Tuesday, January 19, 2010
''மிஞ்சி போட்ட ரஞ்சிதமே''
பச்சை மணக்குதடி பாதகத்தி ஒம் மேல
இச்சை பட்ட நேரமெல்லாம் ஏங்கி முகம் வாடுறனே ..
பாக்கு துவக்குதடி பழைய உறவு மங்குதடி ..
ஏலம் கசக்குதடி இன்னொருவன் மையலாலே ...
தங்கத்துக்குத் தங்கம் இருக்க தனித் தங்கம் நானிருக்க..
பித்தாலத் தங்கத்துக்குப் பித்தாசை கொள்ளலாமா?
கடலில் தலைமுழுகி கப்பலில் சிக்கு உலர்த்தி
ரெங்கத்துப் பூ ஒடிச்சு நேரவாடி பேசிப் போவோம் ..
கரை போட்ட கழுத்தழகி கடுக்கை போட்ட முகத்தழகி..
மிஞ்சி போட்ட ரஞ்சிதமே மின்னவாடி பேசிப் போவோம் ..
ஒத்தபனை சித்தநந்த ஒழுகு பனை ராமேஸ்வரம்
கும்பபனை அறியவேறு குயிலு இருந்தும் கூவாதோ..
சோட நந்த கண்மாய்க்குள்ள சோடி புறா மேயயிலே ..
சோடி பிரிஞ்சன்னைக்கு சோரவிட்டேன் கண்ணீரை ..
கம்மாய்க்குள் கழுகு மரம் கலந்து பேசி ஆறுமாதம் ..
சந்திக்கிற நேரமெல்லாம் சனியன் வந்து நேரிடுதே...
கொலவாலு நெல்லுகுத்தி கொலயாம சோறு பொங்கி
எலவாங்க போன மச்சான் எவளோட தாமுசமோ ..
ஆத்துக்குள்ள அஞ்சரளி அத்தை மவன் வச்சரளி ..
காக்கிதுல்ல பழுக்குதில்ல கவ்வோதிபய வச்சரளி ..
எண்ணெ தேச்சு தலை முழுகி நடுத்தெருவே போரவரே ..
வண்ணமிட்ட தலைபோல என் கண்ணைப் பறிக்குதய்யா ...
(மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த மீனாள் (வயது 45) என்பவர் சொல்ல அதைப் பதிவு செய்தது திருச்சி பிஷப் ஹீபர்கல்லூரியின் தமிழ்த் துறை மாணவ, மாணவிகள்)
நன்றி
http://thatstamil.oneindia.in/art-culture/folk/2005/folk1.html
Labels:
மொழி
Subscribe to:
Post Comments
(
Atom
)
28 comments :
நல்லா சுவாரஸ்யமா இருக்கு
அடடா....அருமை...
//கொலவாலு நெல்லுகுத்தி கொலயாம சோறு பொங்கி
எலவாங்க போன மச்சான் எவளோட தாமுசமோ ..//
வேறயாரா இருக்கப்போவுது... நல்ல ‘அழகான’ ஃபிகராத்தான் இருக்கும்....விடுங்க...(அந்தம்மாவுக்கு சொன்னேன்)
அழகான கிராமியப்பாடல்... பகிர்ந்தமைக்கு நன்றிகள்...
நன்றி அண்ணாமலையான்
நன்றி பாலாசி
பகிர்வுக்கு நன்றி.
நண்பரே, உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும். ஒருமுறை என் நண்பன் ஒரு
பாட்டுச் சொல்லி இதற்கு விடை சொல்ல முடியுமா என்று கேட்டான். நானும் மண்டையைப் பிய்த்துக்கொண்டதுதான் மிச்சம். உங்களுக்குத் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்களேன். அந்தப் பாட்டு...
தலைவி ஆற்றிலே குளித்துக் கொண்டிருக்கிறாள்.
தலைவன் பாடுகிறான்.
நீரோடு நீ சேர்ந்து குளிக்கையிலே
நீரில் நனையாத இடம் எந்த இடம்?
அதற்கு தலைவி சொல்கிறாள்..
அக்கரையில் அமர்திருக்கும் ஆண் சிங்கமே ஆண் பெண் உறவு கொள்ளும் போது அசையாத இடமே அந்த இடம் என்று.
இதற்கு மட்டும் பொருள் தெரிந்தால் என் நண்பனை காலி செய்து விடுவேன்.
அன்புடன்
சந்துரு

நாட்டுப்புற பாடல்களை அழிந்துவிடாமல் பாதுகாப்பது முக்கியம்...
அதனை பதிவாக்கிய உங்களுக்கும், மாணவர்களுக்கும் - நன்றியும் வாழ்த்துக்களும்..
பாடல் மிக எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது...
ரொம்ப நாட்களுக்கு அப்புறம் ஒரு நாட்டுப்புறப்பாட்டை படித்த சந்தோசம்....
அழகான பாடல், அழகான பதிவு...
தாமோதர் சந்துரு said...
நண்பரே, உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும். ஒருமுறை என் நண்பன் ஒரு
பாட்டுச் சொல்லி இதற்கு விடை சொல்ல முடியுமா என்று கேட்டான். நானும் மண்டையைப் பிய்த்துக்கொண்டதுதான் மிச்சம். உங்களுக்குத் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்களேன். அந்தப் பாட்டு...
தலைவி ஆற்றிலே குளித்துக் கொண்டிருக்கிறாள்.
தலைவன் பாடுகிறான்.
நீரோடு நீ சேர்ந்து குளிக்கையிலே
நீரில் நனையாத இடம் எந்த இடம்?
அதற்கு தலைவி சொல்கிறாள்..
அக்கரையில் அமர்திருக்கும் ஆண் சிங்கமே ஆண் பெண் உறவு கொள்ளும் போது அசையாத இடமே அந்த இடம் என்று.
இதற்கு மட்டும் பொருள் தெரிந்தால் என் நண்பனை காலி செய்து விடுவேன்.
அன்புடன்
சந்துரு
அண்னா, எனக்குத் தெரியல...இருங்அ எங்க வாத்தியாரக் கேட்டுச் சொல்லறேன்
நல்லதொரு நாட்டுப்புற பாடல், அழகாக இருந்தது.
அழகான நாவினிக்கும் பாடல். நன்றி ஆரூரன்.
கலக்கல் நாட்டுப்புறப் பாடல் அன்பரே!!
உங்களைப் போன்றோர் பகிர்ந்தால் தான் நமக்கெல்லாம்..
செமையா அனுபவிச்சுத்தான் பாடுறாங்கப்போய்....
அருமையோ அருமை... எத்தனைன்னுதான் காப்பி பண்றது.. பேசாம உங்க ப்ளாக் புல்லா பாக் அப் எடுத்து cd ல போட்டு வைங்க.. =))
ஆரூரன் இப்படியான பாடல்கள் நானும் எங்களூரில மலைநாட்டுப் பகுதியில் கேட்டிருக்கிறேன்.அந்தப் பேச்சு வழக்கும் இந்தப் பாடலின் அழகு.
நன்றிங்க!
என் காதைப் பறிக்குதய்யா / எல்லோரும் கவிதையில் மிரட்டுகிறீர்கள். தம்பி பாலாஐிக்கு் கொஞ்சம் பழக்கிவிடுங்க.
நன்றி தமிழன்
நன்றி ஹேமா
நன்றி பிரியா
நன்றி கதிர்
நன்றி வானம்பாடிகள்
நன்றி பழமைபேசி
நன்றி சங்கவி
நன்றி அகல்விளக்கு
நன்றி செந்தில்
நன்றி வெ.ராதாகிருஷ்ணன்
நன்றி ஐயா தாராபுரத்தான்
ஆஹா,தோழா அரூர்.
என்ன மண்வாசனை. தூக்குதுங்க.
மொழி,புனைவு,அழகுணர்ச்சி,எல்லாம் சேர்த்துக் குழச்சிருக்கு. இந்த மண்ணுக்குள் இருந்து மட்டுமே வரமுடியும் அழகு தோழா.
Blogger காமராஜ் said...
ஆஹா,தோழா அரூர்.
என்ன மண்வாசனை. தூக்குதுங்க.
மொழி,புனைவு,அழகுணர்ச்சி,எல்லாம் சேர்த்துக் குழச்சிருக்கு. இந்த மண்ணுக்குள் இருந்து மட்டுமே வரமுடியும் அழகு தோழா.//
உங்கள் பாராட்டுதல் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இது போன்ற இன்னும் பல பாடல்களை வெளிக்கொண்டுவர முனைகின்றேன்...
அன்பிற்கு நன்றி
நல்ல பகிர்வு..
அடேயப்பா.....!
எவ்வளவு இருக்கு நமது மண்ணுக்குள்!
பாடலை திரும்பத் திரும்ப படிக்கச் சொல்கிறது. மிக்க நன்றி நண்பரே!
இதுபோல எடுத்துத் தரலாமே!
நன்றி வித்யா
அன்பிற்கு நன்றி தோழர்
இது போன்ற விஷயங்களை அழகாய் தொகுத்து தருகிறீர்கள் ஆரூரன், இதுதான் உங்களிடமிருக்கும் சிறப்பு... வாத்தியார்கிட்ட விடை தெரிஞ்சா போன் பண்ணுங்க!
பிரபாகர்.
நன்றி பிரபா
அழகான கிராமியப்பாடல்பதிவாக்கிய உங்களுக்கும், மாணவர்களுக்கும் - நன்றியும் வாழ்த்துக்களும்..நன்றி தமிழன்
நன்றி ஹேமா
நன்றி பிரியா
நன்றி கதிர்
நன்றி வானம்பாடிகள்
நன்றி பழமைபேசி
நன்றி சங்கவி
நன்றி அகல்விளக்கு
Post a Comment