Tuesday, January 12, 2010

கடலை, பொரி, முருக்கு.....

காவடி சிந்து

1865-1891 வரையில், திருநெல்வேலி ஜில்லா, சென்னிகுளத்தில் வாழ்ந்த அண்ணாமலை கவிராயர் தான் முதன் முதலில், காவடி சிந்து  பாடல்களைத் தமிழிலே அறிமுகம் செய்தவர். என்று அனைவராலும் போற்றப்படுபவர்.

சென்னிகுல நகர் வாசன் - தமிழ்த்
தேரும் அன்னாமலை தாசன் - செப்பும்
ஜகமெச்சிய மதுரக்கவி அதனைப்புய வரையில்
புனை தீரன் அயில் வீரன்

வண்ண மயில் முருகேசன் - குற
வள்ளி பதம் பணி நேசன் - உரை
வரமே தரு கழுகாசல பதிகோயிலின் வளம் நான்
வரவாதே சொல் வன்மாதே

சன்னிதியில் துஜஸ்தம்பம் - விண்ணில்
தாவி வருகின்ற கும்பம் - என்னும்
சலராசியை வடிவார்பல கொடிசூடிய முடிமீதினில்
தாங்கும் உயர்ந்தோங்கும்

அருணகிரி நாவில் பழக்கம் - தரும்
அந்தத் திருப்புகழ் முழக்கம் - பல
அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர்செவி
அடைக்கும் அண்டம் புடைக்கும்

கருணை முருகனைப் போற்றி - தங்கக்
காவடி தோளின்மேல் ஏற்றி - கொழும்
கனலேறிய மெழுகாய்வரு பவரே வருமேகதி
காண்பார் இன்பம் பூண்பார்
என்ற அவர் பாடல்கள் மிகப் பிரபலமானவை.......

சமகாலத்தில் எழுதப்பட்ட, அல்லது அதற்கு முன்பே எழுதப்பட்ட, பஞ்ச கும்மிகள். இதே, காவடிசிந்துவில் எழுதப்பட்டிருந்தாலும், வெளியுலகிற்கு வராதது வருத்தமே.

யார் பறையன்?

கொங்கு மண்டலம் திருப்பூர், அவினாசிக்கு  அருகில் உள்ள திருமுருகன் பூண்டியில், கொங்கு மன்னன், விக்கிரம சோழனின் 12ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில், சிவபிராமணர்களுக்கு, நாள் தொறும் அமுது படிக்காக நாழியரிசி கொடையாகக் கொடுத்தவர் பெயர்  வெள்ளாளர், மாப்புள்ளிகளில் சோழன் பறையன் ஆன தனபாலன் என்று குறிக்கப்பட்டிருக்கிறது. என்ற தகவலை கல்வெட்டறிஞர் புலவர்.செ.இராசு அவர்கள் தன்னுடைய கொங்கு வேளாளர்கள் கல்வெட்டும், காணிப்பாடல்களும் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

வெள்ளாள மரபில் வந்த தனபாலன், அரசால், சபையோரால்,அல்லது ஊரால், சோழன் பறையன் என்ற பட்டம் பெற்றிருந்தான் என்பதை அந்த கல்வெட்டு தெரிவிக்கிறது.சோழன் புகழைப் பரப்புபவன்,.அல்லது பறை போன்ற கருவியை இயக்குபவன் என்ற பொருளில் " பறையன்" என்ற வார்த்தை வந்திருக்கலாம்.

உடுமலை வட்டம் சோழமாதேவியில் கிடைத்த விக்கிரம சோழன் கல்வெட்டில் கூட, கோவிலுக்கு கொடையளித்தவர் பெயர், "பறையன் ஆளுடைய நாச்சி" என்றிருப்பதையும் அவர் பதிவு செய்துள்ளார்.

இது எப்படி?, ஒரு குலத்திற்கு, அதுவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குலப்பெயராக மாறியது என்பதுதான் ஆச்சரியம்.

திருமந்திரம்

கடந்த வாரம் கோவையில் அண்ணாச்சி, செல்வேந்திரன், சஞ்சய், பழமைபேசி, ஈரோடு கதிர் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது வடகரைவேலன் அண்ணாச்சி அவர்கள் திருமந்திரம் புத்தகம் ஒன்றை எனக்குக் கொடுத்தார்.   இன்று காலை அதை எடுத்து வைத்து பார்த்துக்கொண்டிருந்தபோது பல ஆச்சரியமான விசயங்கள் கிடைத்தன.  நம்மில் பலரும் மிக இயல்பாக, பேசிவரும் வரிகள் திருமந்திரத்திலிருந்து எடுத்தாளப்படுகின்றன என்பதை அறிந்ததும் வியப்பாகியது. அவற்றில் சில


"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"


"மாணிக்கத்துள்ளே மரகதச் சோதியாய்"


"என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை
நன்றாகத் தமிழ் செய்யுமாறு"-  இது இடைச் செருகலாக இருக்குமோ?


"குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால்"

"கிளியோன்று பூனையால் கீழது வாகுமே"

"உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே"

"அண்டஞ்சுருங்கில் அதற்கோரு அழிவில்லை"

"வாயொன்று சொல்லி, மனமொன்று சிந்தித்து"

"ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா"

"உள்ளம் பெருங்கோவில், ஊனுடம்பு ஆலயம்"

"கண்கானி இல்லென்று கள்ளம் பல செய்வார்"

"ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்"----(இது  அண்ணா சொன்னதில்ல?)

"தானே தனக்கு பகைவனும் நட்டானும்"(சொந்தக் காசில் சூனியம் )

"ஆசையறுமின்கள், ஆசையறுமின்கள்"-

"சிவ சிவ என் கிலர் தீவினையாளர்"

" தத்துவம் எங்குண்டு, தத்துவன் அங்குண்டு"


ஸ்ரீராமன் சிலோனுக்கு சென்றதில்லை

வசந்தம் வெளியீட்டகம் வெளியிட்டுள்ள " ராமன் சிலோனுக்குச் சென்றதில்லை" என்ற நூலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.   நீண்டகாலமாக தொடர்ந்து வரும் ராமர் பாலம் பிரச்சனையை மையமாக வைத்து, இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்திற்கு ராமன் வரவேயில்லை, பாலம் கட்டவேயில்லை என்பதை வலியுறுத்தி எழுதியிருக்கிறார், ஆசிரியர்.  அதற்கான ஆதாரமாக சிலவற்றைச் சொல்லுகிறார்.

1.வால்மீகி ராமாயணத்தில் பாலம் வடக்கு தெற்காக கட்டியதாக சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில், ராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையே உள்ள ஆதாம் பாலம், கிழக்கு மேற்காக உள்ளது.

2.ராமேஸ்வரத்திற்கும், சிலோனுக்கும், இடையே பாலம் கட்டினார், சரி, மண்டபத்திற்கும், ராமேஸ்வரத்திற்கும் இடையே உள்ள கடலை எப்படித் தாண்டினார்.   அப்படியென்றால் 2 பாலம் கட்டினாரா ராமர்?

இராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் பல்வேறு கட்டங்களில் பிற்ச்சேர்க்கை இருந்திருக்கிறது.  ஆரிய சிந்தனைகளையும், ஒட்டிய இடைச் செருகல்கள் இவ்விரு காவியங்களிலும் உண்டு என்று, ஜவகர்லால் நேரு தன் "இந்திய தரிசனம்" என்ற புத்தகத்திலும், கொண்டப்பள்ளி ராதாகிருஷ்ணன் " இந்திய தத்துவத்தின் ஒரு தரவு நூல்" என்ற புத்தகத்திலும் குறிப்பிட்டுள்ளனர்.


எல்லாஞ்சரி,  காசிக்கும், ராமேஸ்வரத்துக்கும் முடிச்சுப் போட்ட பிரகஸ்பதி யாருன்னு தெரியலையே?  காசிக்குப் போனா கண்டிப்பா, ராமேஸ்வரத்துக்கும் போகனும்னு சொல்லறது எத வச்சுன்னு தெரியலையே?


இதே போல், " தமிழரும் கீதையும்" என்ற ஒரு ஆய்வுக் கட்டுரையை ஐயா, பழ.நெடுமாறன் வெளியிட்டிருக்கிறார்கள்,  பாரதத்தில் கீதை என்பது ஒரு முழு நூல் அல்ல,  பாரதத்தின் ஆறாவது பர்வதமாகிய "பீஷ்ம பர்வம்" பல உபபர்வங்களாக பிரிக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு உப பர்வம் தான் "கீதாபர்வம்".   இதில் 13 முதல் 42 அத்தியாயங்கள் உள்ளன.  அவற்றில் 25 முதல் 42 வரை உள்ள அத்தியாயமே "கீதோபதேசம்".  

சங்க இலக்கியங்களிலொ, தேவார பதிகங்களிலோ, இன்னும் ஏன், ஆழ்வார்கள் பாசுரங்களிலோ, கீதை பற்றிய எந்த குறிப்பும் இல்லை என்பது கவனிக்கவேண்டிய ஒன்று.  "ஆளியால் மிக்க பார்த்தனுக்கு அருளி" என்ற ஒரு சில வரிகள் தவிர....கீதையின் சிறப்புகளைப் பற்றி யாரும் சொல்லவில்லை..

பல்வேறு கட்டங்களில் பல்வேறு நபர்களால், இடை செருகப் பட்டு இன்று ஒரு பெரிய புத்தகமாக்கப்பட்டுள்ளது.

ரேடியோவில் எங்கோ பாடிக்கொண்டிருக்கும், பட்டுக்கோட்டையின் பாடல்கள் எனக்கு கேட்கிறது............உங்களுக்கு...??????????????


       குறுக்கு வழியில்  வாழ்வு தேடிடும்
       குருட்டு உலகமடா- இது
       கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
       திருட்டு உலகமடா- தம்பி
   
                         தெரிந்து நடந்து கொள்ளடா-இதயம்
                         திருந்த மருந்து சொல்லடா.........


       இருக்கும் அறிவை மடமை மூடிய
       இருட்டு உலகமடா-வாழ்வில்
       எந்த நேரமும், சண்டை ஓயாத
       முரட்டு உலகமடா- தம்பி
                
                          தெரிந்து நடந்து கொள்ளடா-இதயம்
                          திருந்த மருந்து சொல்லடா........

___/\___

28 comments :

தண்டோரா ...... said...

அருமையான பதிவு விசு. நிறைய தெரியாத தகவகல்கள்.காப்பி செய்து கொண்டேன்.நன்றி

க.பாலாசி said...

நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன்.

Sangkavi said...

நல்ல பதிவு இவை அனைத்தும் புதிய தகவல்கள்...

இனிய தைத் திருநாள் வாழ்த்துக்கள்....

ஆரூரன் விசுவநாதன் said...

//தண்டோரா//


அருமையான பதிவு விசு. நிறைய தெரியாத தகவகல்கள்.

நன்றி நண்பா

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி பாலாசி

நன்றி சங்கவி

வானம்பாடிகள் said...

முக்கியமான பல தகவல்கள் அறியத்தந்தமைக்கு நன்றி ஆரூரன்.

கலையரசன் said...

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை .. நையப் புடை .. நையப் புடை ..

முனைவர்.இரா.குணசீலன் said...

அருமையான பதிவு நண்பரே..

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி முனைவர் குணசீலன்

நன்றி கலையரசன்.....மிகவும் ரசித்தேன் உங்கள் பின்னூட்டத்தை...

ஈரோடு கதிர் said...

ஆரூரன் மாதிரி ஆழமாக படித்து இடுகை எழுத, தெரிந்து நடந்து கொள்ளடா...

அல்லது ஒழுங்கா பின்னூட்டம் இட
இதயம் திருந்த மருந்து கொள்ளடா........

ஈரோடு கதிர் said...

தலைவரே...

எப்போ நேரம் கிடைக்குது, இத்தன புத்தகம் படிக்க...

ஆரூரன் விசுவநாதன் said...

//அல்லது ஒழுங்கா பின்னூட்டம் இட
இதயம் திருந்த மருந்து கொள்ளடா.......//

இதுதான வேணாங்கறது.......ஏதோ என்னச் சொல்லறமாதர இருக்குது

மாதவராஜ் said...

பகிர்ந்தமைக்கு நன்றி....

அகல்விளக்கு said...

அறிந்திராத விஷயங்கள் பல அறிந்து கொண்டேன்...

நன்றி அண்ணா...

அண்ணாமலையான் said...

பல புதிய தகவல்கள்....

வால்பையன் said...

//ஒரு குலத்திற்கு, அதுவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குலப்பெயராக மாறியது என்பதுதான் ஆச்சரியம்.//

இன்னும் அரசியல் தெரியாத சின்னபுள்ளையா இருக்கிங்களே!

ஹேமா said...

அருமையான தேடல் பதிவுகள்.
"பறையன்"என்கிற சொல்லுக்கான அலசலும் ,"ஸ்ரீராமன் சிலோனுக்கு சென்றதில்லை"யும் பொறுமையாக ஆழமாக வாசித்தேன்.நன்றி ஆரூரன்.

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி தோழர்...

நன்றி வால்....

நன்றி ஹேமா

நன்றி அகல்விளக்கு

நன்றி அண்ணாமலையான்

கலகலப்ரியா said...

//தண்டோரா ...... said...

அருமையான பதிவு விசு. நிறைய தெரியாத தகவகல்கள்.காப்பி செய்து கொண்டேன்.நன்றி//

அதே... பொக்கிஷமான அரிய விஷயங்கள்... நானும் ஒரு காப்பி...

கலகலப்ரியா said...

kavadichindhu... :D

Cable Sankar said...

ippadi தான் சீரியஸா எழுதணுமோ.. ரொம்ப நல்லாருக்கு

ஆரூரன் விசுவநாதன் said...

cable shankar....

//ppadi தான் சீரியஸா எழுதணுமோ.. ரொம்ப நல்லாருக்கு//

என்னங்ணா பண்றது..... எதோ படிச்சத, படிக்கறத வச்சு காலந் தள்ளிகிட்டிருக்கேன்.....

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி ப்ரியா

தாராபுரத்தான் said...

சத்தம் போட்டு படித்தேன்,ஈரோடும்,கோவையும் பல பதிவுகளை கொடுத்திருங்கோ,,

RADAAN said...

பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv

http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

புலவன் புலிகேசி said...

தகவல்களுக்கு நன்றி..இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

சி. கருணாகரசு said...

பகிர்வுக்கு நன்றிங்க....
தங்களுக்கு எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.

VELU.G said...

நல்ல தகவல்கள் நன்றி சார்.

என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

எனக்கு ஒரு சந்தேகம்

கீதை யார், எப்போது எழுதியதாக வேண்டுமானலும் இருக்கட்டும்.
நமக்கெல்லாம் ஒரு வலை(சந்தர்ப்பம்) கிடைத்த உடனேயே எல்லோருக்கும் அறிவுரை சொல்ல ஆரம்பித்து விடுகிறோம் இது தவறு இது சரி என்று.

ஆனால் கீதையில் தவறான கருத்தேதும் சொல்லப்பட்டிருக்கிறதா நன்பரே, படித்துப்பார்த்தீரா.

தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒரு நன்பர் என்ற உரிமையில் மட்டுமே கேட்கிறேன்