Thursday, January 14, 2010

மொழி மாசு.........மாசு........எங்கும்............எதிலும் மாசு.

உண்ணும் உணவில், குடிக்கும் நீரில், சுவாசிக்கும் காற்றில், இப்படி எங்குகாணினும்      மாசு...........

பேசும் மொழியையும் அது விட்டுவைக்கவில்லை...

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மொழி மாசுபடுவதை தவிர்க்க, எத்தனையோ தமிழறிஞர்கள் பெருந்தொண்டாற்றினார்கள்.   பட்டியலிட்டால் மாளாது.....ஆனாலும், மாசு நீட்சியை தவிர்க்கமுடியவில்லை.


தனித்தமிழ் இயக்கங்கண்ட, மறைமலை அடிகள் பெயரை, புகைவண்டி நிலையத்திற்கு பெயராக சூட்டுவதோடு நின்றுபோனது......... நமது மொழியார்வம்.


உயர்சாதி நாங்கள் என்ற வரட்டு ஆணவத்தின் மீதான காதலில், நம்மில் பலரும் வடமொழிச் சொற்களை பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம்.   அதை மாற்ற முயலும் முயற்சியாக சிலவற்றை இங்கே காண்போம்.

நடைமுறை வாழ்க்கையில் மாறிப்போன சில தமிழ் வார்த்தைகள்........தமிழ் மொழி        வடமொழி                          தமிழ் மொழி                 வடமொழி   

  சோறு        -             சாதம்                                       குழம்பு               -          சாம்பார்
 
  சுவைநீர்       -           ரசம்                                         வரிசை             -           பந்தி

  நலமா?        -          சவுக்கியமா?                          மகிழ்ச்சி           -          சந்தோஷம்

  அறிவாற்றல்    -    புத்திசாலித்தனம்               விளக்கு           -            தீபம்

  பூப்பலி, பூ செய் -    பூஜை                                    குடமுழுக்கு       -        கும்பாபிஷேகம்

  பிறவிப்பயன்    -    ஜென்ம சாபல்யம்             வீடுபேறு            -        மோட்ஷம்

 கணவன் மனைவி -   பதியும், பாரியாளும்,     துறவறம்          -      சன்னியாசம்

இப்படிய எத்தனையோ.........?


அன்பிற்கு பிரியமும்,                            குறும்புக்கு சேஷ்டையும்
 
அமைதிக்கு சாந்தியும்                            நாணத்திற்கு சங்கோஜமும்

நட்புக்கு சினேகமும்                                இழப்பிற்கு நஷ்டமும்

பகைக்கு விரோதமும்                            விருப்பத்திற்கு இஷ்டமும்

அறிவுக்கு புத்தியும்.                                   நினைவிற்கு ஞாபகமும்

நல்வாய்ப்பிற்கு அதிர்ஷ்டமும்          கனவுக்குப் பதில் சொப்பணமும்

பரவலாக   பயன்படுத்தப் படுகின்றன.காற்று        -   வாயு                                 இரவு     -    ராத்திரி

நிலா            -    சந்திரன்                         ஏனம்     -    பாத்திரம்

அறம்           -    தர்மம்                            வினை    -    கர்மா

வானம்          -    ஆகாயம்                    செய்யுள்  -     கவிதா


என்று தமிழாக்கம்  செய்யும் அதிமேதாவிகளையும் நாம் காண்கின்றோம்.தமிழர் தம் திருநாளாம் இன்று, பைந்தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துவோம். மொழி மாசுக்கு கட்டுப்பாட்டுகள் விதிப்போம்.  

" தலை போயினும் தயங்காது தமிழ்-போற்றிடத்துணிவாய்
  தமிழே இனி எனதாருயிர் - தலை தூக்கிடு தோழா...."


வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ் மொழி  வாழிய வாழியவே
வானமளந்தானைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே
ஏழ்கடல் வைப்பினும், தன்மணம் வீசி, இசைகொண்டு வாழியவே
எங்கள் தமிழ் மொழி, எங்கள் தமிழ் மொழி, என்றென்றும் வாழியவே.


நண்பர் செந்திலின் இடுகைக்கள் உங்கள் பார்வைக்காக:

http://senthilinpakkangal.blogspot.com/2009/06/1.html

http://senthilinpakkangal.blogspot.com/2009/06/2.html

http://senthilinpakkangal.blogspot.com/2009/07/9.html
நன்றி:-
மறைமலையடிகள்
நிறைதமிழ் விழா குழு

தமிழ்க் கடல்

அலைஓசை

பரவும் தமிழ் மாட்சி

பெட்டாலிங் ஜெயா மணி மன்றம்.
மலேசியா.


27 comments :

வானம்பாடிகள் said...

நல்ல தொகுப்பு.

முகிலன் said...

அருமையான தொகுப்பு.

ச.செந்தில்வேலன் said...

நல்ல தொகுப்பு அன்பரே.

இன்னும் நிறைய உள்ளது சோற்றில் கலந்த கற்கள். "நமது பயன்பாட்டில் தமிழ்" என்ற தலைப்பில் 9 பதிவுகளை சென்ற வருடம் எழுதியிருந்தேன். படித்துப்பாருங்கள்!!

http://senthilinpakkangal.blogspot.com/2009/06/1.html

http://senthilinpakkangal.blogspot.com/2009/06/2.html

......

http://senthilinpakkangal.blogspot.com/2009/07/9.html


தமிழர் திருநாள் வாழ்த்துகள்!!

ஈரோடு கதிர் said...

நல்லதொரு தொகுப்பு... நல்ல நாளில்

நன்றி

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி வானம்பாடிகள்

நன்றி முகிலன்

நன்றி செந்தில்

நன்றி கதிர்

ஜெரி ஈசானந்தா. said...

தமிழர் திருநாளில் உரத்த சிந்தனையான பதிவு.வாழ்த்துகள்.என்ன செய்வது?எப்படி இந்த மொழிக்கலப்பை சரி செய்ய போகிறோம்? மெட்ரிக்குலேசன் கலாச்சாரத்தில் இதெல்லாம் சாத்தியமா?

ஹேமா said...

இன்றைய தினத்தில இந்தப் பதிவு சர்க்கரைப் பொங்கலாய் இனிக்கிறது.நன்றி தந்தமைக்கு.

பட்டிக்காட்டான்.. said...

நல்ல பதிவுங்க..

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்..

விஜயசாரதி said...

பெட்ரோலுக்கு தமிழில் என்ன என்று சொன்னால் கொஞ்சம் சௌகரியமாக இருக்கும்? சௌகரியம் வடசொல்லா?

அந்த வடச்சொற்களையே சரியாக உச்சரிக்காத நம் தமிழர்களை என்ன செய்யலாம்?

பேசாமல் வடமொழி பேசும் எல்லோரையும் நாட கடத்தலோ அல்லது சிறை அடைத்தலோ அல்லது பலியோ கொடுத்துவிடலாமா நண்பரே? உங்கள் தலைமையில் நான் தயார்

நாட்டுல என்ன என்னவோ நடக்குது, தமிழன் வாழ்க்கை வறுமையில் தத்தளிக்குது, இங்கே அவர்கள் என்ன சொற்கள் பேசுகிறார்கள் என்பதுதான் நமக்கு எல்லாவற்றையும் விட பிரச்சனையாக இருக்கிறது.

வேற்றுமை எதிலெல்லாம் பார்க்கிறோம் நாம்? தமிழ் பண்பாடு இதைத்தான் சொல்கிறதோ?

நிச்சயம் உங்களஒப் போலவர்களுக்கு அரசவை புலவர் பதவி உண்டு..முயற்சி செய்யுங்கள் நண்பரே...

கூடவே தமிழ் கடவுள் இது, வடமொழியின் கடவுள் என்று அதிலும் பேதத்தை ஒரு பதிவாக போட்டால், நீங்கள் இந்த நூற்றாண்டில் தமிழுக்காக போராடிய சிறந்த மறத்தமிழர் என்று போற்றுவோம் நாங்கள்.

உங்கள் வீட்டிலிருந்து எத்தனை கிலோ அரிசி இலங்கைக்கு அகதிகளுக்கு சென்றது? உடைகள்? பண உதவி?

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி ஜெரி

நன்றி ஹேமா

நன்றி விஜய சாரதி

நன்றி பட்டிக்காட்டான்

நன்றி கதிர்

ஆரூரன் விசுவநாதன் said...

அன்பிற்குரிய விஜய சாரதி

//அந்த வடச்சொற்களையே சரியாக உச்சரிக்காத நம் தமிழர்களை என்ன செய்யலாம்?//

இதுபோன்ற உங்கள் அறிவுஜீவித்தனமான கேள்விகளுக்கு பதில் சொல்லவது கடினம் தான்.


கேள்விக்கு பதில், எதிர் கேள்வி என்ற உங்கள் தீர்வு மிக அருமை. அரசவைப் புலவராக அனைத்து தகுதிகளுமே உங்களிடம் இருக்கின்றன. முயற்சி செய்து பாருங்கள்.

//பேசாமல் வடமொழி பேசும் எல்லோரையும் நாட கடத்தலோ அல்லது சிறை அடைத்தலோ அல்லது பலியோ கொடுத்துவிடலாமா நண்பரே//


எச்சைச் சோறு எடுத்து திண்பவனுக்கு சொந்த வீட்டில் சோறாக்கி திண்பதில் சிக்கல் இருக்கத்தான் செய்யும். புரியுமென்று நினைகின்றேன்.


//தமிழ் கடவுள் இது, வடமொழியின் கடவுள் என்று அதிலும் பேதத்தை ஒரு பதிவாக போட்டால், நீங்கள் இந்த நூற்றாண்டில் தமிழுக்காக போராடிய சிறந்த மறத்தமிழர் என்று போற்றுவோம் நாங்கள்//


குறுக்கே போடுவதா? நெடுக்கே போடுவதா?, தென்னா? வடமா? என்ற குழப்பமெல்லாம் எங்களுக்கு என்றுமே இல்லை. உழைத்துப் பிழைக்க முடியாதவன், ஏய்த்துப் பிழைக்க செய்து கொண்ட வியாபார தந்திரம் தான் யார் பெரியவன் என்பதெல்லாம்.

கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, இருந்தால் பரவாயில்லை என்றுதான் சொல்கிறோம் என்பார்கள்.

எனவே சொல்ல வந்ததை நேரிடையாகச் சொல்லலாம். விவாதங்களுக்கும், விமர்சனங்களுக்கும் தயாராக உள்ளேன்.

அன்புடன்
ஆரூரன்

ஆரூரன் விசுவநாதன் said...

//உங்கள் வீட்டிலிருந்து எத்தனை கிலோ அரிசி இலங்கைக்கு அகதிகளுக்கு சென்றது? உடைகள்? பண உதவி?//

ஈழத் தமிழருக்கு அரிசி, பருப்பு கொடுத்தால் தான் தாய் மொழியைப் பேசமுடியும் என்று யாராவது சொல்லியிருக்கிறார்களா?

அப்படியே கொடுத்தாலும் சொல்லிக் கொள்ளும் பண்பு எனக்கு இல்லை.

வானம்பாடிகள் said...
This comment has been removed by the author.
வானம்பாடிகள் said...

வானம்பாடிகள் said...

விஜயசாரதி said...
/நாட்டுல என்ன என்னவோ நடக்குது, தமிழன் வாழ்க்கை வறுமையில் தத்தளிக்குது, இங்கே அவர்கள் என்ன சொற்கள் பேசுகிறார்கள் என்பதுதான் நமக்கு எல்லாவற்றையும் விட பிரச்சனையாக இருக்கிறது./

என்னங்க பண்றது. இப்ப இவரு எழுதுனது உங்களுக்கு பிரச்சின ஆயிடுச்சி பாருங்க.

இப்ப நீங்க சொன்னதால ஒரு குடும்பத்து வறுமை நீங்கிடிச்சி.

/வேற்றுமை எதிலெல்லாம் பார்க்கிறோம் நாம்? தமிழ் பண்பாடு இதைத்தான் சொல்கிறதோ?/

கிடையவே கிடையாது. யாராவது ஏதாவது உருப்படியா சொன்னா குறுக்குசால் ஓட்டுறது தான் தமிழ் நண்டு மன்னிக்கணும் தமிழ் பண்பாடு

வெ.இராதாகிருஷ்ணன் said...

பல நேரங்களில் யோசனை செய்ததுண்டு. எது தமிழ் என?

வள்ளுவர் காலத்து தமிழ் தமிழா?

தொல்காப்பிய காலத்து தமிழ் தமிழா?

சங்க காலத்து தமிழ் தமிழா?

பாரதி காலத்து தமிழ் தமிழா?

இன்றைய காலத்து தமிழ் தமிழா?

ஒரு மொழியானது தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பல மாசுகளை தாங்கித்தான் ஆக வேண்டியிருக்கிறது.

பேருந்து என்பதைவிட பஸ் தமிழ் மொழியாகத்தான் பலருக்குத் தெரியும்.

வடமொழி சொற்கள் கலந்து நாம் பேசுவது தமிழ் மொழியாகிப் போனதில் தவறில்லை என்றாகிவிட்டது.

ஒரு மொழியானது நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஒரு சாதனம். அதில் எளிமை எனும் போர்வையை போர்த்திக் கொண்டு இருக்கிறோம்.

இலக்கியப் பேச்சுக்கும், வட்டாரப் பேச்சுக்கும் வித்தியாசம் உண்டு. அதன் காரணமாக தமிழ் மொழி மாசு பட்டுவிட்டது என சொல்லிவிட இயலாது.

ஒரு மொழியின் ஆயுட்காலம் அதை பயன்படுத்துபவர்களின் கையில் உள்ளது. எனவே மாற்றி பேசினாலும் கூட தமிழ் எனும் அடையாளம் தொலையாது என்றே அர்த்தம் கொள்ளலாம்.

மொழி மாசு அடைவதில்லை, மாறாக மாற்றம் கொள்கிறது காலத்திற்கேற்ப.

நல்லதொரு பதிவு நண்பரே. பொங்கல் நல்வாழ்த்துகள்.

தாராபுரத்தான் said...

எங்களை மாதிரி ஆளுகளுக்கு அவ்வப்போது சொல்ல உங்களை மாதிரி ஒருவர் தேவை.

மாதவராஜ் said...

பகிர்வுக்கு நன்றி.

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே!

கலகலப்ரியா said...

அருமை ஆரூர்..!

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி ஐயா தாரபுரத்தான்

நன்றி வெ. ராதாகிருஷ்ணன்

நன்றி தோழர் மாதவராஜ்

நன்றி ப்ரியா

முனைவர்.இரா.குணசீலன் said...

தேவையான பகிர்வு நண்பரே..

ஜீயெஸ்கே said...

சிந்திக்கத் தூண்டும் பயனுள்ள பதிவு.

காமராஜ் said...

இந்த வார்த்தைகளைப் புழங்குவது சரியா தவறா என்பதில் எனக்கு இன்னும் குழப்பம் நீடிக்கிறது.பின்னர் கூட அது சரியாகலாம்.ஆனால் அது வடமொழிதான் எனத்தெரியாமல் கடந்து போவது குறித்து நானும் வெட்கப்படுகிறேன்.அதானே தெள்ளு தமிழ் சொல்லெல்லாம் எப்படி வழக்கொழிந்து போனது.இறக்குமதி செய்தால் எதைவேண்டுமானாலும் தலையில் தடவிக்கொள்ளும் வழக்கம் நமக்கு மட்டும் எப்படி வந்தது.

தோழா மிக அருமையான பதிவு.அரியத்தந்தமைக்கு நன்றி.

முருக.கவி said...

தமிழ் மொழியில் வடமொழிக் கலப்பு அந்நாளில் இருந்ததைக் காட்டிலும் தற்பொழுது குறைந்துள்ளது. வடமொழிக் கலப்புடன் உள்ள தமிழ் நடையை மணிபிரவாள நடை எனச் சொல்வார்கள்.மறைமலை அடிகளுக்குப் பிறகு தனித்தமிழ் செம்மை பெற்றது.நல்ல கருத்து! சிந்திக்கத் தக்கது.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி முனைவர் குணசீலன்

நன்றி முருக கவி

நன்றி ஜிஎஸ்கே

ஆரூரன் விசுவநாதன் said...

//காமராஜ்//
இந்த வார்த்தைகளைப் புழங்குவது சரியா தவறா என்பதில் எனக்கு இன்னும் குழப்பம் நீடிக்கிறது.


நன்றி தோழர்......

பிற மொழிகளை கலந்து பேசுவது தவறா சரியா என்ற விவாதத்திற்கு வரவில்லை. ஆனால், எம் மொழியில், சோறு என்பதற்கும் குழம்பு என்பதற்கும் சொல்ல கூச்சப்பட்டுக் கொண்டு சாம்பார் என்றும்,சாதம் என்றும், ரைஸ் என்றும் சொல்வதைத்தான் சகிக்க முடியவில்லை. அந்த வருத்தமே இந்த பதிவு......

முழுக்க முழுக்க தனித்தமிழில்தான் பேசவேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், சில நேரங்களில் பிற மொழி கலப்பை தவிர்க்க முடிவதில்லை.என்பது உண்மையே.

சின்ன அம்மிணி said...

அருமை

க.பாலாசி said...

//ஏனம் - பாத்திரம்//

‘ஏனம்’ங்கற வார்த்தை இப்போதைக்கு கிராமத்துல இருக்குன்னு நினைக்கிறேன். எங்கவீட்ல இப்டித்தான் சொல்லுவோம்.

//செய்யுள் - கவிதா//

அப்ப கவிதை என்பதும் வடமொழிதானா???

நிறைய வார்த்தைகள் தெரிந்துகொண்டேன். நன்றி