சமீபத்தில், என் நண்பர் ஒருவரை நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திக்கச் சென்றேன். அந்த ஊரின் மிகப் பெரிய வியாபார நிறுவனத்தின் உரிமையாளரான அவர், பலமுறை என்னை அவர் வீட்டுக்கு அழைத்தும் செல்ல முடியவில்லை. இந்த முறை கண்டிப்பாக நீங்கள் வரும்போது எங்கள் வீட்டிற்கு வந்து விட்டுத்தான் செல்ல வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டிருந்தார்.
அதேபோல், நகர எல்லையை கார் தொட்டதும் அவரை அழைத்த போது, அவரின் அலுவலகத்திற்கு வழி சொல்லி அங்கேயே வரச் சொன்னார். மிகப் பெரிய அலுவலகம், வருடத்திற்கு பல கோடி ரூபாய்களுக்கு விற்பனை செய்து வரும் நிறுவனம் அது. அவர் தந்தையாரால் தொடங்கப் பட்ட அந்த நிறுவனம், அவருக்கு உடல் நலமிண்மையால் மகனிடம் வியாபாரத்தை ஒப்படைத்து விட்டதாகவும், வீட்டிலேயே ஓய்வில் இருப்பதாகவும் அறிந்தேன். நண்பரோடு, பலவற்றையும் பேசிக் கொண்டிருந்து விட்டு, மதிய உணவிற்கு அவர் வீட்டிற்குச் சென்றேன்.
பளிங்கு மாளிகைகள், வில்லாக்கள், வெளிநாட்டுக் கார்கள் இப்படி எல்லாவற்றிலும் செல்வத்தை வெளிக்காட்டிக் கொண்டிருந்த அந்த குடியிருப்பு பகுதியில் இருந்த அவரின் புதிய வீட்டிற்கு சென்றோம். கடந்த ஆண்டுதான் அவர் தந்தையின் மேற்பார்வையில் கட்டி முடிக்கப் பட்டதாகவும், பல லட்ச ரூபாய் செலவானது என்றும் நண்பர் சொன்னார்.
வரவேற்பறையில் அமர்ந்திருந்த எனக்கு நண்பரின் மனைவி பழரசம் கொடுத்தார்கள். அவரின் தாயார் வந்து நலம் விசாரித்து விட்டு, பேசிக் கொண்டிருங்கள் என்று கூறிவிட்டு உள்ளே சென்றார். நண்பரும் வாருங்கள் அப்பாவை சந்தித்துவிட்டு வருவோம், என்று கூறி அருகிருந்த பெரிய அறைக்கு அழைத்துச் சென்றார்,
விசாலமான அறை, சென்னையில் பல வீடுகளே அந்த அறை அளவுதான் இருக்குமென்று நினைக்கின்றேன். குளிரூட்டப்பட்ட அந்த அறையின் சுவற்றில் ஒரு மிகப் பெரிய தொலைக் காட்சிப் பெட்டி மாட்டப்பட்டு, அதில் பங்கு வணிகம் குறித்த தகவல்கள் ஓடிக் கொண்டிருந்தது. அறையின் நடுவில் உயரமான ஒரு கட்டில், அதில் படுத்துக் கொண்டு, மார்புவரை ஒரு போர்வையால் உடலை போர்த்திக் கொண்டு, தொலைபேசி ஒன்றை மார்பின் மீது வைத்துக் கொண்டு பங்குகள் வாங்கவும், விற்கவும் சொல்லிக் கொண்டிருந்தார்.
என்னைப் பார்த்ததும், லேசாக சிரித்து தலையசைத்து விட்டு தன் பேச்சை தொடர்ந்து கொண்டிருந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு, என்னைப் பார்த்து, "சொல்லுங்க...எப்படி இருக்கிறீங்க?" என்று மிகவும் உற்சாகமான குரலில் பேசத் தொடங்கியவர், தான் சிறுவயதில், ஈரோட்டில், சிறு தலைச் சுமை வியாபாரியாக தொழில் தொடங்கியதிலிருந்து தொடங்கி, பல நிகழ்வுகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். இடையிடையே, பல தொலைபேசி அழைப்புகள். பங்கு வர்த்தக ஆணைகள் என்று தொடர்ந்து கொண்டிருந்தது.
அப்போது, யாரோ வந்திருப்பதாக உதவியாளர் ஒருவர் வந்து சொன்னதும், அவரையும் உள்ளே வரச் சொன்னார். வந்தவர் இடம் வாங்க, விற்க உதவும் ஒரு இடைத்தரகர் என்பதை அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்து கொண்டேன். வந்தவர், அந்த நகரின் மையப் பகுதியிலிருந்த ஒரு கட்டிடம், விலைக்கு வந்திருப்பதாகவும், விலை சுமார் 3 கோடி என்றும் சொன்னார். நண்பரின் தந்தையார், வேறு ஒரு கட்டிடத்தின் பெயரைக் குறிப்பிட்டு அதற்கு அருகிலிருக்கும் கட்டிடம் தானே நீங்கள் சொல்வது, அது ரோடு குத்தாக இருக்குமே என்றார். வந்தவர் இல்லை என்று சாதித்தார். பிறகு விற்பவரிடமே தொலைபேசியில் பேச முடிவு செய்யப் பட்டு விசாரித்ததில் விற்பவர் ஆமாம், கட்டிடத்தின் வட பகுதி ரோடு குத்தாக வரும் என்றார்.
வந்தவர் விடைபெற்றுச் சென்றவுடன், அவர், சற்றே தொலைவில் சுவற்றில் சாய்ந்து கொண்டிருந்த அவரின் துணைவியாரை, அதாவது நம் நண்பரின் அம்மாவிடம் ஏதோ சொன்னார். உடனே நண்பரும் அவர் தாயாரும் சேர்ந்து, அவரை இடதுபுறமக திருப்பி படுக்க வைத்தனர். கட்டில் கீழ் சக்கரங்கள் பொருத்தப் பட்டிருந்ததால், கட்டிலும் அரைவட்டமாக சுற்றப் பட்டு தொலைக் காட்சி பெட்டியை பார்க்கும் வண்ணம் நிறுத்தப் பட்டது.
அதன் பிறகு தொடர்ந்து அவர் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து, நீங்கள் சாப்பிட்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டு, மீண்டும் தொலைபேசியில் யாருடனோ பேச ஆரம்பித்தார். வெளியே வந்து மதிய உணவிற்கு பிறகு, அவரிடம், நண்பரிடமும் விடைபெற்று வீட்டுக்கு வெளியே வந்தேன். என் கார், நண்பரின் அலுவலத்தில் நிறுத்தி விட்டு வந்திருந்தேன். நண்பருக்கு வீட்டில் ஏதோ வேலை இருப்பதாகவும், தன் காரில் போய் அலுவலத்தில் இறங்கி கொள்ளுங்கள் என்று கூறி அவரின் உறவினர் ஒருவருடன் என்னை அனுப்பி வைத்தார்.
செல்லும் வழியில் நண்பரின் உறவினர் சொன்ன தகவல்கள் என்னை, ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிட்டது. சுமார், 10 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நாள் அதிகாலை, நண்பரின் தந்தையாருக்கு . மார்புக்கு கீழே எந்த உறுப்பும் செயல்பட வில்லையாம். எத்தனையோ மருத்துவர்கள், மருத்துவமனைகள்..பலன் ஒன்றுமில்லை.
அவரும் அமைதியாக அதை ஏற்றுக் கொண்டு, படுத்த படுக்கையிலிருந்தபடி உலக விசயங்களையெல்லாம் பேசுகிறார். ரியல் எஸ்டேட், பங்கு வர்த்தகம், இப்படி பல தொழில்களை படுக்கையிலிருந்த படியே செய்து வருடத்திற்கு பல கோடிகள் சம்பாதித்து வருகிறார். என்று சொன்னார். படுக்கைப் புண் வராமல் இருக்க ஒவ்வொரு அரை மணிக்கொருமுறையும் அவரை இடதுபுறமாக அல்லது வலதுபுறமாக திருப்பி படுக்க வைக்கிறார்கள்.
நண்பரோடு பேசிக் கொண்டிருந்த போது தன் தந்தையின் மேற்ப் பார்வையில் புதிய வீடு கட்டியதாக சொன்னது நினைவிற்கு வந்தது. அது குறித்து கேட்டபோது, உண்மைதான். தினமும் காலை, உதவியாளர், துணைவியாருடன், கட்டிடப் பணி நடக்கும் இடத்திற்கு ஒரு வேனில் வருவார். ஸ்டெர்ட்சரில் படுத்துக் கொண்டே கட்டிட வேளைகளை பார்வையிடுவார். சிமெண்ட், மணல், இரும்பு போன்ற அனைத்திற்கும் படுக்கையிலிருந்தபடியே பலரிடமும் விலைபேசி வாங்கிவிடுவார். கட்டிடத்தில் சிறு குறைபாடு இருந்தாலும் கண்டுபிடித்துவிடுவார். மொட்டைமாடிக்கு மட்டும் தான் அவரால் செல்ல முடியவில்லை. என்பதை சொன்னவர், மேலும், சொன்னது என்னை வியப்பில் ஆழ்த்தியது.
வீடு கட்டி முடித்தபின், பழைய வீட்டிலிருந்த பொருட்களை புதிய வீட்டிற்கு மாற்றும் போது, பழைய வீட்டின் போர்டிக்கோவில் ஸ்டெர்ச்சரில் படுத்துக் கொண்டு, வெளியே செல்லும் பொருட்களை பட்டியலிட்டுக் கொண்டாராம், அந்த லாரி கிளம்பிச் சொல்லும் போது தானும் வேனில் கிளம்பி, புதிய வீட்டின் வாயிலில் உள்ள போர்டிக்கோவில் படுத்துக் கொண்டு உள்ளே வருவது சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டாராம்.
என் வாழ்வில் அத்தனை உற்சாகமான ஒரு ஊனமான மனிதனைக் கண்டதில்லை. என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார், " சுயமா எப்ப நம்ம காரியத்த நம்மால செய்யமுடியலையோ, அதுக்கப்பறம் உசிரோட இருக்கக் கூடாது" ஆனால் இவர் 15 ஆண்டுகளாக இப்படியே வாழ்கிறார், எந்த கவலையும், வருத்தமும் வெளியில் தெரியவில்லை. உற்சாகமாக செயல்படுகிறார்.
வாழ்க்கைப் போராட்டத்தில் அடிக்கடி சோர்வாகிப் போய்விடுகின்ற இந்த மனிதர்கள் மத்தியில் இவர் தனித்து தெரிகின்றார். நான் ஒவ்வொருமுறை சிறு தோல்விகளால் சலிப்பும் மன வேதனையும் அடையும் போதும் அவரை நினைத்துக் கொள்வேன். எனக்குள் மீண்டும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.
பல ஆண்டுகளுக்கு முன்னால் கண்ட ஒரு கட்டிடம் அல்லது இடத்தின் அமைப்பை இன்றும் சரியாக கணக்கிடும் மனிதரை பார்க்க ஆச்சரியமாக இருந்தது. நடமாட முடியாத சூழலிலும், சுமார் நூறுக்கும் அதிகமான தொலைபேசி எண்களை நினைவில் வைத்துக் கொண்டு, எதையும் பார்க்காமல், தொலைபேசி மூலமே அனைத்தியும் நடத்திவரும் அந்த அற்புத மனிதர் நமக்கெல்லாம் ஒரு எடுத்துக் காட்டு.
சிறு தொய்வுக்களுக்கெல்லாம், உயிர் மாய்த்துக் கொள்ளும், அல்லது சோர்ந்து விழுந்துவிடும் மனிதர்கள் மத்தியில் இவர் ஒரு மாமனிதர். இப்படிப்பட்ட மனிதர்கள் நூறாயிரத்தில் ஒருவர் தான் இருப்பார்கள் என்று நம்புகின்றேன்.
35 comments :
மிக உற்சாகமான தகவல். இன்று புலிகேசியின் இடுகைக்கு அடுத்துப் படிக்கும் நம்பிக்கையூட்டும் இடுகை. பகிர்ந்தமைக்கு நன்றி ஆரூரன்.
அவரின் மனதிடம் வியக்க வைக்கிறது....
அவர் நிச்சயம் லட்சத்தில் ஒருவர்தான்...
மனம் வலிமையாக இருந்தால் சாதனைகளுக்கு எதுவும் தடையில்லை.உண்மையில் அவரைச்சேர்ந்தவர்களுக்கு அவர் நிச்சயமாக ஆதர்ச மனிதனாகத்தான் இருப்பார்.
//என் வாழ்வில் அத்தனை உற்சாகமான ஒரு ஊனமான மனிதனைக் கண்டதில்லை. //
நானும் கண்டதில்லை. இப்போது உங்களின் மூலும் அறிகிறேன்.
//எதையும் பார்க்காமல், தொலைபேசி மூலமே அனைத்தியும் நடத்திவரும் அந்த அற்புத மனிதர் நமக்கெல்லாம் ஒரு எடுத்துக் காட்டு.//
உண்மை... தலைப்பும் அவருக்கு மிகப் பொருந்தும்...
இவரை மாதிரி மனிதர்கள் பார்க்கும்போது மற்றவர்களுக்கு வாழ்வின் மிது நம்பிக்கை அதிகமாகும்.
பகிர்விற்கு நன்றி.
நிஜமாய் சந்தோஷமாயிருக்கிறது, அவரது தன்னம்பிக்கையை எண்ணி....
நல்ல பகிர்வு நண்பரே!
பிரபாகர்.
நல்ல பகிர்வு
நன்றி
Execuses or Lifestyle....
நீண்ட நாட்களாய் எனக்குப் பிடித்த வார்த்தை....
மிக மிகப் பயனுள்ள இடுகைக்கு நூறாயிரம் நன்றிகள்
நிச்சயம் கோடியில் ஒருவர்தான்.
நல்லதொரு பகிர்வு.
கண்டிப்பாக அவர் லட்சத்தில் ஒருவர் தான்.
எது நேர்ந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், உழைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற பாடத்தை சொல்லித் தருகிறார் அவர்!
நல்லதொரு இடுகை!
அதிசயமான மனிதர்தான்.என்னால் முடியுமா என்று யோசித்துப்பார்க்கக்கூட முடியாது என்றே வருகிறது.
அருமையான பகிர்வு விஸ்வா.
வலைதளத்துக்கு பொலிவும், எழுத்துல வளமும் கூடி இருக்குங்கோய்!
நன்றி வானம்பாடிகள்
நன்றி அகல்விளக்கு
நன்றி கண்ணகி
நன்றி பாலாசி
நன்றி ராமசாமி கண்ணன்
நன்றி பிரபா
நன்றி சபரிநாதன் அர்த்தநாரி
நன்றி துபாய் ராஜா
நன்றி ஜோ
நன்றி ஹேமா
நன்றி பா.ரா
அன்பிற்கு நன்றி பழமைபேசி
பழமைபேசி said...
வலைதளத்துக்கு பொலிவும், எழுத்துல வளமும் கூடி இருக்குங்கோய்!
பொலிவு கூடனதுக்கு பாலாண்ணே காரணமுங்க....இதெல்லாம் அவுரு கைவரிசைதான்...
பகிர்விற்கு நன்றி
அன்பின் ஆரூரன்
உண்மையிலேயே பெரிய மனிதர்தான் - துவண்டு விடாமல் தன்னம்பிக்கையுடன் செயல்படும் - செயல்படுத்தும் மாமனிதர்
நல்வாழ்த்துகள்
இது போன்ர தன்னம்பிக்கை மனிதர்களை சந்திப்பது அரிது
நல்ல பகிர்வு.
நன்றி டிவிஆர்
நன்றி சீனா ஐயா
நன்றி புலவன் புலிக்கேசி
நன்றி தோழர்
ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நிகழ்வு..மனிதர்..
இதை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பலப்பல..
வாழ்த்துகள்
உண்மைதான் நண்பரே நூறாயிரத்தில் ஒருவர் தான் நண்பரே..
ஆயினும் நூறாயிரம் பேருக்குத் தன்னம்பி்க்கையளிப்பவர்..
வெளியுலகம் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள இவ்விடுகை அடிப்படையாக அமைந்தது மகிழ்ச்சி..
நன்றி நிகழ்காலத்தில்
நன்றி முனைவர் குணசீலன்
மிக உற்சாகமான உணர்வைத் தந்த தகவல்.
இந்தப்பதிவு எனக்கு உற்சாகத்தைத்தந்தது. வாழ்க அந்த அற்புத மனிதர். பகிர்வுக்கு நன்றி.
நன்றி யோகன்....
நன்றி அநன்யா....
உற்சாகமா இருக்கு படிக்க.
இந்த வார டரியலில் இந்த பதிவை அறிமுகப்படுத்தியுள்ளேன்.
நன்றி புலவன் புலிகேசி
நன்றி சின்ன அம்மிணி
நண்பரே உங்களின் பதிவின் தலைப்பிற்கு ஏற்ற ஒரு சாதனையாளரைப் பற்றிய பதிவு என்றே சொல்லவேண்டும் . முயற்சிக்கு இன்னும் உரமூட்டும் வகையில் அமைந்துள்ளது . அற்புதம் வாழ்த்துக்கள் .
கோடியில் ஒருவர் என்றே சொல்லலாம். தன்னம்பிக்கை ஊட்டுகிறது உங்கள் கட்டுரை. நண்பரின் பதிவின் மூலம் இங்கு வர நேரந்தது. மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி நண்பரே
நல்ல தகவல்
நம்பிக்கையூட்டும் பலருக்கு
Hi Mr. Auroran
I would like to know the contact of this wonderful person. Because i am one such person facing the same problem for the past two years.
I am 19 years old now(2012). I live in Tirupur. I met with a small accident in October 2009, and my spine got disrupted, the result of which is i am disabled the entire body below my chest. And I have no sensation from my chest and living with hope. Have consulted various doctors and hospitals , but of no use. As my situation is as such, facing other physical problems like bed sores etc.. I feel it would be better if i can consult with someone who is like me, rather than a normal person.
Past three years in bed, i completed my 12th public examinations in 2012 and now pursuing my B.Com degree through distance education.
It would be of great help if i can meet or talk to this great person, who has inspired me alot..
Please help.
My Contact:
lohithk1992@gmail.com
Mob : 9003504843
Mother’s Mob: 9994255262
Post a Comment