Thursday, January 07, 2010

கும்மியடிக்க வாங்க.........

இது நம்ம பதிவுலகத்தில அடிக்கிற கும்மியில்லைங்க.......ஏற்கனவெ நம்ம பாட்டன், பூட்டன் அடிச்ச கும்மிங்கோ.
பஞ்சப் புலம்பல்:

சென்னை மாகாணம் அதுவரை சந்தித்திராத பஞ்சத்தை 1866 ஆண்டின் துவக்கத்தில் சந்தித்தது. தலைவிரித்தாடிய பஞ்சத்திற்கு பலியானோர் கணக்கிலடங்கா. தமிழ் வருடம் "தாது" 1876-1877 ஆண்டுகளில் பஞ்சத்தின் கோரம் உச்சகட்டமாய் தலைவிரித்தாடியது. இதை "தாதுவருடப் பஞ்சம்" என்றழைத்தனர்..

பஞ்சத்தின் கொடுமைகள் ஒருபுறமிருப்பினும், அதையும் பதிவாக்கி வரும் தலைமுறைக்கு கொடுத்துச் சென்றிருக்கின்றனர் நம் பழந்தமிழர்.


காலங்காலமாக, வாய்மொழிப் பாட்டாக இருந்த பஞ்ச காலக் கொடுமைகளை கும்மிப் பாட்டாக பாடி வந்தனர். அந்த பஞ்ச கொடுமைகள் வாய்மொழிப் பாடல்களாகவும், சில ஏட்டுச் சுவடிகளாகவும்,  இருந்தவற்றை தொகுத்து, பஞ்ச கும்மிகள்" என்ற ஒரு புத்தகத்தை வரலாற்று ஆய்வாளர், புலவர்.செ.இராசு தொகுத்திருக்கிறார்கள். "காவ்யா" நிறுவனத்தின் வெளியீடு.  விலை ரூ60/-

பஞ்சத்தின் கோர முகங்களை படமெடுத்து காட்டிவிட்டுச் சென்றிருக்கும் நம் பழந்தமிழர் மொழி ஆளுமை ஆச்சரியப்பட வைக்கின்றன. அரசர்குளம் சாமிநாதன் இயற்றிய பஞ்ச கும்மிகளில் சில பாடல்கள் உங்கள் பார்வைக்காக.....

  என்ன செய்வோம் சோசியரே மழை
      எப்போது பெய்திடும் என்பாரும்
  ஈசா, செக தீசா, விசு வேசா, கைலாசா, - இது
      என்ன கொடுமையோ என்பாரும்.

 
  வீணாய் விதைத்த விதையிருந்தால் இந்த
       வேளைக்கு உதவுமே என்பாரும்
  விளையும், மழை பொழியும், எனப், பழநெல்லுகள், முழுதும்-முனம்
        விற்றது மோசந்தான் என்பாரும்


  ஆதியிலே ,விதை தூவையிலே, ஒரு
        ஆந்தை அலறியது என்பாரும்
   ஐயோ மழை, பெய்யாவிடில், வையம் இனி, உய்யும் வகை,
        ஆதாரம் வேறில்லை என்பாரும்


   துய்யிது மோசம் என்பாரும், பயிர்
        எல்லாம் கருகியது , என்பாரும்
   ஏதோ, இது சூதோ, சனி தீதோ, புவி மீதோர்- மழை
        இல்லாமல் போச்சுதே என்பாரும்


   நாயகியே இந்த  வாறு பூலோகம்
        நடுங்கி மயங்கிடும் நாளையிலே
   நலமாகிய, பல தானியம்,விலையானது, சில நாளையில்
        நாளுக்கு நாளாய் குறைந்ததடி.
        


தாயின் பரிதவிப்பு:
 
   பாலகனில்லை, என்றே தலமெங்கும்
        பணிந்தொரு கோடி தவம் புரிந்தேன்.
   பரிபூரணன், உமையளொடும், திருமாலின் அருளாலே உயர்
        பாங்குடன் உங்களைப் பெற்றெடுத்தேன்.


   பாகென்னும் சர்க்கரை முக்கனி போல் ,மொழி
        பாலகரே நீங்கள் பசித்தழுக
   பார்த்தேன், பழியேற்றேன், பொருள் தோற்றேன், இது தூர்த்தேனிது
        பாவமென்பாள், பரிதாப மென்பாள்.


   கையைப் பிடித்த என் மன்னவரே, பிள்ளை
        கஞ்சிக்க ழுகுதே, என்ன செய்வேன்
   களையாகுதே, விழி சோருதே, பழி நேருதே, ஒழியா-இது
        கவலையென்பாள், பிள்ளை சவலையென்பாள்.


தந்தையின் பதில்:

   சங்கு வெள்ளை, மோழைக் காளையை, நான் செவ்வாய்
         சந்தையிலும், வீதி மந்தையிலும்
   சலியா, துளம். மெலியாமலே, பலபேரிடம் நலமாகவே
         தையல ரேவிலை கூறி வந்தேன்.

  மாடாடு விற்போரைக் கண்டேன் அல்லால்-இதை
         வாங்குவோரைக் கண்ணில் காணேனடி
  மானேயடி, தேனே, வினை, தானே, இனி நானே-மனம்
         நாடிவந்தேன், எங்கும் ஓடி வந்தேன்.


  தோகைய ரே, காட்டில் கீரை பறிக்கத்
         துரிதமாய் எங்கெங்கும் போய்ப் பார்த்தேன்
  சுடராகிய, கொடிதாம், வெயில் படலால், மிக அடிவேரோடு
         சேர்ந்து கருகியே போச்சுதடி


  மாரியப்பன், முத்துவீரன், குமாரன்
        வைரவன் மற்றுள்ள பேரையெல்லாம்
  வரகோர், படி, தருவாய், உனை, மறவேன், என ஒருநாள் பகல்
        மட்டும் நின்று கெஞ்சிப் பார்த்தேன்.


  அன்னம் கண்டு அஞ்சுநாள் ஆச்சுதென்றார், அவர்
        ஆண்மையும், செல்வமும் போச்சுதென்றார்.
  அன்னமாம் நடை, மின்னலாம் இடை, கன்னலாம் மொழி- என்னவேவரு
        ஆரண்கே மனம் நொந்தேனடி....

  __/\__

31 comments :

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட கஷ்டகாலமே.. ம்.. இருந்தாலும் அதை அழகா பாடிவச்சிருக்காங்க..

Sangkavi said...

கும்மிப்பாடலை கேட்டு ரொம்ப நாள் ஆச்சு....

அழகா இருக்கு கும்மிப்பாட்டு...

க.பாலாசி said...

எதோவொரு அரலூசு மைனஸ் ஓட்டு போட்டுட்டு போயிருக்கு.

வால்பையன் said...

எனக்கு நிறைய வேலையிருக்குமோன்னு நினைச்சு வந்தேன்!

பலா பட்டறை said...

ரொம்ப அருமையா இருக்கு... பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே..::))

கலையரசன் said...

நான் கூட கும்மி களத்துல தொபுக்கடீர்ன்னு குதிக்க ஓடி வந்தேன்.. நல்லவேளை குதிக்கலை!!

முனைவர்.இரா.குணசீலன் said...

நல்ல பதிவு!
நல்ல பகிர்வு!

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...

/எதோவொரு அரலூசு மைனஸ் ஓட்டு போட்டுட்டு போயிருக்கு./

பஞ்சத்துக்கு பொறந்த பரதேசி:))

சோகம் ததும்பினாலும் சுவையான பாடல்.

நன்றி ஆரூரன்.

கலகலப்ரியா said...

சூப்பர் பதிவு... (ப்ளாக் கும்மின்னாலும் அடிச்சிருக்க முடியாது... டயம் லேது.. =))..)

ஹேமா said...

நல்ல பகிர்வு ஆரூரன்.அந்த நாளேலயே எவ்வளவு அருமையா சொல்லியிருக்காங்க.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி முத்துலட்சுமி...

நன்றி சங்கவி

நன்றி வால்

நன்றி பாலா பட்டறை

நன்றி கலையரசன்

க.பாலாசி said...
This comment has been removed by the author.
ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி ப்ரியா

நன்றி ஹேமா

க.பாலாசி said...

எங்கவூருல கன்னிப்பொங்கல் அன்னிக்கு பெண்கள்லாம் ஒண்ணாக்கூடி கும்மிப்பாட்டு பாடி ஆடுவாங்க. அது சோகப்பாடலா இருந்தாலும் இனிமையா இருக்கும். பச்சே இப்போல்லாம் அதுங்களோட கும்மி மாமியார் வீட்ல நடக்குது. (கும்மியடிக்கிறது மாமியாருங்களா? இல்ல எங்கவூரு பொண்ணுங்களா?ன்னு தெரியல)

நல்ல பகிர்வு நன்றிகள்.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி பாலாசி

//எதோவொரு அரலூசு மைனஸ் ஓட்டு போட்டுட்டு போயிருக்கு//

பிரபல பதிவர் ஆயிட்டம்ல....
இதெல்லாம் அரசியல்ல சகஜம் பாலாஜி

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி முனைவர் குணசீலன்

ஆரூரன் விசுவநாதன் said...

//வானம்பாடிகள்//

/எதோவொரு அரலூசு மைனஸ் ஓட்டு போட்டுட்டு போயிருக்கு./

பஞ்சத்துக்கு பொறந்த பரதேசி:))


எல்லாம் இன்புற்றிருப்பதன்றி யானொன் றறியேன் பராபரமே

சந்தோசமா இருந்திட்டு போகட்டும் விடுங்கண்ணே....

ஆரூரன் விசுவநாதன் said...

//அதுங்களோட கும்மி மாமியார் வீட்ல நடக்குது. (கும்மியடிக்கிறது மாமியாருங்களா? இல்ல எங்கவூரு பொண்ணுங்களா?ன்னு தெரியல)//

நம்மல கும்மாதவரைக்கும் நல்லதுதானே பாலாசி

jaffer said...

வனக்கம்,

நல்ல பதிவு

ஹி... ஹி..இப்பத்தான் ஆரம்பம்.

அனானி(32 கேள்வி கேட்பவர்) said...

அருமையான பதிவு. நல்லாயிருக்கு

பொன். பழனிசாமி said...

வாய் விட்டுபடித்து பாருங்கள்.சுவை தொியும்.நல்ல பதிவு.

ச.செந்தில்வேலன் said...

அடடா.. இது போன்ற பதிவுகளை எழுத் ஆள் இல்லை. தொடர்ந்து எழுதுங்கள்.

கும்மிப்பாடல்களில் எழுத்துரு இன்னும் கொஞ்சம் பெரியதாக இருந்தால் நன்றாக இருக்கும்.

ஈர வெங்காயம் said...

ஒரு கும்மியாட்ட வீடியோ : http://eeravengayam.blogspot.com/2010/01/blog-post.html

பிரபாகர் said...

செந்தில் சொல்வதை அப்படியே வழி மொழிகிறேன். இது போல் நிறைய எழுதுங்கள் ஆரூரன்...

வெளிச்சத்திற்கு இது போன்ற நிறைய விஷயங்களைக் கொண்டு வாருங்கள்...

மிக அழகாய் வந்திருக்கிறது.

பிரபாகர்.

ஆரூரன் விசுவநாதன் said...

வணக்கம் ஜாபர்.....

வணக்கம் பொன். பழனிசாமி ஐயா

வணக்கம் செந்தில், வாழ்த்துக்களுக்கு நன்றி

நன்றி பிரபா

வணக்கம், நன்றி ஈரவெங்காயம்

நன்றி அனானி

புலவன் புலிகேசி said...

அருமையான பகிர்வு..இதுதாங்க உண்மையான கும்மி

பித்தனின் வாக்கு said...

தாது வருடப் பஞ்சத்தைப் பற்றி நானும் கேள்விப் பட்டு இருக்கின்றேன். உணவுக்கு வேலை என்ற கூலித்திட்டமும் வெள்ளையனால் இந்தப் பஞ்சத்தின் போதுதான் அறிமுகப் படுத்தப்பட்டது என்று நினைக்கின்றேன். நல்ல கும்மிப்பாடல். நானும் பதிவர் கும்மி என்றுதான் நினைத்தேன். நன்றி.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி பித்தன்

நன்றி புலிகேசி

சத்ரியன் said...

ஆ.வி,

நல்ல பகிர்வு.

அந்தப் பாடல்களின் தான் எவ்வளவு அருமையான சொல்லாடல்கள்.

நன்றி நண்பா.

தண்டோரா ...... said...

நீங்கள் மொக்கை பதிவரா? நாளை மானிட்டர் பக்கங்கள் படிக்கவும்

naanjil said...

பாண்டிச்சேரி தமிழறிஞர் முனைவர் இரா. திருமுருகன் ஐயா அவர்கள் ஆராய்ச்சி செய்து நல்லதொரு நூல் வெளியீட்டுள்ளார்கள்.