நேற்று இரவு நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அப்போது மணி இரவு பத்து. நண்பரின் மனைவியும் குழந்தையும் ஊருக்கு சென்றிருந்தார்கள். கையிலிருந்த தன் சாவியில் கதவை திறந்து உள்ளே தாழிடும் போது, ஒரு வயதான குரல்..
நன்றி:
by Jinson Joseph Elayidom
www.getjins.com
ஏங்கண்ணு வந்திட்டியா? சீக்கிரம் வந்து படுத்துக்கலாமுல்ல, பனி காலத்தில வெளில சுத்திகிட்டு.......??
ம்ம்...ம்ம்....நீங்க சாப்பிடீங்களா? சரி தூங்குங்க.........என்று சொல்லிவிட்டு, அவரின் பதில் கேட்காமல் அவர் இருந்த அறையைத் தாண்டி என்னை அழைத்துச் சென்றார் நண்பர்.
மீண்டும் அவர் குரல்....ஏங்கண்ணு யாரு வந்திருக்கா கூட? காலடி சத்தத்தை கேட்டுருப்பாரென்று நினைத்தேன்,
நண்பர் வந்திருக்கார். என்று சொல்லி, என்னை உள்ளே அவர் அறைக்கு அழைத்துச் சென்றார்.
இரவு ஒரு மணிவரை பேசிக் கொண்டிருந்தோம். காலை 5 மணிக்கு விழித்து, முகங்கழுவிக் கொண்டு டீ குடிக்க வெளியே கிளம்பினோம்.. முன் அறையை தாண்டும் போது,

" ஏங்கண்ணு ? இந் நேரத்திலே முழிச்சிகிட்ட"? டீ போட்டு தரட்டுமா?? மீண்டும் அம்மாவின் குரல்.
வேண்டாம், வெளியில போயி குடிச்சிக்கிறோம் என்ற நண்பரின் பதிலை ஏற்காமல்,
"இரு சாமி, நிமசத்தில டீ போட்டு தாரேன்". என்றபடியே போய் ஒரு நல்ல டீ கொண்டு வந்து கொடுத்து விட்டு,
"வெறு வயித்தில வெளிய போக வேண்டாங் கண்ணு, இருங்க ரெண்டு தோசையூத்தறேன், சாப்டுபோட்டு புறப்படுங்க"....என்றார்.
இவங்க எப்பத் தூங்கி எப்ப விழிக்கிறாங்கன்னே தெரியலையே?????இந்த வயதிலும் இவ்வளவு வளர்ந்த மகனின் மேல் எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறார் என்று எண்ணியபடி, வீட்டை விட்டு வெளியே வந்தேன்.
என்ற பட்டினத்தாரின் பாடல் வரிகள் ஏனோ நினைவிற்கு வந்தன..........
தொல்காப்பியர் தொட்டு, சங்ககாலம் முதல் பின்னால் வந்த பாரதிவரை, எல்லோருமே, காதலியைப் பற்றி . தலைவனைப் பற்றி, நாட்டைப் பற்றி, சமூகம் பற்றி, இயற்கையழகு பற்றி இப்படி எவையெவற்றையெல்லாம் பாடியிருந்தாலும், மனைவி பற்றியோ, தாயைப் பற்றியோ பெரும் புலவர்கள் யாரும் பாடியதாக நினைவில் இல்லை. அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம், தாயிற் சிறந்ததொரு கோவிலும் இலை என்ற ஒரு சில வரிகள் தவிர..
பட்டினத்தடிகள் கூட தன் தாய் இறந்தபோது சிதைக்கு தீ மூட்டும் போதுதான் தாயின் பெருமைகளை நினைவு கூர்ந்து பல பாடல்கள் எழுதியிருக்கிறார்.
காதற்ற ஊசியிம் வாராது காண் கடைவெளிக்கே.. என்று கூறி .முற்றுந் துறந்த பட்டினத்தாருக்கே, தாயின் இறப்பை தாங்க முடியவில்லை யென்றால் நாமெல்லாம் எம்மாத்திரம். தாய் பற்றை துறக்கக் கூடாது, துறக்கவும் முடியாது என்பதை சமூகத்திற்கு விளக்கும் வண்ணமாக அமைந்திருப்பது பட்டினத்தாரின் வாழ்வு.

ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்
"பையல்" என்ற போதே பரிந்தெடுத்துச்-செய்யவிரு
கைப்புறத்தில் ஏந்தி கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி.

முந்தித் தவங்கிடந்து, முன்னூறு நாள் சுமந்தே
அந்திபகலாச் சிவனை ஆதரித்து- தொந்தி
சரியச் சுமந்து, பெற்ற தாயார் தமக்கோ
எரியத்தழல் மூட்டுவேன்.....
நொந்து, சுமந்து பெற்று, நோவாமல் ஏந்தி முலை
தந்து, வளர்த் தெடுத்து தாழாமே-அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ
மெய்யிலே தீ மூட்டுவேன்.
அரிசியோ நானிடுவேன், ஆத்தாள் தனக்கு,
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல்-உருசியுள்ள
தேனே, அமிர்தமே செல்வத்திர வியப் பூ
மானே என அழைத்த வாய்க்கு..
அள்ளியிடுவ தரிசியோ, தாய் தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல்-மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே என்றழைத்த தாய்க்கு.
வெகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல்
ஆகுதே, பாவியேன் ஐயகோ-மாதக்
குருவி பறவாமல் கோ தாட்டி என்னை
சுருதி வளர்தெடுத்த கை....
முன்னையிட்ட தீ முப்புறத்திலே
பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே
அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே
யானுமிட்ட தீ மூள்க மூள்கவே....

36 comments :
அழகான படம். அருமையான அம்மா. பட்டினத்தார் பாடல். ம்ம். நல்ல பகிர்வு.
அம்மா..........
நல்ல பகிர்வு நண்பா.
தாயின் பெருமைகள் வார்த்தைகளுக்குள் அடங்கா....
நல்ல பாடல், அனுபவம்.... பகிர்வு... நெகிழ்கிறேன்....
அம்மாவைப் பற்றி அழகாய் சொல்லியிருக்கிறீர்... நல்லாருக்கு ஆரூரன்...
பிரபாகர்...
பட்டினத்தார் பாடலுக்கு நன்றி. ஆஆமா உங்க நண்பர் அவங்க அம்மாவெ சரியா கவனிக்கிறாரா இல்லையான்னு சொல்லலெயே......
நெகிழ்ச்சியான பதிவு. கண்களில் நீர் மல்க படித்தேன். அம்மா அம்மா தான்.
நெகிழ்ச்சியான இடுகை
:(... ம்ம்...
நல்ல பகிர்வு!
எத்தனை வயதானாலும் நாமெல்லோரும் பெற்ற
தாய்க்குப் பிள்ளையே.
எப்போதும் தாய் மனதில் நமக்கு தனி இடம் உண்டு. ஆனால் நாம்தான் வயதான அவர்களுக்கு வீட்டில் தனி இடம் கொடுத்து ஒதுக்கி விடுகிறோம்.
கண்கள் கலங்க வைத்த நெகிழ்ச்சியான பதிவு.பட்டினத்தார் பாடல் பகிர்வும் அருமை.
நல்ல பகிர்வு
//கையிலிருந்த தன் சாவியில் கதவை திறந்து உள்ளே தாழிடும் போது, ஒரு வயதான குரல்//
!!!!!
நன்றி வானம்பாடிகள்
நன்றி நவாஸ்
நன்றி பாலாசி
நன்றி பிரபா
நன்றி மன்சூர் ராசா
நன்றி அநன்யா
நன்றி கதிர்
நன்றி பிரபா
நன்றி ப்ரியா
நன்றி தோழர்
நன்றி துபாய் ராஜா
நன்றி டிவிஆர்.
////கையிலிருந்த தன் சாவியில் கதவை திறந்து உள்ளே தாழிடும் போது, ஒரு வயதான குரல்//
புரிகிறது உங்கள் குழப்பம்....
அவரை உள்ளே வைத்து பூட்டிவிட்டு வரவில்லை, அவரிடமும் ஒரு சாவி இருந்தது. உள்ளே இருந்தும் திறக்கும் வசதி கொண்ட கதவு அது
உலகிலே தாய்மையை விட சிறந்தது எதுவுமே இல்லை. தாய்மை தெய்வத்தன்மையை விட உயர்ந்தது. தாயின் மேன்மை சொன்ன இடுகைக்கு வாழ்த்துக்கள்
ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்
"பையல்" என்ற போதே பரிந்தெடுத்துச்-செய்யவிரு
கைப்புறத்தில் ஏந்தி கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி.
////
அழகான ஆழமான வரிகள்
நல்ல பகிர்வு
தாய்ப்பாசம் என்பது வரம். என் கணவர் தினம் ஒருமுறையாவது என் மாமியாரை நினைத்து கண்ணீர் விடுவார். நெக்ழ்ச்சியான இடுகை.
மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்... நன்றி!
அம்மா என்றால் அன்பு. நல்ல பகிர்வு சார்.
நன்றி தமிழ் உதயம்
நன்றி பழமைபேசி
நன்றி கண்ணகி
நன்றி ராமசமி கண்ணன்
யாரும் போகாத பகுதிக்குள் போய் பல பிரமிப்புகளைக்
கொண்டுவருகிறீர்கள் அரூர்.பட்டினத்தார் ...
நன்றி தோழர்...
நன்றி பிரபு
மிக நெகிழ்ச்சியான பதிவு
தாயில்லாமல் நானில்லை,தானே எவரும் பிறந்ததில்லை.
அருமை நண்பரே
அம்மாக்களின் பாசத்தைக் கூறும் நெகிழ்ச்சியான பதிவு.
நன்றி தாமோதர் சந்துரு அண்ணா
நன்றி மாதேவி
நன்றி உழவன்
ம்ம்
அருமையான பாடல் தெரிவு,
நல்ல படம்
நெகிழ்வான பதிவு
அம்மாவின் பெருமைகளை அழகாய் சொன்னவிதம் அருமை..
என்னாதிது
அருமையான பகிர்வு விஸ்வா!
//சாப்டுபோட்டு புறப்படுங்க"....என்றார்.//
ஆரூர் விசுவனாதன்,
அந்த வட்டார வழக்கே தனியழகு.
(1998-2000 வரையில் திருப்பூரில் பணியாற்றிக்கொண்டிருந்தேன்.... பழம் நினைவுகள் ... தும்மல் வருகிறது.)
// தாய் பற்றை துறக்கக் கூடாது, துறக்கவும் முடியாது//
உண்மை சாமி.
நெகிழ்விக்கும் பதிவு..
நன்றி..
மனசை என்னமோ பண்ணுதுங்க
Post a Comment