Friday, August 28, 2009

இட மாறு தோற்றப் பிழை…….

நேற்றுமாலை வழக்கம் போல் நண்பர் கதிருடன் மாலை நடை பயிற்சி முடித்து, அலுவலகம் திரும்பி, கடைசி நேர மின் அஞ்சல்களை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, தங்கமணியிடமிருந்து போன்.


“குப்பு”ன்னு வேத்துப் போச்சு……
வாகிங் போனாக்கூட இவ்வளவு வேக்கறதில்லை……


இருக்காதா பின்ன…. ? சும்மா எதோ மெயில் படிச்சிகிட்டிருந்த என்னை, பக்கத்து அலுவலக மார்க்ஸிய நண்பர் கூப்பிட்டு,


“தோழர், வேலையை முடிச்சிட்டு வாங்க, ஒரு லார்ஜ் வச்சிட்டு போலாம், ரொம்ப நாளாச்சு பேசி” னு கூப்பிட்ட


அடுத்த நிமிஷம், போன்கால், தங்கமணிகிட்ட இருந்து வந்தா, …….. தென்ன…. பன்றது………. ?


“தாடிக்காரர்” பத்தின பதிவுகளை படிச்சிட்டு, அதே வேகத்தில, ரெண்டு கருப்பு சட்டை வேற வாங்கி போட்டுகிட்டு, திரியதனால, “ விதியே” ன்னு கூட சொல்ல முடியல……….எல்லாம் தலை விதி……. என்ன பன்றது ……?


ஹி…..ஹி……ஹி…….. நாங்க விதியையெல்லாம்…………… நம்பறதில்லைல…………


சரி சட்டுபுட்டுன்னு விசயதிற்கு வருவோம்………அடடா…… இதுக்கென்ன அர்த்தம்…?


சரி விடுங்க பிரதர்….. நண்பர் “ பழமைபேசி” கிட்ட கேட்டுக்குவோம்…


வீட்டில ஒரு சின்ன ரிப்பேருங்க……. நம்ம நண்பர், கட்டிட பொறியாளர், அதாங்க…


.இன் ஜினியரு….. அவருகிட்ட தங்கமணியே போன் பண்டி சொல்லி



“இதுக்குகூட துப்பில்ல….”(மீண்டும் நண்பர் “பழமை பேசி” யை தொணைக்கு கூப்பிட்டுக்குங்க,,, நெசமாலுமே, இதுக்கு அர்த்தம் தெரியாதுங்க) னு, தங்க மணியிடம் காலையில் திட்டு வாங்கியது நெனப்புக்கு வருதுங்க…

தென்ன பன்றதுங்க… நாம வாங்கிட்டு வந்த ………...அப்படி

 ஹி….ஹி……இப்பெல்லாம்………நாங்க

……….யெல்லாம் நம்பறதில்லை……ல…..




வெசயம் இதுதாங்க…….




கட்டிட ரிப்பேர் செய்யற மேஸ்திரி ஒருத்தர் கொஞ்ச நேரத்தில வருவாரு…. அவரு போன் நெம்பர் ………………இதுதான், என்ன வேலைன்னு, வந்தா காட்டிருங்கன்னு……


நண்பர் சொல்ல….,.


அம்முணி (னி) நம்மைய கூப்பிட, ,


நாம நண்பரை கழட்டிவுட்டுட்டு,……



வூட்டுக்கு ஓட ,,,,




எல்லாம் தல…தி.


எப்பயும் போல, ஒரு டவுசரை போட்டுகிட்டு( பட்டா பட்டி இல்லைங்க..)


நாங்கல்லாம் மாறிட்டம்ல…………



“வாரிசோட” சைகிளை எடுத்துகிட்டு ஒரு ரவுண்டடிச்சிகிட்டு இருந்த போது……… தங்கமணியிடமிருந்து மறுபடியும் போன்,,,



”தெங்க போனீங்க…….. மேஸ்திரி நின்னுகிட்டு இருக்கிறாரு,…..சீக்கிரம் வாங்க……….ஒன்னுக்கும் ….து…….லை…..” ன்னு.



அவசரசமா வூட்டுக்கு வந்தா,,,, மேஸ்திரியையும் காணம், ஒருத்தரையும் காணம்….


ரோட்டில ஒரு பயலைக் காணம்.



அப்பத்தான் ஒரு பைக், நம்ம பக்கத்துல வந்து, மெதுவா…. நின்னுச்சு.


நம்மள மாதிர, ஒரு இளவட்ட பார்ட்டி,



ஹோண்டா பைக், கருப்பு ஷூ, கோடுபோட்ட சட்டையை பேண்டுக்குள்ள உட்டு “ இன் பன்னிகிட்டு, கருப்பு கண்ணாடியை சொக்காயில தொங்க வுட்டுகிட்டு,


தாருகிட்டயோ போனில பேசிட்டு,  வெயிட் பண்ணிகிட்டுருந்தார்.


கையிலவேற ஒரு பை…பொட்டிதட்டறவறாட்டம்……..


அவர் என்னை பார்க்க, நான் அவரை பார்க்க…….. இப்படியே கொஞ்ச நேரமாச்சு.   ......... மேஸ்திரி வந்த பாட்டைக் காணம்.



சரின்னு அம்மணிகிட்ட மேஸ்திரி நம்பரை வாங்கி, ஒரு ஒரமா நின்னு, மேஸ்திரியை கூப்பிட்ட, அவரு……

“சார் உங்க வீட்டு வாசல்ல தான் நிக்கறன் சீக்கிரம் வாங்கன்னார்…..”



அப்படியே திரும்பிப் பார்த்தா……. பைக் பார்ட்டிதான்……….. மேஸ்திரியாம்……..



நம்ம வாய் எப்பவும் சும்மா இருக்கிறதில்லைல …….என்ன பன்றது…… எல்லாம் தல ...தி.

அவருகிட்ட போயி,     ம்.......நீங்க தான் ……….அனுப்புன மேஸ்திரியா? ன்னு கேட்க..


அவரும் கேவலமா ஒரு பார்வை பார்த்து “ நீங்க தான் பில்டிங் வோனரா?”ன்னார்.


நானும் வுடாம,,

 ஆமா….“வரும்போதே பார்த்தேன்…… ஆனா நீங்க மேஸ்திரியா இருப்பீங்கன்னு தோணலை” ன்னு சொல்லோ........

 அவரும்….

”வூட்டு வோணர் நீங்களா இருப்பீங்கன்னு தோணலை”ன்னு  சொல்லோ…..


ம்ம்ம்……என்னத்தச் சொல்ல………..





 அப்பத்தான் எங்கியோயிருந்த வந்த ஒருத்தன், நம்மள ஒரு பூச்சி மாதர பார்த்திட்டு, நம்ம பைக் பார்டிகிட்ட போய், 

"சார்,   வீட்டு முன்னாள இருக்கிற கிரில்க்கு கிரீஸ் போடனுமா?  50ரூ குடுங்க சார், நல்லா போட்டுடறன்" னு சொல்லோ



பைக் பார்ட்டி நம்மள பார்க்க,   இந்த கன்றாவியெல்லாம் பார்க்காத மாதர அந்தபக்கம் திரும்பிகிட்டனுங்க.....



ம்ம்.....என்னத்தச் சொல்ல


இதுதான்…..” அதாங்க “தலைப்போ”



குறிப்பு:
என்னை எழுதி வைத்தே தீருவேன் என்று அடம் பிடித்து, எழுத வைத்த நண்பர் கதிருக்கு நன்றிகள்.

அன்புடன்
ஆரூரன்






















10 comments :

ஈரோடு கதிர் said...

சான்சே இல்லங்க ஆரூரன்...

இவ்வளவு அற்புதமான எழுத்துத் திறமையை வச்சிகிட்டு.. ஏன் தான் அத எழுதாம வீணடிக்கிறீங்களோ?

எழுத்தே வராமா எழுத்திக் கொல்றவனும், எழுதத் தெரிஞ்சும் எழுதாம கொல்றவனும் .......தா சரித்திரம் இல்ல.

Anonymous said...

நல்ல வேளை, மேஸ்திரிய பாக்க வேற யாரும் அங்க வரல.

முருக.கவி said...

நன்றாக இருக்கிறது. பிழையில்லாமல் இடமாறு தோற்றப் பிழை அழகாக உலக இயல்பை எடுத்துக்காட்டுகிறது. நல்ல தமிழ் இருக்கும் போது வட்டார மொழி வழக்கு எதுக்குங்க? எளிமையாக மக்களிடம் எடுத்து செல்லவா?

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி கதிர். நீங்க ஒருவாட்டி சொன்னா 100 வாட்டி சொன்னதா எடுத்துகிட்டு தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.
அன்புடன்
ஆரூரன்.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி anonymous

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி முருக.கவி.
மொழியின் பண்முகத்தண்மைகளில் ஒன்றான ஓசைநயம் பொதுவாக என்னைக் கவரும். வட்டார வழக்குகளிலினால் மொழி பாதிக்கும் என நினைக்கவில்லை. இது குறித்து ஒரு தனி பதிவை கொண்டுவர முயற்சிக்கிறேன்.
நண்பர் "பழமைபேசி" யின் பதிவுகளைப் பாருங்கள்

maniyinpakkam.blogspot.com

அன்புடன்
ஆரூரன்

க.பாலாசி said...

//நம்மள மாதிர, ஒரு இளவட்ட பார்ட்டி,//

இதுதான வேண்டாங்றது...(இளவட்டமாமுல்ல..)


அவருகிட்ட போயி, ம்.......நீங்க தான் ……….அனுப்புன மேஸ்திரியா? ன்னு கேட்க..
அவரும் கேவலமா ஒரு பார்வை பார்த்து “ நீங்க தான் பில்டிங் வோனரா?”ன்னார்.
நானும் வுடாம,,
ஆமா….“வரும்போதே பார்த்தேன்…… ஆனா நீங்க மேஸ்திரியா இருப்பீங்கன்னு தோணலை” ன்னு சொல்லோ......
அவரும்….
”வூட்டு வோணர் நீங்களா இருப்பீங்கன்னு தோணலை”ன்னு சொல்லோ…....//

சரியான காமெடி...

நல்லா எழுதுறீங்க சார்...(இவன்லாம் சொல்றானேன்னுதான நினைக்கிறீங்க)...இப்படியே தொடர்ந்து எழுதுங்க....

க.பாலாசி said...

//நம்மள மாதிர, ஒரு இளவட்ட பார்ட்டி,//

இதுதான வேண்டாங்றது...(இளவட்டமாமுல்ல..)


அவருகிட்ட போயி, ம்.......நீங்க தான் ……….அனுப்புன மேஸ்திரியா? ன்னு கேட்க..
அவரும் கேவலமா ஒரு பார்வை பார்த்து “ நீங்க தான் பில்டிங் வோனரா?”ன்னார்.
நானும் வுடாம,,
ஆமா….“வரும்போதே பார்த்தேன்…… ஆனா நீங்க மேஸ்திரியா இருப்பீங்கன்னு தோணலை” ன்னு சொல்லோ......
அவரும்….
”வூட்டு வோணர் நீங்களா இருப்பீங்கன்னு தோணலை”ன்னு சொல்லோ…....//

சரியான காமெடி...

நல்லா எழுதுறீங்க சார்...(இவன்லாம் சொல்றானேன்னுதான நினைக்கிறீங்க)...இப்படியே தொடர்ந்து எழுதுங்க....

ஆரூரன் விசுவநாதன் said...

இல்லையா பின்ன.........இளவட்டந்ந்தேன்... ஏ...ன்....ஏத்துகிட மாட்டீங்களா.....?

நன்றி பாலாஜி
அன்புடன்
ஆரூரன்

ஈரோடு கதிர் said...

http://varungalamuthalvar.blogspot.com/2009/08/blog-post.html