்டங்கள், நீங்கள் வைரஸ்ல இருந்து திரும்பி வருவதற்குள் எடுக்கப்பட்டு விட்டன.   அப்புறம் எங்கிருந்து இதெல்லாம் படிச்சீங்க.இழவு திருந்த மாட்டீங்களே……..

வடிவேலு சொல்லுற மாதிரி, எத்தனை அடிச்சாலும் வலிக்காத மாதிரி நடிக்கிறீங்களே ……அது எப்புடிங்க……?


//பெண்ணை மதங்கள் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அநீதி குறித்து கிஞ்சித்தும் கவலை கிடையாது. அது இருந்தால் இந்து மதம் பெண்ணை வதைத்திருக்கும், வதைத்துவரும் கொடூரங்கள் குற்ற உணர்வை கொள்ள வைத்திருக்கும். இந்த விசயங்களை அந்தப் பதிவர்களின் பின்னூட்டங்களில் தனியாக நின்று வாதிட்ட  சுகுணாதிவாகரின் பின்னூட்டத்தை பலரும் சீண்டவில்லை என்பது மட்டுமல்லாமல் அநாமதேயங்களாகவும் வந்து கிண்டலடித்தார்கள்.//

அடக்கருமமே…………சம்மந்த பட்ட பதிவர், சுகுணாதிவாகர் வேற, சுகுணா ..திவாகர் வேறன்னு எழுதறாங்க……நீங்க ஏன் புதுசா வந்து எங்கப்பன் குதுருக்குள்ளேன்னு……..

//நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னர் கூட பார்ப்பனப் பெண்கள் விதவையானால் அவளது முடியை ஒண்ணொண்ணாக பிடுங்கி மொட்டையடித்த நாடும் இதுதானே? இந்தக் கதையெல்லாம் தனக்கு தெரிந்த நல்ல பார்ப்பனர்களை வைத்து ஜெயேந்திரப் பார்ப்பனர்களை மறைக்கும் பழமைபேசி பஞ்சாங்கங்களுக்கு தெரியுமா?//

நாலு நல்ல கம்யூனிஸ்டுகள வச்சிகிட்டு(அவுங்களும் நல்ல கம்யூனிஸ்டான்னு மற்ற மார்க்ஸிய தோழர்களைத்தான் கேக்கனும்) நீங்களே 30 வருசமா பொழப்ப ஓட்டும் போது, மத்தவங்கள பேசற யோக்கிதை  எங்கிருந்து வந்தது.

 ஜெயேந்திர பார்ப்பானை நாங்க மறைக்கிறோம், நீங்க என்ன பண்ணிங்க,,,,,?  10க்கு 10 மேடையில் மைக் புடிச்சு நாலு கூட்டம் போட்டிருப்பீங்களா?   அதுக்கப்பறம்???????  

 எங்கடா எழவு வுழும்,  திங்கறதுக்கு பொணம் கிடைக்குன்னு அலையற உங்களுக்கு, பொண்ணு செத்தா என்ன? மாப்பிள்ளை செத்தா என்ன? பொணம் கிடைச்சா சரி………

அப்பவே பல நண்பர்கள் போன் பண்ணி சொன்னாங்க……” அது ஒரு காமெடி பீஸுங்க”   அதுக்கு ஏன் இவ்வளவு விளக்கம்னு.

தமிளு, திராவிடன்னு பேசியே ஒருத்தன் நாற்பது ஐம்பது வருசமா தாலியறுத்தான், அவனையே பொறுத்துகிட்டோம்…….  பெண்ணீயம், பார்ப்பணீயம், சாமீயம், சர்வ ரோக நிவாரணம்அதான், சர்வதேசியன்னு, நீங்க பேசறதையும் பொறுத்துகிட்டு இருக்கோம்..ஏன்யா இப்படி பேசிறீங்கன்னு என்னைக்காவது கேட்டிருப்பமா? 

கடைசியா ஒன்னு சொல்லறன் இப்பவாவது திருந்துங்க……..அரிப்பெடுத்தா சொறிய, நாங்களா கிடைச்சோம்.     எத்தனை பேர் மப்புக்குத்தான்  நாங்க ஊறுகாயா இருக்கிறது?



 அதொட மட்டுமில்லாமல், எந்த சாமியாவது காப்பாத்தாதான்னு, ஏங்கிப்போய், வாங்கும் சம்பளத்தில் உங்களுக்கும் மாமூல் கட்டிவிட்டு (சந்தா-ங்கற பேர்ல வாங்கரீங்களே) உங்க அதிமேதாவிதனங்கள கேக்க ஊருக்கு பத்து அப்பாவிகள் இருக்கிறார்களில்லையா?அவர்களையெல்லாம் போய் முதல்ல காப்பாத்துங்கய்யா……


எங்க பிரச்சனையை நாங்க பார்த்துக்கிறோம்.நீங்க போய் உங்க ஒலக பிரச்சனைகளைப் பாருங்க சர்வதேசிய பிரச்சனைகள் நிறைய காத்துகிட்டிருக்கு உங்களுக்காக..

அதெல்லாம் விட்டுபோட்டு, எதுக்கு இந்த வெண்ணை வெட்டி வேலை., பொரட்சி, கிரட்சி  பண்ணி எல்லாதையும் காப்பாத்தர வேலைய பாருங்க…….


எங்களைய வுட்டுருங்கய்யா………..


37 comments :

ஈரோடு கதிர் said...

//இரவு நடந்த மதுவறைக் கொண்டாட்டங்களில் பேசப்பட்ட வரலாற்றுப் புகழ் விவகாரங்கள் காதுகளுக்கு வரவில்லை//

மூனு மணி நேரம் 70 பேர் கலந்துகிட்ட நிகழ்வு இந்த பூ.கண்ணாடி போட்ட புத்திசாலிக்கு தெரியல.... நிகழ்வு முடிஞ்சு தனிப்பட்ட முறையில சில பேர் தண்ணி போட்டு என்ன பேசுனாங்கனு தெரியாம போனதுக்கு கவலையப் பாருங்களேன்.... அது தெரிஞ்சா இவரோட வரலாற்றுல பொறிச்சி வைக்கப்போறாராக்கும்....

விட்டுத்தள்ளுங்க இவங்களை

வால்பையன் said...

சொல்ல வந்த விசயத்தை விட்டு, வந்திராத சந்திப்பை பற்றி தவறான தகவல்களை எழுதியது வினவுக்கு தேவையில்லாதது தான்!

தகவல் கொடுத்த அரைவேக்காட்டினால், பதிவும் அந்த பெயர் வாங்குவது கொஞ்சம் வருத்தம்!

(அரைவேக்காடுன்னு எழுதுனா சர்ச்சையாகுதாம்ல)

vasu balaji said...

//இரவு நடந்த மதுவறைக் கொண்டாட்டங்களில் பேசப்பட்ட வரலாற்றுப் புகழ் விவகாரங்கள் //

இது நிகழ்ச்சி நிரல்ல இல்லவே இல்லையே.

முடிஞ்சி போனத கிண்டி கிளறி என்ன வரப்போகுது.

vasu balaji said...

வால்பையன் said...

/ (அரைவேக்காடுன்னு எழுதுனா சர்ச்சையாகுதாம்ல)//

இந்த அழிம்பு வேறயா:))

ஈரோடு கதிர் said...

//வானம்பாடிகள் said...
முடிஞ்சி போனத கிண்டி கிளறி என்ன வரப்போகுது.
//

வாமிட் தான்..........

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

// வாமிட் தான்..........//

இப்போ சத்தம்தான் வரும். பித்தம் கூட வராது

sriram said...

அன்பின் ஆரூரான்..
செம பதில்(கள்), ஆனா இதெல்லாம் திருந்தும்னு நெனைக்கிறீங்க? சான்ஸே இல்ல..
இது மாதிரி பல காமெடி பீஸுங்க இருக்குதுங்க.. லூஸ்ல விடுங்கன்னு சொல்லத் தோணுது, ஆனா இப்படி பதில் சொல்லுவும் ஒருவர் தேவைதான்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ஆரூரன் விசுவநாதன் said...

//இதெல்லாம் திருந்தும்னு நெனைக்கிறீங்க? சான்ஸே இல்ல..
இது மாதிரி பல காமெடி பீஸுங்க இருக்குதுங்க.. லூஸ்ல விடுங்கன்னு சொல்லத் தோணுது, ஆனா இப்படி பதில் சொல்லுவும் ஒருவர் தேவைதான்//


அன்பிற்கு நன்றி நண்பரே,

ஆரூரன் விசுவநாதன் said...

அரைவேக்காடுன்னு எழுதுனா சர்ச்சையாகுதாம்ல)

உண்மையச் சொன்னா சர்ச்சைதான்...

நன்றி வால்....

பிரபாகர் said...

ஆரூரன்,

இது போன்ற கடுமையும் சில தருணங்களில் தேவைதான். நேரில் பார்த்திருந்து, சம்மந்த பட்ட இடுகையை முழுதும் (மாற்றும் முன், மாற்றிய பின்) படித்திருந்து எழுதியிருந்தால் கண்டிப்பாய் வரவேற்கலாம். அதைவிடுத்து சுயமாய் பெருமையாய் பீத்திக்கொண்டது, சுகுணா திவாகரின் கருத்துக்களை வெளியிட்டு ஆதாயம் தேடிய பின் இல்லையில்லை, இடையில் எக்ஸ்ட்ராவாக ஸ்பேஸ் இருக்கு அவரே இல்லை என கண்டுபிடித்து, கேபிள் அண்ணாவின் பின்னூட்டத்தில் மற்று பெயரில் அதே கருத்தைப்போட்டு வசமாய் சிக்கி... இதெல்லாம் தெரியாமல் தூங்கி எழுந்து காழ்ப்புணர்ச்சியில் போட்டால் இது போன்ற பதில்தான் கிடக்கும்.

எனக்கு வந்த அதே சுகுணா திவாகரின் பின்னூட்டத்தை நான் வெளியிடாமல் அவரிடம் பேசி எனது நிலையை சொல்லியபின் வெளியிடாமல் விட்டுவிட்டேன்.

விடுங்கள் ஆரூரன், எனக்கு ஒன்றுதான் நினைவிற்கு வருகிறது... 'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், நிறைய வினவுகள் வரும், பின் தர்மம் வெல்லும்.

பிரபாகர்.

குறும்பன் said...

என்ன ஆச்சு?

உலகை உய்விக்கவந்த உத்தமர் எழுதிய இடுகையோட இணைப்பை கொடுத்தா என்ன தான் அந்த ஆளு எழுதியிருக்காருன்னு தெரிஞ்சிக்கலாம்.

கபிலன் said...

ஈரோடு பதிவர் சந்திப்பு, பலரும் வியக்கும் வகையில் நடந்தேறி இருக்கிறது என்பது யாரும் மறுக்க முடியாது. அந்த வெற்றிக்குப் பின் உங்கள் அனைவரின் உழைப்பு தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அந்த உழைப்பை உதாசீனப்படுத்தும் வகையில் வினவு எழுதியது தவறு தான். ஆரோக்கியமான விமர்சனம் நம்மை முறைப்படுத்தணும், நல்வழிப்படுத்தணும், ஊக்கப் படுத்தணும். வினவின் பேச்சுக்கள் இதுல எதுவுமே செய்யல. நிச்சயமா லார்ட் லபக் தாஸ் மாதிரி தான் இருக்கு.

நார்மல நடக்குற புத்தக வெளியீட்டு விழாவை விட, மாவட்ட அளவில் நடக்கும் எழுத்தாளர் சங்க கூட்டங்களை விட சிறப்பாக நடந்ததாகவே நான் படித்த வரையில் தெரியுது.

இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாதீங்க....4 பேரை திட்டலைண்ணா அது வினவின் பதிவே கிடையாதுன்னு நினைச்சுக்கணும்.
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். இவை போன்ற தடைகற்களை புறம்தள்ளுங்கள். வெற்றி நிச்சயம்! வாழ்த்துக்கள்!

முழுவேக்காடு said...

தம்பிங்களா, ஈரோடு கதிரும் வால்பையனும் நியாயத்த எடுத்து சொன்னபின்னாடி ஈரோட்டு சம்பந்தமான பத்தியையே தூக்கிட்டாங்களாமே?இப்ப நீங்க இந்த பதிவ தூக்க போறீங்களா? அதுதானே பதிவுலக தருமம் வாலு??

ஏழர said...

தம்பிங்களா, ஈரோடு கதிரும் வால்பையனும் நியாயத்த எடுத்து சொன்னபின்னாடி ஈரோட்டு சம்பந்தமான பத்தியையே தூக்கிட்டாங்களாமே?இப்ப நீங்க இந்த பதிவ தூக்க போறீங்களா? அதுதானே பதிவுலக தருமம் வாலு??

மேலே இருக்கற புன்னூட்டம் நம்முளுதுதான் அத தூக்கிடும்மா...கூகிளு இப்ப வேல செய்யுது!

ஏழர said...

இந்த பதிவே ஒரு காமெடி.. இதுக்குமா? மொதல்ல பதிவு உள்ளுக்குள்ள இருக்குற முரண்பாட்ட சுத்தம்பண்ண ஆளு அனுப்புங்கப்பு.. ஒரு ஜாம்பிள்..

சுகுணாவுக்குபதிலா ப்ரியா பேர போட்டதா எழுதியிருப்பது.. பகல்ல்லேயே பசுமாடு தெரியாது போலிருக்கு

புலவன் புலிகேசி said...

சாதியாவது மதமாவது சாமியாவது வெங்காயமாவதுன்னு போய் கிட்டே இருப்போம்..நற்குடி பிரச்சினையும் அப்புடித்தேன்.

Jerry Eshananda said...

சும்மா "ரணகளமா இருக்கு." அசத்துங்க..

Kodees said...

//தமிளு, திராவிடன்னு பேசியே ஒருத்தன் நாற்பது ஐம்பது வருசமா தாலியறுத்தான், அவனையே பொறுத்துகிட்டோம்……. பெண்ணீயம், பார்ப்பணீயம், சாமீயம், சர்வ ரோக நிவாரணம்…அதான், சர்வதேசியன்னு, நீங்க பேசறதையும் பொறுத்துகிட்டு இருக்கோம்…..ஏன்யா இப்படி பேசிறீங்கன்னு என்னைக்காவது கேட்டிருப்பமா? //

ஆரூரன் - உங்களுக்கு இப்படிக்கோபம் வருமா? நியாயமான அறச்சீற்றம்தான்.

பழமைபேசி said...

ஆரூரன்,

வணக்கம்! சாமன்யர்களாய் இருக்கும் நாம், சாமன்யர்களின் கேள்விகளுக்கு மட்டுமே செவி சாய்க்கக் கடமைப்பட்டவர்கள். அதிமேதாவிகளுக்கு எல்லாம் பதில் அளித்தாலும், அது செல்லுபடியாகாது அன்றோ?

அப்படி இல்லாதிருந்தால், சுட்டுவதற்கு முன் எனது இடுகைகளில் எழுப்பிய வினாக்களுக்கு பதில் அளித்துவிட்டுச் சுட்டி இருப்பர் அன்றோ?

நித்திரை கொள்பவனை எழுப்பலாம். நித்திரை கொள்பவன் போல் நடிப்பவரி எழுப்ப இயலாது என்பதுதானே யதார்த்தம்?!

மேலும் அந்த இடுகையானது, எவரையோ திருப்திப்படுத்த இட்டது என்றே எண்ணுகிறேன். எனவே, வினவு குழுமத்தாருக்கான பிரச்சினை அது.

அது எப்படியாகினும், இந்த சாமான்யனின் உள்ளார்த்தமான இடுகையை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்துச் சென்ற வினவுக்கு மிக்க நன்றி!

sathishsangkavi.blogspot.com said...

//இரவு நடந்த மதுவறைக் கொண்டாட்டங்களில் பேசப்பட்ட வரலாற்றுப் புகழ் விவகாரங்கள் //

இது எப்பங்க நடந்துச்சு......

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தலைவரே........

Cable சங்கர் said...

தலைவரே நான் தககளி ரசம் குடிச்சதையும், சிக்கன் சாப்டதையுமே ஒழுங்கா படிக்காம முத நா சாப்டேன்னு எழுதினவஙக்ளூக்குபோய் விளக்கமெலலம் சொல்லிக்கிட்டு.. வேலை பார்த்துட்டு போவியளா..?

:))))

Cable சங்கர் said...

மேலே சோன்ன விஷயம் காமெடியா இருந்தாலும் அவர்களின் தகவல் பெறும் லட்சணத்தை சொல்லவே எழுதினேன். இது வேறு ஒரு வரால் எழுதப்பட்டு கொடுத்த வினவின் பதிவாகத்தான் தெரிகிறது.

மணிப்பக்கம் said...

நல்லா கொடுத்தீங்க ... ;)

சுகுணாதிவாகர் said...

/அடக்கருமமே…………சம்மந்த பட்ட பதிவர், சுகுணாதிவாகர் வேற, சுகுணா …..திவாகர் வேறன்னு எழுதறாங்க……நீங்க ஏன் புதுசா வந்து எங்கப்பன் குதுருக்குள்ளேன்னு……../

என்ன சொல்கிறீர்கள் என்பது புரியவில்லை.

Unknown said...

வெண்ணை வெட்டி விசயம் தான் என்றால் விட்டு விடவேண்டியதுதாணே


வலையில் வம்புக்கு அலைவது எதற்கு


வெள்க்கெண்ணை மாதிரி எழுதவா

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி கதிர்

நன்றி வானம்பாடிகள்

நன்றி பிரபா

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி குறும்பன்

நன்றி ஜெரி ஈசானந்தா

நன்றி கபிலன்

நன்றி புலவன் புலிகேசி

நன்றி பழமை பேசி

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி கோடீஸ்

நன்றி சங்கவி

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி கேபிளாரே.....

நன்றி மணிப்பக்கம்

நன்றி மோகன்,

ஆரூரன் விசுவநாதன் said...

சுகுணாதிவாகர்

///அடக்கருமமே…………சம்மந்த பட்ட பதிவர், சுகுணாதிவாகர் வேற, சுகுணா …..திவாகர் வேறன்னு எழுதறாங்க……நீங்க ஏன் புதுசா வந்து எங்கப்பன் குதுருக்குள்ளேன்னு……../

என்ன சொல்கிறீர்கள் என்பது புரியவில்லை.//

புரியாது சுகுணா திவாகர், பிரபாகர் கிட்ட சொல்லி புரிய வைக்கச் சொல்கிறேன்.

அதுவும் புரியாம போனாலும் போகும், சீக்கிரம் தெளிவாப் புரிய வைக்கிறேன்.

இராகவன் நைஜிரியா said...

மிகச் சரியாக சொல்லியிருக்கீன்றீர்கள் ஆரூரான்.

ஹாட்ஸ் ஆஃப் டூ யூ.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி ராகவண்ணா

நினைவுகளுடன் -நிகே- said...

நச்சின்னு இருக்கு .....

புது வருட வாழ்த்துக்கள்

கலகலப்ரியா said...

Happy New Year Arur..:)

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி நிகே.....புத்தாண்டு வாழ்த்துக்கள்

நன்றி ப்ரியா, புத்தாண்டு வாழ்த்துக்கள்

priyamudanprabu said...

ம்ம்ம் என்னமோ நடக்குது
நடக்கட்டும்

Dino LA said...

அருமை