Friday, January 01, 2010

எங்கள் அன்னை பூமி............பாரதம்




அதிகாலை 5 மணி
அரை டம்ளர் டீயிக்காய்
அவசரமாய் காத்திருந்தேன்
ஆறுமுகம் கடை வாசலில்
,
பஞ்சடைத்த உடல்
பசி அரித்த குடல்
கந்தையிலும் கந்தையாய்
எனக்கருகில் ஒருவன்

ரத்தத்தில் ஏறிப்போன சர்க்கரையால்
பாய்லர் பாலை விட கொதிப்பில் நானும்,
எச்சில் டீயாவது கிடைக்காதா என்று
ஏங்கி அந்த கிழட்டுப் பிச்சைக்காரனும்

அவசரமாய் டீ அடித்து
நடுத்தெருவில் கொட்டினான்
அந்நாள் நன்றாய் இருக்க
அன்னை பூமிக்கு அவிற்பாகமாம்




29 comments :

மாதவராஜ் said...

2010ன் முதல் பதிவு... அருமை. தொடரட்டும் எழுத்துக்கள். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Anonymous said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பருக்கும் அனைத்து நட்புக்களுக்கும்...

cheena (சீனா) said...

அன்பின் ஆரூரன்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

அன்னை பூமிக்கு அவிர்பாகம் அளித்தால் - பசித்திருப்போருக்கு அவள் உணவளிப்பாள்

நன்று

ஈரோடு கதிர் said...

அருமை

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி தோழர் மாதவ்...

நன்றி சகோதரி

நன்றி சீனா ஐயா

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஆரூரன் விசுவநாதன் said...

கதிர்//

//அருமை//

இதெல்லாம் ஒத்துக்க மாட்டேன்... இது என் டயலாக்.....

நாட்டாமை டயலாக்க மாத்து.....

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Kumky said...

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழா..

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி கும்க்கி....உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கு என் அன்பு புத்தாண்டு வாழ்த்துக்கள்

க.பாலாசி said...

உண்மையான கவிதை. பலநேர அனுபவப்பாடமும்.

ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை.
. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி பாலாசி

நன்றி டி வி ஆர்

பழமைபேசி said...

Sinthanai Idukai....Good one!!

ஈரோடு கதிர் said...

நான்தான் வம்புக்கு வரலைனு சொல்றேன்... உட மாட்டேங்கிறீங்களே...

சரி ஆறுமுகத்த திட்டுனீங்களா இல்லையா?

Unknown said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
நான்தான் வம்புக்கு வரலைனு சொல்றேன்... உட மாட்டேங்கிறீங்களே...
சரி ஆறுமுகத்த திட்டுனீங்களா இல்லையா?//

அதாரு ஆறுமுகம்??? என்னையும் சேத்துக்குங்க.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி பழமைபேசி

நன்றி தாமோதர் சந்திரு

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

passerby said...

//அதிகாலை 5 மணி//

படத்தின் காட்சி வெயில் வந்தபின்னர்தான் எனச்சொல்கிறதே.

//பஞ்சடைத்த உடல்

பஞச்த்தால் அடிபட்டு நொந்த உடல் போலும்.

//அவசரமாய் டீ அடித்து
நடுத்தெருவில் கொட்டினான்

அவன் பிச்சைக்காரனாகயிருக்க மாட்டான். மனநலம் பாதிக்கப்பட்டவனாகத்தான் இருப்பான்.

விடிகாலை 5 மணியளவில் டீக்கடைக்குப் பிச்சைக்காரர்கள் வருவதில்லை. நான் கண்டதில்லை.

பிச்சைக்காரர்கள் இயற்கையிலேயே சோம்பேறிகள். மனநலம் இல்லாதோர் அப்படி அலைவதுண்டு.

கருத்துப்பிழை, சொற்பிழை நிறைந்த கவிதை.

ஆரூரன் விசுவநாதன் said...

/ஈரோடு கதிர் said...
நான்தான் வம்புக்கு வரலைனு சொல்றேன்... உட மாட்டேங்கிறீங்களே...
சரி ஆறுமுகத்த திட்டுனீங்களா இல்லையா?//


ஏற்கனவே நமக்கு ஊர்ல நல்லவன்னு பேரு, இன்னும் இது வேறயா?

vasu balaji said...

அதெதுக்கு 5கெல்லாம் ஆறுமுகம் கடைக்கு. கட்டஞ்சாயா அடிக்கவா.

கதிர், பாலாசி ஒளுங்கு மருவாதியா தமிழிஷ்ல ஓட்டு போடுங்க. ஆரூரன் ஓட்டு நான் போட்டுக்குவேன்:))

முனைவர் இரா.குணசீலன் said...

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்றுஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே.”
-----------------------------------------------------திருமந்திரம் 1857

பழமைபேசி said...

//கதிர், பாலாசி ஒளுங்கு மருவாதியா தமிழிஷ்ல ஓட்டு போடுங்க. ஆரூரன் ஓட்டு நான் போட்டுக்குவேன்:))//

Aappu, AAppu.... I did so....

ஒளுங்கு?

Ozhungu??

vasu balaji said...

பழமைபேசி said...

//கதிர், பாலாசி ஒளுங்கு மருவாதியா தமிழிஷ்ல ஓட்டு போடுங்க. ஆரூரன் ஓட்டு நான் போட்டுக்குவேன்:))//

Aappu, AAppu.... I did so....

ஒளுங்கு?

Ozhungu??//

ம்கும். இத வெச்சிதான வடிவேலு பதிவர் கூட்டத்தில வம்பிழுத்தது. சிடி ரெடியா?=)). மதுரைக்கு போலாம்.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி முனைவர் குணசீலன்

கலகலப்ரியா said...

ரொம்ப ரொம்ப நல்லாருக்கு ஆரூர்..!

தாராபுரத்தான் said...

கிழட்டுப் பிச்சைக்காரனும்புத்தாண்டில் வாழ்க வாழ்த்து மட்டும் சொல்லி வைப்போம்ங்க.

பிரபாகர் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ஆரூரன்.

சமுதாய சிந்தனை ஓங்கி நிற்கிறது உங்களின் கவிதையில்.

பிரபாகர்.

புலவன் புலிகேசி said...

இதை சொன்னா நம்மல முட்டாள்னு திட்டறாங்க..அருமைங்க..புத்தாண்டு வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

இந்நாளும் இனி வரும் நாட்களும் சிறப்பாய் அமையட்டும் அனைவருக்கும்

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி புலிக்கேசி

நன்றி பிரபா

நன்றி ப்ரியா

நன்றி அப்பன் ஐயா