Saturday, January 02, 2010

தண்ணிழல்

கடை ஏழு வள்ளல்கள் பற்றி பள்ளி, கல்லூரிகளில் படித்திருப்போம். பாரி, காரி, ஓரி, பேகன், ஆய், அதியன், நள்ளி ஆகிய எழுவரும் அவ்வாறு போற்றப் பட்டனர்.

சூடாமணி நிகண்டு வள்ளல்களை மூன்று வகைப்படுத்தியது.தண்டாது ஈவோரை தலைவள்ளல் என்றும், இரப்போர்க்கு ஈவோரை இடைவள்ளல் என்றும், தம்மை துதிபோர்க்கு கடை வள்ளல் என்றும் கூறுகிறது.


பிங்கல நிகண்டில்

சகரன் காரி நளன் துந்து 
மாரி நிருதி செம்பியன் விராடன் தலைவள்ளல்

அந்திமான் சிசுபாலன் அக்குரன் வக்கிரன் 
சந்திமான் கன்னன் சந்தன் இடைவள்ளல்

பாரி எழினி நள்ளி ஆய் மலையன் 
ஓரி பேகன் இவர்கடை வள்ளல்சோழ நாட்டிற்கும், தொண்டை நாட்டிற்கும் இடைப்பட்ட பகுதி நடுநாடு எனப்பட்டது.  இந்நாடு மலைய மான் நாடு என்றும் மலாடென்றும், அழைக்கப்பட்டது.

தலைவள்ளல்களில் ஒருவரான மலையமான் திருமுடிக்காரியின் வரலாற்றை பேராசிரியர் திரு. அடிகளாசிரியன் “தண்ணிழல்” என்ற பெயரில் ஒரு காவியமாக படைத்திருக்கிறார்.

அதிலிருந்து சில பாடல் வரிகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கோவூர் கிழார் மனைவி நீரிரைக்க குளத்திற்கு செல்கின்றார். அங்கே காணும் காட்சியை அவர் சொல்வதாக அமைந்தது இப்பாடல்

தேம்புறு வண்டுக் கெல்லாம் 
தினந்தினம் தாய்போல் நின்றே
காம்  புறு பூவி  னாலே 
கள்ளினைக் காலை யூட்ட 
ஆம்பலும் கமலந் தாமும் 
அழைத்திடும் அழகைக் கண்டால் 
ஓம்புறு தாய்மை உள்ளம் 
உதித்திடும் உலகத்தோர்கே… 

பாசொளி இலையும் நல்ல 
பன்னிற மலரும் வண்டும் 
வீசொளிப் புனலும் துள்ளி 
வீழ்தரு கயலும் எல்லோன்
தேசொளி தன்னில் மூழ்கித் 
திகழ்குளத் தழகு நல்ல 
பேசொளி வேந்தன் நாட்டுப்
பேரழ கொத்த தம்மா. 

 குறிப்பு:
கடை ஏழு வள்ளல்கள் தவிர மற்றவர் பற்றிய கதைகள் நமக்கு கிடைத்ததாகத் தெரியவில்லை. நண்பர்களிடம் இருக்குமாயின் வலையேற்றுங்களேன்.அன்புடன் ஆரூரன்.

30 comments :

பிரபாகர் said...

அருமை. கீழே இருக்கும் பாடலுக்கு விளக்கம் கொடுத்திருந்தால் இன்னும் அருமையாய் இருந்திருக்கும்.

பிரபாகர்.

வானம்பாடிகள் said...

பிரபாகர் said...

/ அருமை. கீழே இருக்கும் பாடலுக்கு விளக்கம் கொடுத்திருந்தால் இன்னும் அருமையாய் இருந்திருக்கும்./

படிக்காம பின்னூட்டம் போட்ட யூத்துன்னு நம்பமாட்டாங்க. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி பிரபா

பிரபாகர் said...

அண்ணன் எழுதிய விஷயம், சொல்ல வந்த கருத்து யாவும் அருமை. பாட்டோட விளக்கமும் இருந்திருந்தா ரொம்ப நல்லாருக்குமுன்னு சொல்ல வந்தேனுங்க!

பிரபாகர்.

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு..
(நமக்கெல்லாம் பத்துப்பாட்ட விட குத்துப்பாட்டுதான் நல்லா தெரியும்... ஹி ஹி ஹி)

வானம்பாடிகள் said...

அருமையான பாடல். பகிர்ந்தமைக்கு நன்றி. காட்சி கண்முன் விரிகிறது பாடலைப் படிக்கையில்.நன்றி ஆரூரன்.

வானம்பாடிகள் said...

பிரபாகர் said...

/அண்ணன் எழுதிய விஷயம், சொல்ல வந்த கருத்து யாவும் அருமை. பாட்டோட விளக்கமும் இருந்திருந்தா ரொம்ப நல்லாருக்குமுன்னு சொல்ல வந்தேனுங்க!/

அதுல என்ன புரியலன்னு மின்னஞ்சல் அனுப்புங்க 3 கேள்விக்கு 10 சிங்கப்பூர் டாலர். மொத்தப் பொழிப்புரைக்கு 50 டாலர். எப்புடி வசதீ:))

ஆரூரன் விசுவநாதன் said...

குத்துப் பாட்டும் பத்துப் பாட்டிலிருந்துதான் பிறந்தது......

குத்துப் பாட்டு கொஞ்சம் நவீனப்படுத்தப்பட்டிருக்கிறது.....

நன்றி அண்ணாமலையான்...

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி பாலாண்ணே

ஆதிமூலகிருஷ்ணன் said...

இதுபோன்ற சிறப்பான பகிர்வுகள் வலைப்பதிவுகளின் தரத்தை உயர்த்துவதாக அமைகின்றன. மேலும் பகிருங்கள் இவ்வாறான பழந்தமிழ்த் தகவல்களை.!

ஈரோடு கதிர் said...

ங்கொய்யாலே.... எழுதுன நம்ம தலைவர் மாதிரி கட் & பேஸ்ட் ஆவது பண்ணனும்... அத வுட்டுப்போட்டு இட்லில புகை வந்துது.. சட்னியில எண்ணை வந்துதுனு....

நீ எல்லாம் எப்போதான் கோவூர் கிழார் சம்சாரம் மாதிரி எழுதப்போறியோ..

அல்ல்ல்ல்வோ.... என்னச் சொன்னேன்

கலகலப்ரியா said...

ஐயோ.... அருமை... ரொம்ப அழகான பதிவு ஆரூர்... இருங்க இத காப்பி பண்ணி வச்சுக்கறேன்..

கலகலப்ரியா said...

// ஈரோடு கதிர் said...

ங்கொய்யாலே.... எழுதுன நம்ம தலைவர் மாதிரி கட் & பேஸ்ட் ஆவது பண்ணனும்... அத வுட்டுப்போட்டு இட்லில புகை வந்துது.. சட்னியில எண்ணை வந்துதுனு....

நீ எல்லாம் எப்போதான் கோவூர் கிழார் சம்சாரம் மாதிரி எழுதப்போறியோ..//

நான் நினைச்சேன்... நீங் சொல்லிட்டீங்.. =))

ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
நான் நினைச்சேன்... நீங் சொல்லிட்டீங்.. =))//

உங்களுக்கும் சேர்த்து நானே சொல்லிட்டேன்

புலவன் புலிகேசி said...

நல் விளக்கங்கள்..நன்றி

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி ப்ரியா....உங்களுக்கு அந்தப் புத்தகத்தையே பரிசாக அளிக்கின்றேன். வரும்போது, மறக்காமல் அழையுங்கள்.

நன்றி புலவன் புலிகேசி

நன்றி ஆதி

நன்றி கதிர்

கலகலப்ரியா said...

//ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி ப்ரியா....உங்களுக்கு அந்தப் புத்தகத்தையே பரிசாக அளிக்கின்றேன். வரும்போது, மறக்காமல் அழையுங்கள்.//

இந்த அன்புக்கு நான் என்ன செய்ய போறேன்னு தெரியல.. ! ஆனா உங்க பாடசாலைக்கு வர்றது முடிவு பண்ணியாச்சு..! இனிமே கடவுள் கைல.. :)

முனைவர்.இரா.குணசீலன் said...

நல்ல பகிர்வு நண்பரே..

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி முனைவர் குணசீலன்

க.பாலாசி said...

தமிழ்நாட்டுல சேர, சோழ, பாண்டிய நாடு என்ற மூன்று பிரிவுகள்தான் இருந்ததுன்னு நினைச்சிகிட்டிருந்தேன். நேற்று ஈரோடு மாவட்ட வரலாறு புக்க படிச்சதுக்கப்புறம்தான் இன்னும் இரண்டு பிரிவுகள் இருக்குறதே எனக்கு தெரியும்.

பாடல் விளக்கமில்லாமலே புரிகிறது. தண்ணிழல் பற்றின நல்ல பகிர்வு...நன்றிகள்..

cheena (சீனா) said...

அன்பின் ஆரூரன்

கடை ஏழு வள்ளல்கள் எனில் கடைச் சங்க காலத்து வளளல்கள் என நினைத்திருந்தேன். ஆனால் தாங்களோ தலைவள்ளல் - இடை வள்ளல் - கடை வள்ளல் எனகிறீர்களே - பாரி கடை வள்ளலா ? முல்லைக்குத் தேரீந்தவன் அல்லவா ? துதிக்கப்பட்டா கொடுத்தான்

ஆரூரன் விசுவநாதன் said...

சீனா ஐயா,

//கடை ஏழு வள்ளல்கள் எனில் கடைச் சங்க காலத்து வளளல்கள் என நினைத்திருந்தேன். ஆனால் தாங்களோ தலைவள்ளல் - இடை வள்ளல் - கடை வள்ளல் எனகிறீர்களே - பாரி கடை வள்ளலா ? முல்லைக்குத் தேரீந்தவன் அல்லவா ? துதிக்கப்பட்டா கொடுத்தான்//

எனக்கும் இந்தத் தகவல்கள் புதிதுதான்.சேலம் குயில் பண்ணை வெளியிட்ட இந்த "தண்ணிழல்"ன் என்னுரையிலிருந்தே இவற்றை தொகுத்தேன்.

"பாரி, ஆய், எழினி, நள்ளி பகர் தொடை மலையன் பேகன் ஓரியே கடையில், உற்றோர் உறு பொருள் தண்டா நீந்தும், பாரினில் இரந்தோர்க் கிட்டும் வளர்புகழ் துதிக்க ஈந்தோர் பேரியல் வையம் எண்ணப் பெற்றவர் முப்பாலாகும்"
என்ற சூடாமணி நிகண்டின் வரிகளை அடிப்படையாகக் கொண்டு நூலாசிரியர் இதை வெளியிட்டுள்ளார்.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி பாலாசி...

cheena (சீனா) said...

அன்பின் ஆருரன்

சேலம் குயில் பண்ணை வெளியிட்ட
தண்ணிழல் - என்னுரையில் குறிப்பீட படி - நிகண்டில் வள்ளல் தன்மைக்கு மூவகையாக இலக்கணம் சொல்லி இருக்கலாம்

ஆனால் கடைவள்ளலில் பாரியைச் சேர்த்தது யார் ? நிகண்டா - உரையாசிரியரா ?

நல்வாழ்த்துகள்

ஆரூரன் விசுவநாதன் said...

சீனா ஐயா,

புறநானூற்று உரையாசிரியர், பெருஞ்சித்திரனார் குமணனைப் பாடிய பாடலொன்றில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

முரசுகடிப் பிகுல்பவும் வால் வளை துவைப்பவும்
அரசுடன் பொருத அண்ணல் நெடுவரை
கறங்கு வெள்ளருவி கல்லலைத் தொழுகும்
பறம்பிற் கோமாண் பாரியும்,

பிறங்குமிசை
கொல்லியாண்ட வல்வில் லோரியும்

காரியூர்ந்து பேரமர் கடந்த
மாரி ஈகை மறப்போர் மலையுனும்

ஊரா தேந்திய குதிரைக் கூர்வேல்
கூவிளங் கண்ணிக் கொடும்பூண் எழினியும்

சார்ந்தண் சிலம்பின் இருள் தூங்கு களிமுழை
அருந்திறற் கடவுள் காக்கும் உயர்சிமைப்
பெருங்கள் நாடன் பேகனும்

திருந்து மொழி மோசி பாடிய ஆயும் ஆர்வமுற்று

உள்ளிவருநர் உலைவு நனி நீரத் தள்ளா
தீயும் தகைசால் வண்மைக் கொள்ளர்
ஓட்டிய நள்ளியும் எனவாங்கு எழுவர்

என்று கூறியதையும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் எழினியின் பெயர் நீக்கி அதில் அதியமானை நத்தத்தனார் இணைத்ததாகவும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்

ஆரூரன் விசுவநாதன் said...

முல்லைக்கு தேர் தந்ததால், வள்ளல் என்பதை விட, வள்ளலான அவன் சிறப்பினைக் கூறும் வகையில் முல்லைக்கு தேர் தந்ததை குறிப்பிட்டிருக்கலாம்...என நினைக்கின்றேன். இது என் கருத்து.

cheena (சீனா) said...

அன்பின் ஆருரன்

பெருஞ்சித்திரனார் எங்குமே பாரியினை மூன்றாந்தர வள்ளல் ( கடைவள்ளல் ) எனக் குறிப்பிடவில்லை. எழுவர் பட்டியலில் பாரியைச் சேர்த்திருக்கிறார். அவர்கள் கடைஏழு வள்ளல்கள் தானே . கடைச்சங்க கால வள்ளல்கள் தானே

நல்வாழ்த்துகள் ஆருரன்

cheena (சீனா) said...

அன்பின் ஆரூரன்

முல்லைக்குத் தேர் தந்ததனால் அவன் வள்ளல் என நானும் குறிப்பிடவில்லையே - அவன் வள்ளல் என்பதனால் தான் முல்லைக்குத் தேர் ஈந்திருக்க வேண்டும்.

நம்மிருவர் கருத்தும் ஒன்றே இந்நிகழ்வில்

shaan said...

பிரபாகர்,
வார்த்தைகளை பிரித்து படித்துப்பாருங்கள். எல்லோன் என்றால் சூரியன் என்று அர்த்தம்.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி சீனா ஐயா.....

நன்றி சாண்....